Thursday, May 03, 2007

CHEENI KUM



வெளிவர இருக்கும் அமிதாப்பின் அடுத்த படமான CHEENI KUM(சர்க்கரை கம்மியா...). படத்தின் தகவல்களை மேய்ந்து கொண்டிருந்த போது,நம்ம முதல் மரியாதையை காஸ்மோபாலிட்டன் பாத்திரத்தில் பரிமாறுகிறார்களோ என்கிற எண்ணம் வராமலில்லை.படம் வெளி வந்த பின்னர் 'பங்காளி எப்படிடா உன்னால மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க முடியுது' என நீங்கள் உணர்ச்சி வசப்படும் நிலமை வந்தாலும் வரலாம்.

படத்தில் அமிதாப்பை லவ்வும் பெண்ணாக தபு நடித்திருக்கிறாராம்(யோவ்...அமிதாப், எங்கய்யா வச்சிருக்க அந்த மச்சத்த...).இவர்களை தவிர தபுவின் தந்தையாக வரும் பரேஷ் ராவல் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம்.



இந்த பதிவு எழுத காரணமே இந்த படத்தில் இருக்கும் முத்தமிழர்களே(மூன்று தமிழர்கள்).படத்தின் இயக்குனர் பால்கி எனபடும் பாலகிருஷ்ணன், இவர் Lowe India என்கிற மிகப்பெரிய விளம்பர நிறுவனத்தின் National Creative Director.

விளம்பர துறையில் 18 வருஷம் கொட்டை போட்ட பின்னர் இப்போது வெள்ளிதிரைக்கு வந்திருக்கிறார். இளையராஜாவின் தீவிர ரசிகரான இவர் தனது விளம்பரங்களில் இளையராஜாவின் இசையை உருவி(Inspiration...ஆம்) சாமர்தியமாக பயன்படுத்தியவர் என்கிற குற்றசாட்டு காலங்காலமாக சொல்லப்படுகிறது......

இந்நேரத்திற்குள் படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவென கண்டுபிடித்திருந்தீர்களானால் மெய்யாலுமே நீங்கள் ச்சமத்துதான்....இளையராஜாவின் first major original Hindi film என விளம்பரபடுத்தியிருக்கின்றனர்...ஆச்சர்யமான செய்தி இல்லையா....ம்ம்ம்ம்.

மனிரத்னத்தின் மௌனராகமான 'மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையா' பாடலின் மெட்டை அப்படியே பயன்படுத்தியிருக்கின்றனர்....இன்னொரு பாடலான 'ஜானே தோனா'பாடலும் இன்னொரு பிரபல தமிழ்பாடலின் மெட்டே...'குழலூதும் கண்ணனுக்கு குயில்பாடு பாட்டு கேக்குதா' சாயலிலும் ஒரு பாடல், ஒரே வித்தியாசம் இங்கே ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார் அவ்வளவே....இசைஞானிக்கே இசை வறட்சியா....

படத்தில் இருக்கும் மூன்றாவது தமிழர் நம்ம PC.ஸ்ரீராம்...இவர் பெயரை பார்த்தவுடன்தான் படத்தை மிஸ் பண்ணீரக்கூடாது என தோன்றியது.

இதுக்கு மேலயும் படத்தப்பத்தி எழுதினா அப்புறம்...'படத்தோட வெளம்பர நிர்வாகத்த நீங்கதான் கவனிக்கனும்னு' படத்தோட தயாரிப்பாளர் நம்மள கெஞ்ச ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுருவார்..நாம இருக்கிற பிஸி..ல அதெல்லாம் நம்மால ஆவாது. அதுனால இந்த அளவில் உங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்.

படத்தின் இனைய தளம்....

14 Comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\இதுக்கு மேலயும் படத்தப்பத்தி எழுதினா அப்புறம்...'படத்தோட வெளம்பர நிர்வாகத்த நீங்கதான் கவனிக்கனும்னு' படத்தோட தயாரிப்பாளர் நம்மள கெஞ்ச ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுருவார்..//

நெனப்புதான்ங்க...

இது என்ன மதுரைக்கு போயிட்டு வந்து சித்திர திருவிழா விஷயமா எழுதாம சினிமா பத்தி..ஆல்வேஸ் உல்டா!!

பங்காளி... said...

அந்த சோகத்த கேக்காதீங்க தாயே.....

நான் ஊருக்கு போகலை....போக முடியலை...ம்ம்ம்ம்ம்

நேத்து கனவுல அழகர் வந்து I miss u buddy..னு சொன்னார்னா பாத்துக்கங்களேன்...

பொன்ஸ்~~Poorna said...

அப்பாடா.. இப்பவாச்சும் தபு தன் வயசுக்கேத்த ஆளோட நடிக்கத் தொடங்கினாங்களே..

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்"ல அஜித்தைப் பார்க்க அத்தனை பரிதாபமா இருந்திச்சு..

பங்காளி... said...

படம் தொடர்பான மற்றொரு இனைப்பு...

http://www.ukfilmproductions.com/Productions/CheeniKum/index.html

இராம்/Raam said...

//அந்த சோகத்த கேக்காதீங்க தாயே.....

நான் ஊருக்கு போகலை....போக முடியலை...ம்ம்ம்ம்ம்

நேத்து கனவுல அழகர் வந்து I miss u buddy..னு சொன்னார்னா பாத்துக்கங்களேன்...///

ஹய்யா நான் ஊருக்கு போயி அழகரை பார்த்திட்டு அதுக்கு ஒரு மொக்க பதிவெல்லாம் போட்டாச்சே.... :)))

இன்னிக்கு பெங்களூரூ திரும்பியாச்சு :(

பங்காளி... said...

ராம்..

இதுக்கு பேர்தான் வயித்தெறிச்சல கெளப்றது...ம்ம்ம்ம்

உங்க பதிவ தெறந்தா இன்னும் ஃபீலிங்க் ஆய்டுவமோன்னு நேத்துல இருந்து தெறக்கலாமா வேணாமான்னு சுத்திட்டு இருக்கேன்...நீங்க என்னடான்னா நம்ம ஏரியாவுலய வந்து...நல்லாயிருங்கப்பு...

நல்ல கூட்டமாமே...இந்தவாட்டியும் ஆத்துல நெடுக போனீகளா...ஹி..ஹி..எப்படியிருந்துச்சுப்பு....

பங்காளி... said...

பொன்ஸ்...

ம்ம்ம்ம்....விட்டேத்தியான...ஆழமானசோகத்தைக்கூட ஒரு சிரிப்பில் சிந்துவதில் தபுவை அடிச்சிக்க ஆளே இல்லை....

மெய்யாலுமே தபுவுக்கு வயசாயிடுச்சின்னு சொல்றீங்களா...

இராம்/Raam said...

//
இதுக்கு பேர்தான் வயித்தெறிச்சல கெளப்றது...ம்ம்ம்ம்//

ஹி ஹி அதே அதே...:)

//நல்ல கூட்டமாமே...இந்தவாட்டியும் ஆத்துல நெடுக போனீகளா...ஹி..ஹி..எப்படியிருந்துச்சுப்பு....//

சூப்பரா'லே இருந்துச்சு, என்ன வழக்கம்போலே வெயிலுதான் படுத்தி எடுத்துருச்சு.. :(

ஆனாலும் மூணு நாலு மணி நேரமில்லே சுத்துனோம், நட்சத்திர பிரகாரம் நம்ம பொறந்த நாளு வேற:)

Boston Bala said...

---"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்"ல அஜித்தைப் பார்க்க அத்தனை பரிதாபமா இருந்திச்சு---

கண்டிக்கிறேன் :P

இன்றளவும் அன்றைய அஜீத்துக்கு 'சந்தனத் தென்றல்' ஜோடிப் பொருத்தம், ஜோதிகாவுடன் கூட அமையவில்லை ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாமா அதுல ரொம்ப நிஜமா தபும் அஜித்தும் பொருத்தமா தான் தோணுச்சு எனக்கு.....நிஜத்துலயும் கூட பாருங்க காதலிக்கறவங்க எல்லாரும் ரொம்ப பொருத்தமாவெல்லாம் இருக்க மாட்டாங்க :)

தபு ரசிகர் மன்றம் இருக்கு போலவே இங்க.

பங்காளி... said...

தபூன்னாலே...காலாபாணியில மோகன்லாலோட ஒரு டூயட்ல வருவாங்களே, ...ம்ம்ம்ம்...க்ளாசிக் ப்யூட்டி.

மங்கை said...

//...க்ளாசிக் ப்யூட்டி. ///

உண்மை...

நல்ல நடிகையும் கூட...The Namesake ல நடிப்பும் க்ளாசிக்

பங்காளி... said...

படத்தின் பாடல்கள் தொடர்பான ஒரு விமர்சனம்...

http://www.andhracafe.com/index.php?m=show&id=23009

பங்காளி... said...

பாடல் பத்தி இன்னோரு விமர்சனம்

http://www.indiafm.com/movies/musicreview/12845/index.html