1980ல் வெளிவந்த "அன்புக்கு நான் அடிமை" படத்தில் வரும் இந்த பாடலைபற்றிதான் இந்த பதிவு....ரஜினியையும், ரதியையும் தூக்கி ஓரம் வையுங்கள்.ரஜினி இந்த படத்தில் இந்த பாடலில்தான் மிக மோசமாய் இருப்பதாக நினைக்கிறேன். ரதியை பார்த்தால் ப்ளாஸ்டிக் பொம்மைதான் நினைவுக்கு வரும்.சிரித்தாலே போதுமென்று இந்த பஞ்சாப் அழகியிடம் யாராவது சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது.....
பிரமாதாமான காட்சியமைப்போ,பின்னனியோ, நடனமோ இல்லை...இத்தனையும் மீறி இந்த பாடல் காலங்கடந்து நிற்க...இசையமைப்பாளரும், பாடிய எஸ்.பி.பியும்...சுசீலாவும்தான் காரணம்.
எளிமையான இசைகோர்ப்பு...SPB,சுசீலாவும் இழைந்து இழைந்து பாடியிருக்கும் அன்னியோன்யம்....பாடலில் ஒரு இடத்தில் கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி....என SPB இழைவார் பாருங்கள்...கேட்டுப்பாருங்கள்...
பாடலை எழுதியது கங்கை அமரன் என நிணைக்கிறேன்...அவருக்கும் பாராட்டுக்கள்.....
Saturday, April 28, 2007
காத்தோட பூவுரச....
பதிஞ்சது பங்காளி... at 9:31 PM 4 பேர் என்ன நினைக்கறாங்கன்னா....
Tuesday, April 24, 2007
நாம் பங்காளிகளே...
நமக்கு இங்க அத்தனைபேரும் பங்காளிகதான்....எல்லாருமே வேணும்தான், அதே நேரத்தில் தனிநபர்களின் செயல்பாடுகளை விருப்புவெறுப்பின்றி, மனசாட்சியின் பாற்பட்டு அணுகவேண்டுமேயொழிய...மதசாட்சியாக அணுகுவதை மனம் ஏற்கவில்லை.
தப்பு யார் செய்தாலும் தப்புதான்...அதை ஓருவன் செய்தால் அவனை இழிபிறவியென்றும், அதையே தான் செய்தால் யுக்தியென சொல்லிக்கொள்வதை அடிப்படை அறிவிருக்கும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது திண்ணம்.
யாரையோ காப்பாற்ற, அந்த அசிங்கத்தை மறைக்க பிரச்சினையை திசைதிருப்பி தமிழ்மண திரட்டியின் மீது பாய்வதை என்னால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. பிரச்சினைகளை களத்தில் சந்திக்க வேண்டும், இதுதான் சாக்கென சேற்றை வாரி வீசிவிட்டு வெளியேறுவதை நான் எதிர்க்கிறேன்.
இதே தமிழ்மணம் மறுமொழி மட்டுறுத்தலை கொண்டுவந்த போது அதை மிக கடுமையாக எதிர்த்தவன் நான், அப்போது தமிழ்மணம் ஒரு சார்பாக(பெரியவர் டோண்டுவின் அபிலாஷைகளுக்கு ஆடுகிறது) இயங்குகிறது என எகிறிக்குதித்தவன் நான் மட்டுமே....சமயம் வாய்த்த பொழுதெல்லாம் என் நிலையை வலியுறுத்தி வந்திருக்கிறேனே தவிர தமிழ்மணத்தை விட்டு வெளியேறவில்லை.என் தரப்பு நியாயங்களை தனியனாக வலியுறுத்தி வந்தேன்.
இந்த பிரச்சினையில் தமிழ்மணம் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, தமிழ்மண நிர்வாகம் ஏற்புடைய பதிலை அளித்தபின்னரும்...ஒவ்வொரு வார்த்தைக்கும் புதிது புதிதாய் அர்த்தங்களை கண்டுபிடித்து சேறு வீசும் அவலத்தினை கண்டிக்கிறேன்.
எனவே பிரச்சினைகளை பேசித்தீர்ப்போம் வாருங்கள்....தமிழ்மணத்தில் குறையிருப்பதாக கருதினால் வாருங்கள் விவாதிப்போம், அனைவருக்கும் ஏற்புடையதான தீர்வுகளை எட்டமுடியுமென நம்பிக்கையிருக்கிறது....
பதிஞ்சது பங்காளி... at 7:47 PM 2 பேர் என்ன நினைக்கறாங்கன்னா....
Sunday, April 22, 2007
யார் இந்த ஜெயராமன்...?
வலைபதிவர் சந்திப்பு நடக்கவிருக்கும் இந்த நாளில் இந்த தலைப்பு தேவையில்லைதான்.இருந்தாலும் இந்த பதிவுக்கும் சமீபத்திய தமிழ் வலைபதிவுலக சம்பவங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உறுதி கூறுகிறேன்.அதையும் மீறி இத் தலைப்பு யாருக்கேனும் வருத்தமளிக்கும் பட்சத்தில் எனது மனமார்ந்த வருத்தத்தினை சமர்ப்பித்து மேலே தொடர்கிறேன்.
'சக்கரவர்த்தி திருமகன்' என்கிற பதம் ஜெயராமனுக்கு பொருந்துமா?
வால்மீகியின் ராமாயணத்தின்ன் ஆராய்ச்சியாளர் திரு.டி.அமிர்தலிங்க அய்யர் அவர்கள் தனது "Ramayana Vimarsana" என்கிற நூலில் பக்கம் 27ல் ராமனின் தந்தை தயரதனை பற்றியும் அவனது கோசல நாட்டின் பரப்பளவு பற்றி பின்வருமாறு கூறுகிறார்."Dasaratha, the son of AJA of Ikshvaku dynasty rules a petty inhabited country named koshala. it was one of the three hundred and odd kingdoms which jotted the fair face of Arya Vartha,between the Himalayas and the southern face of the vindhyas, and the Indus and Rajamahal hills. It might have been in extent about the size of modern Tanjore District....he was no more a Chakravarthi than Chakravarthi Rajagopalachari. "
எனவே சக்கரவர்த்தி திருமகன் என்கிற பட்டம் ராமனுக்கு எத்தனைதூரம் பொருந்தும் என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.
பரதனுக்குத்தான் அரசுரிமை என்பது ஆரம்பத்திலேயே ராமனுக்கு தெரியுமா?
திரு.அமிர்தலிங்க அய்யர் தனது நூலில் ராமனுக்கு இது ஆரம்பத்திலேயே தெரியுமென்கிறார், தெரிந்தும் தனது தந்தையின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டான் என்கிறார்.தனது நூலில் பக்கம் 402ல் இது குறித்து பின்வருமாறு எழுதுகிறார்."That Rama knew about the promise made by Dasaratha to Kaikayee and her father, that the son born of her womb shall succeed to the throne, seems to be fairly certain. When Rama tells Bharatha of it in Chithrakoota, what was the source of his knowledge. It must have been the general talk of the city. Kausalya also suggests that all the harem knew of it. When dasaratha told Rama 'That very time when Bharatha was sent out of the city, the time had come for your coronation'.These words must have sharply reminded Rama of Bharatha's rights.Then why did not Rama remind his father,that his proposal was against the truth? Why did he accept the offer?"
மனைவியை பிரிந்த அவதாரபுருஷன் ஜெயராமனின் மனநிலை எத்தகையதாக இருந்தது?
வால்மீகியின் ராமாயணத்தின் ஆராய்ச்சியாளர் திரு.அமிர்தலிங்க அய்யர் இது குறித்த தனது பார்வையினை தனது நூலில் 406ம் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"I Infer that Rama was not in a proper frame of mind like unto a monomaniac, till he actually landed at the head of a huge army on the outskirts of Lanka, and felt that he was in a fair way to be united with his wife.He behaved sanely in all matters which didnot intrude upon his obsession. Else he raves and rants, dosenot reason. What strikes him as the quickest and easiest way the shortest path must be trodden, good or bad, righteous or unrighteous.Whatever helps him is the righteous path; it is in such a frame of mind that Rama assassinated Vali"
இராவணனை போரில் வென்றவன் வாலி...அப்படியிருக்க அவன் உதவியை நாடாமல் காட்டுக்குள் மறைந்து வாழ்ந்த சுக்ரீவனை நாடியது ஏன்?
நியாயமான கேள்வி, மனைவியை மீட்க வேண்டி காட்டில் அலைந்து திரிந்த ராமனிடம் மாதங்க முனிவரின் ஆசிரமாத்திலிருந்த சவரி என்கிற மூதாட்டி, சுக்ரீவன் உனக்கு உதவலாமென கூறி அவன் மறைந்திருக்கும் இடம்பற்றி கூறுகிறாள்.சவரிக்கு நிச்சயமாய் வாலி-சுக்ரீவன் கதை தெரிந்திருகும், அவள் ஏன் வாலியைப் பற்றி சொல்லவில்லை அல்லது அவள் சொல்லி ராமன் சுக்ரீவனை தேர்ந்தெடுத்தானா என்பது விவாதத்திற்குறியது.தனியனான ராமண்தான் சுக்ரிவன் இருக்குமிடம் தேடிச் செல்கிறான்...."கையறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தேம்" என இறைஞ்சும் குரலாகவே கம்பரும் ராமனை காட்டுகிறார்.ஆனால் சுக்ரீவனோ புத்திசாலித் தனமாய் தன் தமையனை வீழ்த்த தனக்கு கிடைத்த அடியாளாக ராமனை பார்க்கிறான். அவனை நைச்சியம் பண்ணும் வகையில் உன்னை சரணடைந்தேன் என்கிறான்.ராமனும் நீதி நியாயங்களை பற்றி யோசியாமல் சுக்ரீவனிடம் "போனவை போகட்டும் இனி உனக்கு துன்பம் எது வந்தாலும் காப்பேன்" என்கிறான்.
இதை திரு.அய்யர் தன் பார்வையில் இவ்வாறு கூறுகிறார்.பக்கம்260
"He thinks that vali is the obstacle in his way.How to get back seetha. If I go to vali I must go as a suppliant.I would have to bide his time and pleasure. If I kill vali and anoint sugreeva on the throne, sugreeva,apart from fear,out of gratitude will become my slave.Even if vali helps me he will take all the credit of recovering seetha.Where goed my fame and prestige.So,he made up his mind.There is no question of right or wrong, punya or papa "
சம்பூகனை ஜெயராமன் ஏன் கொன்றான்? அது சரியா?
சுக்ரீவனின் உதவி தேவைப்பட்டதால் வாலியை கொன்றான் என சப்பைகட்டு கட்டினாலும், ஒரு தவறும் செய்யாது காட்டில் தவம் செய்துகொண்டிருந்த சம்பூகனை ராமன் ஏன் கொல்ல வேண்டும். இது பற்றியும் திரு.அய்யர் அவர்களின் நூலில் 386ம் பக்கத்து வரிகளிலேயே பார்ப்போம்."The Disgusting story of the Brahman with the 5000 year old dead child. He accuses Rama that his child must have died at that early age insted of the usual 100,000 owing to some sin or negligence of duty by Rama.Rama in consternation seeks advice.Then the arch propounders of lies Naradha the devarishi and Agasthya the Brahmarishi,thell hism that,'a sudhra is performing thapas on the slopes of the vindhyas in your territory; an atrocious sin punishable with death'.Rama like a Creadulous fool lost his reasoning powers, called the pushpaka, went to sampooka(that is the name of the sudhra) and cut off his head and heypres to the child of the brahman revived at the very instant".
இந்த பதிவு ஜெயராமனை பற்றிய முழுமையான பார்வை இல்லை....ஒரு குறிப்பிட்ட நூலின் வழியே ராமணை அனுகியிருக்கிறேன் அவ்வளவே....இதிலுள்ள நியாய அநியாயங்களை உங்களின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.....
பதிஞ்சது பங்காளி... at 12:09 PM 11 பேர் என்ன நினைக்கறாங்கன்னா....
Wednesday, April 18, 2007
ஸென் - வாழ்க்கை
ஸென் - ஒரு எளிய அறிமுகம்
ஸென் - என்ன சொல்கிறது.
ஸென் - தேடல்
ஸென் - இரு தத்துவங்கள்
வாழ்க்கை ?
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ளது...தொட்டுத் தொடரும் நிகழ்வுகளின் ஊடான பயணம்...நிஜமும்,நிழலுமான காரணிககளின் தன்மைகள், குறுக்கீடுகள்,விளைவுகளுக்கு தனி நாம் தரும் பிரதிபலிப்புகள்தான் வாழ்க்கை....
இப்படி வாழ்க்கையின் அர்த்தம் சொல்வது இப்பதிவின் நோக்கமில்லை. அதை பற்றி இங்கே பேசப்போவதுமில்லை. வெறுமனே சில கேள்விகளை மட்டும் வைக்கிறேன்...யோசித்துப் பாருங்கள் விடைகள் புலப்படலாம்.....
வாழ்வின் ஆரம்பத்தில் எப்படி இருந்தீர்கள்?....
அப்போது வாழ்வியலின் பொதுவான நிபந்தனைகள், நிர்பந்தங்களுக்கு கட்டுப் பட்டா வாழ்ந்தீர்கள்?
கண்கள் விரிய ஆசை ஆசையாய் தெரிந்ததையெல்லாம் பாரபட்சமில்லாமல் எல்லோருடனும் பகிர்ந்து கொண்டு, வலியையும் வேதனையையும் மறைக்காது வீரிட்டு அழுது புரண்டு ஒவ்வொரு கணத்தையும் ரசித்து ரசித்து வாழ்ந்தீர்களே நினைவிருக்கிறதா?
வளர வளர இதையெல்லாம் இதையெல்லாம் எப்படி மறந்தீர்கள் அல்லது ஏன் மறுத்தீர்கள்?
இறுக்கம் சூழ்ந்த தனித்தீவாய் உங்களை மாற்றியது எது?
இதற்கெல்லாம் நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும்...யோசியுங்கள்.
தேவைகளுக்கும்,ஆசைகளுக்கும் இடையேயான வித்தியாசம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
தேவைக்கும்,ஆசைக்கும் இடையே வேறுபாடு அதிகமாகும்போதுதான் சிக்கல் ஆரம்பிக்கிறது என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?.
தேவைகள் மனிதனை இயல்பில் வைத்திருக்கும்....ஆசையோ மனிதனை அச்சத்தின் பிடியில் வைத்திருக்கும் என்பதையாவது உணர்ந்திருக்கிறீர்களா?
காம(Lust), க்ரோத(Anger), லோப(Greed),மோஹ(Self Love),அஹங்கார்(Ego) என்கிற ஐங்கூறுகளை விலக்குதல் சாத்தியமா? உங்களால் அது முடியுமா?
இவையொன்றும் கடினமான கேள்விகள் இல்லை...ஆனால் இந்த கேள்விகளை நாம் தவிர்த்து விடுகிறோம். சமயம் கிடைக்கும் போதெல்லாம் இது மாதிரியான கேள்விகளை உங்களுக்குள்ளே எழுப்பி பாருங்கள்.....
எல்லா பதில்களும் நம்மிடம்தான் இருக்கிறது, அதை தெரிந்து கொள்ள சரியான கேள்விகள் இல்லாததுதான் குறை என ஸென் சொல்கிறது....
பதிஞ்சது பங்காளி... at 6:19 PM 7 பேர் என்ன நினைக்கறாங்கன்னா....
Tuesday, April 17, 2007
மயக்கும் மந்திரா....
தாய்மார்கள், குழந்தைகள் இந்த பதிவினை தவிர்க்கவும்....
உலகக் கோப்பை தோல்வியில் மனம் நொந்து நூடுல்சாகியிருக்கும் கோடானுகோடி ரசிகப் பெருமக்களே...நமக்கெல்லாம் ஆறுதல் சொல்லும் வகையில் மந்திராபேடி அருளிய தர்ம தரிசனத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.........
ஹி..ஹி...மந்திராவை இதுக்கு முன்னால இப்படி யாரும் பார்த்திருக்கீகளா
ச்ச்சும்மா சொல்லக்கூடாது நல்லாத்தான் படம் புடிச்சிருக்காய்ங்க....ம்ம்ம் கொடுத்து வச்ச போட்டோக்கிராபர்.....
ஒன்னுஞ் சொல்றாப்ல இல்ல...பாருங்க...பாருங்க...பார்த்துட்டே இருங்க....:-)))
படத்த கிலுக்கி பாருங்கப்பா எல்லாம் பெரிசாத் தெரியும்....:-)))
இதுக்கெல்லாம் எம்புட்டு காசு குடுத்துருப்பாய்ங்க....ம்ம்ம்ம்...யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பு
கொடுத்து வச்ச செடிகொடி.....நமக்கில்ல...நமக்கில்ல...ம்ம்ம்ம்ம்ம்
அம்புட்டுத்தேன்....பார்த்தமா சந்தோசப்பட்டமா...மறந்தமான்னு அடுத்த வேலயப்பார்த்துட்டு போய்ட்டே இருக்கனும்...சரியா....எல்லாம் மாயை மக்கா....புரிஞ்சிக்கங்க.....
பதிஞ்சது பங்காளி... at 7:12 PM 3 பேர் என்ன நினைக்கறாங்கன்னா....
Saturday, April 07, 2007
அம்புட்டும் அழகு...
கள்ளழகர்
மதுரைக்காரனை அழகு பத்தி எழுதச்சொன்னால் முதலில் இந்த ஆசாமிதான் நினைவுக்கு வருவார்....நினைவு தெரிந்த நாளில் இருந்து,வீட்டருகில் நடக்கும் எதிர்சேவையில் இந்த அழகனை நெருக்கமாய் பார்க்கிறேன்...கடவுள் என்பதையெல்லாம் தாண்டி ஏதோ நெருங்கிய உறவினரைப் பார்ப்பதைப்போல ஆனந்தம் தரும் நிமிடங்கள் அவை......
திருவிழா சமயத்தில் கள்ளழகராய் ஊருக்குள் வரும் அவருக்கு கிடைக்கும் ஆர்ப்பாட்டமான வரவேற்பினையும், உற்ச்சாகத்தையும் வருடக்கணக்காய் பார்த்ததனால் சொல்கிறேன்.....கள்ளழகர் நிச்சயமாய் கடவுளாய் இருக்கமுடியாது,சாதாரண மக்களோடு மக்களாய் வாழ்ந்த மகத்தான மனிதனாய்த்தான் இருந்திருக்க வேண்டும்..
அன்னை மீனாட்சி
எல்லோருக்கும் தெரிந்த அழகிதான் இவள்.....எங்க ஆத்தா என ஓங்கிச்சொல்லும் உரிமை எங்களுக்கு மட்டுமேயானது. எங்கே சுத்தினாலும் கடைசியில் இவ காலடியிலதான் வந்து முடங்கிப் போவோம்.
தீவிர நாத்திகனாய் இருந்த காலத்திலும்கூட வெறுக்காத அழகியென்றால் அது மீனாட்சிதான்.... இதழடியில் கசியும் அந்த புண்ணகையும், மின்னும் மூக்குத்தியும், சரிந்து நிற்கும் ஒயிலும்.....வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரழகு...
வேஷ்டி
தமிழனின் பாரம்பரிய உடைதான் மூன்றாவது அழகு....ஆயிரம் சொல்லுங்கள் வேஷ்டியில் கிடைக்கும் கம்பீரமே தனிதான்....கல்யாணத்தன்று மட்டுமே வேஷ்டி கட்டுமளவுக்கு தமிழினம் தேய்ந்து போயிருக்கிறது என்பது கவலையான ஒன்று. இப்போதெல்லாம் வாரத்தில் குறைந்தது ஒரு நாளாவது வேஷ்டி கட்ட ஆரம்பித்திருக்கிறேன். ஆரம்பத்தில் வீட்டில் பயங்கர எதிர்ப்பு....ஆற்டி உசரத்தில் ஆஜானுபாகுவா, தெலுங்கு பட வில்லன் மாதிரி இருப்பதாகவெல்லாம் அம்மனியால் கேலி செய்யப்பட்டேன்.
இப்போது எதிர்ப்பு குறைந்திருக்கிறது....வேஷ்டி கட்டினால் ஒன்று அவன் மிகப்பெரிய ஆளாக இருக்க வேண்டும் அல்லது பாமரனாக இருக்கலாமென்கிற மனப்போக்கு பொதுவில் நிலவுவதை கவனித்திருக்கிறேன். திரும்பவும் எல்லோரும் வேஷ்ட்டி கட்டும் காலமொன்று நிச்சயமாக வரும்.
காதலி...
காதலி எப்போதும் அழகுதான்...அதிலும் கோவிக்கும் காதலி பேரழகி...அம்மனியே காதலியாய் இருப்பதால் பேரழகியோடு(புரியுதா!) வாழும் பாக்கியவான் நான்....
நான்..
என்னைச் சொல்லாமல் இந்த வரிசை முடிவடையாது....முதலிலேயே வந்திருக்க வேண்டியது, தன்னடக்கம் காரணமாய் கடைசியில் வருகிறேன். புற அழகு ஏற்கனவே பெற்றோர் வழியே தீர்மாணிக்கப் பட்டது, வேண்டுமானால் ஒப்பனை செய்து படம் காட்டலாம், அதுவும் ரொம்ப நாளைக்கு முடியாது. ஆனால் அக அழகினை நானே தீர்மானிக்கிறேன். அதை வார்த்தெடுக்கவும், வளர்த்தெடுக்கவும் என்னால் முடியும். இந்த அழகினை என் வாழ்நாள் தாண்டியும் நிலைக்கச் செய்யும் வாய்ப்புகள் எனக்கு இருக்கிறது.
சமூகம் ஒருவனை அழகனென்றோ, பணக்காரனென்றோ, குரூபியென்றோ பதிவுசெய்வதில்லை....நல்ல மனுசன்/கெட்ட மனுசன் என்றுதான் சொல்கிறது....மனசை வைத்தே நாம் அடையாளம் காட்டப்படுகிறோம்....அந்த மனதை அழகாகவே வைத்திருக்கிறேன், இன்னும் அழகாக்க நேர்மையாக முயற்சி செய்கிறேன் என்கிற வகையில் நானும் அழகன்தான்....ம்ம்ம்ம்ம்
பதிஞ்சது பங்காளி... at 10:56 PM 26 பேர் என்ன நினைக்கறாங்கன்னா....
Wednesday, April 04, 2007
ஆகாய கங்கை...
தர்மயுத்தம் படத்தில் வரும் இந்த பாடலை நீங்கள் பலமுறை கேட்டிருப்பீர்கள்...பார்த்திருப்பீர்கள், அருமையான இளையராஜாவின் இசை, இளமைத்துடிப்புடன் ரஜினி....அழகிய ஸ்ரிதேவி.....இதைத்தாண்டி இந்த பாடலில் இருக்கும் இன்னொடு ஸ்வாரஸ்யமான விசயத்துக்காகத்தான் இந்த பதிவு.....
தர்மயுத்தம் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த பாடல் மட்டுமே படமாக்கவேண்டிய நிலையில், படப்பிடிப்பின் போது நடந்த விபத்தொன்றினால் ஸ்ரிதேவியின் கால் முறிவு ஏற்பட்டு நடக்கமுடியாமல் வீட்டில் முடங்கிவிட்டார். க்தாநாயகன் ரஜினிக்கோ டைபாய்டு காய்ச்சல்....ஒரு கட்டத்தில் இந்த பாடலை படத்திலிருந்து நீக்கிவிடலாமென்றே முடிவு செய்தனராம்.....
ஆனால அருமையான இந்த பாடலை இழக்க விரும்பாத இயக்குனர் ஒரே ஒரு நாள் படப்பிடிப்புக்கு வநதால் போதுமென கெஞ்சி கூத்தாடி இருவரையும் வரவைத்து இந்த பாடலை படமாக்கினராம்....இப்போது பாடலை கவனித்து பாருங்கள்...பாடல் முழுக்க ஸ்ரிதேவி சக்கர நாற்காலியிலோ அல்லது தரையில் உட்கார வைக்கப்பட்டு வெறும் முகபாவனைகளை வைத்தே இயக்குனர் பாடலை ஒப்பேற்றியிருப்பது தெரியும்....காய்ச்சலில் கிடந்த களைப்பு ரஜினியிடம் தெரிவதையும் கவனியுங்கள்....
சமீபத்தில் திரையுலகைச் சேர்ந்த ஒரு நண்பர் தந்த செய்தி இது....ஸ்வாரஸ்யமாயிருக்கிறதல்லவா....!
இப்போது பாடலை ரசியுங்கள்....
பதிஞ்சது பங்காளி... at 4:03 PM 18 பேர் என்ன நினைக்கறாங்கன்னா....
Tuesday, April 03, 2007
தசாவதாரம் படங்கள்....
ஆளாளுக்கு மாய்ந்து மாய்ந்து சிவாஜி பட ஸ்டில்களை போட்டுக்கொண்டிருக்கும் வேளையில் நம்ம கண்ணில் தசாவதார பட ஸ்டில்கள் சிக்கியது. கமல் ரொம்ப இளமையாக தெரிகிறார்.
மக்களே! நான் கமல் ரசிகன் இல்லை....அனால்....போங்கப்பா எல்லாத்தையும் சொன்னாத்தான் புரியனுமா....தலைவியோட சைட்டுக்குள்ள போய் பாருங்க....டென்சனாய்டுவீங்க.......ஹி..ஹி...
பதிஞ்சது பங்காளி... at 3:31 PM 16 பேர் என்ன நினைக்கறாங்கன்னா....
Monday, April 02, 2007
ஸென் - இரு தத்துவங்கள்
ஸென் - ஒரு எளிய அறிமுகம்
ஸென் - என்ன சொல்கிறது.
ஸென் - தேடல்
இந்த பதிவில் இரண்டு குட்டிக் கதைகளின் வழியே ஸென் கூறும் இரு தத்துவங்களை பற்றி பார்ப்போம்.
இளைஞன் ஒருவன் சிறிய பறவையினை பிடித்து வைத்துக்கொண்டு, தன் குருவிடம் "ஐயா, எனது கையில் இருக்கும் பறவை உயிருடன் இருக்கிறதா இல்லை இறந்து விட்டதா கூறுங்கள்" என்றான்.குருவை மடக்கி விட்டதாக அவனுக்குள் சந்தோஷம்....
குரு அவனை அமைதியாக பார்த்து இவ்வாறாக கூறினார்...."இளைஞனே...நான் பறவை இறந்து விட்டதாகக் கூறினால் அது உயிருடன் இருப்பதை காட்ட சுதந்திரமாக பறக்க விடுவாய், அதே நேரத்தில் உயிருடன் இருப்பதாய் கூறினால் அதன் கழுத்தை திருகி இறந்த பறவையை என்னிடம் காட்டுவாய்" என்றார்.
இளைஞன் வெட்கத்தில் பறவையை கைவிட்டான்...
குரு மேலும் சொன்னார்..."பிறப்பும் இறப்பும் உன் கைகளில்தான் இருக்கிறது"
"Its not your intelligence, but it is the direction of your intelligence that defines your life"
இனி அடுத்த கதை...
இரண்டு இளம் துறவிகள் வேகமாய் ஓடும் ஆற்றை கடக்க எத்தனித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த அழகிய இளம் பெண் ஒருத்தி ஆற்றை கடக்க துறவிகளிடம் உதவி கேட்டாள்.
முதல் துறவி தயங்கியவேளையில், இரண்டாவது துறவி தயக்கமில்லாது அவளை தன் தோளில் சுமந்து ஆற்றை கடந்தான். அவளும் நன்றி கூறி தன்வழி போனாள். துறவிகளும் தங்கள் பயணத்தினை தொடர்ந்தனர்.
முதல் துறவி பொறுக்க மாட்டாமல் இரண்டாமவனிடம், "சகோதரனே! நமது ஆன்மீக பயிற்சியில் பெண்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதே வலியுறுத்தப் படுகிறது...நீ அதை மீறி அந்த பெண்ணை எப்படி தோளில் சுமக்கலாம்" என கோபப்பட்டான்.
இரண்டாமவன், சலனமில்லாத முகத்துடன் சொன்னான்..."நான் அவளை ஆற்றின் கரையிலேயே இறக்கி விட்டு விட்டேன்...நீயோ இன்னமும் அவளை சுமந்து கொண்டிருக்கிறாய்"
"Yesterday was over Yesterday. Life should be a forward progression and not a backward regression. Save your future from the clutches of your past."
பதிஞ்சது பங்காளி... at 7:52 PM 16 பேர் என்ன நினைக்கறாங்கன்னா....
Sunday, April 01, 2007
ஸென் - தேடல்
ஸென் - ஒரு எளிய அறிமுகம்
ஸென் - என்ன சொல்கிறது.
"You are a citizen of two worlds - the inner and outer.There should be a bridge between these two worlds"
-Swami Rama
இல்லாத ஒன்றை தேடுவதுதானே உண்மையான தேடலாக இருக்கமுடியும்.இல்லாதது என நிஜத்தில் எதுவுமே இல்லை.....எல்லாமே இருக்கிறது, நமக்கு அது தெரியாததால் அதை தேடல் என்கிறோம்.
தேடுபொருட்கள் புதிதாய் எங்கிருந்தும் முளைக்கவில்லை, இங்கேதான் எங்கேயோ இருக்கிறது. சரியான தேடலும், தேடுபொருளும் ஒன்றாய் நேர்கோட்டில் இனையும் போது உற்சாகிக்கிறோம். இது தற்செயலாகவும் நடக்கலாம், ஆசை, நிர்பந்தம்,அச்சம் போன்ற காரணிகளாலும் இருக்கலாம்.
தேடுபொருள் எதுவாகவும் இருக்கலாம்,அதற்கு இலக்கணங்கள் இல்லை, கடவுள் தொடங்கி காமம், பொருள்,புகழ்,அதிகாரம்,போதை என விரிவது எப்போதும் தனிமனிதனின் வசதியாகவே இருந்துவருகிறது. வேண்டியதையும் தேடுகிறோம், வேண்டாததையும் தேடுகிறோம்......
ஸென் சொல்கிறது.....'தேடாதே'
ஆம்...வெளியில் தேடாதே, எல்லாவற்றையும் உனக்குள் தேடு என்கிறது. இதை இந்திய தத்துவவாதிகள் 'சுயதரிசனம்' என்கின்றனர். தன்னைத்தானே தேடி தரிசனம் பெறுவது அத்தனை எளிதில்லை, அது ஒரு தவம்....சிலருக்கு தவம் மட்டுமே வாய்க்கும், சிலருக்கு வரங்களும் கிடைக்கலாம். ஆனால் தேடல் உண்மையானதாய் இருக்க வேண்டும்.
நண்பர்களே...தேடுவதற்கு தீர்மாணம் மட்டுமே போதுமானது. அறிந்துகொள்ள பக்குவம் வேண்டும் அவ்வளவே.அதாவது ஒலியினை கேட்கும் காதுகளும் அதன் அர்த்தத்தை உணரும் மனதினையும் போல.....
சரி....உள்ளுக்குள் எதை தேடுவதாம்? எதை வேண்டுமானாலும் தேடலாம்....இதுதான் வேண்டுமென இலக்கில்லாமல் எதை வேண்டுமானாலும் தேடலாம். தேடலின் விளைவாய் உண்மைகள் புலப்பட ஆரம்பிக்கும், இந்த உண்மை எங்கே இருக்கும்?, ஒருவேளை மனதின் மையத்தில் இருக்குமா....அதைத்தான் இவர்கள் கடவுள் என பெயரிட்டு அழைக்கிறார்களோ?...
ஸென் மேலோட்டமான விஷயமில்லை.....அதன் ஆழம் நோக்கி பயணிக்க பயணிக்க வசீகரமாய் விரியும் சுஹானுபவம். மேலும் விவரங்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.
பதிஞ்சது பங்காளி... at 6:37 PM 5 பேர் என்ன நினைக்கறாங்கன்னா....