Wednesday, August 29, 2007

நான் உன்னை நெனச்சேன்....

இந்த பாடலை காலத்தை வென்ற பாடலென்றோ...மாஸ்ட்டர்பீஸ் என்றோ தரம் பிரிக்க இயலாது...அத்தனை உயரத்தில் வைக்குமளவுக்கு நுணுக்கமான இசை கோர்வையோ, கவித்துவமான வரிகளோ இல்லை.பிரபல நடிகர்களும் இல்லை...இந்த படத்தின் பெயரைச் சொன்னால் அது எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை.

படம்: கண்ணில் தெரியும் கதைகள், நடிகர்கள்: சரத்பாபு,வடிவுக்கரசி,ஸ்ரீபிரியா....இந்த பாடலின் தனித்துவமே...இதன் எளிமைதான்,அது பாடல்வரிகளாகட்டும்,இசையாகட்டும்,படமாக்கிய விதமாகட்டும் அத்தனையும் எளிமை.

இத்தனை எளிமைகளையும் தாண்டி இந்த பாடல் இன்றைக்கும் நினைக்கப்பட ஒரே காரணம் இதை பாடிய எஸ்.பி.பி,வாணி ஜெயராம்,ஜிக்கி இவர்களே காரணம். ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு...காதல்,இயலாமை,துக்கம் என அத்தனை சோக உணர்ச்சிகளையும் தோய்த்தெடுத்து தந்த பாடல் இது.

பின்னிரவு நேரங்களில் மொட்டை மாடியில் இந்த பாடலை கேட்ட கணத்தில் கரகரவென வழிந்த கண்ணீர் சூட்டினை இப்போதும் உணரவைக்கிற மாயம் இந்த பாடலுக்குண்டு....காதலை மட்டுமே முன்வைத்து இயலாமல் என்னை கடந்து போய் இன்றைக்கும் என்னை நேசிக்கும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன்....

(ர்ர்ர்ரொம்ப நாளைக்கப்புறம் பங்காளி...ஃபீல் ஆய்ட்டான்...கண்டுக்காதீங்க...ஹி..ஹி...)

8 Comments:

மங்கை said...

என்ன ஆச்சு...

பங்காளி... said...

ஹி..ஹி...அதானே...என்னாச்சுடா பங்காளி...ச்ச்சியர் அப்

இன்னும் எத்தனை பேர் வரவேண்டியிருக்கு...அதுக்குள்ள ஃபீல் ஆய்ட்டா எப்படி...

(தங்கமணி பதிவெல்லாம் படிக்கறதில்லைன்ற தைரியத்துல எளுதீட்டேன்...சைக்கிள் கேப்ல யாரும் போட்டுக் குடுத்துராதீகப்பு...)

மங்கை said...

//இன்னும் எத்தனை பேர் வரவேண்டியிருக்கு...அதுக்குள்ள ஃபீல் ஆய்ட்டா எப்படி...///


அடப்பாவமே...நானும் வந்து கேட்டேன் பாருங்க..என்னை சொல்லனும்

பங்காளி... said...

தாயே...நீங்களுமா...?

ஆமா எனக்கு என்ன ஆச்சு?...நடந்து போகும் போது சின்னதா ஒரு கல் இடறினா உயிர் போற மாதிரி ஒரு வலி வருமே....அந்த மாதிரி ஒரு சின்ன வலி...இப்ப

காட்டாறு said...

நெனச்சது சரி... ஏன் சொல்லல?

பங்காளி... said...

குட் கொஸ்டின் காட்டாறு....கேள்வின்னா அது இந்த மாதிரித்தான் இருக்கனும். எல்லாராலயும் இந்த மாதிரி கேள்வி கேக்கமுடியாது.

கேள்வி கேட்பது ஒரு அரிய கலை,அது உங்களுக்கு இயற்கையாவே இருக்குன்னு நெனைய்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு....

பதில் சொல்ல முடியாத ஒரு கேள்விய கேக்கும்போது அது தர்ற ஆனந்தத்தை சொல்லி புரியவைக்க முடியாது.,..அதாவது இப்ப இதை படிக்கும் போது வருதே சந்தோஷம் அதைச் சொன்னேன்...

ஹி..ஹி..ஹி..முடியல விட்ருங்க ஆத்தா....

Anonymous said...

நெசமாலுமே அது நல்ல பாட்டுத்தாங்க. கண்ணீர் விட்டா தப்பு இல்ல.
ஆனா ஒண்ண மட்டும் தெளிவா சொல்லிருங்க. ஏதாச்சும் காதல் தோல்வியா??

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சரி அடிக்கடி ஃபீல் ஆனா நல்ல பாட்டு பதிவு வருமில்லை...

இந்த பாட்டு அடிக்கடி ஹம் செய்கிற பாடல்களில் ஒன்று...

சரத்பாபு ஸ்ரீபிரியா வடிவுக்கரசி எல்லாம் பெரிய ஆக்டர் லிஸ்ட்ல வரமாட்டாங்களா அடப்பாவமே.படம் பேரு இத்தனை நாள் தெரியாதுதான் ஆனா ...