Thursday, February 01, 2007

வயது வந்தவர்களுக்கு மட்டும்...

தமிழில் சுதந்திரமாய் தன் போக்கில் பதிவும் பதிவர்கள் வெகு குறைவு. போலியான அடையாளங்கள், வாசகவட்டத்திற்கு இணக்கமான பதிவுகளை மட்டுமே வலிந்து பதிந்து புனிதபிம்பமாய் காட்டிக்கொள்ள மெனகெடுதலில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை.

என் பதிவு தமிழ்மணத்தில் இனைக்கப் பட்டுள்ளதால் இங்கே உருவாக்கப்பட்டுள்ள கலாச்சார வரம்புகளை மீறி பரிசோதனைகள் எதையும் செய்ய இயலவில்லை என்பதை வேதனையுடன் ஒப்புக்கொள்கிறேன்.

அய்யோ..அவங்க படிப்பாங்க...இவங்க படிப்பாங்க...ச்சின்ன புள்ளைங்க வந்து போகுது, வீட்ல இருக்கற பொம்பளைங்க பார்ப்பாங்க...அப்படி இப்படியென நிஜத்தில் உழலும் அத்தனை கழிசடைகளும் இங்கும் கோலோச்சுவதை வெறுக்கிறேன்.

என்னுடைய பதிவுகளை இத்தனை பேர் படிக்கவேண்டுமென எதிர்பார்ப்பதும் அதற்கான உத்திகளில் இறங்குவதெல்லாம் தேவையற்றது என்பது என் தனிக்கருத்து. இது சுதந்திரவெளி....எனக்கு தெரிந்தது தெரியாதது, விரும்பியது விரும்பாதது என என்னுடைய தேடல், பலம், பலவீனம், விகாரம் என அத்தனையும் குவித்துவைக்கும் ஒரு இடம் அவ்வளவே....

இஷ்டமும், பொறுமையும் இருந்தால் மட்டும் படி...இல்லையேல் ஓடிப்போ என்கிற மனப்பாங்குடன் எழுதுவதே சுகம் என தோன்றுகிறது. இத்தனை பேர் பின்னூட்ட வேண்டும்...அந்த வெங்காயங்களும் நான் விரும்புகிற மாதிரித்தான் பின்னூட்டவேண்டும்...அதைத்தான் வெளியிடுவேன் மற்றதெல்லாம் என் மனசுக்குள் சாக்கடையாய் சேர்த்து வைத்துக்கொண்டு சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவனை போட்டுத்தாக்குவேன்....இது எனக்கு தேவையில்லை.

அதற்காக இத்தனை நாள் தெரிந்தவர்களையெல்லாம் தூக்கியெறிந்து போவதிலும் தயக்கம்....எனவே தனியாய் ஒரு பதிவினை துவக்க உத்தேசித்திருக்கிறேன். அது சுதந்திர உலகம், அங்கே யாரும் வரலாம்....அதற்காக வாருங்கள் வந்து ஆதரவு தாருங்கள் என்றெல்லாம் அழைக்க உத்தேசமில்லை.

இஷ்டமிருந்தால் என்னுடைய ப்ரொஃபைலில் இருக்கும் அந்த வலைப்பதிவை தேடிப்பாருங்கள். அந்த பதிவு நிச்சயமாய்.....வயது வநதவர்களுக்கு மட்டுமே....


(இந்த பதிவு தொடர்ந்து தமிழ்மணத்துடன் இங்குள்ள வரையறைகளுடன் தொடர்ந்து இயங்கும்...ஏனெனில் இதுவும் பிடித்திருக்கிறது....)

8 Comments:

செந்தழல் ரவி said...

நல்லா சொன்னீங்க பங்காளி...வழிமொழிகிறேன்...

செந்தழல் ரவி said...

பங்காளி, வலைப்பதிவர் சந்திப்புக்கு வந்திருங்க....

பொன்ஸ்~~Poorna said...

//தமிழில் சுதந்திரமாய் தன் போக்கில் பதிவும் பதிவர்கள் வெகு குறைவு. போலியான அடையாளங்கள், வாசகவட்டத்திற்கு இணக்கமான பதிவுகளை மட்டுமே வலிந்து பதிந்து புனிதபிம்பமாய் காட்டிக்கொள்ள மெனகெடுதலில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. //

முதல்லயே தெரிஞ்சதுது தானுங்களே பங்காளி! நல்ல விஷயம்..

// என் பதிவு தமிழ்மணத்தில் இனைக்கப் பட்டுள்ளதால் இங்கே உருவாக்கப்பட்டுள்ள கலாச்சார வரம்புகளை மீறி பரிசோதனைகள் எதையும் செய்ய இயலவில்லை என்பதை வேதனையுடன் ஒப்புக்கொள்கிறேன்.//
இதுக்கு எதுக்குங்க வேதனை.. நீங்க செய்யுறது தான் சரி.. தனிப்பதிவா வச்சிக்கிறது நல்லது.. தமிழ்மண வாசகர்களையும் தொல்லை செய்யாம :)

சென்ஷி said...

//(இந்த பதிவு தொடர்ந்து தமிழ்மணத்துடன் இங்குள்ள வரையறைகளுடன் தொடர்ந்து இயங்கும்...ஏனெனில் இதுவும் பிடித்திருக்கிறது....)//

பரவாயில்ல. அப்புறமா அங்க போயி படிச்சுக்குறேன் :))

வயதுக்கு வந்த சென்ஷி

மங்கை said...

நேர்மையான கருத்துக்கள்...

//மற்றதெல்லாம் என் மனசுக்குள் சாக்கடையாய் சேர்த்து வைத்துக்கொண்டு சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவனை போட்டுத்தாக்குவேன்//

பொன்ஸ் சொன்ன மாதிரி இது தான இப்ப நடந்துட்டு இருக்கு...

-/பெயரிலி. said...

நடைமுறைக்குப் பொருந்தியதும் சரியெனப் படுவதுமான கருத்து.

G.Ragavan said...

வாங்க பங்காளி வாங்க.

புனித பிம்பங்களா எல்லாரும் இருக்கமோ இல்லையோ நல்ல நண்பர்களா இருக்க முயலனும். அதுல தொடங்குனா...எல்லாமே நல்லதாவே நடக்கும்.

பொன்ஸ்~~Poorna said...

////மற்றதெல்லாம் என் மனசுக்குள் சாக்கடையாய் சேர்த்து வைத்துக்கொண்டு சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவனை போட்டுத்தாக்குவேன்//

பொன்ஸ் சொன்ன மாதிரி இது தான இப்ப நடந்துட்டு இருக்கு...//
மங்கை, உண்மைதான், முழு உடன்பாடு உண்டுதான்னாலும், இத நான் சொல்லலீங்க.. பங்காளி தான் சொல்லீருக்காரு :)