Monday, March 26, 2007

கடவுள் பாதி...மிருகம் மீதி.....

மக்களே மொதல்லயே சொல்லீர்றேன், இதுக்கெல்லாம் முழுக்காரணம் நம்ம மங்கைதான். இத படிச்சிட்டு நீங்கள் அடையப்போகும் எரிச்சல், மன உளைச்சல்...இத்யாதி இத்யாதிகளுக்கெல்லாம் அவர்தான் காரணம்....

(பின்னே நமக்குள்ள தூங்கீட்டு இருந்த மிருகத்த எழுப்பி விட்டதுக்கான பலனை அம்மனி அனுபவிக்க வேனாமா...ஹி..ஹி...)

ஓக்கே...ஸ்டார்ட் ம்மீசிக்....

முதல்ல உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான உண்மை...

மெய்யாலுமே நான் கடவுள், நம்புறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கும், என்ன பண்றது அதான் உண்மை.உங்களுக்கு சந்தேகமிருந்தா சோதித்து பாருங்கள்.....என்னை நம்புகிறவர்களுக்கு அடுத்த மூன்று நாட்களில் நல்ல சேதியொன்று வரும்...நம்பாதவர்களுக்கு.....ஹேய் நம்புங்கப்பா....

அடுத்து....

நான் ரொம்ப மோசமான, மூர்க்கமான காமுகன்...ஹி..ஹி...டென்சனாவாதீங்கோ...ஒரு எழுத்து மிஸ்ஸிங்...இப்ப நல்லா படிங்க..."கார்முகன்". அதென்னவோ கார்னா அப்படி ஒரு கொலவெறி...பன்னெண்டு வயசுல மொதமொதலா ஸ்டீயரிங் பிடிச்சி அப்பாகிட்ட தர்ம அடி வாங்கி...இப்ப இருவத்தி அஞ்சு வருசமாச்சி.....இன்னும் தீரலை.இன்னிக்கு மார்கெட்ல நான் ஓட்டாத காரே இல்லைன்னு சொல்லலாம்.அத்தனையும் வாங்கி ஓட்டியாச்சி...கொளுப்பெடுத்த பயபுள்ளன்னு தோணுதா....ஹி..ஹி..., வீட்லயும் திட்டிப்பார்த்துட்டு தண்ணி தெளிச்சி விட்டுட்டாக....ஹி..ஹி...இப்ப எத்தன வண்டி வச்சிருக்கேனு சொன்னா பீத்திக்கிற மாதிரி இருக்கும்,அதுனால வேணாம்...ஹி..ஹி...

எப்போதும் என்னை ஒரு முட்டாளாக காட்டிக்கொள்வதையே விரும்புகிறேன்...அதில் நிறைய சாதகங்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்திருக்கிறேன்.....ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்....புத்திசாலியாக யார்வேண்டுமானாலும் நடிக்கலாம்...முட்டாளாய் நடிப்பது ரொம்பவே கஷ்டம்.

அப்பால...நாம யாருக்காச்சும் ஹெல்ப் பண்ணினா அவங்கள தனியா கூப்டு மெரட்டீருவேன்..ஹி..ஹி....அதாவது "மவனே...நான் பண்ண இந்த ஹெல்ப் உணக்கும் எனக்கும் மட்டுந்தான் தெரியனும்...வேற யாருக்காச்சும் தெரிஞ்சது தொலச்சிருவேன்னு"....ஹி..ஹி.யாருக்கும் தெரியாம ஹெல்ப் பண்ணீட்டு ஒன்னுந்தெரியாத மாதிரி சமத்தா இருக்கறதுதான் பிடிச்சிருக்கு.

ஒரு காலத்தில் நண்பர்கள்தான் வாழ்க்கையாக இருந்தது....இன்றைக்கு தனிமையையே விரும்புகிறேன்....கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் குடும்பத்துடன் செலவழிக்கவே விரும்புகிறேன்.இன்றைக்கு அநேகமாய் எல்லா நண்பர்களையும் தவிர்த்துவிடுகிறேன்....புதிய நண்பர்களை பெறுவதிலும் நாட்டமில்லை.

ஹி..ஹி...சென்னையில் ஒரு மிகபிரபலமான ஜோசிய அம்மனி என் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, உன் வாழ்க்கையில் குறைந்தது பத்து பெண்களாவது வந்துபோவார்கள், உஷார் என இன்ப அதிர்ச்சி கொடுத்தார்...ஹி..ஹி...வீட்ல அம்மனிகிட்டே இன்னும் ஒன்பது பேர் வருவாங்க போல ஜாக்கரதையா பாத்துக்கன்னு சொல்லிருக்கேன் ...ஹி..ஹி...அம்மனியோ...அம்மா,தங்கை, பொன்னு, அத்தைனு...பத்து பேர் கணக்கு சொல்லி எல்லாம் வந்துட்டாங்க...அதுனால கைய காலவச்சிட்டு ஒழுங்கா இருக்கனும்னு மிரட்டிருக்காங்க...ஹி..ஹி...

ஒன்னுக்கொண்னு சம்பந்தமேயில்லாத வெவ்வேறு துறைசார்ந்த நான்கு தொழில் நிறுவனங்கள், அவற்றின் இலக்குகள்,ஆட்கள்,போட்டிகள், பிரச்சினைகள், லாபம், நஷ்டம்...என விரட்டும் அழுத்தங்கள்...காலை 7.30துவங்கும் நாள் முடிவடையும்போது நள்ளிரவு 12 ஐ தாண்டுகிறது....5 முதல் 6 மணி நேரமே தூக்கம்...தினம் சென்னை ட்ராஃபிக்கில் குறைந்தது 100 கிலோமீட்டராவது ட்ரைவ் செய்யும் பொறுமை.இத்தனைக்கும் நடுவில் சுற்றுபுறத்தை ரசிக்க,கோவிக்க,விமர்சிக்க முடிதல்......

என்னுடைய தொழில்முறை எதிரிகளை மிகவும் மதிப்பவன்.....அதனால்தான் என்னவோ.....என்னுடைய மோசமான எதிரிகள் கூட என்னை நேருக்குநேர் பார்க்க அமையும் சந்தர்ப்பத்தில் பகையை ஒதுக்கிவைத்து சினேகமாய் பேசுகிறார்கள்.....தொழிலை தவிர்த்து மற்ற விசயங்களை மனம்விட்டு பேசும் எதிரிகளும் உண்டு.இது குறித்து தனியே ஒரு பதிவே போடலாம் அத்தனை ஸ்வாரஸ்யமான சம்பவங்கள் உண்டு.

இந்தியா ஒரு அதியற்புதமான Legspinner ஐ இழந்துவிட்டது....மெய்யாலுமே மக்கா.....உலகத்தரம் வாய்ந்த, ஏன் அதை விட அருமையான சுழல்பந்து வீச்சாளன் நான்.

இப்படி நெறய சொல்லீட்டு போகலாம்....இப்பவே உங்களையெல்லாம் பாத்தா பாவமா இருக்கு....அதுனால இத்தோட முடிச்சிக்கறேன்.

"சும்மா கெடந்த பயல கிண்டிவிட்டு இப்ப ஆட்டம் தாங்கலியேன்னு தோணுதா மங்கை!......நாந்தான் அப்பவே சொன்னேன்ல நான் இந்த வெள்ளாட்டுக்கு வரலைன்னு...இப்ப அனுபவிங்க....ஹி..ஹி..."

11 Comments:

சென்ஷி said...

பதிவ படிச்சா இப்படித்தான் ஆகும்.
ஆத்தாகிட்ட வேப்பில அடிச்சு, விபூதி வாங்கிக்குங்க..
தட்சணைய டெல்லிக்கு அனுப்பிடுங்க.

அருள் தரும் கண்மணிஆத்தா பேரவை
பக்த கேடி :))

சென்ஷி

காட்டாறு said...

ஆத்தாவுக்கு போட்டியா வந்துட்டீகளே...... ஆத்தா கண்ண குத்த போவுது.... ஏதோ காமுகன்னு...... (ர் நமக்கும் தொந்தரவு தானுங்க) சொன்னதால.... ஓடி பூடுறேன்..... மங்கையக்கா சொன்னா சரியாத்தேன் இருக்கும்... என்னையும் கூப்டாகல்ல.....

மங்கை said...

ஆமா.. அதென்ன சோசியம் சொல்ற ஆள் கூட அம்மணிதானா... அதான் தலை கீழ கட்டி விட்டுருவாங்கன்னு தெரியுது இல்ல....அப்புறம் எதுக்கு அந்த பெருமை நியாபகத்துல இருக்கு இன்னும்...

//மங்கையக்கா சொன்னா சரியாத்தேன் இருக்கும்... என்னையும் கூப்டாகல்ல..... ///

ஆஹா புது முத்துப்பேச்சி போல இருக்கு...

காட்டாறு.. வெரசா வா தாயீ...உன் அருமை பெருமை எல்லாம் எடுத்துவுடு

பங்காளி... said...

சென்ஷி....காட்டாறு

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பர்களே....

கடவுளுக்கும் காம்பெட்டிஷனா...அய்யஹோ

நமக்கு ஒரு ப்ராண்டு உருவாக்கனுமோ....ம்ம்ம்ம்....யோசிக்கனும். கடவுளளையே யோசிக்க வைக்கிறாய்ங்க....ம்ம்ம்ம்ம்

பங்காளி... said...

மங்கை...

'எல்ஸி பாஸில்'ங்ற அந்த அம்மா இங்க நெல்சன் மாணிக்கம் ரோட்ல இருக்காங்க....ரொம்ப ஃபேமஸ் அந்த அம்மா....

அந்த அம்மா சொன்ன இன்னொரு விசயம்...உனக்கு பங்குசந்தையே வராது...ஆகாதுன்னு....ட்ரை பண்ணாதேன்னு அடிச்சு சொன்னாங்க.

எனக்கு அவங்க சொன்ன ரெண்டு மேட்டருமே பலிக்கலை...ஹி..ஹி...

தென்றல் said...

/ஓட்டாத காரே இல்லைன்னு சொல்லலாம்.அத்தனையும் வாங்கி ஓட்டியாச்சி.../

நம்ம ஊர் ரோடுக்கு எதுங்க நல்ல காரு?
"கார்முகன்" (சரியாதான சொல்லிருக்கேன்..!) -னு தனியா ஏதும் தளம் ஆரம்பிச்சிருக்கிகளா?

காமடி-யா எழுதுனாலும் சில இடங்களில்....
/ஒரு காலத்தில் நண்பர்கள்தான் வாழ்க்கையாக இருந்தது....இன்றைக்கு தனிமையையே விரும்புகிறேன்..
/
..!!

பங்காளி... said...

வாங்க தென்றல்...
(இதை வாம்மா ம்மின்னல்...பாணியில் படிக்கனும் சரியா..ஹி..ஹி...)

அப்புறம் என்னோட தாழ்மையான கருத்து என்னன்னா.....OPEL ல ASTRA...னு ஒரு மாடல் வந்துச்சி தென்றல்.....இப்ப அந்த மாடல் வருதா தெரியல...

கார்னா...அது கார், ஒரு சிங்கம் மாதிரி, அத்தனை Manly யா ஒரு கார நான் இது வரை ஓட்டலை...ம்ம்ம்ம்

ஒரு வருசம் வச்சிருந்தேன்...ஒரு தடவை திருச்சில இருந்து வந்துட்டு இருக்கும் போது ஒரு குரங்கு அடிபட்டு செத்துப்போச்சு. வீட்ல அனுமார் செண்டிமெண்ட் எல்லாம் சொல்லி விக்கவச்சிட்டாங்க....

மேலும் விவரத்துக்கு இந்த இனைப்ப பாருங்க....

http://en.wikipedia.org/wiki/Opel_Astra

தென்றல் said...

/வாங்க தென்றல்...
(இதை வாம்மா ம்மின்னல்...பாணியில் படிக்கனும் சரியா..ஹி..ஹி...)
/
:) ;)

/
http://en.wikipedia.org/wiki/Opel_Astra
/
சுட்டிக்கு நன்றி, பங்காளி!

'நம்ம level'க்கு கார் suggest பண்ணுவீங்க-னு நினச்சா ... உங்க level வேற போல....
(Santro குடுத்துட்டு என்ன வாங்கலாம்-ங்கிறதுக்காக கேட்டேன்..)

பங்காளி... said...

தென்றல்...Satro குடுத்துட்டு வேற வண்டின்னா, என்னோட சாய்ஸ் Wagon R பாருங்க....அநேகமா இந்தியாவோட முதல் Hybrid Car இதுவாத்தான் இருக்கும்....

http://www.marutiwagonr.com/waganordoe.asp

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ஒரு காலத்தில் நண்பர்கள்தான் வாழ்க்கையாக இருந்தது....இன்றைக்கு தனிமையையே விரும்புகிறேன்....கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் குடும்பத்துடன் செலவழிக்கவே விரும்புகிறேன்.இன்றைக்கு அநேகமாய் எல்லா நண்பர்களையும் தவிர்த்துவிடுகிறேன்....புதிய நண்பர்களை பெறுவதிலும் நாட்டமில்லை//

வயசாகிட்டாலே அப்படித்தாங்க.

கார்முகன் சார் ...இந்த ஒபல் கோர்ஸா பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன் எப்படி ஓகே வா..

\\"மவனே...நான் பண்ண இந்த ஹெல்ப் உணக்கும் எனக்கும் மட்டுந்தான் தெரியனும்...வேற யாருக்காச்சும் தெரிஞ்சது //

அட ஆமாம் சொல்லிட்டாங்க டமாரமடிச்சிட்டாங்கன்னு வைங்க
எல்லாருக்கும் செய்யமுடியுமா என்னா
அதுக்குத்தானே ...

சமத்துதான்.

அப்புறம் நல்ல சேதி எதாச்சும் வருதான்னு பார்க்கிறேன்.

பங்காளி... said...

வாங்க முத்துலட்சுமி....

யாருக்கு வயசாய்டுச்சி?...இதை நான் வண்மையாக கண்டிக்கிறேன்.நேத்துகூட சைட் அடிச்சேன் தெரியும்ல...ஹி....ஹி...

OpelCorsa நல்ல வண்டி முத்துலட்சுமி...என்ன Spares & Service அநியாயத்துக்கு காஸ்ட்லி.அதுக்கு Ford பாருங்க, அதுல நல்ல மாடல் நாலஞ்சி இருக்கு.இப்ப வந்திருக்கிற ஃபியஸ்டா ரொம்ப நல்லா இருக்கு.

பகவான் மனம் குளிர்ந்தார், நல்ல சேதி வந்துட்டே இருக்கு உங்களுக்கு....ஹி..ஹி...