கள்ளழகர்
மதுரைக்காரனை அழகு பத்தி எழுதச்சொன்னால் முதலில் இந்த ஆசாமிதான் நினைவுக்கு வருவார்....நினைவு தெரிந்த நாளில் இருந்து,வீட்டருகில் நடக்கும் எதிர்சேவையில் இந்த அழகனை நெருக்கமாய் பார்க்கிறேன்...கடவுள் என்பதையெல்லாம் தாண்டி ஏதோ நெருங்கிய உறவினரைப் பார்ப்பதைப்போல ஆனந்தம் தரும் நிமிடங்கள் அவை......
திருவிழா சமயத்தில் கள்ளழகராய் ஊருக்குள் வரும் அவருக்கு கிடைக்கும் ஆர்ப்பாட்டமான வரவேற்பினையும், உற்ச்சாகத்தையும் வருடக்கணக்காய் பார்த்ததனால் சொல்கிறேன்.....கள்ளழகர் நிச்சயமாய் கடவுளாய் இருக்கமுடியாது,சாதாரண மக்களோடு மக்களாய் வாழ்ந்த மகத்தான மனிதனாய்த்தான் இருந்திருக்க வேண்டும்..
அன்னை மீனாட்சி
எல்லோருக்கும் தெரிந்த அழகிதான் இவள்.....எங்க ஆத்தா என ஓங்கிச்சொல்லும் உரிமை எங்களுக்கு மட்டுமேயானது. எங்கே சுத்தினாலும் கடைசியில் இவ காலடியிலதான் வந்து முடங்கிப் போவோம்.
தீவிர நாத்திகனாய் இருந்த காலத்திலும்கூட வெறுக்காத அழகியென்றால் அது மீனாட்சிதான்.... இதழடியில் கசியும் அந்த புண்ணகையும், மின்னும் மூக்குத்தியும், சரிந்து நிற்கும் ஒயிலும்.....வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரழகு...
வேஷ்டி
தமிழனின் பாரம்பரிய உடைதான் மூன்றாவது அழகு....ஆயிரம் சொல்லுங்கள் வேஷ்டியில் கிடைக்கும் கம்பீரமே தனிதான்....கல்யாணத்தன்று மட்டுமே வேஷ்டி கட்டுமளவுக்கு தமிழினம் தேய்ந்து போயிருக்கிறது என்பது கவலையான ஒன்று. இப்போதெல்லாம் வாரத்தில் குறைந்தது ஒரு நாளாவது வேஷ்டி கட்ட ஆரம்பித்திருக்கிறேன். ஆரம்பத்தில் வீட்டில் பயங்கர எதிர்ப்பு....ஆற்டி உசரத்தில் ஆஜானுபாகுவா, தெலுங்கு பட வில்லன் மாதிரி இருப்பதாகவெல்லாம் அம்மனியால் கேலி செய்யப்பட்டேன்.
இப்போது எதிர்ப்பு குறைந்திருக்கிறது....வேஷ்டி கட்டினால் ஒன்று அவன் மிகப்பெரிய ஆளாக இருக்க வேண்டும் அல்லது பாமரனாக இருக்கலாமென்கிற மனப்போக்கு பொதுவில் நிலவுவதை கவனித்திருக்கிறேன். திரும்பவும் எல்லோரும் வேஷ்ட்டி கட்டும் காலமொன்று நிச்சயமாக வரும்.
காதலி...
காதலி எப்போதும் அழகுதான்...அதிலும் கோவிக்கும் காதலி பேரழகி...அம்மனியே காதலியாய் இருப்பதால் பேரழகியோடு(புரியுதா!) வாழும் பாக்கியவான் நான்....
நான்..
என்னைச் சொல்லாமல் இந்த வரிசை முடிவடையாது....முதலிலேயே வந்திருக்க வேண்டியது, தன்னடக்கம் காரணமாய் கடைசியில் வருகிறேன். புற அழகு ஏற்கனவே பெற்றோர் வழியே தீர்மாணிக்கப் பட்டது, வேண்டுமானால் ஒப்பனை செய்து படம் காட்டலாம், அதுவும் ரொம்ப நாளைக்கு முடியாது. ஆனால் அக அழகினை நானே தீர்மானிக்கிறேன். அதை வார்த்தெடுக்கவும், வளர்த்தெடுக்கவும் என்னால் முடியும். இந்த அழகினை என் வாழ்நாள் தாண்டியும் நிலைக்கச் செய்யும் வாய்ப்புகள் எனக்கு இருக்கிறது.
சமூகம் ஒருவனை அழகனென்றோ, பணக்காரனென்றோ, குரூபியென்றோ பதிவுசெய்வதில்லை....நல்ல மனுசன்/கெட்ட மனுசன் என்றுதான் சொல்கிறது....மனசை வைத்தே நாம் அடையாளம் காட்டப்படுகிறோம்....அந்த மனதை அழகாகவே வைத்திருக்கிறேன், இன்னும் அழகாக்க நேர்மையாக முயற்சி செய்கிறேன் என்கிற வகையில் நானும் அழகன்தான்....ம்ம்ம்ம்ம்
26 Comments:
நான் கூட உங்கள ட்யூப்லைட் வெளிச்சம் அதாங்க ஏமாந்த கதை பத்தி எழுத டேக் பண்ணேன் அத இன்னும் எழுதாம அதுக்குள்ள யார் குடுத்தான்னு இத எழுதி இருக்கீங்க..?
அப்ப நானாத்தான் உளறிட்டேனா....நீங்க என்ன இதுக்குத்தான் கூப்டீகன்னு நினைச்சேன்....இன்னொரு பல்ப்பா?
....ஹி...ஹி
இதுக்குத்தான் நிதானம் வேணும்ங்கறது ..ஒருத்தர் வந்து நானும் இப்படி ஏமாந்திருக்கேன்னு சொன்னப்புறம் யாராவது அழகப்பத்தி எழுதுங்கன்னு
கேப்பாங்களா? அந்த ட்யூப்லைட் வெளிச்சத்த எழுதுங்கன்னு சொன்னேன்.
பரவால்ல இதுவும் நல்லாத்தான் இருக்கு.ஓடிக்கிட்டே அந்த இன்னோன்னுக்கும் எழுதிடுங்க்க.
பங்காளி!உங்க அம்மணி அழகு போலிருக்கு. அவங்களைப் பார்க்கலாமா... என்ன நானும் நீங்களும் முத்துலட்சுமியும் அங்கயும் இங்கயும் பேசிக்கிட்டிருக்கோம் போல. உண்மையில் மதுரை மீனாட்சி நல்ல அழகுதான். எனக்கு அம்மனைத்தான் பிடிக்கும்.
//இதுக்குத்தான் நிதானம் வேணும்ங்கறது ..ஒருத்தர் வந்து நானும் இப்படி ஏமாந்திருக்கேன்னு சொன்னப்புறம் யாராவது அழகப்பத்தி எழுதுங்கன்னு
கேப்பாங்களா? //
:)))
மாப்ளே, என்ன ஆச்சு? சோ மச் சில்லரை பொறுக்கிங்க்ஸ்??
சரி அழகுப் பதிவு எழுதுனதுதான் எழுதுன, இன்னும் மூணு பேரை கூப்பிடலாம் இல்ல.
//உற்ச்சாகத்தையும் // - யப்பா ராசா ற் க்குப் பின்னாடி புள்ளி வெச்ச எழுத்து வேண்டாம் ராசா. அது எம்புட்டு உற்சாகம் வந்தாலும் உற்சாகம்தான். உற்ச்சாகமாகாது!!
//தீவிர நாத்திகனாய் இருந்த காலத்திலும்கூட// - Prodigal Son!!
பங்காளி. அசத்தல் இடுகை. என்னை யாராவது அழகு பற்றி எழுதச் சொன்னால் அப்படியே உங்கள் இடுகையை எடுத்து இட்டுவிடுகிறேன். கள்ளழகரை வருடா வருடம் எதிர் கொண்டு வரவேற்ற குழுவில் இருந்தவன் என்பதால் அந்தப் பேரழகனைப் பற்றி நீங்கள் எழுதியிருப்பது அப்படியே எனக்குப் பொருந்துகிறது - என்ன எங்கள் வீடு அந்தப் பகுதியில் இல்லை என்பது மட்டுமே வேறுபாடு. அன்னை மீனாட்சியைப் பற்றி எழுதியதும் அப்படியே. நமக்கெல்லாம் அம்மன் கோவில் என்றாலே அங்கயற்கண் அம்மையின் கோயில் தானே. எங்கே இருந்தாலும் எங்கு சென்றாலும் அம்மா என்று அவள் காலடியை நோக்கும் நேரம் உலகத்தில் எல்லாமே மறந்துவிடுகின்றதே.
வெட்டி எடுப்பதால் அது வேட்டி. பேச்சு வழக்கத்தில் அது வேஷ்டி ஆகிவிட்டது. வேட்டி என்றே எழுதுவதும் பேசுவதும் நல்லது.
பேரழகியோடு வாழும் வாழ்க்கை நன்றாகத் தான் இருக்கும். வைரமுத்து மாதிரி வையர வேலை மட்டும் வேண்டாம் :-)
நல்ல மனிதா வாழ்க வாழ்க.
பங்ஸ்,
//கள்ளழகர் நிச்சயமாய் கடவுளாய் இருக்கமுடியாது,சாதாரண மக்களோடு மக்களாய் வாழ்ந்த மகத்தான மனிதனாய்த்தான் இருந்திருக்க வேண்டும்.//
உண்மைங்க.... நான் எங்கே இருந்தாலும் மதுரை திருவிழா'வுக்கு ஊருக்கு போயிருவேன், அழகர் ஆத்திலே இறங்கிறப்போ ஊருக்குள்ளே எல்லா ஃபிரண்ட்ஸ்களையும் கூட்டிக்கிட்டு நல்லா சுத்துவோம், வைகையாத்திலே இருந்து வண்டியூர் வரைக்கும் சாமி பின்னாடியே திரிவோம் :)
அதுவுமில்லாமே ஆத்துலே இறங்கின அன்னிக்கு தான் நான் பிறந்தேன், அதுதானலே தானாம் இந்த பெயரை வைச்சாங்களாம் :))
/*கோவிக்கும் காதலி பேரழகி...அம்மனியே காதலியாய் இருப்பதால் பேரழகியோடு(புரியுதா!)*/ I hope your other half would read this post:), and give you more koopam/anger for the rest of life :)
/*நான்..
என்னைச் சொல்லாமல் இந்த வரிசை முடிவடையாது...*/
What to say... simply a knock-out ::))
வடிவேலு பாணியில...நானாத்தான் நாறீட்டேனான்னு புலம்பிட்டு இருக்கேன்...ஹி..ஹி...
நம்ம முத்து லட்சுமி நம்மள அழகா பதிவுபோடச் சொல்றாகளோன்னு விழுந்து விழுந்த் எளுதுனா இப்ப நம்ப டப்பா டான்ஸாடிட்டு இருக்கு...என்னத்தச்சொல்ல....
கொத்தனார் ஒன்னுஞ்சொல்றாப்ல இல்ல...நடக்கட்டும் நடக்கட்டும்...னு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்.....
வாங்க தமிழ்நதி...
அவ்ளோவ் ஹெவியா ஒரு பதிவ போட்டு, மத்தியானத்துல இருந்து அருஞ்சொற்பொருள் படிக்கிற பையனாட்டம் ஒவ்வொரு வரிக்கா அர்த்தத்தை யோசிச்சிட்டு இருக்கேன்.
ம்ம்ம்ம்..அந்த ஒரு பதிவ வச்சே பத்து பதிவு எளுதலாம் அம்புட்டு மேட்டர அதுல புதைச்சி வச்சிருக்கீங்க....
ஆமா! இத நான் உங்க பதிவுல வந்துல்ல எளுதனும்...ஹைய்யோ எனக்கு என்ன ஆச்சு...ஹி..ஹி..
//கொத்தனார் ஒன்னுஞ்சொல்றாப்ல இல்ல...நடக்கட்டும் நடக்கட்டும்...னு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்....//
சரி, உம்மை நான் போன்ல கூப்பிட்டதை மறந்ததா ஊருக்குச் சொல்லிக்கலாம். நீர் ஒரு மூணு பேரைக் கூப்பிடும். இதுவும் ஒரு நதியாகட்டும். :))
/நானும் அழகன்தான்.../
ரொம்ப நல்ல அழகு, அழகன்!
வாங்க குமரன்,
ரொம்ப நாள் கழிச்சி நம்ம ஏரியா பக்கம் வந்திருக்கீங்க....வேட்டிதான் கரெக்டா...திருத்திக்கிறேன்.
இந்த வருசமும் திருவிழாக்கு ஊருக்கு போறேன்...உங்களுக்கும் சேர்த்து அட்டெண்டன்ஸ் குடுத்துட்டு வாறேன்.
ஹே..ராம்...
கொடுத்து வச்சவம்யா நீர்.வைகையாத்துல இருந்து வண்டியூர் வரைக்குமா,...அந்த அனுபவத்த ஒரு பதிவா போடலாம்ல....
டண்டணக்கா...
நீங்க ராஜேந்தரு ஃபேனா? :-)), நம்ம ஏரியால மொதவாட்டி சவுண்டு விட்ருக்கீக. அடிக்கடி வந்து சவுண்டு விடுங்க தலைவா!
அழகர் ஆற்றில் இறங்குதல், மதுரை மீனாட்சி, இவற்றுடன் சித்திரைத் தேர், தமுக்கம் சித்திரைப்பொருட்காட்சி, டெல்லிவாலா அப்பளம், ஜயண்ட் வீல் ராட்டினம்னு பள்ளிக்க்கூட கோடை விடுமுறைகால மதுரையைச் சுத்தி மனசு ரங்கராட்டினம் ஆட வச்சுட்டீங்க!
//என்னைச் சொல்லாமல் இந்த வரிசை முடிவடையாது....முதலிலேயே வந்திருக்க வேண்டியது, தன்னடக்கம் காரணமாய் கடைசியில் வருகிறேன். புற அழகு ஏற்கனவே பெற்றோர் வழியே தீர்மாணிக்கப் பட்டது, வேண்டுமானால் ஒப்பனை செய்து படம் காட்டலாம், அதுவும் ரொம்ப நாளைக்கு முடியாது. ஆனால் அக அழகினை நானே தீர்மானிக்கிறேன். அதை வார்த்தெடுக்கவும், வளர்த்தெடுக்கவும் என்னால் முடியும். இந்த அழகினை என் வாழ்நாள் தாண்டியும் நிலைக்கச் செய்யும் வாய்ப்புகள் எனக்கு இருக்கிறது.
சமூகம் ஒருவனை அழகனென்றோ, பணக்காரனென்றோ, குரூபியென்றோ பதிவுசெய்வதில்லை....நல்ல மனுசன்/கெட்ட மனுசன் என்றுதான் சொல்கிறது....மனசை வைத்தே நாம் அடையாளம் காட்டப்படுகிறோம்....அந்த மனதை அழகாகவே வைத்திருக்கிறேன், இன்னும் அழகாக்க நேர்மையாக முயற்சி செய்கிறேன் என்கிற வகையில் நானும் அழகன்தான்....ம்ம்ம்ம்ம்//
அப்பாடா, நீங்க நல்லவரா கெட்டவரான்னு நாயகன் டயலாக்கை உங்க கிட்ட கேட்கமுடியாது!
நீங்க மம்மூட்டின்னுட்டீங்க! (அழகன்)
நல்லா இருங்க! உங்கள் பதிவு சொல்லுவதை அழைப்பென ஏற்று உங்க நல்லமனசை பங்குபோட விழைகிறேன் :-))
//
நம்ம முத்து லட்சுமி நம்மள அழகா பதிவுபோடச் சொல்றாகளோன்னு விழுந்து விழுந்த் எளுதுனா இப்ப நம்ப டப்பா டான்ஸாடிட்டு இருக்கு...என்னத்தச்சொல்ல....
//
அட விடுங்க தல..இதெல்லாம் நமக்கென்ன புதுசா :))
/திருவிழா சமயத்தில் கள்ளழகராய் ஊருக்குள் வரும் அவருக்கு கிடைக்கும் ஆர்ப்பாட்டமான வரவேற்பினையும், உற்ச்சாகத்தையும் //
நண்பன் வீட்டில் கிடைக்கும் சூப்பர் சாப்பாட்டையும் :D
நீங்க மதுரைக்காரரா ... அந்த ஃபோட்டோ கள்ளழகரா ...
பேரழகியோடு இருக்கும் அழகரே,
//மகத்தான மனிதனாய்த்தான் இருந்திருக்க வேண்டும்//
அழகான வார்த்தைகள்! :)
ஆஹா...மூனு நாள் வரலைன்னா இந்த கூத்து எல்லாம் நடந்து இருக்கா...
ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல.அந்த அழகர் தான் பார்த்துக்கனும்..
ம்ம்ம்...எப்படியோ தாய்குலத்த பத்தி உயர்வா பேசிட்டீங்க..அதுக்காக ஒரு ஜே போடனும்...
வேஷ்டி எனக்கும் பிடித்த அழகு...
அழகரே அம்புட்டும் அழகுதேன்...
குமரன் சொன்னதே நானும்...
கப்பி...
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னுதான் சமாளிச்சிட்டு இர்ருக்கேன்...ஹி..ஹி..
ஹரிஹரன்...
உங்களுக்கு என் மேல எதுவும் கோவமில்லையே....எதுவும் உள்குத்து இருக்குமோன்னு அப்போல்ல இருந்து யோசிச்சிட்டு இருக்கேன்....
வாங்க மதுரா...
அழகர இப்பத்தான் பாக்றீகளா...அவரு எங்கூரு சூப்பர்ஸ்டார்..
மலையில இருந்து இறங்கு ஊருக்குள்ள வருவாரு பாருங்க...ஊரே கொண்டாடும்....அம்புட்டு பெரிய ஃபேன் பாலோயிங் அவருக்கு...
//எப்படியோ தாய்குலத்த பத்தி உயர்வா பேசிட்டீங்க//
மங்கை...இதுல ஏதும் உள்குத்து இல்லையே...ஏன்னா இந்த பதிவ பொறுத்தவரை நான் பல்பு வாங்கி ப்யூஸ் ஆய்ருக்கேன்...
ஆமா தெரியாமத்தான் கேக்றேன்...எப்ப தாய்குலத்த கொறவா பேசீருக்கேன்...ஒன்னும் புரியலப்பா....
ஒரே கப்ஃபூஸன்...ம்ம்ம்ம்
//ஆமா தெரியாமத்தான் கேக்றேன்...எப்ப தாய்குலத்த கொறவா பேசீருக்கேன்...ஒன்னும் புரியலப்பா....//
ஐயோ..அழகப்பா..
நான் எப்ப அப்படி சொன்னேன்...
எனக்கு நேரமே சரியில்லை.. எனக்கு தான் 'கன்ஃபுயூஷன்''
நீங்க சொன்னத ஹைலைட் பண்னேன் சாமியோவ்..
அவ்வளவுதான்
(நான் போடற பின்னூட்டத்த கூட களாய்கனுமா...ம்ம்ம்ம்)
appo nan alagu illaya...avvvvvvvvv
இந்த வருசமும் திருவிழாக்கு ஊருக்கு போறேன்...//
கூப்பிடுங்க ...
Post a Comment