Monday, April 02, 2007

ஸென் - இரு தத்துவங்கள்

ஸென் - ஒரு எளிய அறிமுகம்
ஸென் - என்ன சொல்கிறது.
ஸென் - தேடல்




இந்த பதிவில் இரண்டு குட்டிக் கதைகளின் வழியே ஸென் கூறும் இரு தத்துவங்களை பற்றி பார்ப்போம்.

இளைஞன் ஒருவன் சிறிய பறவையினை பிடித்து வைத்துக்கொண்டு, தன் குருவிடம் "ஐயா, எனது கையில் இருக்கும் பறவை உயிருடன் இருக்கிறதா இல்லை இறந்து விட்டதா கூறுங்கள்" என்றான்.குருவை மடக்கி விட்டதாக அவனுக்குள் சந்தோஷம்....

குரு அவனை அமைதியாக பார்த்து இவ்வாறாக கூறினார்...."இளைஞனே...நான் பறவை இறந்து விட்டதாகக் கூறினால் அது உயிருடன் இருப்பதை காட்ட சுதந்திரமாக பறக்க விடுவாய், அதே நேரத்தில் உயிருடன் இருப்பதாய் கூறினால் அதன் கழுத்தை திருகி இறந்த பறவையை என்னிடம் காட்டுவாய்" என்றார்.

இளைஞன் வெட்கத்தில் பறவையை கைவிட்டான்...

குரு மேலும் சொன்னார்..."பிறப்பும் இறப்பும் உன் கைகளில்தான் இருக்கிறது"

"Its not your intelligence, but it is the direction of your intelligence that defines your life"


இனி அடுத்த கதை...

இரண்டு இளம் துறவிகள் வேகமாய் ஓடும் ஆற்றை கடக்க எத்தனித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த அழகிய இளம் பெண் ஒருத்தி ஆற்றை கடக்க துறவிகளிடம் உதவி கேட்டாள்.

முதல் துறவி தயங்கியவேளையில், இரண்டாவது துறவி தயக்கமில்லாது அவளை தன் தோளில் சுமந்து ஆற்றை கடந்தான். அவளும் நன்றி கூறி தன்வழி போனாள். துறவிகளும் தங்கள் பயணத்தினை தொடர்ந்தனர்.

முதல் துறவி பொறுக்க மாட்டாமல் இரண்டாமவனிடம், "சகோதரனே! நமது ஆன்மீக பயிற்சியில் பெண்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதே வலியுறுத்தப் படுகிறது...நீ அதை மீறி அந்த பெண்ணை எப்படி தோளில் சுமக்கலாம்" என கோபப்பட்டான்.

இரண்டாமவன், சலனமில்லாத முகத்துடன் சொன்னான்..."நான் அவளை ஆற்றின் கரையிலேயே இறக்கி விட்டு விட்டேன்...நீயோ இன்னமும் அவளை சுமந்து கொண்டிருக்கிறாய்"

"Yesterday was over Yesterday. Life should be a forward progression and not a backward regression. Save your future from the clutches of your past."

16 Comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரெண்டாவது ரொம்ப கஷ்டம்ங்க.
க்ளீன் சிலேட் மாதிரி எப்போதும்
இருந்தா நல்லா இருக்கும். ஆனா
படிஞ்சு போன எழுத்துக்கள் அழியாம இருக்கு. நாளைய விட நேற்று தான் ரொம்ப விஷயத்தை முடிவு செய்யுது.இந்த மாதிரி தத்துவம் படிச்சா
அதெல்லாம் அழிச்சுடுமானா நல்லாருக்கும்.

மங்கை said...

லட்சுமி...

கஷ்டம்தான்...கசப்பான அனுபவமா இருந்தா..அது கடந்தகாலம், முடிஞ்சுறுச்சுன்னு, சந்தோஷப்படலாம்.. இப்படித்தான் பழகனும்...வேற வழி இல்லை..

ரெண்டு ராட்சகர்களிடம் சிக்கி நாம நாம நம்மல கஷ்டப்படுத்திக்குறம்னு தோனுது..ஒன்னு பழச எண்ணி எண்ணி நம்மல நாமே கட்டிப்போட்டுக்கிறது...ரெண்டாவது அய்யோ நாளைக்கு என்ன ஆகுமோ ன்னு கவலப்பட்டு அடுத்த அடி எடுத்து வைக்குறதுக்கு பயந்துக்குறது...ஹ்ம்ம்

(பங்காளி..ஏதோ எல்லாரும் பேசராங்கன்னு நானு உளரி வச்சு இருக்கேன்..கண்டுக்காதீங்க)

துளசி கோபால் said...

மங்கை,

அதைத்தான் 'இன்று மட்டுமே நிஜம்'னு சொன்னது:-)))))

சென்ஷி said...

//முத்துலெட்சுமி said...
ரெண்டாவது ரொம்ப கஷ்டம்ங்க.
க்ளீன் சிலேட் மாதிரி எப்போதும்
இருந்தா நல்லா இருக்கும். ஆனா
படிஞ்சு போன எழுத்துக்கள் அழியாம இருக்கு. நாளைய விட நேற்று தான் ரொம்ப விஷயத்தை முடிவு செய்யுது.இந்த மாதிரி தத்துவம் படிச்சா
அதெல்லாம் அழிச்சுடுமானா நல்லாருக்கும்.//

உண்மைதான்..

பெரியவங்க சொல்றா மாதிரி -அனுபவம் கத்துக்கொடுக்கற பாடத்த விட பெரிய பாடம் எதுவுமில்ல.

பட்டுத்தெரிஞ்சுக்காட்டியும், பாத்து தெரிஞ்சுக்கணும்.

இதெல்லாம் படிக்குறப்ப எப்பவுமே நாம நேத்த மறக்கக்கூடாதுன்னுதான் தோணுது...

யாழினி அத்தன் said...

பங்காளி,

உங்க வயசு என்னன்னு தெரியல. அதற்கு எந்த நிர்பந்தமும் இல்ல. ஆனா, ஒருவேளை ரொம்ப young ஆக இருந்து வாழ்க்கையோட உண்மைகள புரிஞ்சுக்கனும்னு தத்துவங்கள படிச்சு குழப்ப சூழ்நிலையில் இருக்கறீங்கன்னா, எனக்கு ஒண்ணு சொல்லனும்னு தோணுது. உங்க anticipated அனுமதியோட இங்கே சொல்றேன்.

"வாழ்க்கையை அனுபவீங்க..அணு அணுவா அனுபவீங்க...அணு அணுன்னா with full awareness அனுபவீங்க...அப்புறம் நீங்களும் ஒரு zen மகான் தான். தத்துவக் குப்பைகள தூக்கி வெளியே போடுங்க. உண்மைக்கு எந்த வடிவமும் இல்லை. எல்லா தத்துவங்களும் உண்மையை சொல்றதா சொல்லி மனிதர்களை நல்லா குழப்பி விட்டதனால man is continously conflicting with himself."

பங்காளி... said...

வாங்க யாழினி அத்தன்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....

நீங்கள் சொல்லும் அதே பள்ளியைச் சேர்ந்தவன்தான் நான். இந்த பதிவின் நோக்கம் ஸென் மீதான எனது பார்வைகளை ஒட்டியதே தவிர வேறெந்த திணிப்புகளும் இல்லை....

வரும் நாட்களில், "ஸென்னும் கடவுளும்", "ஸென்னும் தமிழும்" என இரு பதிவுகளை வலையேற்றுகிறேன்...உங்கள் கருத்தினை எதிர்பார்க்கிறேன்.....

ர்ர்ர்ர்ரொம்ம்ம்ப முக்கியமான பாயிண்ட்....நான் சின்ன பையன்தான்....

வெண்பா said...

நண்பரே, கதைகள் நன்றாக உள்ளன.

யாழினி அத்தன் said...

வரும் நாட்களில், "ஸென்னும் கடவுளும்", "ஸென்னும் தமிழும்" என இரு பதிவுகளை வலையேற்றுகிறேன்...உங்கள் கருத்தினை எதிர்பார்க்கிறேன்.....

ர்ர்ர்ர்ரொம்ம்ம்ப முக்கியமான பாயிண்ட்....நான் சின்ன பையன்தான்....

ரொம்ப நல்லது பங்காளி. உங்க பதிவுகளை படிக்க காத்திருக்கிறேன்.

அட..உங்க ரொம்ப முக்கியமான பாயிண்ட விட்டுப்புட்டேன். சின்ன பையன் - ன்னு சொல்லிட்டு zen-ஐ பொளந்து கட்றீங்க.

உங்க சேவையைத் தொடருங்க பங்காளி!

வடுவூர் குமார் said...

நான் சின்ன பையன்தான்....
சின்ன பையன் சொல்கிற விஷயமாக தெரியவில்லையே!!
:-))
இப்போது என்ன தோன்றியதோ அப்படியே போட்டுவிட்டேன்.

மங்கை said...

//அட..உங்க ரொம்ப முக்கியமான பாயிண்ட விட்டுப்புட்டேன். சின்ன பையன் - ன்னு சொல்லிட்டு zen-ஐ பொளந்து கட்றீங்க///

ஆமா ரமேஷ்..அவர் ர்ர்ர்ர்ர்ரொம்ம்ம்பபப சின்ன பையன் தான்... வாய்ல கை வச்சா கூட கடிக்க தெரியாது....

(சத்தியராஜ் காமெடி ஒன்னு நினைவுக்கு வரலை?...அந்த குழந்தையே நீங்க தான் சார்...)

பங்காளி... said...

வடுவூர் குமார்....

ர்ரொம்ம தேங்ஸ்...புன்னகைக்கு


(இதுல உள் குத்து ஏதுமில்லைன்னு நெனய்க்கிறேன்...ஹி..ஹி..)

பங்காளி... said...

மங்கை...

என்னை பார்த்தா அம்புட்டு சின்னபயலாவா தெரியுது...நான் கூட வளந்துட்டோமொன்னு நெனச்சிட்டு இருந்தேன்...ஹி..ஹி

உங்கள மாதிரி பாட்டி சொன்னா சரியாத்தான் இருக்கும்...ஹி..ஹி..

ஆமா சத்யராஜ்னா யாரு?, அந்த அங்கிள் அல்வா வாங்கி தருவாரா...ஹி..ஹி...

வடுவூர் குமார் said...

நிச்சயமாக இல்லை.

மங்கை said...

பேரான்டி
மாதாஜி பட்டம் குடுக்கறப்பவே தெரியும் இந்த ஐடியா தான் மனசில ...:-))

பங்காளி... said...

மாதாஜி..ஓஹ் Sorry மங்கைஜி...

நீங்கல்லாம் பெரிய பதிவர்...நான் ரொம்ப சின்னபையன், எங்கள மாதிரி வளரும் பதிவர்களுக்கு உங்கள மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம் இருந்தாலே இங்கன பொளச்சிகிடுவோம்.

(ஸ்ஸ்ஸ்ஸாப்பா...சின்னபயல்னு ப்ரூவ் பண்ண எம்புட்டு கஸ்டபட வேண்டியிருக்கு...கலிகாலம்டா...ஹி..ஹி.)

மங்கை said...

///நீங்கல்லாம் பெரிய பதிவர்...நான் ரொம்ப சின்னபையன், எங்கள மாதிரி வளரும் பதிவர்களுக்கு உங்கள மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம் இருந்தாலே இங்கன பொளச்சிகிடுவோம்///

ரொம்ப நாள் ஆச்சு இல்ல கலாய்ச்சி??.
ஹ்ம்ம்ம்...நானே சொசெசூ வச்சுட்டனே!!!

எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொன்னாலும் பரவாயில்லை...சின்னப் பையன்னு சொன்னா போதும்..
அட அட..கீப் இட் அப் பேராண்டி