இன்றைய தினத்தில் நான் தி.மு.க தலைவராக இருக்கும் பட்சத்தில் கீழ்கண்ட நடவடிக்கைகளை அறிவித்திருப்பேன்...
1.கட்சியின் உள் கட்டமைப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் சன் நெட்வொர்க் குழுமம் அன்னா அறிவாலயத்திலிருந்து செயல்படும் தார்மீக உரிமையை இழந்து விட்டது. எனவே உடனடியாக அறிவாலயத்திலிருந்து வெளியேற வேண்டும்..
2.கட்சிப் பணிகளில் இளைஞர்களை மேலும் தீவிரமாக ஈடுபடுத்தும் வகையில் மத்திய அமைச்சரவையில் சிறப்பாக செயல்பட்டு வரூம் திரு.தயாநிதிமாறன் கட்சி பணிகளுக்காக திரும்ப அழைக்கப்படுகிறார். அதன் காரணமாக அவர் தனது ராஜினாமா கடிதத்தினை பிரதமரிடம் சமர்ப்பிக்க கட்சி தலைமை கட்டளையிட்டிருக்கிறது.
3.மதுரையில் வன்முறையில் ஈடுபட்டதாக தெரியும் அனைத்து கழகத்தவர்களும் மறு அறிவிப்பு வரும் கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
4.திரு.அழகிரி நடந்த சம்பவங்களுக்கு தார்மீக பொறுப்பினையேற்று பாதிக்கப்பட்டவர்களிடம் வரூத்தம் தெரிவித்து தேவையான நஷ்டஈடுகளை செய்யவேண்டும். அதுவரை கட்சி கட்டுப்பாடுகளை மீறியதற்காகாஅவர் கட்சியில் இருந்து இடைநீக்க்கம் செய்யப்படுகிறார்.
இதை கலைஞர் செய்வாரா...?
நடந்த சம்பவங்கள் குறித்த அழகிரியின் பேட்டியாக தினமலர் தந்துள்ள செய்தி....
கருத்துக்கணிப்பு வெளியிட்ட ஜென்மங்கள் நேரில் வரட்டும்: மு.க. அழகிரி சவால்
மதுரை: கருத்துக்கணிப்பு வெளியிட்ட ஜென்மங்கள் நேரில் வரட்டும். யாருக்கு ஆதரவு என தெரிந்து கொள்ளட்டும் என முதல்வர் கருணாநிதி மகன் அழகிரி சவால் விடுத்தார்.
மதுரையில் நிருபர்களிடம் மு.க. அழகிரி கூறியதாவது: கருத்துக்கணிப்பு வெளிவந்த அந்த நாளிதழை நான் படிப்பதே இல்லை. தலைவர் (கருணாநிதி) மீது ஆணையாக இதை சொல்கிறேன். கருத்துக்கணிப்பு வெளியிட்ட "ஜென்மங்கள்' நேரில் வரட்டும். தமிழகம் முழுதும் அழைத்துச்செல்கிறேன். எனக்கு எவ்வளவு ஆதரவு, அந்த ஜென்மங்களுக்கு எவ்வளவு ஆதரவு என்பதை தெரிந்து கொள்ளட்டும். இதை யார் செய்தார்களோ அவர்கள் மீது தலைவர் நடவடிக்கை எடுக்கட்டும். ஏற்கனவே யாரோ தெரிவித்த தவறான தகவலின் அடிப்படையில் என் மீது நடவடிக்கை எடுத்தனர். அதே போல இப்போதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் என்னை பற்றி கருத்துக்கணிப்பு எடுக்கலாம். கட்சிப் பதவியிலேயே நான் கிடையாது. இவ்வாறு இருக்கும் போது என் தம்பி (ஸ்டாலின்) இடத்திற்கு வரவேண்டும் என நான் எப்படி நினைப்பேன். கட்சிக்கு நல்லது செய்ய வேண்டும் என உழைக்கிறேன். எனவே கட்சி வளர்கிறது.
கருத்துக்கணிப்பை பார்த்து என் தம்பி என்னிடம் பேசி வருத்தப்பட்டார். அதை கண்டித்தார். தமிழ்ப் புத்தாண்டு அன்று தலைவரின் வாழ்த்துச் செய்தியை கூட அந்த நாளிதழ் வெளியிடவில்லை. நான் எதற்கும் ஆத்திரப்படவில்லை. பதவிக்கு வரவேண்டும் என்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த கருத்துக்கணிப்பை வெளியிட தேவையே இல்லை. இப்போது தேர்தலா வருகிறது? தேர்தல் நேரம் என்றால் நான் பதவிக்கு போட்டியிடுகிறேன் என்றால் கருத்துக்கணிப்பை வெளியிடலாம்.
"அவர்கள்' நிறைய பணம் வைத்துள்ளனர். பணத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என நினைக்கின்றனர். அது தவறானது. தலைவருக்கு பொன்விழா நடக்க இருக்கும் இந்த நேரத்தில் அவருக்கு மனகசப்பையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளனர்.
பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது பற்றி எனக்கு தகவல் இல்லை. அவர்களாகவே வேண்டும் என்றே இதை செய்திருக்கலாம். இவ்வாறு அழகிரி கூறினார்.
17 Comments:
//இதை கலைஞர் செய்வாரா...?//
இல்லீங்கோ...
இலவச கலர் டிவி திட்டத்தில் குறை இருந்தால் தூக்கு மேடைக்குப் போகத் தயார்: அதிமுகவுக்கு கருணாநிதி சவால்
- தலைவர் ரொம்ப பிஸி ;) :(
அண்ணே...
இந்த நாடும் இந்தநாட்டுமக்களும் நாசமா போகட்டும்'ன்னு வசனம் எந்த படத்திலே? யாரு எழுதுனது???
அப்பவே நெனச்சே, அழகிரிய உசுப்பேத்த போதுனு. இவிங்க பங்காளி சண்டக்கி ஊருகா, சம்பத்தமில்லாத 4 உயிரு. என்னத்த சொல்ல, it's just beginning.
பொன்ஸ், ராம், டண்டணக்கா...
எப்படீங்க கலைஞர இம்புட்டு கரெக்ட்டா புரிஞ்சி வச்சிருக்கீங்க....ம்ம்ம்ம்ம்
இப்பத்தான் சன் டீவி பார்த்தேன் வழக்கம்போல வழவழ கொழகொழன்னு ஒரு அறிக்கைவிட்டிருக்கார்...
விசயகாந்துக்கு கலைஞர் ரத்னகம்பளம் விரிச்சிக்கொடுக்கிறாரோன்னு சந்தேகமா இருக்கு...அவர் பெரிய ராஜதந்திரி பசங்க மேல நம்பிக்கை இல்லாம விசயகாந்து வரட்டும்னு செய்யறார்போல...நம்ம சிற்றறிவுக்கு எட்டல...
பங்காளி, நீங்க ரொம்ப மானரோசம் உள்ளவருன்னு தெரியுது. அப்படியே இருந்துக்கிருவோம்.
// இராம் zei...
அண்ணே...
இந்த நாடும் இந்தநாட்டுமக்களும் நாசமா போகட்டும்'ன்னு வசனம் எந்த படத்திலே? யாரு எழுதுனது??? //
அநேகமா அந்தப் படம் தேர்தல் தோல்விக்கு அப்புறமா வந்திருக்கும்.
சீனியர்,
கவனிச்சீங்களா!!, விஜயகாந்தின் அறிக்கை கலைஞரின் அறிக்கைக்கு முன் சன் செய்திகளில் காட்டப்பட்டது
// இராம் zei...
அண்ணே...
இந்த நாடும் இந்தநாட்டுமக்களும் நாசமா போகட்டும்'ன்னு வசனம் எந்த படத்திலே? யாரு எழுதுனது??? //
அநேகமா அந்தப் படம் தேர்தல் தோல்விக்கு அப்புறமா வந்திருக்கும்.
ஜிரா,
திரைப்படத்துக்காக எழுதிய வசனத்தை நிஜ வாழ்க்கையோடு குழப்பிக்கொள்ளும் வீணர்கள்'ன்னு யாராவது அறிக்கை விடுவாங்களா???
ஹி ஹி
வினையூக்கி...
நானும் கவனிச்சேன்...எனக்கென்னவோ விசயகாந்த் என்கிற கருவேப்பிலை இப்போது சன் டீவிக்கு தேவைப்படுகிறது.
வைக்கோ இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி சன் டிவியில் தன் திருமுகம் காட்டப்பெறும் வாய்ப்பினை பெற வாழ்த்துவோம்...ஹி..ஹி..
//திரைப்படத்துக்காக எழுதிய வசனத்தை நிஜ வாழ்க்கையோடு குழப்பிக்கொள்ளும் வீணர்கள்'ன்னு யாராவது அறிக்கை விடுவாங்களா??? //
ராமு...ஹி..ஹி...
உம்ம சொல்லி குத்தமில்லையா...எல்லாம் அந்த மண்ணோட வாகு அப்படி...கலக்குங்க..கலக்குங்க...
ஜீரா...
கலைஞர் இந்த மாதிரி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இப்போது எதிர்பார்க்கிறேன். அதை விடுத்து குடும்பம் என மூடி மறைத்தால் அது தி.மு.க வை மேலும் பலவீனமாக்கும் என்கிற நியாயமான கவலை எனக்கு உண்டு.
தி.மு.க வின் மீது எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும்...இட ஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளுக்காகவாவது தி.மு.க வலுவோடு இருக்க வேண்டுமென நினைப்பவன் நான்.
// பங்காளி... zei...
ஜீரா...
கலைஞர் இந்த மாதிரி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இப்போது எதிர்பார்க்கிறேன். அதை விடுத்து குடும்பம் என மூடி மறைத்தால் அது தி.மு.க வை மேலும் பலவீனமாக்கும் என்கிற நியாயமான கவலை எனக்கு உண்டு.
தி.மு.க வின் மீது எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும்...இட ஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளுக்காகவாவது தி.மு.க வலுவோடு இருக்க வேண்டுமென நினைப்பவன் நான். //
பங்காளி பொதுவில் எல்லாரும் ஒரு தவறு செய்து விடுகிறார்கள். கருணாநிதியை எதிர்த்தால் அது ஜெயலலிதா ஆதரவு என்று. ஆனால் ஜெயலலிதாவை எதிர்த்தது இன்னும் என்னுடைய எதிர்ப்பு உயிரோடுதான் இருக்கிறது. ஆனால் சென்ற தேர்தல் வரைக்கும் கருணாநிதிக்குக் கொடுத்த வந்த ஆதரவு இந்தத் தேர்தலில் இருந்து எதிர்ப்பாகவே போயிற்று. கட்சியின் கொள்கைகள்..தேர்தல் அறிக்கை...கூட்டணிக்கட்சியினரை நடத்தும் விதம்..உட்கட்சி ஜனநாயகம் என்று திமுக அதிமுகவாகி விட்டது என்பது என் கருத்து. இனிமேல் எதிர்பார்ப்பு எதுவுமில்லை. திமுக வந்து தமிழனைக் காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கையெல்லாம் போயே போச்சு. அவனவன் அவனவனக் காப்பாத்தீக்கோங்கப்பா!
//// இராம் zei...
// இராம் zei...
அண்ணே...
இந்த நாடும் இந்தநாட்டுமக்களும் நாசமா போகட்டும்'ன்னு வசனம் எந்த படத்திலே? யாரு எழுதுனது??? //
அநேகமா அந்தப் படம் தேர்தல் தோல்விக்கு அப்புறமா வந்திருக்கும்.
ஜிரா,
திரைப்படத்துக்காக எழுதிய வசனத்தை நிஜ வாழ்க்கையோடு குழப்பிக்கொள்ளும் வீணர்கள்'ன்னு யாராவது அறிக்கை விடுவாங்களா???
ஹி ஹி //
இன்னும் விடலையா ராமு...விட்டிருக்கனுமே...ஆட்டோ வருதான்னு ஜன்னல் வழியா எட்டிப்பாரு.
/உம்ம சொல்லி குத்தமில்லையா...எல்லாம் அந்த மண்ணோட வாகு அப்படி...கலக்குங்க..கலக்குங்க...//
பின்னே ஊருக்குள்ளே என்ன நடக்குதுன்னு போன் பண்ணிக் கேட்டா அவங்களுக்கும் ஒன்னும் தெரியலை.. :(
காலையிலிருந்தே டிவி சேனல்ஸ் எல்லாமே ப்யூஸ் பிடுங்கிட்டாங்களாம்.... நல்லவேளை அவங்க கையிலே டெலிகாம் இல்லை... இருந்துருச்சுன்னா விளங்கிரும் இந்த தமிழ்நாடு :(
//இன்னும் விடலையா ராமு...விட்டிருக்கனுமே...ஆட்டோ வருதான்னு ஜன்னல் வழியா எட்டிப்பாரு.//
ஆதங்கத்தை சொன்னா பொதுமாத்து வாங்கித்தான் சாவணுகிறதும் இங்க இருக்கிற கொடுமைதானே :(((
/*கலைஞர் இந்த மாதிரி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இப்போது எதிர்பார்க்கிறேன். */
ஒங்க அப்புராணிதனத்துக்கு அளவே இல்லீயா :). அதிக பட்சமா, பங்காளி & மச்சான் பசங்களோட tele-conference மூலம் இவரு mediate பண்ண ஒரு பஞ்சாயத்து நடக்கும்.
/* இட ஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளுக்காகவாவது தி.மு.க வலுவோடு இருக்க வேண்டுமென நினைப்பவன் நான். */
I believe Karunanidhi will vehemently get it for people in his lifetime. But D.M.K....belongs to family :(
ராமு...விட்டிருக்கனுமே...ஆட்டோ வருதான்னு ஜன்னல் வழியா எட்டிப்பாரு.//
ஆதங்கத்தை சொன்னா பொதுமாத்து வாங்கித்தான் சாவணுகிறதும் இங்க இருக்கிற கொடுமைதானே :(((
///
i am waiting......
/*காலையிலிருந்தே டிவி சேனல்ஸ் எல்லாமே ப்யூஸ் பிடுங்கிட்டாங்களாம்.... */
ராமு, அந்த மண்ணுலருந்து வந்துட்டு, இத போன் பண்ணி கேக்குறீயேப்பா... தம்பிக்கு மதுரதானா?
அரசு இதுவரை உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. ம்ம்ம்ம்ம்
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை தலைவரே...உண்மையிலேயே நீங்கள் ஜனநாயகத்திற்கு மதிப்பு கொடுப்பவர் என்றால் தவறு செய்தவர்கள் மீது கடுமையான மேல் நடவடிக்கையெடுங்கள்...
Post a Comment