அன்புடையீர்...
சமீபத்தில் தமிழ்மணம் பின்னூட்ட உயரெல்லையை 30 ஆக நிர்ணயித்திருப்பது பற்றிய அறிவிப்பினை வரவேற்கிறேன். நன்கு ஆராய்ந்து எடுத்த முடிவாகவே தோன்றுகிறது.
இதே வகையில் பின்னூட்ட மட்டுறுத்தலை செயல்படுத்தாத பதிவர்களின் பின்னூட்டங்களும் முகப்பில் திரட்டப்படுவது அவசியமென்று நினைக்கிறேன். தற்சமயம் அநேகமாய் எல்லா பதிவர்களும் விரும்பியே மட்டுறுத்தலை செய்துகொண்ட பின்னர்....மட்டுறுத்தலில் உடன்பாடில்லாத என்போன்ற வெகுசில பதிவர்களே பின்னூட்ட மட்டுறுத்தலை செயல்படுத்தாதிருக்கின்றனர்.
தங்களுக்கு பாதிப்பு வருமென நினைத்த பதிவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்ட பின்னர் மற்றவர்களை ஒதுக்கிவைப்பதில் நியாயமில்லை என்றே படுகிறது. இது எனது கோரிக்கை....சாதக பாதகங்களை பரிசீலிப்பீர்கள்....நல்ல முடிவெடுப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் முடிக்கிறேன்.....
Thursday, March 01, 2007
தமிழ்மணம் நிர்வாகத்திற்கு....
பதிஞ்சது பங்காளி... at 9:12 AM
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
சீனியர் உங்கள் கோரிக்கை நியாயமானதே!!!
நானும் இதை வழி மொழிகிறேன்.
Template Super. . .... ..
உங்கள் கோரிக்கை
நிறைவேறிவிட்டது தானே
இப்போது?
தம்பி வினையூக்கி...வெங்கட்ராமன் அவர்களே....
ஆதரவுக்கு நன்றி....
என் கோரிக்கை எங்கே நிறைவேறியது தாயே...கொஞ்சம் விளக்கினால் புண்ணியமாப் போகும்...
முன்பக்கத்திலே 40 என உச்சமாகவும் “கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள்” பகுதியிலே மேலெல்லையில்லாது இற்றைப்படுத்தப்பட்ட அனைத்து இடுகைகளும் சுட்டிக் காட்டப்படும். மேலும் பின்னூட்டங்களினை மட்டுறுத்தல் செய்யவேண்டுமென்ற விதியும் நீக்கப்பட்டுள்ளது. பதிவர்கள் தமக்கு விரும்பிய மட்டுறுத்தல் விதியைத் தமது பதிவுகளிலே மேற்கொள்ளலாம்.
பின்னூட்டம் குறித்த தம் கருத்துகளைத் தந்து மேம்படுத்த உதவிய அனைத்துப்பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் தமிழ்மணத்தின் சார்பிலே நன்றி. இது குறித்த விரிவான பதிவு நாளை இடப்படும்.
நிர்வாகம்
தமிழ்மணம்
இப்படி பின்னூட்டம் வந்திருக்கிறதே.அதைத்தான் சொன்னேன்.
உங்கள் கோரிக்கை நிறைவேறியதாகத்தானே அர்த்தம்.இல்லை
எனக்கு த் தான் புரியவில்லையா?
தாயே...
நீங்க சொன்ன அருள்வாக்கோட(!) அர்த்தம் எனக்கு அப்போ புரியலையே....
ரொம்ப சந்தோஷமா இருக்கு முத்துலட்சுமி...ஏன்னா மட்டுறுத்தல் கொண்டுவந்த நாள்ல இருந்து இதை எதிர்த்து தீவிரமா குரல் கொடுத்தவங்கள்ல நானும் ஒருத்தன்.
Post a Comment