Wednesday, August 22, 2007

சென்னை....என்னுடைய கவலைகள்

எனது முப்பத்தியேழு வருட வாழ்வில், கடந்த பதினோரு வருடங்களாய் சென்னை என்னை கொண்டாடிக்கொண்டிருக்கிறது...வேரும் விழுதும் மதுரையில் இருந்தாலும் நான் கொப்பும் குலையுமாய் இருப்பது சென்னையில்தான். உயரங்களையும், பள்ளங்களையும் எனக்கு விருப்பு வெறுப்பின்றி காட்டிக் கொடுத்ததும் சென்னையே....இந்த 368 வது பிறந்த நாளில் இதை நன்றியோடு நினைத்துக்கொள்வதை என் கடமையாக நினைக்கிறேன்.

சென்னப்பட்டனமாக துவங்கி மெட்ராஸ் ஆகி இன்று சென்னையாகியிருக்கும் நகரம் இன்று தன் இரு கரங்களையும் அசுரத்தனமாக விரித்து வளர்ந்து கொண்டிருக்கிறது. இது ஆரோகியமானதா இல்லையா என்பது விவாதத்திற்குறியது.இந்த வளர்ச்சியால் சென்னையின் முகம் மாறியிருப்பது மட்டும் உண்மை.

சாமானியர்களுக்கு சிரமங்கள் கூடியிருப்பதும் இந்நிலை தொடருமாயின் சென்னை சாமானியர்கள் வாழ தகுதியற்ற நகரமாய் மாறிவிடுமோ என்கிற கவலை நியாயமானதே....போலியான வாழ்க்கைச் சூழலுக்கு மக்கள் இரையாகத் துவங்கியிருப்பதும், உறவுகள் உதடுகளுக்கு வந்துவிட்ட நிதர்சனமும் ஆபத்தான ஒன்று.....வெறும் வர்த்தக நோக்கங்களை மட்டுமே முன்னிறுத்திப் பார்க்கும் அரசாங்கம்...சென்னையின் கலாச்சார அடித்தளங்கள் புதையுண்டு சீரழிந்து போவதை இந்த கணத்திலாவது உணர்ந்து சுதாரிக்க வேண்டும்.

இந்த நாளில் இதுவே என்னுடைய எதிர்பார்ப்பு.....

9 Comments:

வெங்கட்ராமன் said...

ஒவ்வொரு வரியிலும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

சென்னை தற்சமயம் வளரவில்லை

வீங்குகிறது, பார்ப்பதற்கு இந்த வளர்ச்சி அழகாக தெரிந்தாலும் ஆபத்து.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கவலை நியாயமானதே ஆனால் நாட்டின் ஒவ்வொரு நகரத்திற்கும் இதே கவலைக்கான காரணிகள் இருக்கிறது.. என்ன செய்வது?

காட்டாறு said...

ஒரு கவலையோடு நிறுத்திட்டீங்க.

சென்னைக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். சென்னை வாழ் பங்காளி எனக்கு கேக் வாங்கித்தருவாரா?

பங்காளி... said...

டெல்ஃபின்...வெங்கட்ராமன்...முத்துலட்சுமி...

வருகைக்கும்...கருத்திற்கும் நன்றி...

காட்டாறு...

கேக் என்ன பெரிய கேக்...ஹி..ஹி..கப்பு(Cup) தர்றேன் வாங்கிக்கறியளா....

காட்டாறு said...

கப்பு தான் கூவத்தோட இருக்குதே பங்காளி. நீங்க வேற தனியா தரணுமா? அது சரி... நீங்களும் கப்பு ஆகிட்டீங்கன்னு நினைக்கிறேன். எனக்கு cakes and bakes கேக் தான் வேணும். பார்சல் அனுப்பிருங்க.

பங்காளி... said...

ஆத்தா...

நான் கப்பு வாங்கின கதைய நீங்க படிக்கலையா....படிச்சிப்பாருங்க...நம்ம வண்டவாளம் தண்டவாளத்துல ஏறுன கதைய...ஹி..ஹி...

http://pangaali.blogspot.com/2007/08/blog-post_17.html

மங்கை said...

பங்காளி சார்...

கொஞ்சமா கவலைப் படுங்க சார்...

காட்டாறு said...

அய்யா... ராசா... ஆள விடு சாமீ... கப்பு வேணாம் ராசாத்தீ... நாம சின்ன வயசில வாங்கின சோப்பு டப்பா, செம்பு கதைக்கே இன்னம் கிண்டலடிச்சிட்டு இருக்காங்க வீட்டுல.

பின்குறிப்பு:
கேக் மறக்காம வாங்கி அனுப்புங்க. ;-)

கப்பி | Kappi said...

சரியாச் சொன்னீங்கண்ணே!