Tuesday, June 26, 2007

என்ன கொடுமை சார் இது!


வித்தியாசமான சாகசங்கள், விளையாட்டுகள், வீரப் போட்டிகளை அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இன்டர்நெட்டில் ஒளிபரப்பி வருகிறது. இதில் நடத்தப்படும் "கேர்ள்ஸ் அண்ட் கன்ஸ்" என்ற நிகழ்ச்சிக்காக ஹோம்ஸ்டட் நகரில் நடந்த ஷ¨ட்டிங் இது.

துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெண்கள் எந்த அளவுக்கு சரியாக சுடுகிறார்கள், எந்த அளவுக்கு செக்ஸியாக இருக்கிறார்கள் என்பது உள்பட பல விஷயங்களை கருத்தில் கொண்டு சிறந்த வீராங்கனை தேர்ந்தெடுக்கப்படுவார்.

மேலும் வயித்தெறிச்சல கொட்டிக்க இங்க போய் பாருங்க...ம்ம்ம்ம்ம்

Monday, June 25, 2007

நெசமாவே இவிங்களையெல்லாம் எனக்கு தெரியாது!




Sunday, June 24, 2007

பங்காளி...இனி பங்காளி மட்டும்தான்

என்னுடைய வலைப்பதிவுகளில் கடந்த ஒரூ மாதமாய் நிலவி வந்த குழப்பங்களையெல்லாம் ஓரளவிற்கு தெளிவுபடுத்தவே இந்த பதிவு.

செய்திப் பதிவொன்று போடலாமென பரிசோதனை முயற்சியாக 'குப்பைகள்' என்கிற வலைப்பூவினை முழுமூச்சாய் நடத்தப்போய் ஒரு கட்டத்தில் நான் பங்காளியா...குப்பையா என்கிற சந்தேகமே வந்துவிட, பங்காளிக்கென இருக்கிற அடையாளத்தை(அப்படி ஒன்னு இருக்கா என்ன?) தொலைத்துவிடுவோமோ என்கிற கவலை வந்து குப்பைகளை மிளகாயாக்கி அதை தனிப்பதிவாக்கி விட்டு, குப்பைகளை தூக்கிவிட்டேன்.

இனி வழமை போல உங்கள் பங்காளியின் பிதற்றல்கள் மட்டுமே இந்த வலைப்பூவினில் தொடரும். இந்த நேரத்தில் எனது மற்ற வலைப்பதிவுகளை பங்காளியை விட்டு தூரமாகவே வைத்திருக்க விரும்புகிறேன்.ஏனெனில் பங்காளி சுதந்திரமானவன், அடையாளங்கள் இல்லாதவன்...எல்லைகளையோ, முகங்களையோ, எதிர்கருத்துகளையோ அவசியமென கருதாதவன்.(ஹி..ஹி..ர்ர்ரொம்மப ஓவரா தெரியுதுல்ல...ஹி..ஹி..என்ன பன்றது உங்க விதி இதயெல்லாம் படிக்கனும்னு இருக்கு...ஹி..ஹி...).


ஓக்கே...மக்களே, இனி இங்கே 'ஒன்லி நான் ஸ்டாப்' பிதற்றல்தான்...என்சாய்....ஹி..ஹி...





துறை சார்ந்த எனது பதிவுகள் பற்றிய ஒரு அறிமுகத்தினையும் இந்த பதிவின் மூலமாய் தெரிவித்திட விரும்புகிறேன்.உங்களில் யாருக்கேனும் ஒருவருக்கு இதனால் பயன் விளையுமானால் அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சி.....

http://paisapower.blogspot.com



பங்கு வர்த்தகம் குறித்த ஆங்கில வலைப்பூவிது. இங்கு எனது பார்வைகள் தவிர, என்னை கடந்து போகும் தகவல்களை அவற்றின் மூலத்திலிருந்து பகிர்ந்துகொள்ளும் முயற்சி. பங்கு சந்தையில் ஓரளவிற்கு அனுபவமிருப்பவர்களுக்கு இந்த தகவல்கள் உதவும்.




http://milakaai.blogspot.com



இட்லி வடைகளோ, சட்னி சாம்பார்களோ....சற்று முன்னோ இந்த வலைப்பூவினை பார்த்து கலவரப்பட தேவையில்லை...ஹி..ஹி...இது ச்சும்மாச்சுக்கும் ஒரு செய்திப்பதிவு. CAP Technologyல் இயங்குவது இந்த தளத்தின் சிறப்பம்சம்...ஹி..ஹி...



http://panguvaniham.wordpress.com



பங்கு வணிகத்திற்கான தமிழ் பதிவு, அறிமுக நிலையில் இருக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் பங்குசந்தையின் அடிப்படை கூறுகளை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு இந்த தளம் உதவலாம்.




http://varththaham.blogspot.com



தமிழில் வர்தக உலகம் பற்றிய செய்திகளையும் வாய்ப்புகளையும் பகிர்ந்துகொள்ளும் முயற்சி.

Friday, June 01, 2007

நம்ம தமிழ்நதி....

சொந்தமாய் பதிவெழுதி பத்து நாட்கள் ஆகிவிட்டது. குப்பைகளை ப்ரமோட் பண்ணுகிறேன் பேர்வழியென சொந்த சரக்குகளை ஏறக்கட்டிவிட்டு வலைமேய்ந்து செய்திகளை பொறுக்கியெடுக்கவே சரியாய் போய்விட்டது. சோதனை முயற்சியாக துவங்கிய பதிவு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு....திடீரெனெ நேற்று மாலை புதிதாய் சில கவலைகள் முளைக்க துவங்கிவிட்டன.அதற்கும் காரணமுண்டு....

ஒரு கருத்து கணிப்பு போடுவோமேயென 'யாருடையது நடுநிலையான பதிவு' என ஒன்றை போட்டேன்...நான் எதிர்பார்த்தது "சற்றுமுன்", அப்புறம் "இட்லிவடை" கடைசியாக நமது குப்பை வருமென நினைத்தேன்....முதன் இரண்டு நாட்களுக்கு அப்படித்தான் இருந்தது....நம்ம நிலமை மோசமாயிருக்கேயென நானே குப்பைக்கு இரண்டு கள்ள ஓட்டு கூட போட்டேன்....திடீரென நிலமை மாறி குப்பைகள் மேலேயெழுந்து இப்பொழுது இதை எழுதிக்கொண்டிருக்கும் பொன்னான வேளையில் குப்பைகள்தான் நடுநிலையான பதிவாம்....யாரை நொந்து கொள்வது...ஹி..ஹி...வாக்களித்த கண்மணிகளுக்கு நன்றி...நன்றி....

இந்த ரேஞ்சில் போனால் சீக்கிரமே நான் ஒரு Media Baron ஆகிவிடுவேனோ என்கிற கவலை தொண்டையை அடைக்க அடுத்ததாக என்னையறிமாமல் கலைஞரின் ரசிகனாகிவிடுவேனோ என்கிற பயம் வேறு கவ்வியது....ஆஹா!..இது நல்லதுக்கில்லையே என உஷாராகி குப்பைக்கு கொஞ்சம் ப்ரேக் விடுவோமென நினைத்தேன்...

அதென்ன குப்பைக்கு மட்டும்...பங்காளி...பங்குவணிகம்...வர்த்தகம் எல்லாத்துக்கும் ஒருநாள் ப்ரேக் கொடுப்பது என முடிவு செய்து இன்றைக்கு தமிழ்மணத்திற்கும் ப்ரேக்....முடிவெல்லாம் சரிதான் செயல்படுத்துறது ரொம்ப கஷ்டம்னு நல்லாவே தெரிஞ்சது.....சரி அலுவலகத்துல உக்காந்திருந்தாத்தானே கை அரிக்கும்...வெளியே சுத்தலாம்னு கெளம்பினேன்.....

"இன்னில இருந்து சீட்பெல்ட் மாட்டனுமாம்" னு அம்மனி கிளம்பும்போது மண்டைக்குள் மணியடிக்க எரிச்சல் பற்றியது...ஊரிலுள்ள ஹெல்மெட் ஆசாமிகள் எல்லாரும் கூடி நின்று என்னைபார்த்து கைகொட்டி சிரிப்பது போலிருந்தது...அந்தளவுக்கு ஏகத்துக்கு நக்கலடித்திருந்தேன்....ச்சே என்ன இம்சைடா இது! நாம என்ன 120 கி.மீ ஸ்பீடுலயா வண்டி ஓட்டப்போறோம்...இருக்கிற ட்ராபிக்ல, சைக்கிள்ள போறவன் கூட பந்தாவா சைட் வாங்கீட்டு போறான்....இதுல என்ன ..யித்துக்கு சீட்பெல்ட் என லாஜிக்கிக் கொண்டே கிளம்பினேன்....

சீட்பெல்ட்டினால் சட்டை கசங்குகிறதே என்கிற கவலைவேறு....வழியில் நிறைய பேரை ஹெல்மெட் இல்லாமல் பார்த்தபோது வெறியானது.....நெல்சன் மாணிக்கம் ரோடில் ட்ராபிக்கில் நின்றபோது பொறுக்கமாட்டாமல் பக்கத்தில் நின்ற மரமண்டை(!) ஒருவரிடம் "என்னங்க ஹெல்மெட் போடலையா" என கவலையாக நடித்தேன்...அவரோ "ஒரு வாரம் வார்னிங்கொடுப்பாங்களாம் அப்புறம்தான் ஃபைன் எல்லாம்னு இதுவரை ரெண்டுமூணு இடத்துல வார்னிங்கோடதான் வாறேன்" என்றார் சாகவாசமாய்....சீட்பெல்டை கழற்றிவிட்டேன்....ம்ம்ம்ம்

எங்கே போகலாமென நினைத்தபோது நந்தம்பாக்கம் 'ட்ரேட் செண்ட்டரில்'...ஹிந்துவின் ட்ரேட்ஃபேர் நினனவுக்கு வந்து...மௌண்ட்ரோடில் வண்டியை விரட்டினேன்..கத்திபார சந்திப்பில் விவரமில்லாத புதியவர்கள் வழிமாறிப்போக நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது...அந்த அளவுக்கு குழப்பம்...குழப்பம்...மேலும் குழப்பம்.

ட்ரேட் செண்ட்டரில் நுழைவுகட்டணம் ரூ.50 என்றார்கள்...கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்ததால்...அம்பது ரூபாய் பொருட்டாக தெரியவில்லை...உள்ளே வழக்கமான குப்பைகளை பராக்குபார்க்கும் கலர்கலரான தேவதைகள்..ஹி...ஹி...இந்த மாதிரி ரிலாக்ஸ்டான சூழலுக்குள் புழங்கி நாளாகியிருந்ததால்...நிதானமாய்ய்ய்ய்ய்ய்ய்...சுற்றினேன்.கார் நிறுவனங்கள் புதிய கார்களை நிறுத்தி பக்கத்திலேயே ஏர்ஹோஸ்டஸ் ரேஞ்சில் தேவதைகளை தூவியிருந்தனர்....மாருதியின் புதிய கார் நல்லாயிருந்ததால்(புரியுதுல்ல..) அங்கே ர்ரொம்ப நேரம் நின்று அளவளவளவளாவிட்டு வநதேன்....தாய்லாந்து ஃபிகர்களிடம் சிரிக்க சிரிக்க பேசிவிட்டு வந்தபோது...நம்ம தாய்லாந்தில் பொறந்திருக்கலாமோவென எண்ணத்தை கிளறியது...

ஆஹா...பதிவு ரூட் மாறி போகுதுல்ல...அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க...எத்தனை நாளைக்குத்தான் ஓட்ஸ் கஞ்சி வடிச்சதையும், ஹோட்டல்ல தோசை சாப்டதையுமே படிப்பீங்க...

இப்ப தலைப்புக்கு வருவம்...நம்ம தமிழ்நதிய நேத்து விகடன் வெளிச்சம் போட்டு காட்டிருக்கு...காலைலயே பார்த்தேன், அப்படியொரு சந்தோசம், ஏதோ நம்ம வீட்டு பொண்ணுக்கு கெடச்ச அங்கீகாரத்த அனுபவிக்கிற சந்தோசம்...இன்னிக்கு பார்த்து எளுதாம வெரதம் இருக்கோமேன்னு கூட தோணிச்சி...நம்ம எளுதலைன்னா என்ன நம்ம பங்காளிப்பயலுக கொண்டாடிருவாய்ங்கன்னு தேத்திக்கிட்டேன்....

பெரிய அளவுக்கு வரவேண்டியவர் இங்க ச்சின்ன வட்டத்துக்குள்ள இருக்கார்ன்னு அப்பப்ப நினைச்சிப்பேன்...இப்ப கதவுகள் திறந்து வெளிச்சம் விழுந்தாச்சி, இனி பெரிசா வருவார்...வரணும்...வரவைக்கனும்னு எங்க ஆத்தா மீனாட்ச்சிட்ட ஒரு பெட்டிசன் போட்ருக்கேன்....நம்ம ஆளு ஒருத்தர் மேல வந்தா அது நமக்கெல்லாம் பெருமைதானே....

அப்புறம் இந்த சந்தர்ப்பத்துல தமிழ்நதிக்கு இன்னோரு வேண்டுகோள்...அப்பப்ப...இழப்புகளை மீறின சந்தோசங்களையும் பதிவு செய்ய முயற்சியுங்கள்....

"எதையோ எளுதனும்னு ஆரம்பிச்சி...எங்கெங்கயோ சுத்தீட்டு கடைசில சொல்ல வந்ததை மேம்போக்கா சொல்லி முடிக்கும் இந்த முயற்சி...இலக்கின்றி எழுதுதல் என்கிற வகையை சார்ந்ததாகுமென தமிழ்கூறும் வலையுலகிற்கு தெரிவித்துக்கொள்கிறேன்....."