காதலித்திருக்கிறீர்களா...
மென்மையும்,நேர்மையுமான உங்களின் காதல்
அங்கீகரிக்கப்பட்டு பின்னர்
நிராகரிக்கப்பட்ட வலியுணர்ந்திருக்கிறீர்களா...
பரவாயில்லை...அந்தச் சூழலில் உங்களை இருத்தி
பின்னிரவின் தனிமையில் இந்த பாடலை ஓடவிடுங்கள்
மணமேடை போடச்சொன்னேன் மங்களமில்லை
மணமகளை காணவந்தேன் குங்குமமில்லை
காதலுக்கே வாழ்ந்திருந்தேன் கற்பனையில்லை...
கல்யாணம் கொள்வது மட்டும் என் வசமில்லை...
என இழையும் வரிகளில் தொலைந்து போயிருப்பீர்கள்...
கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்...
கண்டவுடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்...
கொண்டவுடன் பிரிவைச் சொல்லி வந்தது பாவம்..
வெறும் கூடாக பூமியில் இன்னும் வாழ்வது பாவம்....
என தொடரும் வரிகளின் வலியை அனுபவித்தால்தான் புரியும்...
அவளின் நினைவுகளுக்காகவே.....
சமயங்களில் இந்த வலி தேவையாயிருக்கிறது.
இனி பாடலை பாருங்கள்.......
Sunday, August 26, 2007
பல்லாக்கு வாங்க போனேன்......
பதிஞ்சது பங்காளி... at 10:48 PM
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
அய்யா ராசா... என்னய்யா... சோகத்துல தத்தளிக்கிறீங்க... ஆராவது கண்முன்னாடி வந்துட்டு போனாகளா?
பின்குறிப்பு:
2 பதிவுக்கு முன் போய் பின் வந்திருப்பதால், பதில் இப்படி.
அதெப்படி இம்புட்டு கரீக்டா புடிக்கறீங்க...ஹி..ஹி...
எல்லாம் மாயை...தாயே...
சமீபத்தில் 1964-ல் வந்த இப்படமான பணக்கார குடும்பம் என் மனதை அக்காலக்கட்டத்தில் மிகவும் கவர்ந்தது. இரண்டு நாள் தொடர்ச்சியாக பாண்டிச்சேரி தியேட்டர் ஒன்றில் பார்த்தேன். அதுவும் இப்பாடலை மிக உருக்கமாக உணர்ந்தேன்.
சரோஜாதேவி பூ மாதிரி மென்மையான அழகுடையவராக வருவார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஓ, மட்டுறுத்தல் இல்லையோ. அதானே, இனிமேல் அது எதற்கு?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment