Thursday, August 02, 2007

முற்றுப் பெறாத பதிவுகள்....

நிறைய எழுத வேண்டுமென தோன்றுகிறது....வண்டியோட்டும் போது கோர்வையாய் வரிசை பிடித்த வரிகளை மனதில் மனனம் செய்து வைக்கிறேன்....எழுத உட்கார்ந்தால் சலிப்பு வந்து உட்கார்ந்து கொள்கிறது....இந்த நெடுகில் சென்றால் பதிவெழுதுவதை மறந்துவிடுவேனோ என்கிற அச்சமும் இருக்கிறது....தொடுப்புகள் குறைந்தால் துடிப்புகள் குறைவது வாடிக்கைதானே....

தொடுப்புகளை தக்க வைக்க...எழுதி பாதியில் நிற்கும் சில பதிவுகளை வெளியிட நினைக்கிறேன்...அந்த வரிசையில்....

ஸென்னும் தமிழும்



ஸென் குறித்த எனது தொடரின் கடைசிப் பதிவாக இதை எழுத எண்ணியிருந்தேன். ஆனால் இனியும் அந்த தொடரை நீட்டிப்பது அத்தனை சுவாரஸ்யமாக இருக்காது என்பதால் இத்துடன் ஸென் தொடரை முடிக்கலாமென்கிற வகையில் இந்த பதிவு.

ஸென் - இதற்கு சரியான தமிழ் வார்த்தையாக நான் நினைப்பது "தன்னையறியும் தவம்".இது சரியான பதமா தெரியவில்லை, தெரிந்தவர்கள் விளக்கலாம் என விவாதத்தினை திறந்தே வைக்கிறேன்.

இனி தமிழ் எப்படி ஸென் கருத்தியலை சொல்லியிருக்கிறது என பார்ப்போம்.

ஸென் மார்க்கத்தினை தோற்றுவித்ததாக கூறப்படும் போதிதர்மா ஒரு தமிழன் என்றே நம்பப்படுகிறது.எனவே அவரின் ஆரம்ப பாடங்களாக பழந்தமிழ் நூல்களும் அது கூறிய கருத்துக்களுமே அவரின் போதனைகளுக்கு தூண்டுதலாயிருந்திருக்குமென நம்பலாம்.

இங்கே குறிப்பிடப்படும் பாடல்களின் மதச்சாயத்தினை அகற்றிவிட்டு மையக்கருத்தினை கவனியுங்கள்.....ஏனெனில் நமது மதங்களை தத்துவங்களை பின் தள்ளிவிட்டு இறையியலையே தூக்கிப் பிடித்தன என்பது என்னுடைய குற்றச்சாட்டு.

இறையியலை தவிர்த்து மெய்யியலை முன்னிறுத்திய சித்தர்கள்தான் ஸென் குறித்த விழிப்புணர்வினை முதலில் ஏற்படுத்தினார்கள் என்பது என்னுடைய தெளிவு......அதே நேரத்தில் சித்தர்கள் பெண்மையினை பழித்தார்களோ என்கிற ஐயப்பாடுகளும் எனக்கு உண்டு.தெரிந்தவர்கள் அதனை தனிப் பதிவிடலாம்.

8 Comments:

இராம்/Raam said...

பங்ஸ்,

ஒங்க மெயில் ஐடி கிடைக்குமா???

Avanthika said...

அண்ணா

போதிதர்மா Kanchipuram சேர்ந்தவர்னு ஒரு புக்ல படிச்சேன்

Avanthika said...

மத்ததெல்லாம் எனக்கு புரியலை..:-)

காட்டாறு said...

//தொடுப்புகள் குறைந்தால் துடிப்புகள் குறைவது வாடிக்கைதானே....
//

எய்யா ராசாத்தீ... நீங்களே இப்பிடி சொல்றது தகுமா?

காட்டாறு said...

சாமீ... இப்பிடி அரையும் கொறையுமா எழுதீட்டீங்க.

//இங்கே குறிப்பிடப்படும் பாடல்களின் மதச்சாயத்தினை அகற்றிவிட்டு மையக்கருத்தினை கவனியுங்கள்.....//
பாடல்கள் எங்கேங்க?

பங்காளி... said...

அவந்திகா...

போதிதர்மா ஒரு பல்லவ அரசரின் மகன் என்கிற குறிப்புகள் பல இடங்களில் காணக்கிடைத்தாலும் அதற்கு உறுதியான சான்றாவணங்கள் ஏதுமில்லை. பெருவாரியாக அவர் தமிழர் என்றே நம்பப்படுகிறது...நாமும் அதையே நம்புவோம்.

//மத்ததெல்லாம் எனக்கு புரியலை..:-) //

மத்ததெல்லாம்னா...எதெல்லாம்னு சொன்னா எனக்குப் புரியும்ல...ஹி..ஹி..

பங்காளி... said...

காட்டாறு....

சோம்பேறித்தனம்னு ஒரு தோஸ்த்து நமக்கு இருக்காரு அவருக்கு நாம இங்கன வந்து படங்காட்றது புடிக்கல போல....ஹி..ஹி...

அதான்...

பாட்டெல்லாம் தனியா குறிப்பெடுத்து வச்சிருக்கேன் தாயீ....போடுன்னு ஒரு வார்த்த சொல்லுங்க போட்ருவோம்

காட்டாறு said...

// பங்காளி... said...
பாட்டெல்லாம் தனியா குறிப்பெடுத்து வச்சிருக்கேன் தாயீ....போடுன்னு ஒரு வார்த்த சொல்லுங்க போட்ருவோம்
//

அய்யா, நமக்கு சிம்பிளா சொன்னாலே பிரியாது. இதுல பாட்ட்டுல சொன்னீகன்னா, எங்கே புரிய. விளக்கத்தோட கூடியா பாடல்கள் வரவேற்கப் படுகின்றன. ஹீ ஹீ ஹீ போட்டிகள் பல பார்த்து.. உணர்ச்சி வசப்பட்டுட்டேன்.