Tuesday, April 24, 2007

நாம் பங்காளிகளே...


நமக்கு இங்க அத்தனைபேரும் பங்காளிகதான்....எல்லாருமே வேணும்தான், அதே நேரத்தில் தனிநபர்களின் செயல்பாடுகளை விருப்புவெறுப்பின்றி, மனசாட்சியின் பாற்பட்டு அணுகவேண்டுமேயொழிய...மதசாட்சியாக அணுகுவதை மனம் ஏற்கவில்லை.

தப்பு யார் செய்தாலும் தப்புதான்...அதை ஓருவன் செய்தால் அவனை இழிபிறவியென்றும், அதையே தான் செய்தால் யுக்தியென சொல்லிக்கொள்வதை அடிப்படை அறிவிருக்கும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது திண்ணம்.

யாரையோ காப்பாற்ற, அந்த அசிங்கத்தை மறைக்க பிரச்சினையை திசைதிருப்பி தமிழ்மண திரட்டியின் மீது பாய்வதை என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. பிரச்சினைகளை களத்தில் சந்திக்க வேண்டும், இதுதான் சாக்கென சேற்றை வாரி வீசிவிட்டு வெளியேறுவதை நான் எதிர்க்கிறேன்.

இதே தமிழ்மணம் மறுமொழி மட்டுறுத்தலை கொண்டுவந்த போது அதை மிக கடுமையாக எதிர்த்தவன் நான், அப்போது தமிழ்மணம் ஒரு சார்பாக(பெரியவர் டோண்டுவின் அபிலாஷைகளுக்கு ஆடுகிறது) இயங்குகிறது என எகிறிக்குதித்தவன் நான் மட்டுமே....சமயம் வாய்த்த பொழுதெல்லாம் என் நிலையை வலியுறுத்தி வந்திருக்கிறேனே தவிர தமிழ்மணத்தை விட்டு வெளியேறவில்லை.என் தரப்பு நியாயங்களை தனியனாக வலியுறுத்தி வந்தேன்.

இந்த பிரச்சினையில் தமிழ்மணம் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, தமிழ்மண நிர்வாகம் ஏற்புடைய பதிலை அளித்தபின்னரும்...ஒவ்வொரு வார்த்தைக்கும் புதிது புதிதாய் அர்த்தங்களை கண்டுபிடித்து சேறு வீசும் அவலத்தினை கண்டிக்கிறேன்.

எனவே பிரச்சினைகளை பேசித்தீர்ப்போம் வாருங்கள்....தமிழ்மணத்தில் குறையிருப்பதாக கருதினால் வாருங்கள் விவாதிப்போம், அனைவருக்கும் ஏற்புடையதான தீர்வுகளை எட்டமுடியுமென நம்பிக்கையிருக்கிறது....

2 Comments:

வடுவூர் குமார் said...

விவாதங்களை படிக்க ஆசையாக/ஆர்வமாக உள்ளது.

மங்கை said...

//தப்பு யார் செய்தாலும் தப்புதான்...அதை ஓருவன் செய்தால் அவனை இழிபிறவியென்றும், அதையே தான் செய்தால் யுக்தியென சொல்லிக்கொள்வதை அடிப்படை அறிவிருக்கும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது திண்ணம்///

ஹ்ம்ம்ம்..நல்லா சொன்னீங்க...இதுக்கு மேலேயும் இந்த பிரச்சனைய வளர விடக்கூடாது.. வேற எந்த ஆக்கப் பூர்வமான செயல்பாடுகள்லயும் மனதை செலுத்த முடியாமல் சில பதிவர்கள் அவதிப்படுவதை பார்க்க கஷ்டமாக இருக்கிறது...ஹ்ம்ம் பார்க்கலாம்..