Wednesday, August 08, 2007

பட்டறையும் இருட்டறையும்

எல்லோரும் பதிவர் பட்டறை பற்றியும் அங்கே பேசியவைகளின் எதிர்வினையினை மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் இப் பதிவுக்கும் பதிவர் பட்டறைக்குமான தொடர்பு அம்மாவாசை,அப்துல்காதர் தொடர்பினையொத்ததே....

என்னவோ ஆரம்பத்திலிருந்து இந்த பட்டறை தொடர்பான பதிவுகளும், செய்திகளும் என்னை பெரிதாய் ஈர்க்கவில்லை....ஆர்வமில்லை அதற்காக ஆதரிக்கவில்லை என்றெல்லாம் சொல்லமுடியாது.எதிர்பார்ப்புகள் இல்லாது மாய்ந்து மாய்ந்து உழைத்து உருக்கொடுத்த உள்ளங்கள் அனைவரும் பாராட்டுக்குறியவர்களே..... சிரமத்தினை பொருட்படுத்தாது தொலைதூரங்களில் இருந்து ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டு படையல் போட்ட நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

இதற்குமேல் இந்த பட்டறை குறித்து விமர்சிக்க எனக்கு அருகதையிருப்பதாக நினைக்கவில்லை.இந்தியன் எக்ஸ்ப்ரஸ் படிப்பவர்களும் CNNIBN பார்ப்பவர்களும் ஆர்வம் மிகுதியால் வரும் நாட்களில் தமிழ் வலைப்பதிவுகளை கலக்குவார்கள் என நம்புவோம்.

இனி பொதுவில் பட்டறைகளைப் பற்றி பேசுவோம்....இருட்டறையில் ஏற்றி வைக்கப்படும் விளக்கினை போன்றதே பட்டறைகள்(ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பாடி தலைப்பை பிடிச்சாச்சு!). ஆனால் நிதர்சனத்தில் எந்தவொரு பட்டறையும் அத்தகைய செயல்களை செய்வதாக தெரியவில்லை.குறைந்தபட்சம் என்னுடைய அனுபவத்தில்...,

பட்டறைகளுக்கான ஃபார்மேட் ஏறத்தாழ ஒரே வகையில்தான் அமைகின்றன...முதலில் அழைப்பு, அப்புறம் பதிவு...அதற்கு கட்டணம்...சாப்பாடு,பிஸ்கட் அப்புறம் நாலைந்து நிபுணர்களின்(!) பேச்சு, பின்னர் கலந்துரையாடல் கிளம்பும்போது ஒரு கையேடு அல்லது ஒரு சான்றிதழ். வெளியே வரும் போது தெளிவை விட குழப்பம்தான் மிஞ்சியிருக்கும்.

இதில் பெரிய கூத்து இம்மாதிரி பட்டறைகளில் பேச அழைக்கப்படும் பேச்சாளர்கள் நடந்து கொள்ளும் விதம் அல்லது வானத்தில் இருந்து குதித்தவர்களைப் போல காட்டிக் கொள்ளும் பாங்கு...புதுமையாக,புரட்சியாக பேசுவதாக நினைத்துக் கொண்டு பார்வையாளர்களை குழப்பும் அரைவேக்காட்டுத்தனம்.

தற்காலத்தில் எந்தவொரு பட்டறையும் வர்த்தகரீதியாக லாபநோக்கின்றி நடத்தப்படுவதில்லை.அதே நேரத்தில் அமைப்பாளர்கள் கலந்துகொள்வோர்க்கு பட்ட்றையின் நோக்கத்தினை நேர்மையாக தெளிவுபடுத்தி அதனால் பரஸ்பர ஆதாயம் பெறுவதை விட தங்களின் சரக்கினை திணிக்கும் வகையில், குதிரைக்கு சேணம் பூட்டும் வேலைதான் இந்த பட்டறைகளில் நடைபெறுகிறது என்பது என் தெளிவு....

3 Comments:

துளசி கோபால் said...

/... அம்மாவாசை,அப்துல்காதர் தொடர்பினையொத்ததே....//

அதெப்படிங்க, இப்படி ஒரு தொடர்பு இல்லைன்னு சொல்றீங்க?

அம்மாவாசை முடிஞ்ச மூணாம் பிறை, அப்துல்காதருக்கு முக்கியமாச்சே.
அம்மாவாசையே இல்லேன்னா, மூணாம்நாள் கணக்கு எப்படி வரும்?

என்னவோ போங்க, ஏடாகூடமாத்தான் பழமொழி இருக்கு:-)

பங்காளி... said...

பழமொழி சொன்னா அனுபவிக்கனும்...ஆராயக்கூடாது...

ஹி..ஹி...

காட்டாறு said...

பட்டறைன்னுபார்த்ததும் காத தூரம் ஓடிப் போயி திரும்ப வந்து வாசிச்சி முடிச்சேன். ;-)

//குதிரைக்கு சேணம் பூட்டும் வேலைதான் இந்த பட்டறைகளில் நடைபெறுகிறது என்பது என் தெளிவு....
//
இது பொதுவா சொன்னதுங்களா?