Saturday, September 08, 2007

கட்டோடு குழலாட......

காலத்தால் அழியாத காவியப் பாடல்களில் இதுவும் ஒன்று....இந்தப் படம் எப்போது வெளிவந்தது என தெரியவில்லை.....

கொடைக்கானல் தொலைகாட்சி கோபுரத்தின் மூலம் ஹிந்தி நிகழ்சிகளையே கண்டுகொண்டிருந்த தென் தமிழகம் முதல் முறையாக சென்னை தொலைகாட்சி நிலையத்தோடு இனைக்கப்பட்ட நாளில் முதல்முதலில் ஒளிபரப்பான பாடல் இதுதான்...ஏதோ நேற்று நடந்தது போல ஈரமான நினைவுகள்....ம்ம்ம்ம்ம்

படம்: பெரிய இடத்துப் பெண், மக்கள்திலகம் எம்.ஜி.ஆர், மணிமாலா,ஜோதிலட்சுமி...கவியரசரின் அழகுதமிழ், மெல்லிசை மன்னரின் மயக்கும் இசைக்கோர்வை....

முதல் முறையாக இந்த பாடலை கேட்கும் போது இதன் வீச்சும் ஆழமும் தெரியாது....திரும்ப திரும்ப கேட்கும் போதுதான் இந்த பாடலின் மகத்துவம் விளங்கும்....மிகைப் படுத்துதல் இல்லாது கதாபாத்திரங்களின் வாழ்வியலோடு பின்னிப்பினைந்து செல்லும் பாடல்....வெகு சில பாடல்கள் மட்டுமே இத்தனை யதார்த்தமான அழகுடையவை....

தாவணிகள் எல்லாம் ம(ற)றைந்து போய்விட்ட இந்த காலத்தில் தாவணிப் பெண்களின் நளினமும்,ஒயிலும் இனி திரையில் மட்டுமே காணக்கிடைக்கும் அதிசயங்கள்.....கட்டு மஸ்தான கிராமத்து இளைஞனை கண்ணுக்குள் நிறுத்துகிறார் மக்கள் திலகம்.


இனி பாடலை பார்த்து ரசியுங்கள்....

6 Comments:

மதுரையம்பதி said...

அருமையான பாடல்....நன்றி பங்காளி....

dondu(#11168674346665545885) said...

சமீபத்தில் 1963-64 கல்வியாண்டில் நான் பொறியியல் கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கும்போது வந்த படம் பெரிய இடத்து பெண். ஆறு ஆண்டுகள் கழித்து அதைத் தழுவி எடுக்கப்பட்ட ஹிந்தி படம் பெஹச்சான் (அறிமுகம்). பிறகு அதே படத்தை அப்படியே ஈயடிச்சான் காப்பியெடுத்து தமிழில் எடுத்தனர். இன்று போல் என்றும் வாழ்க, அதே எம்.ஜி.ஆர். இம்முறை அவரது ஜோடி ராதா சலூஜா.

இப்பாடலை கொடுத்ததற்கு நன்றி. இந்த பின்னூட்டம் போடும்போது படகோட்டி பாடலை கேட்டு கொண்டிட்ருக்கிறேன். அதற்கும் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

பங்கு..

மீண்டும், மீண்டும் முணுமுணுக்க வைக்கும் வரிகள், காதைக் கடிக்காத இசை, அழகான லொகேஷன், நளினமான நடனம், அருமையான இயக்கம்.. எல்லாம் சேர்ந்து இத்தனை வருஷம் கழிச்சும் உங்களை 'ஆட' வைச்சிருக்குன்னு நினைக்கிறேன்.. கரெக்ட்டா..?

காட்டாறு said...

எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும் ராசா..... ஏதோ 35 வயசு.. கார் மோகம்... 40 வயசுல ரிட்டய்ர்மெண்டுன்னு பேசின பங்காளியா நீங்க? போலி இல்லையே?

பின்குறிப்பு:
சூப்பர் பாட்டு. எனக்கும் பிடித்தது. பார்க்க அல்ல... கேட்க.

பங்காளி... said...

காட்டாறு...

ஆத்தா நம்புங்க....அதே வயசுதான் நமக்கு...

வேணும்னா பங்காளி ஒரு பழமைவாதி..ன்னு வச்சிக்கலாமா...ஹி..ஹி....

நாங்கல்லாம் 'இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபனம் தமிழ்சேவை-2' கேட்டு வளந்தவய்ங்க...அதான் பழய பாட்டோட தாக்கம் நிறைய இருக்கு.

delphine said...

நன்றி பங்காளி..நல்ல ஒரு பாடல்..(அப்பப்ப இப்படி ஒண்ணு போடுங்க.. இல்லைன்னா தேட வேண்டியிருக்குது..:(