Wednesday, September 12, 2007

இதுக்கு பதில் சொல்லுங்கப்பா.....

நண்பர்களே...நான் ஒரு அரை வேக்காட்டு ஆ(நா)த்திகன்.....இரண்டுக்குமான தேடல்களை நேர்மையாகவும் அதே நேரத்தில் உணர்வுகளை காயப்படுத்தாமலும் தேடிக்கொண்டிருப்பவன்.

ஆத்திகரும் சரி...நாத்திகரும் சரி..இதுகாரும் ஒருதலைப்பட்சமாய் தங்கள் கருத்துக்களை வலியுறுத்தி வந்திருக்கின்றனரே தவிர பொதுவாய் ஒரு தளத்தில் தங்களின் கருத்துக்களை முன்வைத்து வாதம் செய்ததாய் தெரியவில்லை.

இன்றைய 'விடுதலை' திரு.அறிவுக்கரசு என்பாரின் ஒரு கட்டுரையினை படிக்க நேர்ந்தது.அதில் அவர் இந்து மதத்தின் சில கடவுளர்களை பற்றி எள்ளலுடன் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து ஆரோக்கியமான கருத்துக்களை வைப்போமே....எனக்கென்னவோ அவரின் எள்ளலில் தெரியும் ஆற்றாமை நியாயமானதாக தெரிகிறது.

இனி...திரு.அறிவுக்கரசுவின் கட்டுரை

சு. அறிவுக்கரசு

வாளை மீன் அமாவாசை

கடவுளைக் கற்பித்தவனை முட்டாள் என்றார் நம் அறிவு ஆசான் தந்தை பெரியார். ஆனால் அந்தத் தத்துவத்தைப் பரப்பியவனை அயோக்கியன் என்று கடுமையாகக் கூறினார். ஏன்? சும்மா வெறும் கற்பனை, கப்சாவான கடவுளுக்கு அப்பேர்ப்பட்ட சக்தி இருக்கிறது, இப்பேர்ப்பட்ட ஆற்றல்கள் உண்டு என்றெல்லாம் புளுகித் தள்ளித் தம் பிழைப்புக்கு வழி தேடிக் கொண்டு விட்டவன் கடவுளைப் பரப்பியவன்; இன்றைக்கும் பரப்புகிறவன். கடவுள் கதை சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலக் கட்டத்திலும் கடவுள் பெருமைகளைப் பேசி, எழுதிப் பரப்பிக் கொண்டிருப்பவனை அயோக்கியன் என்பதைக் காட்டிலும் கூடுதல் கடுமை கொண்ட சொல்லால் கூடக் குறிப்பிடலாம் அல்லவா?

பாருங்களேன், கொழுந்தீசுவரன் கோயிலாம்! மன்னார் குடிக்குப் பக்கத்தில் உள்ள கோயிலாம்! எவரையும் காப்பாற்றாது, தன்னையும் காப்பாற்றிக் கொள்ளாது என்பதால் காவலர் ஒருவரையும் நியமித்துள்ளர்கள் இரவில் கடவுளைக் காப்பாற்ற! அந்தக் காவலர் கூட முன்னாள் ராணுவவீரர்! என்ன இருந்து என்ன பண்ண? கும்பலாக வந்தனர், காவலரின் கையை, வாயை, காலைக் கட்டினர். மூச்சு விடமுடியாமல் செய்தனர். வாயையும் மூக்கையும் சேர்த்து ஒட்டினர். அவர் செத்துப்போனார். கோயிலில் இருந்த சாமிகளைக் காணோம், திருடிவிட்டனர் எனச் செய்தி வருகிறது.

திருடப்பட்டுவிட்ட சாமிகளின் பெயர்களை ஏடுகள் வெளியிடுகின்றன. ஒன்றுக்கும் பயன் அற்ற வெறும் பொம்மைகள் - திருடப்பட்டுப் போய்விட்ட பிறகு - என்ன பெயர் இருந்தால்தான் என்ன செய்ய? கையாலாகாத கழிவுகள்தானே!

திருப்பதியில் ஒரு சோதா
உலகிலேயே பெரிய பணக்காரக் கடவுள் ஒன்று திருப்பதியில்! பாலாஜி என்பான், வெங்கடாசலபதி என்பான், வெங்கடேஸ்வரலு என்பான், நிரம்பவும் தமிழ்ப் பற்றுள்ளவர்கள் வேங்கடவன் என்பர்! அவன் கதை என்ன? தினந்தினம் திருப்பதி கோயிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தலாம், ஆயுதத் தாக்குதல் நடக்கலாமாம், இரண்டு மூன்று நாள்களுக்கு முன்பு கூட கார்கள் குண்டு வெடித்துப் பலர் இறந்தனர் என்கிறார்கள். லோகத்தையே ரட்சிப்பவனாயிற்றே, தன்னை, தன் பக்தனை, தன் கோயிலை, தன் ஆஸ்தியைக் காப்பாற்றிக் கொள்ளக் கையாலாதவன்தானே? பின் ஏன் வைரத்தில் அபயஹஸ்தம்? கை தேய்ந்துவிடக்கூடாது என்றுதானே அபய ஹஸ்தத்தை மாட்டி விட்டார்கள்? கை சோர்ந்து போய்விட்டதா? வெங்கடாசலபதி சோதாவாகிவிட்டதா?

மிக முக்கியப் பிரமுகர்கள் தன் கோயிலுக்கு வரவேண்டாம் என்கிறான் பரந்தாமன்! புரட்டாசி மாதம் அவனுக்குப் பிரம்மோற்சவம் நடக்கும் மாதம். குடை தூக்கிக் கொண்டு போவார்கள் பலபேர்! செருப்பு (சடகோபம்) தூக்கிக் கொண்டு போவார்கள் பலபேர்! நாமம் போட்டுக் கொண்டும், உண்டி குலுக்கிக் கொண்டும் பக்தர்கள் திருப்பதிக்குப் போவர்! ஜருகண்டி, ஜருகண்டி எனத் துரத்தினாலும் வாங்கோ, வாங்கோ என்று வரவேற்ற காலம் போய், வராதீங்கோ, வந்துடாதீங்கோ எனத் தடை போடுகிறார்கள் என்றால், என்ன ஆயிற்று பாலாஜி வெங்கடேஸ்வரனுக்கு? ஏழுமலையான் ஏதும் செய்ய ஏலாதவனாகிவிட்டானல்லவா?

நேத்ர தரிசனம் எதற்கு?
இந்த லட்சணத்தில் நேத்ர தரிசனம் என்னத்துக்கு? மூஞ்சி, கண், மூக்கு எல்லாவற்றையும் மறைத்துப் போடப் பட்டிருக்கும் நாமத்தை வாரத்தில் ஒரு நாள் (வியாழன்) மட்டும் சிறிதாகப் போட்டு, வெங்கடவனின் நேத்ரத் தரிசனம் தருகிறார்களாம்! அதைக் காணக் கண்கோடி வேண்டுமாம், கொடுத்து வைத்திருக்க வேண்டுமாம்! சொல்கிறார்கள். மறுபக்கத்தில் காப்பாற்றச் சக்தி கிடையாது, ஆகவே வரவேண்டாம் என்று சொன்னால் என்ன பொருள்? கடவுளின் சக்தி காலாவதி ஆகிவிட்டது என்பதையாவது பகிரங்கமாக ஒத்துக் கொள்ள வேண்டியதுதானே! இதற்கான அறிவு நாணயம் கொஞ்சமும் இல்லாமல், பிரம்மோற்சவம் நடத்தலாமா?

ஏக தந்தாய நமக:விக்னேசுவரன் என்றொரு கடவுளாம். அதற்குப் பிறந்த நாளாம். வெகு விமரிசையாகக் கொண்டாடத் திட்டம் போடுகிறார்கள். இந்தப் பிள்ளையார் இறக்குமதி செய்யப் பட்ட கதையை மாண்புமிகு முதல்வர் மானமிகு கலைஞர் மாமல்லபுரத்தில் விளக்கினார். எந்தப் பக்த திலகமாவது அதற்கு விளக்கம் தெரிவித்ததா? வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர் சொன்னதை ஒத்துக் கொள்கிறோம் என்று தானே பொருள்? பின் ஏன் விநாயகன் பொம்மை, பூஜை, ஊர்வலம், விசர்ஜனம் எல்லாம்?

பரசுராமப் பார்ப்பான் போட்ட போட்டில் இதன் ஒரு தந்தம் உடைந்துவிட்ட கதை தெரியுமோ? சிவன் தனி அறையில் இருந்தபோது இந்த ஆனைமுக அழுக்குருண்டைதான் காவல். அவசரமாகச் சிவனைப் பார்க்கப் பரசுராமன் வந்தானாம். காவலுக்கு இருந்தவன் தடுத்தானாம். பரசுராமன் மீறிப்போக முயன்றானாம். ரயில்வே கேட் மூடுவதைப் போல பிள்ளையார் தன் தந்தத்தை நீட்டித் தடுத்தானாம். கோபம் கொண்ட பரசுராமன் தன் வாளால் தந்தத்தை வெட்டிப் போட்டு விட்டு உள்ளே போய்விட்டானாம்! இவனுக்கும் இவன் தந்தத்துக்கும் வந்த விக்னத்தைப் போக்கிக் கொள்ள முடியாதவனுக்குப் பெயர் விக்னேசுவரனாம்.

மீசையில் மண் ஒட்டவில்லை
கணபதியின் கையாலாகாத்தனத்தைக் காட்டிக் கொள்ளாமல் ஒரு கதையைக் கட்டிவிட்டார்கள். பரசுராமன் கைவாள் சிவன் கொடுத்ததாம். தன் தந்தையின் வாள் தன் தந்தத்தை வெட்டியதால், தந்தையின் வாளுக்கும் பங்கம் வந்துவிடக்கூடாது என்று கணபதி விட்டு விட்டானாம். மீசையில் மண்படவில்லை மாடல் புளுகு! இன்னொரு கதையும் நாமக்காரர்கள் கட்டிவிட்டனர். பாரதம் சொல்ல வியாசன் வேகமாக உச்சரித்தானாம், அதே வேகத்தில் மேரு மலையில் எழுத தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கிக் கொண்டான் பிள்ளையார் என்று ஒரு கதை. புளுகுவதைக் கூட ஒரே மாதிரிச் செய்யத் தெரியாக அறிவிலிகள்

புரட்டாசிப் புரட்டுகள்
கடவுள் தத்துவத்தைப் பரப்புபவர்கள் எவ்வளவு அயோக்கியர்கள் என்பதற்கு இதையும் ஆதாரமாகப் படியுங்கள். சக்தி அம்பலப்பட்டு அசிங்கப்பட்ட பிறகும் புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லாம் வெற்றிதானாம். வளம் பெருகுமாம். பொருள் கூடுமாம். பொன்னான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாமாம்! இவர்களை அயோக்கியர்கள் என்பதா? அதற்கும் மேலே வைத்துக் கூறுவதா?

மகாளய அமாவாசையாம்
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசையாம்! அன்றைக்குத் திதி கொடுத்தால் முன்னேற்றங்கள் வருமாம். திதியை வாங்கிப் போகும் பார்ப்பனர்களுக்கு முன்னேற்றம் வருமே தவிர, கொடுப்பவனுக்கு என்ன வரும்? இருக்கும் கொஞ்சம் புத்தியையும் இழப்பவர்கள்தானே திதி, திவசம் தருகிறார்கள். பெரியார் திரைப்படத்தில் திதி, திவசம் தரும் பித்தலாட்டம் பற்றித் தோலுரித்துக் காட்டிய பிறகும் கூட மகாளய அமாவாசை திதி தாருங்கள் என்கிறார்கள் என்றால் அயோக்கியன் என அழைப்பது தவறா? மறந்தவருக்கு மகாளய அமாவாசையாம்! அதாவது மாதாமாதம் அமாவாசையன்று திதி கொடுக்க மறந்து விட்டவர்கள் மகாளய அமாவாசையில் வருஷத் திதி தந்து விடலாமாம். அடித்துக் கொண்டு போகக் காத்திருக்கும் இவர்களை அயோக்கியன் எனக் கூறக் கூடாதா?

வாளை மீன் அமாவாசை12
வருடத் திதியைத் தருவதற்கு வாய்ப்பு மனு சாத்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. முள் நிறைந்த வாளை மீனைத் திவசப் பொருளாகக் கொடுத்தால் பித்ருக்கள் 12 வருடப் பலனைப் பெறுவார்களாம்; பசியாறுவார்களாம்! இதைச் செய்யலாமே! மனுசாத்திரப்படி திவசம் வாங்கிக் கொள்ளும் பார்ப்பனரைத் தேடிக் கண்டுபிடியுங்கள்! அவரிடம் திவசப் பொருளை அளித்து 12 ஆண்டுக்கொருமுறை முள்வாளை மீன் அமாவாசையை உருவாக்குவோம்!


கண்ணியமான விவாத நோக்கத்துடனே இந்த பதிவு இடப்படுகிறது...யாருடைய உணர்வுகளை புண்படுத்துவதாக இருந்தால் அதற்காக வருந்துகிறேன்....

8 Comments:

மங்கை said...

கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல். - விவேகாந்தர்...

அவங்க அவங்க நம்பிக்கை அவங்கவங்களுக்கு...அனுபவத்தை பொறுத்து...வெங்கி இதெல்லாம் செய்ய சொன்னாரா..நடுவுல இருக்குற 'அடியார்கள்' செய்யற கைங்கர்யத்துல அவர் சிக்கீட்டு சீக்கி அடிக்கிறார்...ஹ்ம்ம்

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

எதற்காக விவாதிக்க வேண்டும் பங்காளி?
கடவுள் என்பது ஒரு தத்துவ்ம்.அதை பிராமண்ர்கள் பிழைப்புக்குப் ப்யன்படுத்தினார்கள்(கோவிலில் நானே பூஜை செய்ய வேண்டும்,எவரும் கருவறைக்குள் நுழையக் கூடாது,கோவிலுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுகு நடத்த வேண்டும்,அதையும் நாங்கள் மட்டுமே நடத்துவோம்,நீங்கள் காசு மட்டும் கொடுக்க வேண்டும்,கடவுளுடன் பேச(அர்ச்சனை)தேவபாஷை மட்டுமே வேண்டும்,அதுவும் எங்களுக்கு மட்டுமே தெரியும்,நாங்களே சொல்லத் தகுதியானவர்கள்...(எந்த தமிழ் வேதங்களிலோ ஆகமங்களிலோ இத்தகைய விதிகள் காணக் கிடைக்கவில்லை.)
) என்பதும் உண்மை.
அதே அளவு உண்மை கடவுள் என்ற தத்துவமும்.சில தத்துவங்கள் விவாதிக்கப் பட முடியாதவை,உணரப் பட வேண்டியவை..என் தாயும்,என் மனைவியும் சோரம் போகாதவர்கள் என்பது எந்த அளவிற்கு நம்பிக்கை சார்ந்த விஷயமோ அந்த அளவுக்கு கடவுள் தத்துவம் என்பதும் நம்பிக்கை சார்ந்த விஷயம்.
அத் தத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும் என நினைத்தால்,சைவ சித்தாந்தக் கருவூலங்கள் அனைத்தையும் படியுங்கள்.பின்னர் விவாதிக்க வேண்டிய தேவையோ,அவசியமோ இருக்காது.
மற்றபடி மானமிகு கலைஞர் கதையெல்லாம் 1989-1990 களில் வடபழனி முருகன் கோவிலில் கதவை மூடிக் கொண்டு அவர் சுவாமி தரிசனம் செய்தபோதும்,மஞ்சள் துண்டிலும் வெளுத்துவிட்டது..
நாத்திகம் பேசுபவர்கள் அனைவரும் தங்கள் 40 வயதுக்கு மேல் திருட்டுத் தனமாகவாவது இறைவனை வணங்குகிறான் என்று கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதத்தில் கூறுவது மிக உண்மை(பல எடுத்துக் காட்டுகள் சொல்ல முடியும்,ஜெயகாந்தனில் இருந்து சாரு நிவேதிதா வரை..)

காட்டாறு said...

சங்கப்பலகை சொன்னது போல்... //சில தத்துவங்கள் விவாதிக்கப் பட முடியாதவை,உணரப் பட வேண்டியவை..// தேடலில் இருக்கும் தங்களுக்கு புரிந்திருக்கும் இது. நம்மை பற்றி நாமே அறிந்து கொள்ள இயலாது போன போது.... கடவுள் என்ற குழப்பமாய் உருவான ஒரு கருத்தை/தத்துவத்தை/அறியா சக்தியைப் பற்றி ஏன் விவாதிக்க வேண்டும்? விவாதிப்பதால் உங்கள் தேடலுக்கு பொருள் கிடைக்கும் என நீங்கள் நினைத்தால்.... சாரி.

ஆத்தீகமும், நாத்தீகமும் நமக்கு நாமே போட்டுக் கொண்ட ஒரு வரையறை. நாம் எப்போதுமே இரெண்டும் கெட்டான் தான்.

உங்களுக்குள் தேடுதல் இருக்கட்டுமே. வெளி விவாதங்கள் வேண்டாமே.

சாலிசம்பர் said...

//என் தாயும்,என் மனைவியும் சோரம் போகாதவர்கள் என்பது எந்த அளவிற்கு நம்பிக்கை சார்ந்த விஷயமோ அந்த அளவுக்கு கடவுள் தத்துவம் என்பதும் நம்பிக்கை சார்ந்த விஷயம்.//

இந்தக் கருத்தை வடிவேலு ஒரு படத்தில் பயன்படுத்தியிருப்பார்.அதற்கு காமெடி ட்ராக் எழுதிக்கொடுத்தது நீங்க தானா?

Hariharan # 03985177737685368452 said...

பங்காளி,

கடவுளை வரையறுக்க இருத்தல், இல்லாமை என வரையறை செய்ய எடுத்துக்கொள்வதைப் பொறுத்தது.

பத்துக்குப் பத்து அளவுள்ள அறை என்பதை இல்லாமை எனும் வெற்றிடத்தை (இருப்புக்குள் அடைபட்ட)வைத்து வரையறுக்கின்றீர்களா? அல்லது இருத்தல் என்பதை நிலைநிறுத்தும் சுவர்களை (இருப்புக்கு இடம் கொடுக்கும் இல்லாமை) வைத்து வரையறுக்கின்றீர்களா என்பது அவரவர் சார்ந்த நிலை.

உண்டு என்பது நம்பிக்கை தருவதாக பெருமளவில் இருக்கிறது.

பழுத்த ஆத்திகனுக்கும் நாத்திகனுக்கும் பெரிய வித்தியாசம் இருக்க முடியாது.

இட வலமாகச் சென்றாலும் ஒரு புள்ளியில் சந்திப்பதே ஆன்மீகத்தின் இருவித தேடல்களும்.

மாசிலா said...

சங்கப்பலகை : //என் தாயும்,என் மனைவியும் சோரம் போகாதவர்கள் என்பது எந்த அளவிற்கு நம்பிக்கை சார்ந்த விஷயமோ அந்த அளவுக்கு கடவுள் தத்துவம் என்பதும் நம்பிக்கை சார்ந்த விஷயம்.//

இதென்ன அபத்தம்?

மிகுந்த கண்டனத்திற்கு உரியது.

ஹரிஹரன் : //பழுத்த ஆத்திகனுக்கும் நாத்திகனுக்கும் பெரிய வித்தியாசம் இருக்க முடியாது.//

இது கருத்து அல்லது கொள்கை ஒற்றிய ஒற்றுமையாக இருக்க முடியாது. இவ்விருவரும் மனித நம்பிக்கைகள் பற்றிய தேடுதல்களில் தத்தம் துறைகளில் தீவிர சிந்தனையாளர்கள் எனும் வகையில்தான் ஒற்றுமை இருக்க முடியும்.

நம்பிக்கை என்பது ஒரு தனிமனித விருப்பம். நம்பிக்கை எனும் உணர்வின் அடித்தளம் பயம், சந்தேகம், அறியாமை, மற்றும் திகில். மனிதர்களை இவைகளில் இருந்து விடுவித்தால் போதும். பிறகு நம்பிக்கை என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும்.

நம்பிக்கை என்பது கடந்த கால நிகழ்வுகளை அல்லது கற்பனைகளை(நிகழ் காலத்தை மறுத்து தவிர்த்து) நேடியாக எதிர் காலத்துடன் இணைக்கும் ஒரு முயற்சியின் வெளிப்பாடே. இதில் நேற்று என்பது இல்லையென்று ஆகிவிட்டது. நாளை என்பது இன்னும் (வர)இல்லை. இன்றைய நாளை வாழ மறுக்கிறோம்.

சிறிய உதாரணம்.

வீட்டில் சாப்பிட வசதியில்லாத ஏழை மக்கள் வீண் செலவுகள் பல செய்து எதையோ எதிர்பார்த்து வேண்டிக் கொள்வது.

piravipayan said...

கடவுள் உணரக்குடியவர் மட்டுமே உணர்ந்தாள் மட்டுமே தெரியும்
நீர் பார்பனர்கள் எழுதிய கதைகளை கண்டு கொள்ளாமல்
உண்மையை உணருங்கள் கோவில் பார்பனருக்கு மட்டும் சொந்தமில்லை
அனைவரும் அமருமிடம் நல் சிந்தனைகளை உருவாக்குமிடம்

தமிழில் சித்தர்களை பற்றி படியுங்கள் தெளிவு பிறக்கும்

piravipayan said...

கடவுள் உணரக்குடியவர் மட்டுமே உணர்ந்தாள் மட்டுமே தெரியும்
நீர் பார்பனர்கள் எழுதிய கதைகளை கண்டு கொள்ளாமல்
உண்மையை உணருங்கள் கோவில் பார்பனருக்கு மட்டும் சொந்தமில்லை
அனைவரும் அமருமிடம் நல் சிந்தனைகளை உருவாக்குமிடம்

தமிழில் சித்தர்களை பற்றி படியுங்கள் தெளிவு பிறக்கும்