Thursday, March 22, 2007

ஸென் - என்ன சொல்கிறது.

ஸென் - ஒரு எளிய அறிமுகம்
"நெஞ்சுக்குள் நேரடியாக உள் புகுவதே என் தத்துவம்"

...இப்படித்தான் போதிதர்மா ஸென் பற்றி குறிப்பிடுகிறார்.

திரு.ருத்ரன் அவர்கள் தனது நூலில் இதை இன்னும் எளிமையாய் ஸென்னை விளக்குகிறார்....

ஸென் என்பதை நிலாவை காட்டும் விரல் என்றும் குறிப்பிடுவதுண்டு.ஸென் என்பது அனுபவம்..அதை விளக்க மூயலும் கதைகள்,விடுகதைகள்,கவிதைகள் ஆகியவையே அந்த சுட்டும் விரல்கள். விரலைப் பார்த்தால் நிலா தெரியாது. நிலாவை பார்த்தபின் விரல் தேவைப்படாது.நிலாவை தேடுபவன் முதலில் விரலைப் பார்த்து அது காட்டும் நிலாவை பார்க்க முடியும்.ஸென் விளக்கப்படுவதை விட உணரப்படவேண்டியது......


நான் உணர்ந்த வரையில் ஸென் என்பது சிக்கலில்லாத ஆன்மீகம். குறுக்கீடுகள் இல்லாத அனுபவமென்றும் கூறலாம். பொதுவில் ஸென் ஒரு மதமேயில்லை,அது ஒரு வாழ்கைமுறை...அனுபவித்து உணரவேண்டிய வாழ்வியல் தத்துவம். இங்கே கடவுள் இல்லை,சடங்குகளோ சம்பிரதாயங்களோ இல்லை.

இன்னும் சொல்வதென்றால், வாழ்க்கைக்காக காத்திருக்கும் மனிதனிடம்..... காத்திருக்கும் வாழ்க்கையை உணர்த்தி அனுபவிக்க சொல்லும் சூத்திரம்

ஸென் தத்துவத்தினை ஒரு வாழ்க்கை முறையாக்க் உலகெங்கும் அறிமுகம் செய்த பெருமை திரு.சுஸுகி என்பாரையே சேரும்.கியோட்டோ பல்கலை கழகத்தின் புத்தமத தத்துவ பேராசிரியரான இவர் பலமொழிகளில் பரிச்சியம் உள்ளவர்.ஸென் பற்றி இவர் எழுதிய 25க்கும் மேற்பட்ட புத்தகங்களும் க்ட்டுரைகளும்தான் ஆங்கில உலகத்திற்கு ஸென்னை அறிமுகப்படுத்தியது.ஆங்கில வழிதான் ஸென் உலகெங்கும் பரவியது, நம் தமிழுக்கும் அப்படியே....

இவர் தவிர திரு.அலன் வாட்ஸ் மற்றும் திரு.பௌல் ரெப்ஃ ஆகியோரும் ஸென் பற்றி அருமையான புத்தகங்களை எழுதியுள்ளனர். இவர்களையெல்லாம் மிஞ்சும் வகையில் செக்ஸ் சாமியார் என அவதூறு பரப்பப்பட்ட ரஜனீஷ் என்கிற ஓஷோ தனது உரைகளில் ஸென் தத்துவத்தை பரப்பினார். அவரது உரைகளை கொண்டு மட்டுமே ஸென் தொடர்பாய் 700க்கும் மேலான நூல்கள் வெளியாகியுள்ளன. ஓஷோ எழுதிய 'போதிதர்மா' என்கிற நூலில் போதிதர்மா பற்றிய பல சுவையாக கதைகள் உள்ளன.

அடுத்த பாகத்தில் ஸென் பற்றி மேலதிக தகவல்களுடன் தொடர்கிறேன்.....

5 Comments:

வடுவூர் குமார் said...

நான் புரிந்துகொண்ட வரையில்...
வேண்டாம்,அதான் நீங்க எழுதுகிறீர்களே அதுக்குள்ள என்ன அவசரம்??
புதியவர்களுக்கு பயணுள்ளதாக இருக்கட்டும்,உங்கள் தொடரை அப்படியே தொடர்ந்து வருகிறேன்.

மங்கை said...

Zen mind,Begginer's mindனு ஒரு புத்தகம் இருக்கே...அதே சுஸுகி தானே நீங்க குறிப்பிட்டவரும்? ...Shunyru Suzuki?

நல்ல தொடர்..எழுதுங்க எழுதுங்க

ஆனா இப்படி ஓவர் டோஸ் எல்லாம் குடுக்க கூடாது....என்ன மாதிரி மக்க எல்லாம் மனசுல வச்சு ஒரு நாளைக்கு ஒரு பதிவு போடுங்க...

தென்றல் said...

பயனுள்ளதாக உள்ளது.. தொடர்ந்து எழுதுங்க .. வாழ்த்துக்கள்!

/ ....என்ன மாதிரி மக்க எல்லாம் மனசுல வச்சு ஒரு நாளைக்கு ஒரு பதிவு போடுங்க.../
ஆமாங்க...Please

Anonymous said...

//காத்திருக்கும் வாழ்க்கையை உணர்த்தி அனுபவிக்க சொல்லும் சூத்திரம்//

அருமையான விளக்கம்.

ஸுசுக்கிதான் பரப்புனாரா. பேரு ஈசியா ஞாபகம் வச்சுக்கலாம்.

காட்டாறு said...

உங்கள் பகுதியின் தலைப்பு என்னை உங்கள் பதிவுக்கு இழுத்து வந்தது. வளர்க உங்கள் சேவை. ஒரே ஒரு வருத்தம் நண்பரே. ஆங்கில எழுத்தாளர்களுக்கு "திரு" என்ற அடை மொழியும், ஓஷோவிற்கு அவரின் அவதூறு பரப்பும் அவப் பெயரையும் எழுதியுள்ளீர்கள். யார் என்ன சொன்ன போதும், ஆன்மீகத்தில் நாட்டம் உள்ள நீங்கள் நடுவுனிலை தவறலாமா? ஆசிரியர் தவறு செய்தால், அது மாணவரையும் பாதிக்கும் அல்லவா?

நண்பரே, நான் எழுதியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.