Monday, January 22, 2007

தனியா போனப்ப.....

நுழைந்தால் ரமணாஸ்ரமத்தின் அரங்கு வா...வா...என்றது.விகடன் அரங்கில் நுழைந்த போது....ஹி..ஹி...அங்க ஆறடி ஒசரத்துல ஓங்குதாங்கா அம்சமா ஒரு தாய்க்குலம்.ம்ம்ம்ம்ம் இப்படி புள்ளைகள பாத்து எம்புட்டு நாளாச்சுன்னு பக்கதுல போய் நின்னு யார் ஒசரம்னு பாத்தேன்...ஹி..ஹி...நாமதாண்டா ஒசரம்னு தெரிஞ்சி....சின்னப்புள்ள கணக்கா அப்டி ஒரு சந்தோசம்....

அந்த புள்ள கையில ஏற்கனவே நெறய புத்தகம்...அவங்க அம்மா குடுத்த புத்தகத்த வாங்கும் போது தடுமாறி...எல்லாப் புத்தகத்தையும் கீழ போட....நான் எடுக்க...அது..."ஹைய்யோ நானே எடுத்துக்கறேன்னு"....தேன்சிதற....நான் கொடுக்க....ரொம்ப தேங்ஸ்னு வெட்கமாய் கண்களால் சிரிக்க....ஹைய்யோ...ஹைய்யோ..டிக்கெட் வாங்குன காசு இங்கியே செமிச்சிருச்சேடா...னு.....மனம் கவுண்டமணியாய் குதிக்க...ஹி...ஹி...இதெல்லாஞ் சொல்லி புரியவைக்க முடியாது....அனுபவிக்கனுமப்போய்....ஹி..ஹி.

விகடன்காரய்ங்களுக்கு தேங்ஸ் சொல்லனுமேன்னு ஆர்.கே நாராயணனின் "சுவாமியும் நண்பர்களும்", பொருளாதார கட்டுரைகள் அடங்கிய "காசு மேல காசு" வாங்கீட்டு அப்டியே கவிதாக்குள்ள போய் ருத்ரன் எழுதின புத்தகம் அஞ்சாற அள்ளீட்டு....அல்லயன்ஸ்ல.. சூர்யாவையும்,சிவக்குமாரையும் ஒரே கையில தூக்கிட்டு அடுத்தடுத்து.....என்ன வாங்கறோம்னு நினைப்புல்லாம பட்டிக்காட்டான் முட்டாய் கடய பார்த்த மாதிரி கண்ணுல கண்டதையெல்லாம் அள்ளீட்டு இருந்தேன்.

ஒரு கட்டத்தில்..."வந்த நோக்கமென்ன?...என்ன செய்துகொண்டிருக்கிறாய்,மடையா" என நமக்குள்ள இருந்த மதுரக்காரன் முழிக்க....அட அதானே....என சுதாரித்து வெளியே வந்து புத்தகங்களை காரில் கடாசிவிட்டு(கவனிக்கவும்!), இன்னொரு அய்ந்து ரூபாய் செலவில் மீண்டும் களம் புகுந்தேன்.

"ஆப்பரேஷன் பராக்குபார்த்தல்"...இப்பொழுது துவங்குகிறது....ஹி..ஹி..

கடைகளின் அளவும்...நடைபாதையும் அகலமாயயிருந்தாலும் ஏதோ குறைவாய் தெரிந்தது....என்னவென்று சொல்ல தெரியவில்லை. அடுத்த வருடம் சரிசெய்து விடுவார்கள் என நம்புவோம்....(ஆமா...என்னன்னு சொன்னாத்தான சரி பண்ணுவாய்ங்க!).

நிறைய பள்ளி மாணவர்களை கூட்டி வந்திருந்தனர்....அவர்கள் ஒழுங்காய் வரிசையில் போனது....கிண்டர் கார்டன் மாணவர்களை கழிவறைக்கு வரிசையாக கூட்டிச்செல்லும் காட்சியையொத்திருந்தது. சில ஆசிரியைகளை சுடிதாரில் பார்த்தது மகிழ்ச்சியாயும் ஆச்சர்யமாயும் இருந்தது.

ஆநேகமான எல்லா கடைகளுமே புத்தக கிடங்குகளைப் போலத்தான் காணப்பட்டது....புத்தகங்களை காட்சிப்படுத்துவதில் நேர்த்தியும் தேர்ச்சியும் அவசியம்....யாராவது சொல்லிக்கொடுத்தால் புண்ணியமாய் போகும்.

சோதிட புத்தகங்கள், சித்தர்களைப் பற்றிய புத்தகங்களை அடுத்தவருடம் தடை செய்தால் புண்ணியமாக போகும்....அநியாயத்துக்கு இவை சம்பந்தமான புத்தகங்கள்.

குழந்தைகள் புத்தக பதிப்பாளர்களுக்கென தனியே ஒரு வரிசை ஒதுக்கி அவர்களை Higilight செய்திருக்கலாம்....அடுத்தவருடமாவது செய்வார்களென நினைக்கிறேன்.

திராவிடன் பதிப்பகத்துல நெறய வாங்கினேன்....அத்தனையும் போன வருசம் வாங்கினதுதான்...படிச்சிட்டு தர்றேன்னு சொல்லீட்டு வாங்கீட்டு போன புண்ணியாத்மா மறந்துட்டார்....தங்கச்சி வீட்டுக்காரராய்டதால சட்டைய கோர்த்து புத்தகத்த கொடுய்யான்னு கேக்கமுடியாம அம்புட்டயும் திரும்ப வாங்கியாச்சு...(பாசக்கார பய...ம்ம்ம்ம்)

நம்ம பொன்ஸின் பதிவினை அச்செடுத்துசென்றிருந்தேன். அம்மனி எழுதியிருந்த ஒவ்வொன்றையும், மளிகை கடை லிஸ்ட்டை கையில் வைத்துக்கொண்டு பொருளைத்தேடும் அப்பாவிகளை போல சரிபார்த்துக்கொண்டே சென்றேன்.அம்மனி அநியாயத்துக்கு துல்லியமாய் கவனித்திருக்கிறார்.

அன்றைக்கு நான் வருவது தெரியாததால் தாய்க்குலங்களின் கூட்டம் மிகக்குறைவாகவே இருந்தது.(Mission Failiure என்பதை இதை விட கௌரவமாய் சொல்ல முடியாது...அவ்...அவ்..அவ்)

கடந்த வருடத்தை விட இந்த வருடம் புத்தகம் வாங்க என்னால் 40% அதிகம் செலவழிக்கப்பட்டது.வாங்கியதையெல்லாம் எப்ப படிக்கப்போறேன்னு தெரியல, போன வருசம் வாங்குனதுலயே இன்னும் அட்டய கூட பிரிக்காம நெறய இருக்கு.இந்த பதிவினை வலையேற்றுவதற்கு முன் நடந்தது...

இன்று காலையில் அலுவலகம் வந்த போது வயதான அம்மணியொருவர் என்னை பார்த்தேயாகவேண்டுமென உட்கார்ந்திருப்பதாக சொன்னார்கள். திங்கட்கிழமை காலைகளில் எவரையும் சந்திப்பதில்லை....ஒரு நிமிடம் கொடுத்தால் போதுமென கெஞ்சுவதாக சொன்னார்கள்.சரி ஏதோ நன்கொடை விவகாரமென வரச்சொன்னேன்.

60 களை தாண்டிய முகம். அத்தனை வசதியற்ற ஒரு ஆதரவற்ற குழந்தைகள் மய்யத்தில் ஏதோவொரு பொறுப்பிலிருப்பவர்....என் கைகளை பிடித்துக்கொண்டு கண்கள் பணிக்க 'நீ நல்லாயிருக்கனுமய்யா'...என நெகிழ்ந்தார்.

நடந்தது இதுதான்...எங்க அம்மணி சுமார் 3000 மதிப்புள்ள புதிய புத்தகங்களை அவர்களுக்கு கொடுத்திருக்கிறார்.செய்வதையெல்லாம் செய்துவிட்டு எல்லா புகழும் அவருக்கேயென அம்மணி என்னை கை காட்டியதால் அதற்கு நன்றி சொல்லவே அவர் வந்திருந்தார். அப்போது இது பற்றிய விவரமெனக்கு தெரியாததால் என்னால் சரியாக React செய்யமுடியவில்லை.

பயன்படுத்திய பழைய, கிழிந்த புத்தகங்களை மட்டுமே பார்த்திருந்த அந்த குழந்தைகளுக்கு புதிய புத்தகங்கள் கொடுத்த கிளர்ச்சியையும் சந்தோஷத்தையும் அந்த அம்மையார் சொன்னகணத்தில் என்னால் ரசிக்க முடியவில்லை....இப்போது நினைத்தால் பாரமாயிருக்கிறது.

எத்தனையோ பணம் எதற்கெல்லாமோ வெட்டியாய் செலவு செய்கிறோமே அதை இப்படியும் பயன்படுத்தலாமென்பது உறைத்ததால்...இனி இப்படி புத்தகங்களை அடிக்கடி கொடுக்க வேண்டும்....செய்வதாக உத்தேசித்திருக்கிறேன்.இதை பீற்றிக் கொள்வதற்காகவோ...பெருமைபட்டுக் கொள்வதற்காகவோ எழுதவில்லை....பாரத்தை இறக்கிவைத்த உணர்வு.

அவர் போனபின் அம்மணியிடம்...என்ன இதெல்லாம்?...ஏன் முன்னாடியே இதப்பத்தி சொல்லல என கேட்டால்(ஹி..ஹி...கோவிக்கமுடியுமா என்ன)......அவர், அடப்பாவி எல்லாம் கேட்டுத்தானே செஞ்சேன்...எல்லாத்துக்கும்...செய் செய்னு சொல்லீட்டு....இப்ப என்ன ஆச்சு உங்களுக்கென கவலையாய் கேட்க....அப்போதுதான் நம்ம 'Selective Hearing' கான்செப்டால் வந்த வினையென நினத்துக்கொண்டேன்....ஹி..ஹி..நமக்கும்,நம்ம சுதந்திரத்துக்கும் பாதிப்பில்லாத விசயமென தெரிந்தால் அதன் பிறகு என்ன சொன்னனலும் காதில் வாங்கிய கணத்தில்...OK GOAHED....சொல்லிவிடும் அதிசயபிறவி நான்...ஹி..ஹி...

எது எப்படியோ போகட்டும்...இனி வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இதுபோன்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தகங்களின் வாயிலாக உதவ வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய புத்தககண்காட்சியினை நன்றியோடு நினைத்துக்கொள்கிறேன்.

4 Comments:

tamilnathy said...

காசைக் கொடுக்க முடிகிறது. காசு கொடுத்து வாங்கிய புத்தகங்களை அவற்றை வாசித்து முடிந்தபின்னாலும் கொடுக்க மனம் வருவதில்லை. யோசித்துப் பார்த்தால் அதுவும் ஒருவகையான 'உடமை'ப் பைத்தியந்தான். அதில் இனி அத்தனை கடும்போக்குக் காட்டக்கூடாது என்ற எண்ணம் உங்கள் பதிவைப் படித்தபோது வந்தது.

முத்துலெட்சுமி said...

கடைசி
இரண்டுபத்திகளும் ரொம்பவே அருமை.

மங்கை said...

அட அட அடா....புள்ள ரொம்பதான் சந்தோஷமா இருக்கு... பார்த்து பங்காளி...பல்லு வலிக்கப் போகுது..
சிறிச்சு சிறிச்சு

//செய்வதையெல்லாம் செய்துவிட்டு எல்லா புகழும் அவருக்கேயென அம்மணி என்னை கை காட்டியதால் அதற்கு நன்றி சொல்லவே அவர் வந்திருந்தார்//

இந்த பரஸ்பர அன்பும் புரிதலும் என்றும் நிலைத்து இருக்க... மனதார வாழ்த்துகிறேன்..(வயசு இருக்கோ இல்லையோ)

கோபிநாத் said...

அன்பு பங்காளி..
அருமை...

\\மனம் கவுண்டமணியாய் குதிக்க...ஹி...ஹி...இதெல்லாஞ் சொல்லி புரியவைக்க முடியாது....அனுபவிக்கனுமப்போய்....ஹி..ஹி.\\

இதுதான் தனியா போனிரா...

\\குழந்தைகள் புத்தக பதிப்பாளர்களுக்கென தனியே ஒரு வரிசை ஒதுக்கி அவர்களை Higilight செய்திருக்கலாம்....அடுத்தவருடமாவது செய்வார்களென நினைக்கிறேன்.\\

இது நல்ல கருத்து...

\\'நீ நல்லாயிருக்கனுமய்யா'...என நெகிழ்ந்தார்.

நடந்தது இதுதான்...எங்க அம்மணி சுமார் 3000 மதிப்புள்ள புதிய புத்தகங்களை அவர்களுக்கு கொடுத்திருக்கிறார்.செய்வதையெல்லாம் செய்துவிட்டு எல்லா புகழும் அவருக்கேயென அம்மணி என்னை கை காட்டியதால் அதற்கு நன்றி சொல்லவே அவர் வந்திருந்தார்.\\

அய்யா.... ராசா......நீங்களும் உங்க அம்மணியும் நல்லாயிருக்கனும்ய்யா..வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்..