Thursday, March 22, 2007

ஸென் - ஒரு எளிய அறிமுகம்

ஸென்...இதன் நேரடி அர்த்தம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. இந்த வார்த்தையும் அது தாங்கிப்பிடிக்கும் தத்துவமும், அதன் பின்புலமும், மஹோதன்னமும் எத்தனை பேருக்கு தெரியும்?....

இந்த பதிவு அதெல்லாம் தெரியாத நண்பர்களுக்காகவே....

புத்த மதத்தின் இரு பிரிவுகளில் ஒன்றான மஹாயான புத்தமதத்தின் ஒரு வகைதான் இந்த் ஸென். சீனாவில் தோன்றிய இந்த பிரிவை தோற்றுவித்தவன் ஒரு தமிழன் என்பது ஆச்சர்யமான அதே நேரத்தில் அதிகம் வெளியில் தெரியாத உண்மை.

'போதிதர்மா' என்கிற மாமனிதன் தந்த கொடைதான் இந்த ஸென். ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன்னர், பல்லவ அரனொருவனின் மூன்றாவது மகனாக பிறந்தவர்தான் இந்த போதிதர்மா.பௌத்த மதத்தில் ஈடுபாடு கொண்டு அரசபோகங்களை உதறி புத்தரின் கொள்கைகளை பின்பற்ற துவங்கிய போதிதர்மாவின் குரு ஒரு பெண்மணி என்பதும் ஆச்சர்யமான விடயம்.

'பிரக்யதாரா' என்கிற பெண்மணிதான் போதிதர்மாவின் குரு. குருகுல வாசம் முடித்த அவரை அவரின் குரு சீனாவுக்கு செல்லுமாறு பணித்தாக தெரிகிறது.அதற்கு சுவையான ஓரு காரணமும் சொல்லப்படுகிறது.

அந்த காலகட்டத்தில்தான் சீனா கன்ஃப்யூஷியசின் தத்துவங்களில் இருந்து மெல்ல புத்தரின் போதனைகளை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தது எனவும்,புத்தரின் எண்ணங்களை தேர்ந்த ஒரு மெய்ஞானியால் மட்டுமே பிரதிபலிக்க முடியும் என்றே அவர் சீனாவுக்கு செல்ல பணிக்கப்பட்டார் என்கிற கதையும் உண்டு.

சீனாவில் ஒன்பது ஆண்டுகள் போதனைக்குப் பிறகு தனது நான்கு சீடர்களை அழைத்து தனது கேள்விக்கு சரியான பதிலை தருபவரை தனது வாரிசாக நியமிப்பதாகவும்,அவருக்கே தன்னையும் தனது ஞானத்தையும் தருவதாக கூறினாராம்.

அவரின் மௌன கேள்விக்கு முதலாவது சீடன் "மௌனமே எல்லாவற்றையும் ஆரம்பிக்கும்" என்றானாம். போதிதர்மா அவனிடம் 'உனக்கு என்னுடைய தோல்' என்றார்.இரண்டாவது சீடன் "நானில்லை ஆனால் இருக்கிறேன், இருப்பதால்" என்றவனிடம் 'என் சதை' என்றாராம்.

மூண்றாமவன் "சொல்லமுடியாது" என்றதற்கு 'உனக்கு என் எலும்புகள் சொந்தம்' என்று கூற, நான்காவது சீடன் அவரை மௌனமாக வணங்கினான். அவனுக்கே தனது ஆன்மா சொந்தம் என கூறி அவனையே தனது வாரிசாக நியமித்தார் என்று சொல்லப்படுகிறது. அவர்தான் இரண்டாவது ஸென் குரு என அறியப்படும் 'ஹீகோ'(Huike).

தோலும் எலும்பு சதையும் மட்டுமே போதாது, ஆன்மாதான் நிரந்தரம் என்பதை உணர்த்தவே இந்த வாரிசு தேர்வு கதை சொல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது. போதிதர்மா அவரது சீடர்களாலேயே கொல்லப்பட்டதாகவும், ஆனால் அதற்கு மூன்றாண்டுகள் கழித்து அவர் இமயத்தின் பனிமுகடுகளி அவரை பலர் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

ஸென் என்பது மாபெரும் ஆன்ம ஞானம்...ஸென் என்பதற்கான அர்த்தத்தையும் அது தரும் அனுபவத்தினையும் அடுத்து வரும் பதிவில் தொடர்கிறேன்.

11 Comments:

Hari said...

பல தகவல்கள் புதிது. ஸென் பற்றிய பதிவுகள் முடிந்த பின், சூபிஸம் பற்றிய எழுத முயலுங்கள்.

பங்காளி... said...

சூஃபியிஸம் பற்றி நினைவூட்டியதற்கு நன்றி .....நிச்சயமாய் அது பற்றியும் எழுத வேண்டும். சூஃபியிஸம் பற்றி பல தவறான தகவல்களை களையவாவது அது பற்றி எழுதவேண்டும். விரைவில் எழுத முயல்கிறேன்.

அவந்திகா said...

அண்ணா

போன தடவை எங்க மாமா எனக்கு ஒரு புக் present பண்ணார் One Hand Clapping: Zen Stories For All Ages.full ஆ படிக்கல இன்னும்.இந்த புக் குடுதப்போ எனக்கு அவ்வளோ பிடிக்கல.மாமா குடுத்தார்னு ஒன்னும் சொல்லலை.4 நாள் ஆகியும் புக் தொடாம இருக்கறத பார்த்துட்டு, மாமா ஒரு கதை சொன்னார்...

I will tell in english..

Once a Professor went to meet
Nan-in, a Japanese master who followed Zen teachings, to know about Zen.

Nan-in offered tea and he kept on pouring tea in the cup even when it was overflowing.

The professor told Nan-in " Stop It is full".

அதுக்கு Nan-in, "அது போலத்தான் நீயும், you already have ur own opinion about certain things..we have start to fresh, it is also full..so empty yourself. then i will tell about Zen அப்படீன்னு சொன்னாராம்.

இது மாதிரி புக் எல்லாம் போர் அடிக்கும்னு நினச்சுட்டு இருந்தேன். மாமா எனக்கும் புரியற மாதிரி சொல்லி படிக்க வச்சார்.சின்ன சின்ன கதைகள் நல்லா இருக்குண்ணா.

அண்ணா i did not read your fully...i did not understand...
:-)))...i wanted to tell this.. i have three books on Zen stories

முத்துலெட்சுமி said...

எழுதுங்க எழுதுங்க. படிக்க படிக்க மனசு விசால மாகிற ஸென் கதைகள் சிலவற்றை தனிதனியாக படித்திருக்கிறேன். அவந்தி மாதிரி முழு
புத்த்கமா இன்னும் வாசிக்கல.
வாசிக்கனும். அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.

வடுவூர் குமார் said...

போன வருடம் வரை இதைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.
ஒரு நாள் நூலகத்தில் ஒரு புத்தகத்தை படித்தபோது...ஆஹா,இத்தனை நாள் படிக்காமல் விட்டுவிடோமே என்று வருத்தப்பட்டேன்.
மேலே சொல்லுங்கள்.

பங்காளி... said...

அவநதிகா...

ஒரு வகையில் நீங்கள் கொடுத்து வைத்தவர்....ஏனெனில் உங்கள் வயதில் எனக்கு இத்தகைய நூல்களை அறிமுகப்படுத்துவார் யாருமில்லை. பாடபுத்தகங்களை தாண்டி புத்தகம் படிப்பதை அப்போதெல்ல்லாம் வீட்டில் யாரும் ரசிப்பதில்லை.

நேரம் கிடைத்தால் உங்களிடம் இருக்கும் புத்தகத்தை மேய்ந்து பாருங்கள்...உங்களின் வருங்காலத்திற்கு வழித்துனையாய் நிறைய விவரங்கள் கிடைத்தாலும் ஆச்சர்யமில்லை......

பங்காளி... said...

வாங்க முத்துலட்சுமி....மொதல்ல உங்களுக்கெல்லாம் தேங்ஸ் சொல்லனும்....ஹி..ஹி..நம்மளையெல்லாம் இந்த வ்யர்ட் வெள்ளாட்ல சேக்காம மறந்து போனதுக்கு...ஹி..ஹி...

இன்றைய Commercial Lifestyle க்கு ஸென் ஓரு சரியான மாற்றாயிருக்கும் என்பது என்னுடைய கருத்து...

நீங்க என்ன நெனய்க்கறீங்க லட்சுமி?

பங்காளி... said...

வாங்க குமார்...

நானும் உங்க கேஸ்தான்....அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க...ஸென்..ஸென்னுன்னு பேசும்போது பேந்த பேந்த முழிச்சவந்தான். சரி இந்த முல்லா கத மாதிரி இவய்ங்களும் கதசொல்றவங்க போலன்னுதான் நெனச்சிட்டிருந்தேன்.

சமீபத்தில் திரு.ருத்ரன் அவர்களின் புத்தகத்தின் வழியேதான் ஸென்னை தேட ஆரம்பித்திருக்கிறேன். சரி நம்மள மாதிரி நாலு பேர் இல்லாமலா இரூப்பாங்க...அவங்களுக்கும் பயன் படட்டுமேன்னுதான் இந்த தொடர ஆரம்பிச்சேன்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி குமார்.

முத்துலெட்சுமி said...

நீங்க கடவுள்ன்னு சொல்லிக்கறீங்க,
அதான் பயந்துட்டு குடுக்கல.
ஸென்னுங்கறீங்க புத்தர்ங்கறீங்க.
ஏன் ஒஷோன்னு கூட எதெதோ
படிச்சுட்டு கிடைக்கற கொஞ்ச நேரத்துல வணிகம் எழுதிப் பாவம் வேலையா இருக்கறவர் .

\\இன்றைய Commercial Lifestyle க்கு ஸென் ஓரு சரியான மாற்றாயிருக்கும் என்பது என்னுடைய கருத்து...//
ரொம்ப சரிதான்ன்னு நினைக்கிறேன்.

தென்றல் said...

தகவல்களுக்கு நன்றிங்க!
இதப்பத்தி தெரி சிக்கணும்னு ரொம்பநாள எண்ணம் இருந்தது.
NBA போட்டியில Phil Jackson(அதாங்க.. LA Lakers Coach) ஸென் பத்தி நிறைய பேட்டிகள சொல்லிருக்காரு!

புத்தகங்கள், சுட்டிகள் இருந்தால் அறிமுகப்படுத்தவும். நன்றி!

தங்கச்சி, நீங்க கூட தினமும் ஒரு ஸென் கதை 'Pavilion'ல சொல்லலாம்ல... நம்ம team விளையாடுறத பார்க்கிறவங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும் ;)

Anonymous said...

ஆகா தமிழ் ஆளுதான் ஸென் தத்துவங்கள் ஆரம்பிச்சு வச்சாரா? இந்த விஷயம் எனக்கு தெரியவே தெரியாது! ஸென்னாலே யாரோ ஜப்பான் கார தாத்தா கதை சொல்ற மாதிரி நினைச்சு நினைச்சு பழகிப் போச்சு! அருமையான வரலாற்று கூற்று. எனக்கு தெரிஞ்சு "இளங்கோ, மணிமேகலை" தவிர வேறேங்கையும் தமிழ் நாட்டுல புத்தம் கேள்விப்படலை.

புத்தர் தான் முதல் முதல்ல பெண்களையும் சீடர்களா ஏத்துக்கிட்டு பெண் பிக்குணி மடங்கள் ஆரம்பிச்சாருன்னு படிச்சிருக்கேன் எப்பவோ. மகதா என்னும் நாட்டில் முதல்ல பெண் புத்த பிக்குணிகள் இருந்ததாக படிச்சேன்னு நினைக்கிறேன். நமக்கு இதன் பெரிய சாட்சியா மணிமேகலை இருக்காங்க.

ஸென் தொடரா அப்படின்ன அடிக்கடி வந்து பாக்கணுமே!