Thursday, May 17, 2007

சத்யசாய் பாபா இன்று கோவை வருகை


கொடைக்கானலில் இருந்து புட்டபர்த்தி செல்லும் வழியில், ஸ்ரீ சத்ய சாய் பாபா இன்று ( 18ம் தேதி ) காலை 11.00 மணிக்கு கோவை வருகிறார். ஆண்டுதோறும் கோடைக் காலத்தில் தமிழக பக்தர்களுக்கு தரிசனம் வழங்க வசதியாக, ஸ்ரீ சத்ய சாய் பாபா கொடைக்கானலில் இரண்டு வாரம் தங்குவது வழக்கம். கடந்த ஏப்., 26ல் மதுரை வழியாக கொடைக்கானல் வந்திருந்தார். காலை, மாலை இரண்டு வேளையிலும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

ஏராளமான வெளிநாட்டு பக்தர்களும் ஆசி பெற்றனர்.புட்டபர்த்தி அல்லது பெங்களூரூவில் ஸ்ரீ சத்ய சாய் பாபாவை அருகில் சென்று பார்க்க இயலாது. ஆனால், கொடைக்கானலில் பக்தர்கள் இருக்கும் இடத்துக்கே வந்து ஸ்ரீ சத்ய சாய் பாபா ஆசி வழங்கினார். மிக அருகில் இருந்து தரிசிக்கும் வாய்ப்பு இருந்ததால், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

மூன்று வாரம் கொடைக்கானலில் தங்கியிருந்த சத்ய சாய் பாபா, இன்று ( 18ம் தேதி ) கொடைக்கானலில் இருந்து பழநி, உடுமலை, பொள்ளாச்சி வழியாக காலை 11.00 மணிக்கு கோவை வருகிறார். ஆவராம்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில், பக்தர்களுக்கு அருளாசி வழங்க உள்ளார். அதன் பின், மதியம் தனி விமானத்தில் புட்டபர்த்தி செல்கிறார்.

13 ஆண்டுகளுக்கு பின், ஸ்ரீ சத்ய சாய் பாபா கோவை வர இருப்பதால், கோவை பக்தர்கள் மிக ஆவலுடன் ஆசி பெற காத்திருக்கின்றனர்.

2 Comments:

வடுவூர் குமார் said...

தனி விமானத்தில் புட்டபர்த்தி செல்கிறார்.
இதை பார்த்தவுடன் இது தான் ஞாபகம் வந்தது.புட்டபர்த்தி தொடரில் குறிப்பிட மறந்தது.
புட்டபர்த்தியில் இந்த விமான ஓடு தளம் நிறுவியது L&T-ECC.

பங்காளி... said...

குமார்...

அந்த தொடரை இன்னும் சுவாரசியமாக எடுத்துச்செல்வீர்கள் என நினைதேன்....

திரும்ப முயற்சிக்கலாமே...யோசியுங்கள்.