Thursday, September 13, 2007

நியூமராலஜி நிஜமா........!!!

நேற்று காலையில் வண்டியில் போய் கொண்டிருக்கும் போது ரேடியோ மிர்ச்சியில் கேட்ட ஒரு செய்திதான் இந்த பதிவெழுதுவதற்கான காரணம். அதாவது ஒவ்வொரு வாரமும் சென்னையில் குறைந்தது 500 பேர் வரையில் தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்களாம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பெருவாரியான காரணம் நியூமராலஜியாம்....

இப்போது நியூமராலஜியுடன்...நேமியாலஜி என்கிறா ஜியும் சேர்ந்துள்ளதால் இத்தனை கூத்தும் நடக்கிறது.வேறு மாதிரியில் சொன்னால் ஒவ்வொரு வாரமும் சென்னையில் குறைந்தது 500 பேர் தங்களின் பெயரை மாற்றிக் கொள்வதால் வாழ்க்கையில் சுபிட்சம் அடைகிறார்கள் என கொள்ளலாம்.

என்ன அபத்தம் இது...... இதை மூடநம்பிக்கை என சொல்வதை விட பேராசை மற்றும் அறியாமையின் உச்சம் என்றே சொல்லலாம்.

வாஸ்து சாஸ்திரம், ஃபெய்ங் ஷீய் மாதிரி நியுமராலஜியும் நிரூபிக்கப் படாத/நிரூபிக்க முடியாத புதிரான அறிவியல் என்பதுதான் என்னுடைய தெளிவு. எனக்கும் நியூமராலஜியில் ஓரளவு பரிச்சயம் உண்டு, அதில் வியக்கவைக்கும் சில ஆச்சர்யங்களும் உண்மைகளும் இருக்கிறது.மற்றபடி பெயரை மாற்றுவதால் மட்டுமே ஒருவனுக்கு சுபிட்சம் வரவழைக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது சாத்தியமும் இல்லை

நியுமராலஜியின் பூர்வீகம் பற்றி நான் படித்த சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறேன்.....

எகிப்தில் வாழ்ந்த(வாழும்) 'Rosicrusians' இன மக்கள் வைத்திருந்ததாக சொல்லப்படும் 'Rose Cross' என்கிற அமைப்பு(நம்ம தமிழ்சங்கம் மாதிரி..) எழுத்துக்களுக்கான சப்த எண் குறித்து ஆராய்ந்தார்களாம்.

இவர்களிடமிருந்து இந்த கலை Hebrews கற்றுக் கொண்டதாக தெரிகிறது.இவர்கள் உறுவாக்கியதே Hebrew Kabala என்கிற முறை...

இவர்களை தொடர்ந்து கிரேக்கர்களும் இந்த கலையை கைகொண்டதாக தெரிகிறது.

நியூமராலஜி குறித்து புத்தகங்களாக நமக்கு கிடைத்திருப்பவை

12ம் நூற்றாண்டில் "மோஸஸ் டி லியான்" என்பவர் எழுதிய "The Book of Formation", "The Book of Splendour"

14ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "The Book of Thoth"

16ம் நூற்றாண்டில் John Hyden "Holy Guide"

18ம் நூற்றாண்டில் ஜெயின் ஜெர்மைன் எழுதிய Practical Astrology

நியுமராலஜி என்கிற பெயர் Cheiro என்பாரால்தான் முதன் முதலில் பாவிக்கப்பட்டது. இது நடந்தது பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில்

நியூமராலஜியின் நீட்சியே Tarot எனப்படும் சித்திரங்களை வைத்து பலன் சொல்லும் சோதிடமுறை

சீனர்கள் தங்களுக்கேயுரித்தான தனித் தன்மையுடன் ஒரு வகையான எண் கணிதத்தினை கையாண்டது தெரியவருகிறது. ஆனால் இது அரச குடும்பத்தினர் மட்டுமே பழக்கத்தில் வைத்திருந்தனர். மிக ரகசியமாக காக்கப் பட்டது.

இனி நம்மூருக்கு வருவோம்....

சம்ஸ்கிருதத்தில் "அஷரலஷா" என்கிற நூலில் எழுத்துக்களுக்கான ஒலி அளவும் அதன் பலன்களும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நமது மந்திர சாஸ்திரங்களில் எண்களை வைத்து யந்திரம் எழுதும் முறை இன்றளவும் உள்ளது.

அகத்தியரும்,வராகமிகிரரும் இது பற்றிய குறிப்புகளை தங்களது படைப்புகளில் குறிப்பிட்ட்டுள்ளனர்.

நம்ம திருவள்ளுவர் கூட "எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்"...என ஒரு குறளில் இது குறித்து கூறியிருக்கிறார். 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்பது இன்னொரு பிரபலமான சொற்றொடர்.


நியூமராலஜியின் மகத்துவம் பற்றி மொழி ஆளுமை கொண்ட யாரும் பக்கம் பக்கமாய் எழுதிக் குவிக்க முடியும்...ஆனால் என் வரையில் நியுமராலஜி என்பது 'எழுத்துக்களில் ஒலி அது உருவாக்கும் அதிர்வு அதன் அளவுகோல்...அதை பொருத்தமாக அமைப்பதனால் உருவாகும் ஒத்திசைவு(Harmony)....அதன் பலாபலன்களே நியுமராலஜி

ஒவ்வொரு எழுத்தின் அதிர்வுகளை வைத்து அதனை ஒன்பது கிரகங்களுக்கு இனையாக்கி அதன் தாக்கம் அந்த எழுத்துக்களின் மீது பிற்காலத்தில் திணிக்கப்பட்டிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.ஒவ்வொரு எண்ணின் ஒலி அதிர்வும் மற்ற ஒலி அதிர்வுடன் ஒத்திசைவும்,ஒவ்வாமையும் கொண்டிருக்கின்றன. இதையே சோதிடர்கள் 3 க்கு 6 பகை என சொல்ல கேட்டிருப்பீர்கள்.தமிழ் இலக்கணத்தில் வரும் மாத்திரை, நேரசை,நிரையசை போன்றவையும் இத்தகைய சூத்திரக் கணக்குகளே.....

நமது உடலானது பல நாடிகளால் ஆனதாக சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.நாடிகளை வசப்படுத்தினால் எதுவும் சாத்தியமாகுமாம்.சப்த சலனமாய் உச்சரிக்கும் மந்திர ஒலிகள் இந்த நாடிகளைத் தூண்டி உச்சரிப்பவர் மற்றும் கேட்பவரிடம் சலனத்தை உண்டாக்கும் என்கிறார்கள்.மந்திரங்களை உச்சரிக்கும்போது அந்தந்த பீஜங்களுக்கான உடல் உறுப்பின்மீது சித்தத்தை நிறுத்தி தொடர்ந்து கூற அந்த மந்திரங்களுக்கான பலனை பெறலாமாம்.

மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதை 'உருவேற்றுதல்' என்பர்.மந்திர சொற்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் உருவேற்றினால் உள்ளம் உறுதி பெற்று தான் சொல்வதும் செய்வதும் சாத்தியமாகும் என்கிற நம்பிக்கை தோன்றுகிறது.

இந்த தத்துவத்தின் அடிப்படையில்தான் நமது எண் கனித வல்லுனர்கள் செயல்படுகின்றனர் என்பது என்னுடைய கணிப்பு......

பெயரை மாற்றுவதால் பலன் இருக்கிறதோ இல்லையோ என் அனுபவத்தில் சில பெயர்கள் அத்தனை சரியில்லை என்பதே என்னுடைய அனுபவம். ஆண்களை பொருத்த வரையில் ரமேஷ், சுரேஷ் என்கிற பெயர் இருப்பவர்களின் வாழ்க்கை ஏமாற்றங்களும், போராட்டங்களும் மிகுந்ததாக இருப்பதை பார்த்திருக்கிறேன். அதே வகையில் பெண்களில் கீதா, சுதா போன்ற பெயர்கள். இது என்னுடைய அனுபவம் மட்டுமே இது பிழையாக கூட இருக்க வாய்ப்புள்ளது.

பதிவு நீளமாகிக் கொண்டிருக்கிறது....உண்மை தமிழன் பார்த்தால் டென்சனாகிவிடுவார் எனவே...

ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன், இங்கே பேசப்படும் அல்லது புழக்கத்தில் இருக்கும் நியுமராலஜி வெறும் ஆரம்ப நிலை மட்டுமே...அவிழ்க்கப் பட வேண்டியவை நிறையவே இருக்கின்றன.சூட்சும எண்கள் அதன் தாக்கம், எண் இயந்திரம் என பேச எழுத நிறையவே இருக்கின்றன.ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கூட இயந்திரம் எழுத முடியும் அதற்கான முறைகள் சூத்திரங்கள் எல்லாம் இருக்கின்றன......அதையெல்லாம் எழுதப்போனால் ஒரு மெகா தொடராக போய்விடக் கூடிய ஆபத்து(!) இருப்பதால் இந்த அளவில் இந்த பதிவினை முடிக்கிறேன்....

பதிவின் ஸ்வாரஸ்யம் கருதி...அடுத்த பதிவில் சில வலை பதிவர்களின்...வலைப் பெயர்களை பிரித்து மேயலாமென நினைக்கிறேன்....விருப்பம் உள்ளவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடாலாம்.....ஹி...ஹி....



--------------------------------------------------------------------------------



விரைவில் பங்காளி வலையுலகில் இருந்து விடை பெற இருக்கிறான்...விவரங்கள் வரும் நாட்களில்.........

40 Comments:

இலவசக்கொத்தனார் said...

ஏன் பங்காளி என்ற பெயர் நியூமராலஜி படி சரியாக இல்லை என்பதால் வேறு பெயரில் வரப் போகிறீர்களா?

பங்காளி... said...

வாங்க டாக்டர்....

விவரங்கள் விரைவில்...ஹி..ஹி..

கொத்ஸ்...

நியூமராலஜி இல்லை வேற காரணம்...

மங்கை said...

விஜய் டீவீலேயோ எதிலேயோ ஒரு அம்மா வந்து கலக்கீட்டு இருக்காங்களே. அந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்ட ஒரு அம்மா,
''நான் கணவருக்கு தெரியாம வந்திருக்கேன், தொழில் நஷ்டம், ஆனா அவருக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை...தெரிஞ்சா திட்டுவார்'' னு வேற.

என்ன சொல்ல...அந்த அம்மாவ பார்க்க பரிதாபமாதான் இருந்துச்சு..

பங்காளி... said...

மங்கை..

நானே சிலருக்கு மாத்திக் கொடுத்திருக்கேன்...அவங்க நல்லாத்தான் இருக்காங்க...அது நியூமராலஜியாலதானான்னு சொல்ல முடியாது.

இதை ஒரு வகையான Reverse Engineering என்று கூட சொல்லலாம்.....

சரி உங்க பேர் எப்படீன்னு பாத்துரலாமா...ஹி..ஹி...

மங்கை said...

சொல்லுங்க சொல்லுங்க...

ஃபீஸ் கேக்க மாட்டீங்க இல்ல?...

அப்போ... யூ ஆர் கிவன் பெர்மிஷன்..:-)))

மங்கை said...

பங்காளி பேர சொல்லி நானும் நல்லா இருக்கேன்...:-))

Anonymous said...

ஒருவேளை நியூமராலஜில பிஸினஸ் ஆரம்பிக்கப்போறீங்களோ.அதனாலதான் வலையுலகத்த விட்டு விலகறீங்களா!! முதல் போணி மங்கையா,
மங்கை எவ்வளவு சக்சஸ் ஆகறாங்கன்னு பாத்துட்டு நானும் மாத்திக்கறேன்.

காட்டாறு said...

தலைப்பை பார்த்திட்டு, எப்பவும் போல எதோ புரியல.. நீங்க என்ன நினைக்கிறீங்க... உங்களுக்கு தெரியுமான்னு சொல்லப் போறீங்கன்னு பார்த்தா.... நியூமராலஜியை கடைந்து எடுத்துருக்கீங்க... வாசிச்ச எனக்கு நேரம் நல்லா இல்லையோ... பேர மாத்தனுமோ.......... பாத்து சொல்லுங்க பங்காளி அய்யா... ஹி ஹி ஹி

காட்டாறு said...

//விரைவில் பங்காளி வலையுலகில் இருந்து விடை பெற இருக்கிறான்...விவரங்கள் வரும் நாட்களில்......... //

எதற்கான விடைன்னு வெவரமா சொல்லியிருக்கலாமில்ல... சஸ்பென்ஸு தாங்கல ராசா.

Unknown said...

//...அதில் வியக்கவைக்கும் சில ஆச்சர்யங்களும் உண்மைகளும் இருக்கிறது//

அப்படியா?

//'எழுத்துக்களில் ஒலி அது உருவாக்கும் அதிர்வு அதன் அளவுகோல்...அதை பொருத்தமாக அமைப்பதனால் உருவாகும் ஒத்திசைவு(Harmony)....அதன் பலாபலன்களே நியுமராலஜி //

அடடே ?

:-)))

பங்காளி,
ஆங்கில எழுத்துக்களுக்கு மட்டும்தான் இந்த எண்-ஒலி-அதிர்வு தொடர்பு உள்ளதா?

அது ஏன் எண்களை தமிழ் எழுத்துக்களுக்கு பொருத்தி பெயர் வைப்பதில்லை இந்த நிபுணர்கள்?

ஒலியிலும் , அதிர்விலும் மாற்றம் ஏற்படுத்துவதே நோக்கம் என்றால் மொழி ஒரு தடையல்லவே..பின்னர் ஏன் ஆங்கில எழுத்துக்களுக்கு மட்டும் "எண்" கொடுத்து கணிக்கப்படுகிறது.

நியூமராலிஜிஸ்ட்களே,
உங்களின் புரட்டுகளுக்கு ஏற்ற ஒலி-எண் ஒப்புமை-வடிவங்கள் தமிழில் இல்லையோ?

**
கழுதையை, Kazuthaaai என்றோ அல்லது Kazuuthaai என்றோ அழைத்தாலும் அது கத்துவது மாறாது.

ஒரு கழுதையின் பிறந்த தேதியுடன் ஜாதகத்தை கொண்டு சென்றபோது, ஜோதிடர் அதன் செவ்வாய் தோசத்துக்கு சில பரிகாரங்களைக் கூறி வரன் இந்தத் திசையில் இருந்து வருவான் என்றார். இன்றுவரை அந்தக் கழுதை வேறு திசையில் பேப்பர் தின்று கொண்டுள்ளது. கொண்டுவந்த ஜாதகம் கழுதையினுடையதா அல்லது மனிதனுடையதா என்று தெரியாமல் இருக்கும் ஜோதிடம்.

**
நியூமராலிஜி எப்படி? மனிதன் தனக்கு வைத்துள்ள பெயர்களுக்கு மட்டுமா அல்லது விலங்குகளின் செல்லப் பெயர்களுக்குமா?

**

ramachandranusha(உஷா) said...

சதயம் என்ற பதிவர் பங்காளியாய் பெயர் மாற்றம் கண்டார். அடுத்து பங்காளி என்னவாக மாறுவார் :-)))

பங்காளி... said...

மங்கை...என்ன இதெல்லாம்...

அவ் அவ் அவ் அவ்

suratha yarlvanan said...

எண் கணிதத்தில் உங்கள் பெயர் பிறந்த தின பலனை அறிய செய்யும் ஒரு சிறிய செயலி.நண்பர்கள்
கேட்டதற்காக செய்திருந்தேன்.நம்புவதும் நம்பாததும் அவரவர் நம்பிக்கை.

பங்காளி... said...

சின்ன அம்மினி...

இப்ப இருக்கிற பொழப்பே பின்னி பெடலெடுக்குது...எப்படா தப்பிப்போம்னு இருக்கேன்.இதுல புதுசா இன்னொரு தொழிலா...வேனாம் ஆத்தா விட்ருங்க

பங்காளி... said...

சின்ன அம்மினி...

பாவம் மங்கை, பச்சப் புள்ளையா இருக்காங்க..அதான் ரிஸ்க் எடுக்கறாங்க போல......விதி வலியது......ஹி..ஹி...

பங்காளி... said...

காட்டாறு...

கண்டதையும் படிச்சதால வந்த வினை இது....கண்டுக்காதீங்க...தாயே...

நம்ம எண்ணமும் செயலும் நல்லா இருந்தா எப்பவுமே நமக்கு நல்ல நேரம்தான்...

அப்பால கொஞ்சம் பில்டப் குடுக்கலாம்னு பார்த்தா நம்ம உஷா போட்டு தாக்கீட்டாங்க....ஹி..ஹி..

பங்காளி... said...

கல்வெட்டு (எ) பலூன் மாமா...

ஏன் இத்தனை வேகம்....நான் இந்த பதிவில் எண்கணிதத்திற்கு வக்காலத்து வாங்கவில்லையே...அதை படித்தால் அதை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டுமென்கிற கட்டாயம் கிடையாது. அதில் பார்த்த சில விதயங்கள் ஆச்சர்யமாக இருக்கிறது என்றுதான் சொன்னேன்.அதை பற்றி பிரிதொரு பதிவில் விரவமாய் தர முயற்சிக்கிறேன்.

மற்றபடி எண்கணிதத்தால் ஒருவன் சுபிட்சமடைய முடியும் என நினைப்பது அபத்தம் என்பதில் மறு கருத்தில்லை....ஆனால் ஒலி உச்சரிப்புகள் தரும் அதிர்வுகளினால் பலன் இருக்குமென நம்புகிறேன். அர்த்தங்கள் இல்லாத பீஜ ம்ந்திரங்கள் பலவற்றை நமது சித்தர்கள் புழக்கத்தில் வைத்திருந்தனர்...இது குறித்தும் பின்னர் விரிவாய் பதிவொன்றில் விவாதிப்போம்.

பங்காளி... said...

உஷா...

ஆனாலும் ரொம்ம்ம்ம்ம்ம்ப ஞாபாக சக்தி....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

வீட்ல சொல்லி சுத்திப் போடச் சொல்லுங்க....

(மனுசன ஒரு பில்டப் குடுக்க விடமாட்டேங்றாங்கப்பா.....ம்ம்ம்ம்ம்)

உண்மைத்தமிழன் said...

ஓய் பங்கு.. நியூமராலஜி பார்த்துத்தானே பங்காளின்னு பேர் வைச்சிருக்காப்புல.. அப்புறமென்ன? அதுலேயே அரசியல்வாதி மாதிரி குத்தம் கண்டுபிடிக்கிறது.. நல்லாயிருப்பூ...

Unknown said...

//ஏன் இத்தனை வேகம்...//

:-))

// மற்றபடி எண்கணிதத்தால் ஒருவன் சுபிட்சமடைய முடியும் என நினைப்பது அபத்தம் என்பதில் மறு கருத்தில்லை....ஆனால் ஒலி உச்சரிப்புகள் தரும் அதிர்வுகளினால் பலன் இருக்குமென நம்புகிறேன். //

சுபிடச்சம் அடைய நினைவது அபத்தம் ஆனால் பலன் இருக்கும் --> இரண்டும் உங்கள் கருத்துதானே? சுபிடச்சம் x பலன் ஆறு வித்தியாசங்கள் ப்ளீஸ்

// ஆனால் ஒலி உச்சரிப்புகள் தரும் அதிர்வுகளினால் பலன் இருக்குமென நம்புகிறேன் //

சரி.. ஏன் தமிழ் எழுத்துக்கள் மாற்றி அமைக்கப்படாமல் ஆங்கில எழுத்து மாற்ற முறை உள்ளது. தமிழ் எழுத்துக்களுக்கு "எண்" கள் ஏன் வழங்கப்படாமல் உள்ளது "தமிழ்" நியுமராலஜிஸ்ட்களால்?

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

பங்காளி,
நானும் கூட பலருக்கு பெயர் பொருத்தம் பார்த்து/மாற்றியிருக்கிறேன்.அவர்களும் மாற்றிய பின் நல்ல மாற்றங்கள் நடந்ததாக சொல்கிறார்கள்.
நானும் எண்பெயரியலை ஒரு அறிவின் இயலாகத்தான் அணுகினேன்.
ஆயினும் இன்னும் சில தெளிவுகள் தேவைப்படுகின்றன....
(சங்கப்பலகை)

மெளனம் said...

தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் 12 என உள்ளன.
ஏன் 12 மட்டும் உயிர் எழுத்துக்கள்
இதன் ஆதாரம் அறிந்தால்
அதற்கும் விடை கிடைக்கும்

மெளனம் said...

இதனையும் பாருங்கள்
george walker bush- பெயரின் கூட்டுத்தொகை 6
பிறந்த நாள் 6.7.1946
நாள் 6, கூட்டுத்தொகை 6+7+1946=6
மாநிலம் texas=6
உ.ஜனாதிபதி dick cheney=6
அவரின் குறி iran=6
texas governor 1995 to 2000 =
6 years
governor on 17.1.1995=6
president on 20.1.2001=6

43rd president of usa but he is the 42nd person 4+2=6

bachelor's degree 1968=6
அவரால் கொண்டுவரப்பட்ட சட்டம்-nspd51=6
அதில் உள்ள ஷரத்துக்கள்=24=6
National Security Presidential Directive 51 (6)– The Last Step Toward Dictatorship
http://www.whitehouse.gov/news/releases/2007/05/20070509-12.html

மெளனம் said...

http://www.maraththadi.com/article.asp?id=2504

Pulliraja said...

சார் நம்ம பையன் உருப்படாம ஊர் சுத்துறான். அவனை பிரதமராக்கு என என் பொண்டாட்டி. நச்சரிக்கிறாப்பா. நல்ல பெயர் இருந்தா சொல்லுங்க. நாட்டுக்கு ஒரு நல்ல பிரதமர் கெடைக்கட்டும்.

புள்ளிராஜா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கீதா , சுதா, இது கூட சீதாவும் சேத்துக்குங்க..நான் பாத்தவரைக்கும் உண்மையா இருக்குமோன்னு கூடயோசிக்கற அளவு இவங்களுக்கெல்லாம் ப்ரச்சனை மேல ப்ரச்சனை தான்.. ஒன்னு அவங்களுக்கோ அல்லாட்டி அவங்களால மத்தவங்களுக்கோ... :)

பங்காளி... said...

உண்மை தமிழன்...

பதிவுல உங்க பேர போட்டதால கோவமா...

நாங்கெல்லாம் மத்தவங்களுக்கு மட்டுந்தான் நியூமராலஜி பாக்றது...நமக்கு பாத்துக்கறதில்லை...

பங்காளி... said...

கல்வெட்டு...

பொருளியல் ரீதியான பலன்களையே சுபிட்சமென குறிப்பிட வந்தேன்...

உளவியல் ரீதியான மாற்றங்களை பலன் என குறிப்பிட்டேன்....

ஒரு உதாரணம் சொல்கிறேன்...முயற்சித்துப் பாருங்கள்...

காயத்ரி மந்திரத்தை வாயை திறக்காமல் நாவை அசைக்காமல் உள்ளுக்குள் உரக்க ஒலியில்லாமல் சொல்லிப் பாருங்கள்...கவனம் நாவின் நுனியில் இருக்கவேண்டும்..அதாவது நாக்கு துளியும் அசையக்கூடாது....

பொருமையும், நேரமும் இருந்தால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிப் பாருங்கள்...எக்காரணத்தைக் கொண்டும் எந்த காயத்ரியையும்() நினைக்கக் கூடாது...நாவின் மேல் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்...

பலன்களை சொல்லித் தெரிவதை விட அனுபவித்துப் பாருங்கள்......

பங்காளி... said...

அறிவன்...

என்னுடைய நிலைப்பாடும் இதே...இன்னமும் கட்டவிழ்க்கப் படாத நிறைய கேள்விகள் இருக்கின்றன....

பங்காளி... said...

மௌனம்....

தமிழில் உயிர் எழுத்து 12, இவை ஏன் உயிரெழுத்துக்கள் என அறியப்பட்டது என விவரம் தெரிந்தவர்கள் விளக்கினால் நன்றாய் இருக்கும்.

நானறிந்த வரையில் உயிரெழுத்துக்கள் இரண்டு வகையாய் பிரிக்கப் பட்டிருக்கின்றன...அ,இ,உ,எ,ஓ இவை குற்றெழுத்துக்கள் எனவும், ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ இவை நெட்டெழுத்துக்கள் எனச் சொல்வர்.

எழுத்துக்களை உச்சரிக்கும் கால அளவான "மாத்திரை" என்பது கண்ணிமைக்கும் நேரமாகும். உயிரெழுத்துக்களில் குற்றெழுத்துக்கள் ஒரு மாத்திரையாகவும், நெட்ட்டெழுத்துக்கள் இரண்டு மாத்திரையாகவும் கூறப்பட்டிருக்கின்றன.

பங்காளி... said...

புள்ளி ராஜா....

இதெல்லாம் கொஞ்சம் ஓவரு...ஆமா

பங்காளி... said...

முத்து லட்சுமி...

சீதா பற்றிய தகவல் எனக்கு புதிது....இனி சீதாக்களையும் கவனிப்போம்...ஹி..ஹி...

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

பங்காளி,மௌணம்,
உயிர் எழுத்துக்களுக்கு ஏன் சிறப்பென்றால்,அவை பல்வேறு ஒலியன்களை தன்னுடன் சேரும் எழுத்துக்களுக்கு அளிக்கின்றன.
18 (மெய்) எழுத்துக்கள் உயிருடன் சேரும் போது 217 எழுத்துக்களை உருவாக்க முடிகிறது,எனவே உருவாக்க திறன் படைத்த எழுத்துக்கள் 'உயிர்' எழுத்தாக மாறியிருக்க வேண்டும்.
மற்றபடி,எண் கணிதப் பெயரியல் ஆங்கிலத்தில் வளரக் காரணம் அதனை வளர்த்த அறிஞர்கள் எல்லாம் ஆங்கிலம் பேசும் நாடுகள் வட்டாரத்தில் இருந்ததும்,பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நபர்களின் ஒலியன்களை ஆங்கிலத்தில் எளிதாகக் கொண்டு வர முடிந்ததும் காரணங்கள் என்று மூத்த எண் கணிதவியலாளர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் எண்களுக்குறிய சிறப்பு குணநலன்கள் பழைய இந்திய நூல்களில் காணக் கிடைத்தாதகவும் சொல்கிறார்கள்.(உதாரணமாக ஏன் விக்கிரமாதித்தன் எல்லாவற்றிலும் 32 எண்ணைப் பயன்படுத்தினான்-அவன் சிம்மாசனம் 32 படிகள் கொண்டதாக இருந்தது,அவன் 32 தேவதைகளை அவதானித்தான் - என்பது போன்ற செய்திகள்-32 எண் இணையற்ற திறன்களையும் எந்த சூழ்நிலையையும் சமாளித்து மீண்டும் புதிதாகத் தொடங்க வலிமையையும் அளிக்கக் கூடியது போன்ற குறிப்புகள் கிடைக்கின்றன...விரித்தால் இதுவே ஒரு எண்கணித வரலாறாகிவிடும்.
ஒன்று சொல்லலாம்,எண் கணிதப் பெயரியல் மனிதர்களில் பண்புகளை எளிதாக அவதானிக்க எனக்குப் பெருமளவு உதவியிருக்கிறது,உதவிக் கொண்டிருக்கிறது !

aravindaan said...

என் சித்தப்பா எனது பெயரை அரவிந்தன் என்பதை aravindaan dஅப்பரம் ஒரு a சேர்த்து எழுத சொன்னார். இதன் கூட்டுத்தொகை 32. விக்கிரமாதித்தன் சிம்மாசனம் 32 படிகட்டுக்கள். அவன் நாடுறுமாதம் காடாறுமாதம் ஆட்சி செய்தான். எனக்கும் 6மாதம் நான்றாகவும் 6மாதம் சுமாராகவும் போகும்.

மெளனம் said...

>18 (மெய்) எழுத்துக்கள் உயிருடன் சேரும் போது

ஏன் 18 மெய் எழுத்து?
பதில் கண்டுபிடியுங்கள் பிறகு சொல்லலாம் எல்லாமே அபத்தம் என்று

மெளனம் said...

நான் கேட்பது 12,18 அதற்கு மேல் ஏன் இல்லை என்பதே

யாத்ரீகன் said...

ஃபீஸ் கேக்க மாட்டீங்க இல்ல?...

அப்போ... யூ ஆர் கிவன் பெர்மிஷன்..:-)))

Punai peyar numerology paartha nalla blog yeluthalaama ;)

Unknown said...

பங்காளி,

// பொருளியல் ரீதியான பலன்களையே சுபிட்சமென குறிப்பிட வந்தேன்...//

// உளவியல் ரீதியான மாற்றங்களை பலன் என குறிப்பிட்டேன்....//


நியுமராலஜி முறையில் பெயர் வைப்பது அல்லது பழைய பெயரின் எழுத்துக்களை மாற்றுவதால் உளவியல் ரீதியான மாற்றங்களுக்கு வாய்ப்பு உண்டு என்பது உங்களின் கருத்து.


இது உண்மையானால் "உளவியல்" ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் சைக்காலஜியில் இதனை ஒரு பாடத்திட்டமாக வைக்க பரிந்துரை செய்யலாம் அல்லவா?


அறிவியல் என்பது வேறு நம்பிக்கை என்பது வேறு. நீங்கள் சொல்லும் உளவியல் ரீதியான மாற்றங்கள் செப்படி-வித்தையை நம்பும் ஒருவனுக்கும் ஏற்படும் என்பதை ஒத்துக் கொள்வீர்களா?

நம்பிக்கை என்ற போர்வைக்குள் இருந்தால் அதை(எதை வேண்டுமானலும்) நம்பும் ஒருவன் அதனால் "பலன்" உண்டு என்றே சொல்வான்.

அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட "கார்" பாபா-க்களுக்கும் பாமரனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் பயன்படுகிறது. ஆனால் நீங்கள் சொல்லும் "பலன்" கள் நம்பிக்கை என்னும் போர்வைக்குள் இருப்பவனுக்கு மட்டுமே "பலன்" கொடுக்கும்.

// காயத்ரி மந்திரத்தை வாயை திறக்காமல் நாவை அசைக்காமல் உள்ளுக்குள் உரக்க ஒலியில்லாமல் சொல்லிப் பாருங்கள்...கவனம் நாவின் நுனியில் இருக்கவேண்டும்..அதாவது நாக்கு துளியும் அசையக்கூடாது....//
//பொருமையும், நேரமும் இருந்தால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிப் பாருங்கள்...எக்காரணத்தைக் கொண்டும் எந்த காயத்ரியையும்() நினைக்கக் கூடாது...நாவின் மேல் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்...//
//பலன்களை சொல்லித் தெரிவதை விட அனுபவித்துப் பாருங்கள்......//


:-)))

இங்கே காயத்ரி எதுக்கு வந்தாள் ?

நியுமராலஜியில் இருந்து மந்திரங்களுக்கு வந்து விட்டீர்கள். ஏன்?

ஒரு வேளை நியுமராலஜியில் எழுத்து மாற்றம் (a to z) ஒலி மாற்றம் செய்வதால் அதுவும் ஒருவகை மந்திரம் என்று சொல்கிறீர்களா?

அல்லது காயத்ரியை சொல்லி அனுபவித்து பார்த்து பலன் கிடைத்தால் பின்பு நியுமராலஜியையும் நம்பலாம் என்று சொல்கிறீர்களா? தெரியவில்லை.

****
காயத்ரி மட்டும் அல்ல நமீதாவைக்கூட நினைத்து நீங்கள் சொன்னது போல் வாயை திறக்காமல் நாவை அசைக்காமல் உள்ளுக்குள் உரக்க ஒலியில்லாமல் சொன்னால் அதே பலன் கிடைக்கும். செய்து பாருங்கள்.

பலன் காயத்ரியிலோ நமீதாவிலோ இல்லை. சொல்லும் முறையில் (பயிற்சியில்) உள்ளது.

ரஜ்னீஷ் -இல் இருந்து மிளகாய்ப் பொடி சாமியார் வரைக்கும் பல "பலன்" தரும் வித்தைகளை "விற்பனை" செய்கிறார்கள். வசதிக்கு தகுந்தாற்போல் மக்கள் வாங்கிக் கொள்கிறார்கள்.

"பலன்" அப்பட்டமாய் அவரவர் "நம்பிக்கை" சார்ந்த விசயம் ஆதலால் இதை நான் முயற்சி செய்யப்போவது இல்லை.

"அறிவியல்" பூர்வமாய் பலன்களை மதிப்பீடு செய்ய முடியும் என்றால் காயத்ரி மட்டும் அல்ல எல்லா மந்திரங்களையும் சோதனை செய்து "நோபல்" பரிசு வாங்க விற்பன்னர்கள் முயற்சி செய்யலாம்.

உளவியல் துறையில் மன மாற்றங்கள் அல்லது மன ரீதியான "பலன்"களுக்கு அளவுகோல் உண்டு. அளக்கப்படக் கூடிய ஒன்றே குணப்படுத்த அல்லது முன்னேறக்கூடிய வாய்ப்ப்பு உள்ளது.

***
சாய் பாபாவாக இருந்தாலும் சரி, நியுமராலஜியாக இருந்தாலும் சரி நம்பிக்கை என்ற வட்டத்துக்குள் வருவதால் உங்களின் கருதுக்களை நான் தட்டையாக ஆராய முடியாது. பல கோணங்களைக் கொண்ட இந்த நம்பிக்கை உங்களின் பார்வையின் வழியாக வேறு பரிணாமத்தைக் காட்டக்கூடும் , எனக்கு அது புலப்படாமல் இருக்கலாம்.

**

நம்பிக்கையோ அறிவியலோ மக்களையும் நாட்டையும் இரட்சித்தால் போதும்.

vengaiyan said...

எங்களுக்கு திருமணமாகி 9.5ஆண்டுகளுக்குப்பின் மகள் 17/11/2014 அன்று பிறந்திருக்கின்றாள். அவளுக்கு s.pavishne rani அல்லது s.pavishya sivaani என்று பெயரிட திட்டமிட்டுள்ளேன். இது குறித்து தங்களது கருத்தை தெரிவியுங்களேன்.

vengaiyan said...

எங்களுக்கு திருமணமாகி 9.5ஆண்டுகளுக்குப்பின் மகள் 17/11/2014 அன்று பிறந்திருக்கின்றாள். அவளுக்கு s.pavishne rani அல்லது s.pavishya sivaani என்று பெயரிட திட்டமிட்டுள்ளேன். இது குறித்து தங்களது கருத்தை தெரிவியுங்களேன்.