Sunday, January 28, 2007

நாதானுசந்தானம்

நம்மில் பலர் ஊருக்குள்ள தியானம் சொல்லிதர்றேன், யோகம் சொல்லிதர்றேன்னு கில்மா காட்டி காசுபறிக்கிற வித்தைகாரர்களிடம் போய் காசை அழுது, புரிந்தும் புரியாமலும் நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். புதிய புதிய பெயர்களில் இந்த வியாபாரிகள் தரும் பேக்கேஜ்கள் தருவதாக சொல்லப்படுவது மன அமைதியும், மனத்தூய்மையுமே.

எல்லாஞ்சரிதான் இப்ப என்ன எழவுக்கு இத்தன பில்டப்னு கேக்கறீங்களா....பின்னே நாதானுசந்தானம்னா என்னன்னு சொல்றதுக்கு ஒரு ஓப்பனிங்க் வேணும்ல..அதான், ஹி..ஹி...இப்படித்தான் நெறய விசயங்கள் சரியாக முகவரிப்படுத்தாததால இழந்திருக்கிறோம். இந்த நாதானுசந்தானமென்பது ஒரு எளிய வித்தை, யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

சாமானியர்களாய் நம்மிடையே வாழ்ந்த சித்தர்கள் சொல்லிக்கொடுத்த இம்முறையானது காலப்போக்கில் சிலரால் கையகப்படுத்தப்பட்டு....பின்னர் பெரிய்ய ஆரியவித்தைடா...இதுன்னு சொல்ற நிலமைக்கு போய்விட்டது.(அப்பாடா...கொஞ்சம் பாலிடிக்ஸ் தொட்டாச்சு).

பில்டப்பெல்லாம் போதும்...இனி மேட்டருக்கு வருவோம். இதுக்கு பெரிய ப்ரிப்பரேசன் எல்லாம் தேவையில்லை....


  • இதை எப்ப வேணுன்னாலும் செய்யலாம்.

  • தேவை வசதியா உக்கார ஒரு இடம்.

  • உடம்பை தளர்வாக வைத்துக்கொள்ளவும்

  • உங்களைச் சுற்றி அமைதியான சூழல் இருந்தால் நல்லது

  • கைகளால் காதுகளை மூடிக்கொள்ளவும்

  • கண்களை மூடி முடிந்தவரை மனதை வெறுமையாக்கவும்

  • பார்வையை உள்முகமாக வைத்துக்கொள்ளவும்



அவ்வளவுதான்....இனி உள்ளுக்குள் ஏதேனும் ஒலி கேட்கிறதா என கவனியுங்கள், முதலில் பிடிபடாதுதான்...கொஞ்சத்தில் உள்ளுக்குள் ஏற்படும் ஒலிகள் உங்களுக்குபிடிபடும். அந்த ஒலிக்களை கவனிக்கத்துவங்குகள்.

பலவிதமான கலவையான ஒலிகளாக கேட்டது போக போக உங்களால் இனங்காணத்தக்க ஒலிகளாய் தெரியும். கடலலையின் சத்தம், ஆற்றின் சலசலப்பு, அடர்த்தியாக வீடும் காற்றின் சத்தம், உங்களின் இதயத்தின் ஒலி...என...புதுமையான அனுபவமாக இருக்கும். இவற்றில் லயித்து மனதை செலுத்தினால் நேரம் போவதே தெரியாது.

வாய்ப்புகிடைக்கும் போதெல்லாம் செய்து வாருங்கள்....பழக பழக அந்த அனுபவம் தரும் ஆறுதலை வார்த்தைகளால் சொல்வதை விட அனுபவிப்பதே சிறந்தது. இப்போது உங்களுக்கு மின்னல், முரசொலி, என பலவிதமான சூட்சும ஒலிகளை கேட்க ஆரம்பித்திருப்பீர்கள்.இந்த ஒலிகள் நீடிக்கும் போது ஒருவிதமான பரவசநிலையை உணரமுடியும்.

நாளொன்றிற்கு குறைந்தது 1 மணி நேரமென தொடர்ந்து செய்துவர நமது உடலில் உள்ள சக்கரங்களின் ஒலிகளையும் கேட்கலாம்.ஒரு கட்டத்தில் உங்களுக்கு ஒங்கார ஒலி கேட்கத்துவங்கும் பட்சத்தில் இந்த தியானநிலையில் நீங்கள் சித்தியடைந்ததாகவே கருதலாம்.

3 Comments:

மங்கை said...

// பார்வையை உள்முகமாக வைத்துக்கொள்ளவும்//

நல்லா சொல்லி இருக்கீங்க... இதன் முக்கியத்துவத்தை செய்து பார்க்கும் பொழுது தான் உணர முடியும் என்று நினைக்கிறேன்..

நன்றி...

Anonymous said...

பங்காளி ஒரு டிஸ்கஷன் போடலாமா இதுல? நக்கலெல்லாம் இல்ல. நிஜமாவே எனக்கு தோணுற வரைக்கும் கேள்வி கேக்கலாமா?
உதாரணத்துக்கு:
1. காது மூடினா ஒலி வரும் என்பதுல சந்தேகம் இல்ல. அதில் பல வகை என்பதிலும் சந்தேகம் இல்ல. முயற்சி பண்ணி பாத்தது இல்ல - ஒரு மணி நேரம் எல்லாம் - ஆனா சாத்தியம்னு தோணுது. அமைதி கிடைக்கலாம் - சாத்தியம். நீங்க செய்திருக்கீங்களா? ஒரு மணி நேரமா?
2. சக்கரம் - குண்டலினி - அந்த சக்கரம் தானே? ஓங்காரம் வழியா சக்கரம் உணற கத்துக்கிட்டேன் - நிஜமா கற்பனையான்னு தெரியல - ஆனா உணர்ச்சிக்கும், உச்சரிப்புக்கும், எதிர்பார்த்த எஃபெக்டும் இருக்கு. நீங்க எப்படி ரிவர்ஸ்ல சொல்றீங்க? ஓங்காரம் கேட்டு, அது வழியா சக்கரம்னு? சொந்த அனுபவம் உண்டா? கிண்டலுக்கு இல்ல - நிஜமான கேள்வி!
3. எல்லாத்தை விட முக்கியமான கேள்வி (அல்பத்தனமாயிருந்தாலும்) - கழுத்து வலி, முதுகு வலி வராதா - சொய்ங் சொய்ங்னு சுத்த விட்டா? விட்டுப் பாத்தீங்களா?

If you feel these are bullshit questions just simply ignore this comment! :) I wondered if I could chat on this! I am not sure how sincere I am, but definitely curious to get some peer counselling on this! :)

வல்லிசிம்ஹன் said...

நாத அனுசந்தானம்.
நன்றி. செய்து பார்க்கிறேன்.
பெண்களுக்கு காயத்ரி மதிரம் சொல்லக் கூடாது என்று ஒரு விதிமுறை இருப்பதாகச் சொல்வார்கள். இதைப் படித்து மகிழ்ச்சி கிடைப்பதினாலேயெ பதில் சொன்னேன்.