அன்மையில் சித்தர்களின் தந்திரஜாலங்களைப் பற்றிய நூலொன்றினை படிக்க நேர்ந்த்து...அதில் குறிப்பிட்டுள்ள சில முறைகள் ஆச்சர்யமாகவும், அதன் சாத்தியம் பற்றிய ஆச்சர்யமே மேலொங்கியது....இனி சில வித்தைகளை பார்ப்போமா.....
1.ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெறும் உபாயம்....
இது சாத்தியமென்றால் அடுத்த ஒலிம்பிக்ஸில் இந்தியாவிற்கு தங்கம் வாங்க நான் ரெடி...ஹி...ஹி...நீங்க ரெடியா?
அதிமதுரம் வேரையும்,விழுதி இலையையும் கொஞ்சமாகவும், சம அளவில் எடுத்து வாயில் போட்டு மென்று அடக்கிக்கொண்டு ஓடினால் நம்மை யாரும் மிஞ்ச முடியாதாம்....ஓட்டத்தின் முடிவில் மயக்கம் வருமாம் அதை மட்டும் சமாளித்துக்கொண்டால் நீங்கள்தான் வெற்றியாளர்.
2.எளிதாய் மீன் பிடிக்க....
குளத்தில் உள்ள மீன்களை தூண்டில் அல்லது வலையில்லாமல் பிடிக்க இந்த முறை உதவுமாம்.
திருகுகள்ளி என்கிற செடியை துண்டு துண்டாய் வெட்டி குளத்தில் நெருங்க போட்டால் கொஞ்ச நேரத்தில் மீன்கள் மேலே வந்து மிதந்து கரை ஒதுங்குமாம்....தேவையானதை பிடித்துக்கொள்ளலாமாம்.
3.பசியில்லாதிருக்க....
நாயுருவி செடியின் விதையை குத்தினால் கிடைக்கும் அரிசியை, பசும்பால் விட்டு அரைத்து கலக்கி குடித்து விட்டால் ஒரு வாரம் வரை பசியெடுக்காதாம்....ஆனால் உடலின் உஷ்ணம் அதிகரிக்குமாம்.
இப்படி நிறைய வித்தைகள் நீண்டு செல்கிறது....இவையெல்லாம் சாத்தியம்தான் என யாராவது பரிட்சித்து(!)ப் பார்த்துச் சொன்னால் புண்ணியமாய் போகும்....ஹி..ஹி...ம்ம்ம்ம்
6 Comments:
மல்லிகா ஷெராவத் படம் போட்டாலும் பின்னூட்டமில்லை.....பங்குவணிகம் பத்தி பதிவு போட்டாலும் பின்னூட்டமில்லை....சித்தர்களை பத்தி பதிவு போட்டாலும் பின்னூட்டமில்லை....ஹி..ஹி...ஒண்ணும் புரியலயே....ஹி..ஹி...
ஒன்னு மட்டும் சொல்றேன் மனசுல வச்சிக்குங்க.....எந்த நாட்டில் மேதைகள் மதிக்கப்படுவதில்லையோ....அவர்கள் அங்கே மீண்டும் பிறக்க மாட்டார்கள்....ஹி..ஹி......(இது கொஞ்சம் ஓவெரா இல்லை)
பங்காளி, உங்க ஆற்றாமையை கொஞ்சம் குறைக்க, அன்புடன் ஒரு பின்னூட்டத்தை போட்டுட்டேன்..
நீங்க சொல்ற செடி எல்லாம் இப்போ கிடைக்கிறதில்லை...நானும் கேள்விப்பட்டிருக்கேன்...
:))
//திருகுகள்ளி என்கிற செடியை துண்டு துண்டாய் வெட்டி குளத்தில் நெருங்க போட்டால் கொஞ்ச நேரத்தில் மீன்கள் மேலே வந்து மிதந்து கரை ஒதுங்குமாம்....தேவையானதை பிடித்துக்கொள்ளலாமாம்.//
இதே மாதிரிதான் அமேசானியாவின் காட்டில் இந்தியர்கள் ஒரு மரப்பட்டையை அடித்து நசுக்கி நாறாக்கி நதியில் போட்டு இன்றும் மீன்களை பிடித்து உண்டு வருகிறார்கள். இந்த மரப்பட்டையின் சாறு தண்ணீரில் உள்ள ஆக்சிஜனை கட்டுப்படுத்திவிடுமாம்.... இதனால்தான் மீன்கள் முச்சுத்தினறி மேலே வருவதாக சொல்லப்படுகிறது.
திருகுகள்ளி செடிக்கும் ஒரு வேலை இதே குணம் இருக்க வாய்ப்பு உண்டோ?
அன்புடன் மாசிலா.
சித்தர்களின் வித்தைகள்பற்றி மேலும் நிறைய எழுதி வரவும்.
நன்றி.
தமிழில் கண்கட்டு வித்தைகள் என்று பழங்காலப் புத்தகமொன்றை எங்கள் வீட்டுப் பரணில் இருந்து எடுத்தேன். இது எனக்கு 12 வயதிருக்கும் போது. அதில் சொல்லப்பட்ட வித்தைகளைச் செய்து பார்த்தேன். ரவி சொல்வது போல சில சரக்குகள் தற்போது கிடைக்கவில்லை, அல்லது, எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. மற்றபடி நிறைய வித்தைகள் உண்மைதான் என்ற உண்மையைக் கண்டேன். உதாரணமாக, முட்டையை மறைய வைக்கும் வித்தை, அடுத்தவர் நினைத்துக்கொண்ட பொருளை எடுத்துக் கொடுப்பது, பலாப்பழத்தை அறுக்காமல் மிகச்சரியாக அதனுள் எத்தனை சுளைகள் இருக்கின்றன என்று சொல்வது என்று பல வித்தைகள் காட்டியிருக்கிறேனாக்கும்.
நாயுருவிச் செடியைத் தேடிப் போய் பல நாட்டு மருத்துவர்களைத் தாஜா செய்து அந்தச் செடி எங்கு இருக்கும் என்று கண்டு கொண்டேன். பிற்பாடு அந்தச் செடிக்கு நீர்முள்ளி என்றொரு பெயரிருக்கவும் கண்டேன். விதைகளை எல்லாம் பொறுக்கிக் கொண்டு வந்தாயிற்று. மந்திரம் சொல்லி பாலின் ஆவியில் வேக வைத்து சாப்பிட வேண்டியது தான் பாக்கி. நான் என்ன செய்கிறேன் என்று என்னிடம் கர்ம சிரத்தையாகக் கேட்ட என் அம்மா, அவசரமாக உள்ளே போய் எடுத்து வந்தார், ஒரு கம்பு. விட்டு வெளுத்ததில் அன்றோடு விட்டு விட்டேன் இந்த வித்தை கற்றுக் கொள்ளும் எண்ணத்தை. நான் படித்துப் பெரியாளாக வேண்டுமாம், இந்த மாதிரி கூத்தாடியாகப் போய் விடக்கூடாதாம்.
இந்தமாதிரிப் புத்தகத்தை வாங்கி வைத்திருந்த என் அப்பாவிற்கும், இந்த மாதிரி வித்தைகளை களவும் கத்து மற ரேஞ்சிற்காகவாது விடாமல் முளையிலேயே தடுத்த என் அம்மாவிற்கும் உள்ள ஒற்றுமையை நான் வியக்காத நாளே கிடையாது.
மொத்தத்தில் ஒரு நவீன சித்தரை இந்த தமிழ் கூர் நல்லுலகம் இழந்து விட்டது.
Anna endha madhiri mandhira pudhagam enkitta irukku but ennakku thandhira pudhagam vendum ennakku ninga sonna book ka one pic en whats app pannunga
Plse
Plse Anna my no:7448529409
Post a Comment