Friday, January 19, 2007

நான் ரசித்த பதிவர்கள்

தமிழ் வலைப்பதிவுகளில் காலடிவைத்து 5000 நாட்களை நெருங்கிவிட்டேன். இப்போது இரண்டாவது இன்னிங்ஸ்ம் ஆடிக்கொண்டிருக்கிறேன். முதல் இன்னிங்ஸில் நான் யார் என இதுவரை ஒரே ஒருபதிவர் மட்டுமே அடையாளங் கண்டிருக்கிறார்....ஹி..ஹி..அந்த அளவுக்கு பிரபலம் நான்.....

நான் அத்தனை தரமான,சிறப்பான பதிவர் இல்லைதான்...ஆனால் ஒரு வாசகனாக நான் ஆச்சர்யத்துடன் பார்த்த,ரசித்த,வெறுத்த,எரிச்சலான சில பதிவர்களை பற்றிய பார்வை மற்றும் விமர்சனமாக இந்த பதிவு தொடரை எழுத நினைக்கிறேன்.

இதுவரையில் எந்தவொரு பதிவரையும் நேரிலோ,தொலைபேசியிலோ சந்தித்ததோ/உரையாடியதோ இல்லை....அதற்கான ஆர்வமும் இன்றுவரை இல்லை. ஆனாலும் என்வரையில் அவர்களை பற்றிய ஒரு மதிப்பீடாகவே இந்தப்பதிவினை எழுத நினைக்கிறேன்.

முதலில் தாய்மார்களுடன் தொடங்குவோம்.....மங்கை, பொன்ஸ், ராமசந்திரன் உஷஅ,...இப்படி பட்டியலை துவக்குகிறேன்...இவர்களில் யாருக்கேனும் அவர்களைப் பற்றி நான் பதிவெழுதுவதில் விருப்பமில்லையெனில் தயவுசெய்து தெரிவிக்கவும்.....

ஓக்கே....ஸ்டார்ட் ம்மீசிக்

14 Comments:

பொன்ஸ்~~Poorna said...

5000மா?!!!! ஆச்சரியமா இருக்குங்க..

//இதுவரையில் எந்தவொரு பதிவரையும் நேரிலோ,தொலைபேசியிலோ சந்தித்ததோ/உரையாடியதோ இல்லை....//
அதனால தான் ஐயாயிரம் வரை வந்துட்டீங்களோ?! ;)

உஷஅங்கிறது நம்ம ராமச்சந்திரன் உஷா தானே?

try ushA - caps A should help you :)

ரவி said...

500 ஆக இருக்குமோ ? ஐயாயிரம் நாட்கள் என்பது ரொம்ப அதிகம்...கார்த்திக் ராமாஸ் முதல் பதிவு போட்டது 2003 ல அப்படீன்னு நினைக்கிறேன்...வருஷத்துக்கு 365 நாள்தானே ? அப்போன்னா நீங்க கார்த்திக்கா இருந்தாக்கூட இரண்டாயிரத்தை (நாட்கள்) கூட தாண்டமுடியாது...

ஒரு சைபரை வெட்டப்போறீங்கதானே ??

Sud Gopal said...

நீங்க சாய்பாபா,ராமர் பிள்ளை,நீலப்படம் போன்ற பதிவுகளை எழுதிய சதயம் தானே??

பங்காளி... said...

ஹி..ஹி......கூட ஒரு முட்டை போட்டுட்டேனா...ஹி..ஹி,,,நமக்கு முட்டைன்னா ரொம்ம புடிக்குமா...அதான்....

கண்டுக்காதீங்கோ.....

பங்காளி... said...

மக்களே...புக்ஃபேர் கெளம்பீட்டேன்...தனிக்காட்டு ராசாவா.....ஹி..ஹி...

ஈவ்னிங் மீட் பண்ணுவோம்...

G.Ragavan said...

ஐநூறு நாட்களா பதிவுல இருக்கீங்க. பாராட்டுகள். மதிப்பீடுகள்...ம்ம்ம்...காத்திருக்கிறோம். ஒவ்வொருவரைப் பற்றியும் நீங்கள் நினைப்பவைகளை எழுதப் போகின்றீர்கள். அது எவ்வளவு நாங்கள் அந்தப் பதிவரைப் பற்றிப் பொருந்துகிறது என்பதையும் பார்க்கலாம்.

பூனைக்குட்டி said...

//மங்கை, பொன்ஸ், ராமசந்திரன் உஷஅ//

இந்த லிஸ்டில் இன்னும் ஒன்றிரண்டு பேரை சேர்த்துக்கொண்டால் என் ஆத்மா சாந்தமடையும். ;)

கோவி.கண்ணன் said...

சதயம் ???
சரியாச் சொல்லுங்க 5000 நாளா ? 5000 மணிகளா ?
:)

கோவி.கண்ணன் said...

சதயம் ???
சரியாச் சொல்லுங்க 5000 நாளா ? 5000 மணிகளா ?
:)

வினையூக்கி said...

பதிக்க வேண்டாம் ---

நீங்க பழைய "சதயம்", என் சீனியர் தானே?!!!!

அப்படி நீங்க சதயம் என்றால் என்னோட பதிவுக்கு நீங்க பின்னூட்டம் போட்ட அன்னக்கே கண்டுபிடிச்சுட்டேன் சீனியர்

வினையூக்கி said...

இரண்டு ஊகங்கள், நீங்க சதயமா இருப்பதற்கு, எனக்குப் போட்ட பின்னூட்டம், கமெண்ட் மாடரேஷன் இல்லாமல் வைத்திருப்பது

நாமக்கல் சிபி said...

500 நாட்கள்தானா அல்லது முட்டை ஏதாவது எக்ஸ்ட்ரா இருக்கா?

:))

ramachandranusha(உஷா) said...

//ஆச்சர்யத்துடன் பார்த்த,ரசித்த,வெறுத்த,எரிச்சலான

முதலில் தாய்மார்களுடன் தொடங்குவோம்.....மங்கை, பொன்ஸ், ராமசந்திரன் உஷஅ //

அட தேவுடா, நா லிஸ்டுல எந்த எடத்துல இருக்கேன் :-)

மங்கை said...

//அட தேவுடா, நா லிஸ்டுல எந்த எடத்துல இருக்கேன் :-) //

அதே அதே....