இராமாயணத்தைப் பற்றியும், மற்றும் பார்ப்பனர்களின் வேத சாஸ்திர புராணங்களைப் பற்றியும் சரித்திர ஆராய்ச்சியளார்களும், பேரறிஞர்களும் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்துக் கீழே தந்திருக்கிறோம்.
தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதவர்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் இராமாயணக் கதையில் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது
(ரொமேஷ் சந்திர தத்தர் சி.அய்.ஈ., அய்.சி. எஸ்.எழுதிய புராதன இந்தியா- 52 ஆவது பக்கம்)
திராவிடர்கள் தங்கள் மீது படையெடுதது வந்த ஆரியர்களோடு கடும் போர் புரிய வேண்டியிருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன.
(டாக்டர் ரொமேஷ் சந்திர மஜூம்தார் எம்.ஏ. வின் பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும் 22 ஆவது பக்கம்).
இராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவதாகும்.
(பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய, திராவிடரும் ஆரியரும் 24 ஆவது பக்கம்).
இராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை - ஆரியர்களல்லாதவாகளையே குறிப்பதாகும்.
(ரொமேஷ் சந்திர தத்தர் எழுதிய, பண்டைய இந்தியாவின் நாகரிகம் 139-141 ஆவது பக்கம்).
தென் இந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
(சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் - இராமாயணம் என்னும் தலைப்பில் 587-589 ஆவது பக்கம்).
ஆரியன் என்கிற பதம் இந்தியாவின் புராதனக் குடி மக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட பதம்.
தஸ்யூக்கள் என்பது இந்தியப் புராதனக் குடிமக்களுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெயராகும்.
(1922 - ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் பழைய இந்தியாவின் சரித்திரம் என்னும் புத்தகத்தில்).
ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும், தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைக்குக் காரணமாகும்.
(டாக்டர் ராதாகுமுத முக்கர்ஜி எம். ஏ., பிஎச்.டி., எழுதிய இந்து நாகரிகம் என்னும் புத்தகத்தில் 69 ஆவது பக்கம்).
இராமாயணக் கதையின் உட்பொருள் என்னவென்றால் ஆரிய நாகரிகத்திற்கும், ஆரியரல்லாத நாகரிகத்திற்கும் (அவற்றின் தலைவர்களான இராமன், இராவணன் ஆகியவர்களால் ) நடத்தப்பட்ட போராட்டமாகும்.
(டாக்டர் ராதாகுமுத முக்கர்ஜி எம். ஏ., பிஎச்.டி., எழுதிய இந்து நாகரிகம் என்னும் புத்தகத்தின் 141 ஆவது பக்கம்).
தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென்கிழக்கிலும் இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசப்படும் பாஷை
(சர் ஜேம்ஸ்மர்ரே எழுதிய இங்கிலீஷ் அகராதியின் பக்கம் 67 இல் இருக்கிறது.)
(பண்டர்காரின் கட்டுரைகள் வால்யூம்-3, பக்கம் 10)
தமிழர்கள், ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள். ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்.
(டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார், எம்.ஏ., பிஎச்.டி., அவர்கள் எழுதிய தென்னிந்தியாவும் இந்தியக் கலையும் என்ற புத்தகத்தின் 3 ஆவது பக்கம்)
இராமாயணத்தில் தென்னிந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகம் அடைந்தவர்களாய் இருந்தார்கள்.
(பி.டி.சீனிவாசய்யங்கார் எழுதிய இந்திய சரித்திரம், முதல் பாகம் என்னும் புத்தகத்தின் 10 ஆவது பக்கம்).
திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவு படுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்..
(ஜோஷி சந்தர் டம் எழுதிய இந்தியா அன்றும் இன்றும் என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்).
ஆரியக் கடவுளாகிய இந்திரனையும் இதரக் கடவுள்களையும் பூசித்தவர்களும் அவர்களைப் பின் பற்றியவர்களும் தேவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப் பகை இருந்து கொண்டே இருந்தது.
(ஏ.சி.தாஸ். எம்.ஏ.,பி.எல்., எழுதிய ரிக் வேத காலத்து இந்தியா என்னும் புத்தகத்தில் 151 ஆவது பக்கம்.)
ஆரியர்களால் வெல்லப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை, தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் - தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து, ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.
(சி.எஸ். சீனிவாசாச்சாரி, எம்.ஏ., எம்.எஸ்., ராமசாமி அய்யங்கர், எம்.ஏ., ஆகிய சரித்திரப் போதகர்கள் எழுதிய, இந்திய சரித்திரம் - முதல் பாகம் என்னும் புத்தகத்தில் இந்து இந்தியா என்னும் தலைப்பில் 16, 17 ஆவது பக்கங்கள்).
ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து, வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களை விட முன்னேற்றமாக திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக் கொண்டார்கள்.
(எச்.ஜி. வெல்ஸ் எழுதிய உலகத்தின் சிறு சரித்திரம் என்னும் புத்தகத்தின் 105 ஆவது பக்கம்).
ஜாதிப் பிரிவுகள் நான்கில், அதாவது பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்.
(நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா வால்யூம். 2 (1925) பக்கம் 273)
இராமாயணம், மகாபாரதம் எனும் இரண்டு இதிகாசங்களும் ஆரியர் பரவிய பருவங்களை வெகு தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
மகாபாரதம் கங்கைநதி வெளியில் ஆரியர்கள் பரவியதையும், இராமாயணம் தென்னிந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகின்றன.
(முன்பு கல்வி அமைச்சராக இருந்த கனம் சி.ஜே. வர்க்கி எம்.ஏ., எழுதிய இந்திய சரித்திரப் பாகுபாடு என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்).
சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக்கிக் கொண்டு, அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தித் தங்கள் இஷ்டம் போல், எல்லாம் தங்களுக்கு அநுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்திக் கட்டுக் கதைகளை எழுதி வைத்துக் கொண்டார்கள். இந்த கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப் பட்டவைகளாகும்.
(பிரபல சரித்திர ஆசிரியரான ஹென்றி பெரிட்ஜ் என்பவர் 1865 இல் எழுதிய விரிவான இந்திய சரித்திர முதற் பாகம் என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்.)
விஷ்ணு என்கிற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது.
(இ.பி.ஹரவெல் 1918 இல் எழுதிய இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்என்னும் புத்தகத்தின் 32 ஆவது பக்கம்.)
(ஜி.எச். ராபின்சன், சி.அய்.ஈ. யால் எழுதப்பட்ட இந்தியா என்னும் புத்தகத்தின் 155 ஆவது பக்கம்).
வட இந்தியாவில் இருந்த திராவிடக் கலை, நாகரிகம் முதலியவை யாவும் ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால், தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்க வில்லை.
(தமிழ்ப் பேராசிரியர் கே.எம். சிவராஜ பிள்ளை, பி.ஏ., எழுதிய பண்டை தமிழர்களின் வரலாறு என்னும் புத்தகத்தின் 4 ஆம் பக்கம்.)
(நாகேந்திரகோஷ், பி.ஏ.,பி.எல். எழுதிய இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும் என்ற புத்தகத்தின் 194 ஆவது பக்கம்).
இராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது.
(ஹென்றி ஸ்மித் வில்லியம், எல்.எல்.டி., எழுதிய சரித்திரக்காரர்களின் உலக சரித்திரம் வால்யூம் 2 இல், பக்கம் 521).
(வின்சென்ட் ஏ. ஸ்மித் ஆக்ஸ்ஃபோர்டு எழுதிய இந்திய சரித்திரம்
14 ஆவது பக்கம்).
இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறதென்று நிச்சயமாகச் சொல்லலாம்.
(இம்பீரியல் இந்தியன் கெஜட் 1909 ஆம் வருடத்திய பதிப்பு வால்யூம் 1 இல் 405 ஆவது பக்கம்.)
நன்றி - 'விடுதலை'
12 Comments:
குறிப்புகள் தொடரும்....
ஆஹா...இது வேறயா
அபிஷ்டு அபிஷ்டு
சத்தமா சொல்லாதிங்கணா
http://koodal1.blogspot.com/2007/09/blog-post_12.html
பங்காளி, இந்த இடுகையில் சொல்லியிருக்கும் கருத்துகளுக்கு எதிராக எனது இடுகையைக் காட்டவில்லை. ஆனால் இங்கே இருக்கும் கருத்துகளுக்குத் தொடர்புடையது என்ற வகையில் காட்டுகிறேன். இதற்கு முன் அந்த இடுகையை படிக்கவில்லை என்றால் இப்போது படித்துப் பாருங்கள். :-)
நீங்கள் கண்ணனைப் பற்றி எழுதிய இடுகையில் நீண்ட பின்னூட்டம் ஒன்று இட்டிருக்கிறேன். நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை.
kalakunga, nalla pathivu!:P varen appurama!
ஆர்வத்தைத் தூண்டும் குறிப்புகள் - நன்றி.
ஆக,
1. இராமாயணம் உண்மையிலேயே நடந்த வரலாற்றுச் சம்பவங்களின் தொகுப்பு
2. ஆரியர்கள் திராவிடர்களைப் பற்றிக் குரங்குகள், அசுரர்கள், ராட்சதர்கள் என்று பல்வேறு விதமாக எழுதிவைத்திருக்கிறார்கள்
3. குரங்குகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள திராவிடர்களைக் கொண்டு சிங்களத் தீவிற்குப் பாலமமைத்து ஆரியர்கள் சென்று சண்டையிட்டு சிங்களத் தீவை ஆண்ட அசுரன் என்று குறிப்பிடப்பட்டுள்ள திராவிடனை வென்றிருக்கிறார்கள்.
என்று எடுத்துக் கொள்ளலாமா?
ஒரு தாஜ் மஹால் போல், அல்லது எகிப்திய பிரமிடுகள் போல, பல்லாயிரக்கணக்கான போரில் தோற்கடிக்கப்பட்ட அல்லது சரணடைந்த திராவிட அடிமைகளைக் கொண்டு கட்டப்பட்டதுதான் இராமர் பாலம் என்றும் புரிந்து கொள்ளலாமா?
ராமர் பாலத்தை உடைக்கக்கூடாது என்ற ஆரியர்களின் கூச்சலில் அர்த்தம் இருக்கிறது என்றும் சொல்லலாமா? அல்லது பழைய அவமானத்தைத் துடைப்பதற்காக இன்றைய திராவிடர்கள் அதை உடைத்தே தீருவது என்பதற்காக 'இராமாயணமே இல்லை. இராமரும் எந்தப் பாலத்தையும் கட்டவில்லை' என்று சொல்லி முனைந்திருக்கிறார்களா?
எல்லாம் அந்த ராமருக்கும் பாலத்தைக் கட்டிய திராவிடருக்குமே வெளிச்சம்!
அது சரி - இராமாயணத்தைப் பற்றியும், ஆரிய, திராவிடர்களைப் பற்றியும் - குரங்கு என்பது முதற்கொண்டு - இவ்வளவு விவரமான குறிப்புகளைப் பிடித்திருக்கிறீர்களே - அந்தப் பாலத்தைப் பற்றி குறிப்பு எதுவும் கிடைக்கவில்லையா?
குறிப்புகளுக்கு மிகவும் நன்றி.
இதையும் படிச்சுடுங்க பங்காளி.
http://aanipidunganum.blogspot.com/2007/09/saturday.html
வருகைதந்து பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்க்ளுக்கு நன்றி...
இந்த பதிவின் நோக்கம் ராமர் என்கிற பிம்பத்தை அழிக்கவோ அல்லது அவமதிக்கவோ இல்லை....
நம்பிக்கை என்கிற பெயரால் அரசின் திட்டம் ஒன்றினை சீர்குலைக்க முயலும் சக்திகளையும்,இதை வைத்து சுயநல அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கும் மலிவான ஹிந்துத்வா அமைப்புகளை அடையாளம் காட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த பதிவினை கருதுகிறேன்.....
I agree pankgali,
Nambikkai irukaravangala madhikanum, adhuvum oru arasiyal thalaivar ippadi pesina porupu ellaiyohnu thaan ninaikavekudhu
Ellathukum oru political stunt konduvandhutaanga , varuthapaduvadhu thavira veru ellai
//நம்பிக்கை என்கிற பெயரால் அரசின் திட்டம் ஒன்றினை சீர்குலைக்க முயலும் சக்திகளையும்,இதை வைத்து சுயநல அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கும் மலிவான ஹிந்துத்வா அமைப்புகளை அடையாளம் காட்டும் முயற்சியின்//
அப்படியே இந்த லிஸ்ட்டில் 'அரசின் திட்டத்திற்கு ஆதரவு' என்ற பெயரில் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்வது தவிர வேறு எந்த எழவுக் கொள்கையும் இல்லாது அரசியல் விளையாட்டுகள் விளையாடிக் கொண்டிருக்கும் ஓட்டுப் பொறுக்கிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சுந்தர்...
உங்களின் ஆதங்கத்தினை பகிர்ந்து கொள்கிறேன்...
என்னுடைய கவலையும் பதட்டமும் தமிழ்கத்தின் 6 கடற்கரையோர மாவட்டங்களுக்கு கிடைக்க இருக்கும் பொருளாதார ரீதியான வாய்ப்புகள் பறிபோய்விடக் கூடாது என்பதுதான்....
Post a Comment