தர்மயுத்தம் படத்தில் வரும் இந்த பாடலை நீங்கள் பலமுறை கேட்டிருப்பீர்கள்...பார்த்திருப்பீர்கள், அருமையான இளையராஜாவின் இசை, இளமைத்துடிப்புடன் ரஜினி....அழகிய ஸ்ரிதேவி.....இதைத்தாண்டி இந்த பாடலில் இருக்கும் இன்னொடு ஸ்வாரஸ்யமான விசயத்துக்காகத்தான் இந்த பதிவு.....
தர்மயுத்தம் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த பாடல் மட்டுமே படமாக்கவேண்டிய நிலையில், படப்பிடிப்பின் போது நடந்த விபத்தொன்றினால் ஸ்ரிதேவியின் கால் முறிவு ஏற்பட்டு நடக்கமுடியாமல் வீட்டில் முடங்கிவிட்டார். க்தாநாயகன் ரஜினிக்கோ டைபாய்டு காய்ச்சல்....ஒரு கட்டத்தில் இந்த பாடலை படத்திலிருந்து நீக்கிவிடலாமென்றே முடிவு செய்தனராம்.....
ஆனால அருமையான இந்த பாடலை இழக்க விரும்பாத இயக்குனர் ஒரே ஒரு நாள் படப்பிடிப்புக்கு வநதால் போதுமென கெஞ்சி கூத்தாடி இருவரையும் வரவைத்து இந்த பாடலை படமாக்கினராம்....இப்போது பாடலை கவனித்து பாருங்கள்...பாடல் முழுக்க ஸ்ரிதேவி சக்கர நாற்காலியிலோ அல்லது தரையில் உட்கார வைக்கப்பட்டு வெறும் முகபாவனைகளை வைத்தே இயக்குனர் பாடலை ஒப்பேற்றியிருப்பது தெரியும்....காய்ச்சலில் கிடந்த களைப்பு ரஜினியிடம் தெரிவதையும் கவனியுங்கள்....
சமீபத்தில் திரையுலகைச் சேர்ந்த ஒரு நண்பர் தந்த செய்தி இது....ஸ்வாரஸ்யமாயிருக்கிறதல்லவா....!
இப்போது பாடலை ரசியுங்கள்....
Wednesday, April 04, 2007
ஆகாய கங்கை...
பதிஞ்சது பங்காளி... at 4:03 PM
Subscribe to:
Post Comments (Atom)
18 Comments:
பங்காளி, வெகு அருமையான பாட்டு. அதுவும் தமிழ் டி.வி யே பார்க்காமல் இருக்கும் எனக்கு
இந்தக் காலை வேளை
இனிக்கிற பாட்டோடு, புது சேதியொடு பார்த்தது
சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்ட மாதிரி:-) நன்றி.
சுவாரஸ்யமான செய்திதான்..
அருமையான பாடல்
வாங்க வல்லிசிம்ஹன்,
பெரியவங்க மொத தடவையா நம்ம ஏரியாவுக்குள்ள வந்து போய்ருக்கீங்க...ரொம்ப நன்றி...
உங்களின் சந்தோஷத்தை புரிந்து கொள்ள முடிகிறது வல்லி....உங்கள் வரிகளை அதைவிட சந்தோஷமாய் உணர்கிறேன்....
வாங்க மங்கை...
நேத்து யாரோ கமல் ரசிகைன்னு சொன்னமாதிரி ஞாபகம்...ம்ம்ம்ம்ம்
சுவாரஸ்யமான செய்திதான்,பங்காளி!
நல்ல பாடல்-ங்க!
இயக்குநர் மகேந்திரன் அவர்கள்தான?!
இது என்ன வம்பா இருக்கு.. கமல் ரசிகைன்னா மத்தவங்க பாட்ட ரசிக்க கூடாதா என்ன...
இது எந்த ஊரு நியாமுங்கோவ்...
வாங்க தென்றல்...
படமாக்கிய விதத்தில் நிச்சயமாக இந்த பாடலின் வெற்றி இயக்குனரையே சேரும்....
கிண்டி ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் ஒரே நாளில்,ஒரே காஸ்ட்யூமில் படமாக்கப்பட்ட பாடல் இது ....
//.....மத்தவங்க பாட்ட ரசிக்க கூடாதா என்ன...
இது எந்த ஊரு நியாமுங்கோவ்... //
அதானே இது எந்த ஊரு நியாயம்...யாருப்பா அது அப்டில்லாம் சொல்லி நம்ம மங்கைய அப்செட் பண்ணது....கேக்றமுல்ல..இப்டி எல்லாரும் அமைதியா உக்காந்திருந்தா எப்டி?
ஹி...ஹி
கடைசியில் நடந்து போறதைப் பார்த்தா அப்படித் தெரியலையே? ஒரு வேளை இது ஒரு urban legend?
இந்த செய்திய ஒரு பேட்டில கேட்டிருக்கேன். அருமையான பாடல்.
கமல் ரஜினின்னு போகுதே..ஸென்
வகுப்பு எங்க பரணுக்கு போயிடுச்சா?
ஸென் பத்தி உக்காந்து எழுதனும் தாயே....நேரமில்லை....
கடைசி ரெண்டு பதிவும் ஓடீட்டே எழுதினது, கவனிச்சீங்கன்னா தெரியும். இந்த பதிவு உட்லண்ட்ஸ் ட்ரைவின் ல தோசை சாப்டுட்டே எழுதினது....நம்ம பொளப்பு அப்டி ஓடீட்டு இருக்கு.....
பங்கு வணிகம் எழுதற கதைய சொன்னா டென்சனாய்டுவீங்க....காலைல, அண்ணா நகர் வசந்த பவன்ல எழுத ஆரம்பிச்சி அப்புறம் ஒவ்வொரு ட்ராஃபிக் சிக்னலா எழுதி...ஆலுவலகம் வர்றதுக்குள்ள அப்லோட் பண்ணீருவேன்.........
வாங்க கொத்தனார்....
நடந்து போற காட்சி லாங்ஷாட்ல வருது கவனிச்சீங்களா.....அது யாராவும் இருக்கலாம்ல....
//நல்ல பாடல்-ங்க!
இயக்குநர் மகேந்திரன் அவர்கள்தான?!//
தர்மயுத்தம் இயக்கியது ஆர்.சி.சக்தி, மகேந்திரனோடது ஜானி
\\கேட்டிருப்பீர்கள்...பார்த்திருப்பீர்கள்,
பதிவு.....
செய்தனராம்.....
டைபாய்டு காய்ச்சல்....
இது....ஸ்வாரஸ்யமாயிருக்கிறதல்லவா....!
இப்போது பாடலை ரசியுங்கள்.... //
\\கடைசி ரெண்டு பதிவும் ஓடீட்டே எழுதினது, கவனிச்சீங்கன்னா தெரியும்.//
ஆமாமாம் புள்ளி புள்ளியா ஓடிக்கிட்டே இருக்கு... நான் நினைச்சேன் பங்கு பற்றி புள்ளி எழுதித்தான் இப்படி புள்ளி வருதோன்னு ஆனா ஓடறதால வரும்
புள்ளியா ..சரி சரி.
இளையராசாவின் இசையை சொல்வதா அல்லது ஜானகியின் தேன் குரல் மயக்குவதைச் சொல்வதா,எனக்கு மிகப்
பிடித்த பாடல். காலையில் இருந்து நாலு தடவை கேட்டாச்சு. நன்னி :-)
பங்காளி, வழக்கமா வெளிகண்ட நாதர் இப்படி போடுவாரா, அவரோட பதிவு என்று நினைத்துவிட்டேன்
நல்ல பாடல். சுவாரசியமான தகவல்.
மிக்க நன்றி.
/ பங்காளி... said...
இந்த பதிவு உட்லண்ட்ஸ் ட்ரைவின் ல தோசை சாப்டுட்டே எழுதினது....
பங்கு வணிகம் எழுதற கதைய சொன்னா டென்சனாய்டுவீங்க ....காலைல, அண்ணா நகர் வசந்த பவன்ல எழுத ஆரம்பிச்சி /
வாவ்..
/ கானா பிரபா said..
இயக்கியது ஆர்.சி.சக்தி, மகேந்திரனோடது ஜானி /
ஓ...நன்றி, கானா பிரபா!
Post a Comment