Friday, August 17, 2007

நான் க(ஆ)ப்பு வாங்கிய கதை !

இது போன திங்களன்று நடந்தது...வழக்கமான நமது சுறுசுறுப்பின் காரணமாக இன்றுதான் எழுத முடிந்தது...

திங்கள் காலை, நம்ம காட்டாறுவின் கவிதையை படித்து செம்மாந்திருந்த வேளையில் நம்ம டவுசர் பாண்டி ஒருத்தன் லைன்ல வந்தான்....என்னடான்னேன், 'மாப்ள இந்த கப்பெல்லாம் எங்க கெடய்க்கும்னான்?', ஏன் என்ன ஆச்சு உனக்கு, உன் ஃபாக்டரில ஏதும் ஓட்டப்பந்தயம் நடத்றியான்னு கேட்டேன்....இல்லடா அது ஒரு சோகக்கதை நேர்ல சொல்றேன்னனன்..

சரி வா பாண்டிபஜார் ரத்னா ஸ்டோர்ல கிடைக்கும் வாங்கிக்கலாம்னு சொன்னேன், ஒரு மணி நேரத்துல வந்தான்...ஏழாங்கிளாஸ்ல இருந்து கல்லூரி இறுதி வரை ஒரே பென்ச்சில குப்பை கொட்டின பங்காளிப் பய....இன்னிக்கு சென்னைல ரெண்டு தொழிற்சாலைகளுக்கு முதலாளி....

பிரச்சினன இதுதான்...

பயலுக்கு ரெண்டு பயபுள்ளைக, படிப்பெல்லாம் அப்பனாட்டந்தான்....நம்மள விட நல்லாப் படிக்கறாய்ங்கடா...இதுவே அதிகம்னு சந்தோஷப்படறவன். ஆனா அவங்க அக்காவுக்கு அப்படியில்ல, ரெண்டு பயலுகளும் படிப்புலயுங் கெட்டி அதோட நிக்காம ஸ்கூல்ல நடத்துற எல்லாப் போட்டியிலயும் கலந்துட்டு சர்ட்டிஃபிகேட் என்ன கப்பென்னன்னு கலக்கறவய்ங்க...

தற்பெருமை அக்கா ஓவரா பீத்திக்க...ஆரம்பத்துல நம்ம பய சுதாரிக்கல...ஆனா ஒரு ஸ்டேஜ்ல அக்காவோட ஆட்டம் அதிகமாய் போய் இவன் குடும்பத்த சான்ஸ் கிடைக்கும் போதெல்லம் மட்டம் தட்ட ஆரம்பிக்க நம்ம பய பொங்கிட்டான்...நம்ம பயபுள்ளைக வாங்காது, பேசாம நாமளே நாலு கப்ப வாங்கீட்டு போய் வீட்ல வச்சி என்ன பெரிய்ய கப்பு, நம்ம பயலுகளும் வாங்க ஆரம்பிச்சிட்டாய்ங்க, வாய மூடு ஆத்தான்னு அக்காவை சாமியாடிறனும்னு வெறியோட என் முன்னால உக்காந்திருந்தான்....

ஹி..ஹி...நம்ம பயலுக்கு ஒன்னுன்னா சும்ம விட்ருவோமா! சூடேறியது...என்னடா பெரிய்ய கப்பு...நேர காசிச்செட்டி தெருவுக்கு போறோம் ஆளுசரத்துக்கு கப்பு ஷீல்டுன்னு வாங்கீட்டு போய் வீட்ட ரெப்பீருவ்வொம்னு உணர்ச்சி வசப்பட்டேன்.அவன் அப்ப்டில்லாம் பண்ணோம்னா எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு நாமளே காட்டிக் குடுக்கற மாதிரி ஆயிரும், அதுனால மொதல்ல ட்ரையல் மாதிரி ஒரு நாலஞ்சி கப்ப உள்ள விடுவோம்னு என்னை அமைதிப்படுத்த...ரத்னா ஸ்டோர்ஸ் போனோம்.

மூனு சைஸ்ல கப்பு இருந்துச்சி அவன் சைஸுக்கு ரெண்டுன்னு வாங்கீருவோம்னான், நானோ ஒவ்வொரு தடவயும் வரமுடியாது இப்பவே சைஸுக்கு அஞ்சு எடுத்துருவோம்...வேன்னா என் ஆஃபீஸ்ல போட்ரு அப்பப்ப உள்ள விடுவோம்னு ஹோல்சேல் ஐடியா கொடுக்க பதினைஞ்சு கப் வாங்கினோம்.ஆயிரத்து இருநூறு ரூவா பில்...அப்பத்தான் எனக்கு மண்டைக்குள்ள பல்ப் எரிஞ்சது.

இவனே...வெளிய வா ஒரு சூப்பர் ஐடியா இருக்குன்னு கூட்டீட்டு வந்தேன்...என்னடான்னான், வெறும் கப்ப யார் வேணுன்னாலும் வாங்கலாம்,ஆனா நாம அந்த கப்புல ஸ்கூல் பேர வெட்றோம் அதோட கீழ இண்டிபெண்டன்ஸ் டே செலிபரேஷ்ன்னு வெட்றோம்னேன். அபூர்வ சகோதரர்கள் படத்துல இன்ஸ்பெக்டர் ஜனகராஜ பார்த்து உணர்ச்சி வசப்படற கான்ஸ்ட்டபிள் மாதிரி என்னை பார்த்தான்.

அஞ்சு கப்புல பக்காவ வெட்டீட்டு இந்த சந்தோசத்த கொண்டாட ஹோட்டல் விருதுநகர்ல புல்மீல்ஸ் வெட்டினோம். அன்னிக்கு நான் சாப்பிட்டதை மட்டும் நம்ம அம்மனி பார்த்திருந்த ஒருவாரத்துக்கு வெறும் பச்சத்தண்ணி மட்டுந்தான் எனக்கு டயட்டா இருந்திருக்கும்...ஹி..ஹி...

மூனரை மணியிருக்கும், உண்ட மயக்கத்தில் தமிழ்மணத்தை மேய்ந்து கொண்டிருந்தேன்...கைபேசியில் நம்ம டவுசர் பாண்டியிடமிருந்து அழைப்பு, இப்ப என்ன பிரச்சினை இவனுக்கு என நினைத்துக்கொண்டே லைனை எடுத்தால்...நம்ம பாண்டியின் மிஸ்ஸஸ். 'அண்ணே! ப்ஃரீயா இருக்கியளா' என ஆரம்பித்த தங்கச்சியிடம் வெள்ளந்தியாய் எப்படி இருக்க தாயீ,சொகமா..இன்னிக்கு காலைல கூட உங்க வூட்டுக்காரன் இங்க வந்திருந்தானேன்னு ஆரம்பித்ததுதான் தாமதம்....தங்கச்சி பிலுபிலுவென பிடித்துக்கொண்டது....

நடந்தது இதுதான் நம்ம பய வீட்டுக்குப் போய் ஜம்பமாய் கப் மேட்டரச் சொல்ல, அவன் அம்மணி சூடாகி எகிற பயல் தப்பிக்க எல்லாம் என்னோட ஐடியான்னு பழியத்தூக்கி என் தலைல போட தங்கச்சி என்னை போனில் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தது.

நம்முடைய சமாதானம் எதுவும் எடுபடவில்லை....பாவிப்பய இப்படி கவுத்துட்டானேன்னு கருவியபடி டிஃபென்ஸ் ஆடிக்கொண்டிருந்தேன்.தன் அப்பாவி கணவனுக்கு இப்படி ஐடியா கொடுத்து கெடுத்துட்டானேன்னு அதுக்கு ஆத்திரம்....எல்லலம் பேசிட்டு, என்னவோ மனசுல பட்டத பேசீட்டேன்...நான் பேசினது தப்புன்னா என்ன மன்னிச்சிருங்கன்னே...ன்னு சொல்லீட்டு போஃன வச்சிருச்சி....

உடனே பயல கூப்ட முடியாது,கொலைவெறியோட காத்துட்டு இருந்தேன்......சாயங்காலம் ஆறு மணிக்கா கூப்டான்...'மாப்ள சாரீடா'ன்னான்...மதுரைக்கே உரித்தான சில கெட்டவார்த்தைகளுக்கு பிறகு கேட்டேன்...எவன் பேரையாவது சொல்லிருக்கலாம்ல, என்னை ஏண்டா சொன்னேன்னு....உம் பேர சொன்னதாலதான் நான் தப்பிச்சேன் இல்லைன்னா நம்பியிருக்க மாட்டான்னு பரிதாபமாய் சொன்னான்....சரி இன்று நமக்கு விதிக்கப்பட்டது இதுதான் போலிருக்கிறது...ன்னு நினைச்சிட்டு வீட்டுக்குவந்தேன்...

வந்தா...நம்ம அம்மனி...வாங்க ஐடியா திலகமேன்னு நக்கலாய் சிரிக்க.....அதுக்குள்ள பரப்பீட்டாய்ங்களான்னு நொந்துட்டே...ஹி..ஹி...என வழியத்தான் முடிந்தது. நம்ம உண்மையச் சொல்லப்போக அந்த மேட்டர் திரும்ப அவன் அம்மனிகிட்டா போக...தொலையுது அவனாவது தப்பிக்கட்டுமேன்னு தியாகியாய்ட்டேன்...ஹி..ஹி...

19 Comments:

மங்கை said...

//உம் பேர சொன்னதாலதான் நான் தப்பிச்சேன் இல்லைன்னா நம்பியிருக்க மாட்டான்னு பரிதாபமாய் சொன்னான்///

//தொலையுது அவனாவது தப்பிக்கட்டுமேன்னு தியாகியாய்ட்டேன்...ஹி..ஹி...///

பேர் வாங்கின ஐடியா மன்னா...

என்னே மதுரையம்பதியின் நல்லெண்ணம். வாழ்க வள்ளலே

இது போல பல கப்புகள் வாங்க வாழ்த்துக்கள்...(அதாவது நீங்க நிஜமா வாங்கின கப்)

மங்கை said...

//உம் பேர சொன்னதாலதான் நான் தப்பிச்சேன் இல்லைன்னா நம்பியிருக்க மாட்டான்னு பரிதாபமாய் சொன்னான்///

இது தான் சூப்பர்...சிரிச்சு சிரிச்சு ஆனந்தக் கண்ணீரே வந்துடுச்சு..:-))

பங்காளி... said...

மங்கை...

ர்ர்ர்ர்ரொம்ம்ம்ப சந்தோசமா....எப்படியோ என்னால நீங்க சந்தோசமா இருந்தா நமக்கு அதுவே சந்தோஷம்...

ஹி..ஹி..டி.வி சீரியல் டயலாக் மாதிரி இருக்குல்ல....

பெத்தராயுடு said...

கப்பு வாங்குனது சூப்பர்...

ஏனுங்,

சந்தை நிலவரம் கலவரமா இருக்கே? அதப்பத்தி ஏதாவது சொல்றது?

பங்காளி... said...

பெத்தராயுடு...

சந்தையில் இம்முறை இழப்புகள் கொஞ்சம் அதிகம்தான்...இங்க விட்டதை இங்கியே வட்டியோட எடுத்துறலாம்...கவலைப் படாதீங்க...

இன்னும் ஒரு வாரத்துக்கு நிலமை இப்படித்தான் இருக்கும்..அப்பால சரியாய்டும்.

பங்காளி... said...

டெல்ஃபின்...

ஹி..ஹி...இப்பவே கையில பத்து கப்பு வச்சிருக்கேன்...அஞ்சுதான் அவன் எடுத்துட்டு போனான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பரவாயில்லை நான் பல்புஆன கதைமாதிரி இது ஆப்பு வாங்கினதா..தொடரட்டும் உண்மை வெளிச்சமிடப்படும் பதிவுகள்..:)

மாசிலா said...

பங்காளி!
உங்க தியாக மனசுக்கு நீங்களே ஒரு கப்பு குடுத்துக்கூங்க. அவ்ளோதான். எல்லாம் சரியா போச்சு.
;-D

Avanthika said...

ஹை அண்ணா..அந்த பாக்கி அஞ்சுல ஒன்னு எனக்கு ரிசர்வ் பண்ணிக்குறேன்.. இங்க ஒருத்தி ரொம்ப லொல்லு பண்றா..

இராம்/Raam said...

பங்ஸ்,

சூப்பரு... உங்க சோகக் கதையே படிச்சு சிரிச்சி சிரிச்சி கண்ணுலே தண்ணியே வந்துருச்சு.... :)

Jazeela said...

இந்த பதிவுக்காகவே மீதி பத்து கப்பும் உங்களுக்குத்தான். என்சாய்! :-) நல்ல அனுபவம் இப்படி அப்பப்ப பகிர்ந்துக்கிடுங்க.

வினையூக்கி said...

சீனியர் நம்ம கலேஜ்ஜுல சொல்ற கப்பைத் தான் சொல்றீங்கன்னு உள்ளே வந்தேன். அது சரி, நீங்க படிப்பாளியா இருந்திருப்பிங்க... அது சரி போனவாரம் நம்ம கலேஜ் அலுமினி சென்னை சாப்டர் மீட்டிங் நடந்துச்சு, நீங்க வந்து இருந்திங்கலா

பங்காளி... said...

முத்துலட்சுமி...மாசிலா

இந்த பயலால நான் நெறயதடவை மாட்டிருக்கேன்...என்னால அவன் மாட்டீருக்கான்...அரசியல்ல இதெல்லாம் சஹஜமப்பா...ஹி..ஹி...

பங்காளி... said...

அவந்திகா...

நம்ம கையில இப்ப பத்து கப்பு இருக்கு...அதுல ஒன்னு உங்களுக்கு சரியா!

பங்காளி... said...

இராம்...ஜெசிலா..

இந்த மாதிரி சம்பவங்கள்தான் வாழ்க்கையை மேலும் சுவாரசியமாக்குது...ஹி..ஹி...

பங்காளி... said...

வினையூக்கி...

என்னைப் போய் படிப்பாளின்னு நம்பீட்டீங்களே...அடுக்காது தம்பி.

நம்ம காலேஜ் உருவாக்கின அதியற்புதமான மக்கு பசங்கள்ள நானும் ஒருத்தனா இடம்பெற எம்புட்டு கஷ்டப்பட்டேன்னு நம்ம மயில்காடு பிள்ளையார்ட்ட கேட்டுப்பாருங்க....ஹி..ஹி...

இந்த அலுமினி சாப்டர் எங்கய்யா நடக்க்குது....எல்லாருஞ் சொல்றீங்க...ஆனா எங்க நடக்குதுன்னு யாரும் சொல்ல மாட்றீங்க...

வினையூக்கி said...

சீனியர், அடுத்த நமது காலேஜ், சென்னை சாப்டர் அலுமினி சந்திப்பிற்கு முன்னதாகவே உங்களுக்குத் தெரிவிக்கின்றேன்.

காட்டாறு said...

விருதுநகர் மீல்ஸுக்கும் தங்கச்சியிடம் வாங்கிய திட்டுக்கும் சரியாப் போச்.

ஆஹா.. மிஸ் பண்ணிட்டேனே இந்த பதிவை படிக்காம. கொஞ்ச நாளைக்கு உங்க பக்கம் வர்றவங்களுகெல்லாம் ஒரு கப்பு கிடைப்பது உறுதின்னு நினைக்கிறேன். பங்காளி அண்ணாச்சி.... நான் ஜூட் உட்டுக்கிறேன்.

காட்டாறு said...

காட்டாறுவின் கவிதைக்கும், இந்த ஆப்பு கதைக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை என இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
;-)