Sunday, April 01, 2007

ஸென் - தேடல்

ஸென் - ஒரு எளிய அறிமுகம்
ஸென் - என்ன சொல்கிறது.



"You are a citizen of two worlds - the inner and outer.There should be a bridge between these two worlds"
-Swami Rama


இல்லாத ஒன்றை தேடுவதுதானே உண்மையான தேடலாக இருக்கமுடியும்.இல்லாதது என நிஜத்தில் எதுவுமே இல்லை.....எல்லாமே இருக்கிறது, நமக்கு அது தெரியாததால் அதை தேடல் என்கிறோம்.

தேடுபொருட்கள் புதிதாய் எங்கிருந்தும் முளைக்கவில்லை, இங்கேதான் எங்கேயோ இருக்கிறது. சரியான தேடலும், தேடுபொருளும் ஒன்றாய் நேர்கோட்டில் இனையும் போது உற்சாகிக்கிறோம். இது தற்செயலாகவும் நடக்கலாம், ஆசை, நிர்பந்தம்,அச்சம் போன்ற காரணிகளாலும் இருக்கலாம்.

தேடுபொருள் எதுவாகவும் இருக்கலாம்,அதற்கு இலக்கணங்கள் இல்லை, கடவுள் தொடங்கி காமம், பொருள்,புகழ்,அதிகாரம்,போதை என விரிவது எப்போதும் தனிமனிதனின் வசதியாகவே இருந்துவருகிறது. வேண்டியதையும் தேடுகிறோம், வேண்டாததையும் தேடுகிறோம்......

ஸென் சொல்கிறது.....'தேடாதே'

ஆம்...வெளியில் தேடாதே, எல்லாவற்றையும் உனக்குள் தேடு என்கிறது. இதை இந்திய தத்துவவாதிகள் 'சுயதரிசனம்' என்கின்றனர். தன்னைத்தானே தேடி தரிசனம் பெறுவது அத்தனை எளிதில்லை, அது ஒரு தவம்....சிலருக்கு தவம் மட்டுமே வாய்க்கும், சிலருக்கு வரங்களும் கிடைக்கலாம். ஆனால் தேடல் உண்மையானதாய் இருக்க வேண்டும்.

நண்பர்களே...தேடுவதற்கு தீர்மாணம் மட்டுமே போதுமானது. அறிந்துகொள்ள பக்குவம் வேண்டும் அவ்வளவே.அதாவது ஒலியினை கேட்கும் காதுகளும் அதன் அர்த்தத்தை உணரும் மனதினையும் போல.....

சரி....உள்ளுக்குள் எதை தேடுவதாம்? எதை வேண்டுமானாலும் தேடலாம்....இதுதான் வேண்டுமென இலக்கில்லாமல் எதை வேண்டுமானாலும் தேடலாம். தேடலின் விளைவாய் உண்மைகள் புலப்பட ஆரம்பிக்கும், இந்த உண்மை எங்கே இருக்கும்?, ஒருவேளை மனதின் மையத்தில் இருக்குமா....அதைத்தான் இவர்கள் கடவுள் என பெயரிட்டு அழைக்கிறார்களோ?...

ஸென் மேலோட்டமான விஷயமில்லை.....அதன் ஆழம் நோக்கி பயணிக்க பயணிக்க வசீகரமாய் விரியும் சுஹானுபவம். மேலும் விவரங்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.

5 Comments:

வடுவூர் குமார் said...

சுவாமி ராமாவில் ஆரம்பித்துள்ளீர்கள்.
அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்.

பங்காளி... said...

வாங்க குமார்...

கொஞ்சம் அவசரமா எழுதினது,கொஞ்சம் பொறுமையா எழுதியிருக்கலாமோன்னு இப்ப தோணுது....கோர்வையா வரலைன்னு நிணைக்கிறேன்...ம்ம்ம்ம்ம்ம்ம்

அடுத்த பதிவையாவது நிதானமா எழுத முயற்சிக்கனும்...ம்ம்ம்ம்ம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்..அப்புறம்...
[கேட்டுட்டு(படிச்சுட்டு) இருக்கறனாம்]

பங்காளி... said...

முத்துலட்சுமி...

என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலையே...ஹி..ஹி...

மங்கை said...

தேடல் இல்லைனா வாழ்க்கை ஜீவன் இல்லாம இருக்கும் போல...
எத்தனை ரகசியங்கள் இருக்கின்றனவோ உள்ளே..ரகசியத்தை அறிந்து கொள்வது சுவாரஸ்யம்தானே...
கடவுள் என்பதை நாமே நம் தேடலில் கண்டுகொள்ள வேண்டும் என்று J.கிருஷனமூர்த்தி சொன்னதாக படித்தது நினைவிற்கு வருகிறது...

வைரமுத்துவின் பாடல் வரிகள்

தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
ஆடல் போல தேடல் கூட ஒரு சுகமே