Tuesday, September 25, 2007

பங்காளி விடைபெறுகிறான்.....

நண்பர்களே....

இன்றுடன் இந்த பதிவு கைவிடப்படுகிறது.

பங்காளி என்கிற பெயரில் இனி பின்னூட்டங்கள் வருமாயின் தயை கூர்ந்து அவற்றை நிராகரிக்கவும்.

பதிவுலகில் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி வேறு ஒரு பெயரில் தொடர்வதாக இருக்கிறேன்.அடையாளங்களில் எனக்கு நம்பிக்கையில்லாததாலும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் என்னை இருத்திக் கொள்வதில் ஆர்வமில்லாததாலும் இந்த முடிவு.......

இப்படி எழுதுவது வசதியாக இருக்கிறது, இதனால் எல்லா தளங்களிலும் இலகுவாய் போய்வர இயலுகிறது என நினைக்கிறேன்.

வர்த்தகம் தொடர்பான எனது பிற பதிவுகள் வழமைபோல தொடரும்....

பழைய இரண்டு வருடங்களின் அடையாளங்களை தொலைத்துவிட்டு....

புதிய துவக்கத்தில் சந்திக்கிறேன்.......

அன்பன்

பங்காளி...

11 Comments:

துளசி கோபால் said...

????????????????????

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அசத்துங்க... அடுத்த பதிவு எப்பவரும் ? அதுக்கென்ன பேரோ ?வேற பேருலவந்தாலும் நீங்க தான்னு கண்டுபிடிச்சு சொல்ல ஒருத்தங்க இருக்காங்க..

Unknown said...

//அடையாளங்களில் எனக்கு நம்பிக்கையில்லாததாலும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் என்னை இருத்திக் கொள்வதில் ஆர்வமில்லாததாலும் இந்த முடிவு.......//

:-))
எதற்கு இந்த "பில்டப்பு" அப்பு ?

இன்னாரின் மகன்/மகள்
இன்னாரின் கணவன்/மனைவி
இன்னாரின் தகப்பன்/தாய்
இந்தப் பள்ளியில் படித்தவன்
....
இப்படி கணக்கில் அடங்காத அடையாளங்கள் சிதறிக்கிடக்கிறது.

***

உங்களின் உண்மையான பெயரையும் வருசத்துக்கு ஒரு முறை மாற்றுவீர்களா?

அதுவும் ஒரு அடையாளம்தானே?
அடையாளங்கள் வலைப்பதிவு பெயர்களில் மட்டும்தான் உள்ளதா? இல்லை இத மட்டும்தான் மாற்றமுடியும் என்பதாலா?

**

பல பெயர்களில் எழுதுவதை ஒன்றும் குற்றம் சொல்லவில்லை. வேலைக்கேற்ற அல்லது பள்ளிக்கு ஒரு சீருடை என்பது போல் கருத்துக்கு ஏற்ற கவசம் சரியே.

ஆனால், அடையாளங்களில் நம்பிக்கை இல்லை, குறிப்பிட்ட வட்டத்திற்குள் என்னை இருத்திக் கொள்ள ஆர்வம் இல்லை சொல்லிக் கொண்டே ஒரு புதிய அடையாளத்தை ஏற்கிறீர்கள்.

அடையாளங்களில் நம்பிக்கை இல்லை என்றால் இந்த பங்காளியை ஒரு அடையாளமாகவே உங்கள் மனம் நினைத்து இருக்காது.

:-))

இலவசக்கொத்தனார் said...

எந்த பேர்ல வர போறீங்க? எனக்கு மட்டும் சொல்லிடுங்க. :))

மத்தபடி போகம வரேன்னு சொன்னதுல சந்தோஷம்.

உண்மைத்தமிழன் said...

பங்கு என்ன இப்படி? எல்லாரும் ஆண்டு விழாவை அதிரடியா கொண்டாடுவாங்க.. நீங்க என்னடான்னா டாட்டான்னு கை ஆட்டுறீங்க.. இதெல்லாம் நல்லாயில்ல சொல்லிப்புட்டேன்..

வர்றேன்னு சொல்லிருக்கீங்க.. அதுனால கோபத்தைக் குறைச்சுக்குறேன்.

ஒரிஜினல் முகத்தைக் காட்டி எழுதுறதுல என்ன கஷ்டம்? என்ன குறைபாடு? புரியலை..

மங்கை said...

டாக்டரம்மா சொன்னமாதிரி ரீ என்ட்ரீ பண்ணறதுக்கு முன்னாடி சொல்லீறுங்க..

அப்பத்தான் தெலுங்க பட வில்லன் ரேஞ்சுக்கு கட் அவுட் வச்சு, பட்டாசு வெடிச்சு, ஆரத்தி எடுக்க முடியும்..

Hariharan # 03985177737685368452 said...

சதயமாய் உதயமாகி பங்காளியாகிய உங்களின் அடையாளமே கெட் அப்பை அப்பப்ப மாத்திட்டு வலையில் வலம் வர்றதுன்னு எடுத்துக்கலாமா?
:-))

பலர் கிரஹாம்பெல் உதவியுடனான அன்பின் சூழ்ச்சிகள் பல செய்ய வாய்ப்பளிக்காது :-)) தொடர்ந்து ஒரு புதிய அடையாளமற்ற அடையாளத்துடன் தொடர இருப்பதற்கு வாழ்த்துக்கள்.

காட்டாறு said...

சொல்லி 6 நாளாச்சி.. எங்கே இன்னும் காணோம்.

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the OLED, I hope you enjoy. The address is http://oled-brasil.blogspot.com. A hug.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in