Thursday, February 22, 2007

துக்க நிவாரணி....

ஏதோவொரு வகையில் பிறரை சார்ந்திருப்பவனிடம் சலனம் மிகுந்திருக்கிறது.

சுதந்திரமாக இருப்பவனிடம் சலனம் இருப்பதில்லை.

சலனமில்லாத இடத்தில்தான் அமைதி உண்டாகிறது.....

அமைதியான இடத்தில்தான் இன்பம் பிறக்கிறது.

இன்பத்தை தேடும் போதுதான் வரவும் செலவுமாக நிலைமாற்றங்கள் தோன்றுகின்றன.

நிலைமாற்றங்கள் எங்கில்லையே அங்கேதான் துக்கத்தின் முடிவும் இருக்கிறது....



இந்த பதிவிற்கான காரணங்கள்...

1.புத்தரை பற்றி படிக்க ஆரம்பித்ததின் தாக்கம்
2.பதிவெழுதுவதை மறந்துவிடக் கூடாது என்பதனால்..
3.இதை எத்தனை பேர் ஒத்துக்கொள்வீர்கள் என தெரிவதற்காக..

11 Comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அய்யோ பாவம் ...அவ்வள்ளவு துக்கமா உங்களுக்கு.. :-(

பங்காளி... said...

முத்துலட்சுமி அவர்களே...

துக்கமும்...தூக்கமுமில்லாத நிலையே இறைநிலை.....

உங்களுடைய பதிவொன்றில் நான் யாரென சொல்லியிருந்தேன்...ஹி..ஹி...அப்புறமும் உங்களுக்கு எப்படி இந்த மாதிரி கேள்வியெல்லாம் வரலாம்.

தமிழ்நதி said...

சார்ந்திருப்பதை விட்டுவிட்டால் துக்கமில்லை என்கிறாரா புத்தர்...ம்.. தானே சுமக்கிறவன்தான் தனித்தவன். இன்னொருவர் மீது சார்ந்திருப்பவனுக்குத் துக்கமேயில்லையே நண்பரே! சுதந்திரமாக விடப்படுகிறவன்தான் அதிகம் சிந்திக்கிறான். சிந்திக்கச் சிந்திக்கத் தெளிவும் பிறக்கலாம். குழப்பமும் விளையலாம். புத்தரைப் படிக்கத்தான் வேண்டும். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல எதைப் படித்து வாழ்வைப் புரிந்துகொள்வது என்பதே குழப்பமாகத்தானிருக்கிறது. நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தின் பெயர் என்ன?

ramachandranusha(உஷா) said...

ம்ம்ம்ம்.. ஆனால் சார்ந்திருப்பது நம் மனம் சார்ந்த நிலையல்லவா? புத்தர் இருந்தா கேட்டிருக்கலாம்! அவர் ஓடினா மாதிரி எல்லாராலும் ஓட முடியுமா:-) இன்பமும், துக்கமும் நம்மிடம்தானே இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் கர்மயோகிகளிடம்
நிதானமும் அமைதியும் இருப்பதை நான் பார்த்திருக்கேன்.
அது சரி பங்காளி, என்ன புத்தகம்? எங்க பு/படிச்சீங்க?

வல்லிசிம்ஹன் said...

ம்ம்ம்ம்.. ஆனால் சார்ந்திருப்பது நம் மனம் சார்ந்த நிலையல்லவா? புத்தர் இருந்தா கேட்டிருக்கலாம்! அவர் ஓடினா மாதிரி எல்லாராலும் ஓட முடியுமா:-) இன்பமும், துக்கமும் நம்மிடம்தானே இருக்கிறது.//:-)
வெல்செட் நிர்மல்(காதலிக்க நேரமில்லை படம்)
உஷா! ஓட முடியாமல் நிறையப் பேர் இருக்கிறதுனாலதான் குடும்பங்கள் இருக்கின்றன.:-)
தத்துவம் நல்லா இருக்கு பங்காளி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

துக்கமில்லாமல் இருப்பது வேண்டுமானால் நல்லது.
தூக்கமில்லாமல் இருப்பது
ரொம்ப கஷ்டம் மனிதக்கடவுளே!

நதி சொல்கிறமாதிரி சார்ந்திருப்பவரிடம் எல்லா பொறுப்புகளையும் கட்டிவிட்டு
துக்கமில்லாமல் இருக்கலாமே.
புத்தகத்து பேரைப் போட்டுவிடுங்கள்.

மங்கை said...

ஹ்ம்ம்..நம்ம விதியை (Destiny) நாம தான் உண்டாக்குறோம்...

//ஓட முடியாமல் நிறையப் பேர் இருக்கிறதுனாலதான் குடும்பங்கள் இருக்கின்றன.:-)//

:-))..உண்மை

மங்கை said...

சலனிமில்லாமல் சார்ந்திருப்பது சாத்தியம் தான்

பங்காளி... said...

ஆஹா...நான் காண்பதென்ன கனவா இல்லை நனவா.....

ஹி..ஹி...கையும் ஓடல...காலும் ஓடல...ஹி..ஹி...என்னுடைய பதிவில் இத்தனை தாய்க்குலமா?....

தாய்மார்களே...புத்தகமா வாங்கி படிக்கல...ஆனா கீழ்கண்ட பதிவுகள்ள இருக்கிற விடயங்களைத்தான் படிச்சிட்டு இருக்கேன்...பொறுமை இருந்தா நீங்களும் முயற்சி பண்ணி பாருங்க....

http://www.buddhistinformation.com/peacepath.pdf

http://www.buddhanet.net/ebooks.htm

Anonymous said...

//வரவும் செலவுமாக நிலைமாற்றங்கள் தோன்றுகின்றன//
இதை எப்படி புரிஞ்சக்கணும் பங்காளி?
நிஜமா டக்குனு தெரிய மாட்டேங்குது ...
உங்களுடைய வார்த்தைகளில் சொல்ல முடியுமா?

பங்காளி... said...

மதுரா...

கொஞ்சம் விரிவாய் எழுதனும் நிலைமாற்றங்களை பற்றி.....

கொஞ்சம் ஓடீட்டு இருக்கேன்...அதான் விரிவா எழுத முடியல...அப்புறம் இந்த Sharemarket பத்தி ப்ளாக்குறதால இந்தபக்கம் வர லேட்டாய்டுச்சி....

எளுதறேன் தாயீ...நீங்க போதும் போதும்னு சொல்றவரை எளுதீட்டாப் போச்சு...ஹி..ஹி...