Sunday, September 23, 2007

சில்க் ஸ்மிதா என்கிற விஜயலட்சுமி

(December 2, 1960 – September 23, 1996)
இன்று பதினோறாவது நினைவு நாள்.....
ஆந்திராவில் ஒர் ஏழைக்குடும்பத்தில் பிறந்து வீட்டுவேலை செய்து கொண்டிருந்த விஜயலட்சுமி, வண்டிசக்கரம் மூலமாய் தமிழ் திரையுலகில் கால்வைத்து தென்னிந்திய திரையுலகை தன் அழகிற்கு அடிமையாக்கிய அந்த தேவதையின் இடத்தினை நிரப்ப இன்றுவரை ஆளில்லை....
தன் உடலை மட்டுமே பார்த்த சமூகம் தன் உள்ளத்தை பார்க்கவில்லையென்கிற ஆதங்கத்தில் வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிட்ட அபலைப்பெண்....


இந்த தினத்தில் அவரை நினைவுகளை போற்றும் ஓர் சாமானிய ரசிகன்...



14 Comments:

யாழ் Yazh said...

asianetla romba kanneer vadichittangappa
pothumba

உண்மைத்தமிழன் said...

ஐயையோ பங்காளி.. இம்புட்டு நல்லவரா நீங்க..?

ஆடுமாடு said...

சென்னையில ஒரு பத்திரிகையில கூட இதை பத்தி சொல்லலையே. எத்தனை குத்தாட்ட நடிகைகள் வந்தாலும் சில்க் இடத்தை யாரும் நிரப்ப முடியாது.

சாலிசம்பர் said...

மாபெரும் கலைஞர் அவர்.அவரது உடல்மொழி அபாரமானது.

கோவி.கண்ணன் said...

சில்க்ஸ் ஸ்மிதா கவர்ச்சி நடிகை மட்டுமல்ல, நல்ல நடிகையும் கூட. அலைகள் ஓய்வதில்லை மற்றும் பல படங்களில் குணச்சித்திர வேடமும், போலிஸ் போலிஸ் மற்றும் பல படங்களில் நாயகியாகவும் நடித்திருக்கிறார். கடைசியாக சத்தியராஜின் 'வில்லாதின் வில்லனில்' நடித்தார் என்று நினைக்கிறேன்.

நினைவு கூர்ந்து எழுதியதற்கு பாராட்டுக்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அவர் திறமை 'அலைகள் ஓய்வதில்லை'யில் புலப்பட்டது. ஆனால் திரையுலகம் சரியாகப் பயன்படுத்தவில்லை.

Vasanthan said...

முன்பொருமுறை ரஜனிராம்கி ரஜனி பற்றி எழுதிய புத்தகத்தை அறிமுகம் செய்தபோது சில்க் ஸ்மிதா பற்றியும் கதை வந்தது. அதைத்தொடர்ந்து 'உருப்படாதது நாராயணன்' ஒரு பதிவை எழுதியிருந்தார். அருமையான பதிவு.

பங்காளி... said...

பின்னூட்டிய நண்பர்களுக்கு நன்றி...

சில்க் ஸ்மீதா தற்கொலை செய்து கொண்ட அந்த மாலையில் அவரை ஸ்பென்சப்ளாசாவில் பார்த்தேன்...மிக இயல்பாய் எவ்வித குழப்பமில்லாது ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார்...

அடுத்த நாள் காலையில் அவரின் மரணச்செய்தி...மிகவும் வருந்திய தருணங்களில் அதுவும் ஒன்று....

உதட்டுச் சுழிப்பும்,போதையூட்டும் கண்கள் மட்டுமே அவரது அடையாளமாய் நின்றுபோனது பெரும் சோகம்...என் பார்வையில் Dress sense அதிகம் உள்ள நடிகை அவர்...எந்த உடையிலும் அவரின் நளினமும் அழகும் மிளிர்ந்து வரும்.

மங்கை said...

ம்ம்ம்..
பெண் கலைஞர்களின், முக்கியமாக நடிகைகளின் வாழ்க்கை பரிதாபத்துக்குறியது.. ஹ்ம்ம் இதையெல்லாம் சொன்னால் நடிக்க வந்தால் இது எல்லாம் இருக்கத்தான் செய்யும் என்ற பொறுப்பில்லாத திமிர் பிடித்த பேச்சு தான் மிஞ்சும்... இவர்களுக்கும் சாதாரன ம்னிதர்கள் போல வாழும் உரிமை உண்டு என்பதை என்று தான் நம் மக்கள் புரிந்து கொள்ளப் போகிறார்களோ..

நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை விமர்சனம் செய்யும் / தெரிந்து கொள்ள ஆசப்படும் அநாகரீக எண்ணங்கள் இருக்கும் வரை இது போல பல விஜயலட்சுமிகளைப் பார்க்கலாம்..ஹ்ம்ம்ம்... நினைத்துப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது

காட்டாறு said...

ஆமா.... நானும் அவங்களை ஸ்பென்ஸர்ல பார்த்தேன் முந்திய நாள். சிம்பிளா...ம்ம்ம்...

காட்டாறு said...

//மங்கை said...
ம்ம்ம்..
பெண் கலைஞர்களின், முக்கியமாக நடிகைகளின் வாழ்க்கை பரிதாபத்துக்குறியது
//
அப்படி இல்லைங்க மங்கை... எனக்கு ஒரு துணை நடிகர் நண்பர் இருந்தார்... அவங்க சொல்லுறதை கேட்டால்... ஒரு ஸ்டேஜுக்கு வருவதற்குள் அவங்க படும் பாடு... பெண்ணாய் இருப்பதால் மட்டும் கஷ்டம் என்பதை ஒத்துக்க முடியல. நம்ம சமுதாயம் ஒரு வட்டத்தைப் போட்டு.. அதுக்குள்ள நிக்க வைக்க முயற்சிப்பதால் தான் நெறையா பிரச்சனையே... சரி சரி... நான் வளவளக்கல..

அபி அப்பா said...

பங்காளி! நீங்க, காட்டாறு எல்லாம் பார்த்தது ஸ்பென்சரில் அன்று மாலை ஆனால் அதன் முதல் நாள் என் கூட பக்கத்து இருக்கையில் என் கூட அபுதாபியில் இருந்து பயணம் செய்தது அந்த பெண். (இப்போ கூட என் நண்பர்கள் இதையே காரணமாக சொல்லுவார்கள் அவங்க தற்கொலைக்கு) நான் அந்த 5 மணி நேர அருகாமையில் அந்த பெண் எந்த வ்வித மன குழப்பத்திலும் இருந்ததாக தெரியவில்லை! ஆன்மா சாந்தியடையட்டும்!!!

G.Ragavan said...

பொதுவாழ்க்கைக்கு ஒரு பெண் வந்தால் என்னவெல்லாம் பட வேண்டியிருக்கிறது. தன்னைப் புனிதமாக்கிக் கொண்டு அவள் எதுவும் செய்வாள் என்று அசிங்கம் பேசி மகிழும்.

ஒரு நல்ல நடிகை அவர். நல்ல உடல்வாகு. நல்ல உடைத்தேர்மை உடையவர் அவர். அவரைக் கடைசி வரைக்கும் கவர்ச்சியாகவே பார்த்து விட்டது திரையுலகம். எந்தப் பாத்திரமும் ஒழுங்காகச் செய்யக் கூடியவர். நகைச்சுவைப் பாத்திரம் கூட. ஒரு பாக்கியராஜ் படத்தில் பாவா பாவா என்று வருவாரே. ஆனால் அதிலும் கவர்ச்சியைக் கூட்டியிருப்பார்கள்.

சில்க் சுமிதா ஒரு நல்ல நடிகை என்று சொல்லிக் கொள்ளவே விரும்புகிறேன்.

G.Ragavan said...

சில்க் ஸ்மிதாவின் ஒரு பாட்டை இந்தப் பதிவில் நினைவு கூர்ந்திருக்கிறோம்.

http://isaiarasi.blogspot.com/2007/09/18.html