Monday, March 19, 2007

Sir Bob Woolmer(1948-2007)



சர்வதேச கிரிக்கெட் உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது சர்.பாப் ஊல்மரின் அகால மரணம். அன்னாரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், இத் துயரத்தினை தாங்கும் தேவையான மன உறுதியினை தருமாறு எல்லோருக்கும் பொதுவான இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

அயர்லாந்திற்கெதிரான அதிர்ச்சி தோல்வி தந்த மன உளைச்சலே அவரை இந்த முடிவுக்கு இட்டுச் சென்றிருக்கும் என கூறப்படுகிறது.கடந்த இரண்டு நாட்களாய் ஊடகங்களும், பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களும் வாய்க்கு வந்தபடி அவரை மட்டு மரியாதையில்லால் திட்டி தீர்த்தவர்கள் இனி அவரை வாயார புகழ்வார்கள். இதனால் யாருக்கு என்ன பயன்....வாழும் காலத்தில் மதிக்கப்படாமல் போவதை விட பெரிய கொடுமை ஏதுமில்லை.

இந்தியத் தாயின் மடியில் பிறந்த எண்ணற்ற தவப்புதல்வர்களில் பாப் வூல்மரும் ஒருவர் என்பதை இந்த கணத்தில் ஒரு இந்தியனாக பெருமையுடன் எண்ணிப்பார்கிறேன்.

அண்ணாரின் வாழ்வையும், அவரது சிறப்புகளையும் அவரது இந்த தளத்தில் சென்று பார்க்கலாம்.

அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

துயரத்துடன்...

பங்காளி...

6 Comments:

பங்காளி... said...

பாப் வூல்மரின் இந்திய தொடர்பினை விவரிக்கும் கட்டுரை தொடுப்பு...

http://www.bobwoolmer.com/kanpur.aspx

Avanthika said...

//வாழும் காலத்தில் மதிக்கப்படாமல் போவதை விட பெரிய கொடுமை ஏதுமில்லை///

well said Anna

நீங்க நல்லா சொல்லி இருக்கீங்க
இப்படி பேசறது ரொம்ப ஈசி, அதுவும் உண்மையா பேசராங்களானு தெரியாது,, to complete the formalities and to escape from the criticisms.... காலையில இருந்து மனசுக்கு கஷ்டமா இருக்கு. பாவம்..

வினையூக்கி said...

சீனியர், சரியான வர்த்தைகளில் அமைந்த அஞ்சலி பதிவு

அபி அப்பா said...

காலை எழுந்தவுடன் நான் கேள்விப்பட்ட முதல் செய்தியே இது தான். மனசு பாரத்தோட ஆஃபீஸ் வந்து...அதன் பிறகு கேள்விப்படும் எல்லாமே... இன்னிக்கு நான் மூட் அவுட்:((

பாப் வூல்மரின் ஆத்மா அமைதியடையா ஆண்டவனை வேண்டுகிறேன்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

....வாழும் காலத்தில் மதிக்கப்படாமல் போவதை விட பெரிய கொடுமை ஏதுமில்லை.//

சரிதான். :( இனி சிறப்புகளைப்
பட்டியலிட்டு அவருக்கு என்ன ??

சீனு said...

:(

//வாழும் காலத்தில் மதிக்கப்படாமல் போவதை விட பெரிய கொடுமை ஏதுமில்லை.//

I think this is human nature.

Recent news says that he might have committed suicide. But still, tomorrow we will be a ble to know the truth...