Saturday, April 28, 2007

காத்தோட பூவுரச....

1980ல் வெளிவந்த "அன்புக்கு நான் அடிமை" படத்தில் வரும் இந்த பாடலைபற்றிதான் இந்த பதிவு....ரஜினியையும், ரதியையும் தூக்கி ஓரம் வையுங்கள்.ரஜினி இந்த படத்தில் இந்த பாடலில்தான் மிக மோசமாய் இருப்பதாக நினைக்கிறேன். ரதியை பார்த்தால் ப்ளாஸ்டிக் பொம்மைதான் நினைவுக்கு வரும்.சிரித்தாலே போதுமென்று இந்த பஞ்சாப் அழகியிடம் யாராவது சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது.....

பிரமாதாமான காட்சியமைப்போ,பின்னனியோ, நடனமோ இல்லை...இத்தனையும் மீறி இந்த பாடல் காலங்கடந்து நிற்க...இசையமைப்பாளரும், பாடிய எஸ்.பி.பியும்...சுசீலாவும்தான் காரணம்.



எளிமையான இசைகோர்ப்பு...SPB,சுசீலாவும் இழைந்து இழைந்து பாடியிருக்கும் அன்னியோன்யம்....பாடலில் ஒரு இடத்தில் கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி....என SPB இழைவார் பாருங்கள்...கேட்டுப்பாருங்கள்...

பாடலை எழுதியது கங்கை அமரன் என நிணைக்கிறேன்...அவருக்கும் பாராட்டுக்கள்.....

4 Comments:

பங்காளி... said...

ஒரு முக்கியமான செய்தி...இதை சொல்லாவிட்டால் நாளை வரலாறு என்னை மன்னிக்காது...ஹி..ஹி..

"இடையழகில் ரதி நம்ம சிம்ரனுக்கு அக்கா....ஹி..ஹி..."

பங்காளி... said...

பாடலை இந்த இனைப்பில் பார்த்து மகிழுங்கள்...

http://www.youtube.com/watch?v=PeEkjpQLRfY

மங்கை said...

வருடி குடுத்து தாலாட்டு பாடற மாதிரியான பாடல்

சேதுக்கரசி said...

அழகான பாடல்... எஸ்பிபி கலக்கல்களில் ஒன்று.