Thursday, May 10, 2007

ரன்னிங் கமெண்ட்ரி கேட்ட அழகிரி

தினகரன் அலுவலகத்தில் ரவுடி கும்பல் நடத்திய கொலைவெறித் தாக்குதலை செல்போன் மூலம் ரன்னிங் கமென்ட்ரியாக கேட்டு ரசித்துள்ளார் அழகிரி.

வரலாறு காணாத அளவுக்கு வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு மதுரையே நிர்மூலமாக்கிய அழகிரியின் அடாவடித்தனத்தை கண்டு அவரது ஆதரவாளர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர். தினகரன் அலுவலகத்தில் கொலைகார கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதல் குறித்து பெயர் வெளியிட விரும்பாத, அழகிரியின் ஆதரவாளர் ஒருவரே கண்கலங்க கூறியதாவது:

அழகிரியுடன் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் அரசு அதிகாரி பாஸ்கர். அவரிடம்தான் தினகரன் பத்திரிகையை எரிக்கும்படி அழகிரி கூறினார். அழகிரியின் ஆதரவாளர்களை தொடர்பு கொண்ட பாஸ்கர், Ôதினகரனை எரிக்க வேண்டும் என்று அண்ணன் சொல்கிறார். உடனே ஏற்பாடு செய்யுங்கள்Õ என்று கூறினார்.

அதன்பிறகே, பல இடங்களில் தினகரன் பத்திரிகையை எரித்தனர். மதுரை மட்டுமின்றி பல ஊர்களிலும் இதேபோல தினகரன் பத்திரிகைகளை கட்டுக்கட்டாக போட்டு எரித்தனர். Ôசொன்னதைச் செய்துவிட்டோம். பல இடங்களில் தினகரன் பத்திரிகையை நமது ஆட்கள் கொளுத்திவிட்டனர்Õ என்ற தகவலை அழகிரியிடம் பாஸ்கர் தெரிவித்தார்.

இதைக் கேட்டதும் அழகிரி, கோபத்தில் எரிந்து விழுந்தார். Ôதினகரனை கொளுத்துடான்னா, பேப்பரையாடா கொளுத்தறது. பத்து பேப்பரை கிழிச்சு எரிக்கிறதுதான் வீரமாடா? போங்கடா... போய் அந்த பத்திரிகை ஆபீசை கொளுத்துங்கடாÕ என்று திட்டினார். பயந்து போன பாஸ்கர், அழகிரி சொன்ன விஷயத்தை உடனே எல்லாருக்கும் போனில் சொன்னார்.

அவ்வளவுதான். அடியாட்கள், ரவுடிகள் எல்லாரும் கும்பல், கும்பலாக தினகரன் அலுவலகத்துக்கு படையெடுத்துச் சென்று சூறையாடினர். பெட்ரோல் குண்டுகளை வீசினர். அலுவலக வளாகத்தில் நின்றிருந்த வாகனங்களை எரித்தனர். ஊழியர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்.
காலை 9 மணிக்கு தொடங்கிய தாக்குதல் நான்கு மணி நேரம் நடந்தது. அழகிரியுடன் இருந்த பாஸ்கள், நிமிடத்துக்கு நிமிடம் அடியாட்களை செல்போனில் தொடர்பு கொண்டு என்ன நடக்கிறது என கேட்டபடி இருந்தார். அவர்களும் தங்களின் வீரபிரதாபங்களைப் பற்றி ரன்னிங் கமெண்ட்ரி போல செல்போனில் பாஸ்கரிடம் தெரிவித்தனர். அதை அப்படியே அழகிரியிடம் பாஸ்கர் சொல்ல, அதை அழகிரி கேட்டு ரசித்தார்.

"இதைத்தான்டா நான் எதிர்பார்த்தேன்" என்று கூறி சிரித்தார். அழகிரிக்கு எப்போதுமே சகிப்புத் தன்மை என்பது துளியும் கிடையாது. அதனால், சின்ன விஷயங்களுக்கு கூட, காட்டுமிராண்டித்தனமாக தாக்கச் சொல்வார்.

இவ்வாறு அழகிரி ஆதரவாளர் தெரிவித்தார்.

தகவல்- தமிழ்முரசு

5 Comments:

பெருசு said...

பங்காளி

ஆட்டோ வருதுன்னு நெனக்கிறேன்.

எதுக்கும் உங்க TVS-50 ஐ பொடக்காளி
பக்கம் வெச்சுக்கங்க.

ஓடறதுக்கு வசதியா இருக்கும்.

பொன்ஸ்~~Poorna said...

பங்காளி,
தமிழ்முரசு சொல்வதை எல்லாம் எத்தனை தூரம் நம்ப முடியும்னு தெரியலைங்க.. நடக்கிறதெல்லாம் ஏதோ நாடகம் மாதிரி இருக்கு! என்ன, மக்கள் உயிரைப் பணயம் வச்சி பெரிய இடத்து நாடகம்...

பங்காளி... said...

பெரிசு.....

ஆட்டோ வரும்றீங்களா...அப்ப நாம பெரியாளாகறோம்னு அர்த்தமா...ஹி..ஹி...

பங்காளி... said...

பொன்ஸ்...

எனக்கென்னவோ இது ட்ராமா மாதிரித்தான் தெரியுது....ஒரு மாதிரியான டேமேஜ் கண்ட்ரோல் எக்ஸர்சைஸ்....பார்ப்போம்...என்னதான் பண்றாங்கன்னு

Thamizhan said...

தமிழ்நாட்டில் காலிகளை உண்டாக்குவ்திலும்,காலித்தன்ங்களுக்கு மூலகாரணங்களாக இருப்பதும் உணர்ச்சிகளை காசாக்க அலையும் பத்திரிக்கை விபச்சாரந்தான் முதலிடம் பெறும்.
பத்திரிக்கை என்ற பெயரிலே பச்சை விபச்சாரம் செய்து பணம் பறிப்பவர்கள் பத்திரிக்கை சுதந்திரம் என்று அழும்போதுதான் அவர்கள் மற்றவர்களுக்கு இழைக்கும் அநியாயம் தெரியும்.
காலித்தனம் ஒடுக்கப்பட வேண்டுமானால் பத்திரிக்கை,தொலை காட்சிகள் கொஞசமாவது நேர்மை,உண்மை கடைப் பிடித்துத் தங்கள் மரியாதையைத் திரும்பப் பெறவேண்டும்.