திரு.ராம் ஜெத்மலானி மீண்டும் பரபரப்பு வளையங்களுக்குள் வந்திருக்கிறார், இம்முறை ஜெசிகாலால் கொலைவழக்கில் குற்றவாளிக்காய் ஆஜராவதனால்....திறமையான புகழ்பெற்ற வழக்கறிஞரான இவர் இதற்குமுன்னரே இம்மாதிரியான வழக்கிகுகளில் பங்கேற்பதன் மூலம் நாடறியப்பட்ட நபராகிவிட்டார்.தான் சரியென நினைக்கும் கருத்துக்களுக்கு ஒத்துவராதவர் எவரையும் துளியும் சங்கோஜமின்றி சாடுவதில் ஜெத்மலானிக்கு நிகர் அவரே....கடந்த ஆட்சியின் போது முன்னாள் பிரதமர் வாஜ்பாயியை பகைத்துக் கொண்டதால் சட்டமந்திரி பதவியையே இழந்தவர்.
உயர்தட்டு மதுபான விடுதியொன்றில் மதுபரிமாறும் பெண்ணான ஜெசிக்காலாலை வாடிக்கையாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.-இது செய்தி.
ஏறத்தாழ இருநூறு பேர் குழுமியிருந்த அந்த விடுதியில் அரசியல்வாதியின் மகனான மனுசர்மாதான் அந்த கொலையைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு....வழக்கு நாடகமெல்லாம் நடந்தேறி மனு அப்பாவி என விடுதலை செய்யப்பட்டார்.-இது சரித்திரம் .
சர்வவல்லமை வாய்ந்த அரசியல்வாதியின் முன் ஜெசிக்காவின் நடுத்தரக்குடும்பன் பரிதாபமாய் தோற்றுப்போனது.....இனி வழக்கை நடத்த தங்களிடன் திராணி இல்லை என தங்களின் இயலாமையை கொட்டித்தீர்த்தது பாதிக்கப்பட்ட குடும்பம்.-இது அவலம்.
மற்ற தொலைக்காட்சிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில்,NDTV யின் உரிமயாளர் திரு.பிரணாய்ராய் திடீரென தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து இந்த அநீதியினை காணச் சகிக்காது தன்னுடைய ஊடகம் வாயிலாக நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் போராடினார்.-இது கருனை.
இவர்களின் அயராத முயற்சியினால் மான்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களின் இடையீட்டினாலும் இவ்வழக்கு மீண்டும் உயிர்கொடுக்கப்பட்டு நேர்மையான விசாரணை நடைபெற வழிவகை செய்யப்பட்டது.-இது சாதனை
NDTV யில் இருந்து பிரிந்து சென்ற திரு.ராஜ்தீப் சர்தேசாய் என்பவரால் துவக்கப்பட்ட CNNIBN, TRP ரேட்டிங்கில் முந்துவதை சமாளிக்க வேறுவழியின்றி பிரனாய் ராயால் தூக்கப்பட்ட ஆயுதம்தான் இந்த ஜெசிக்கா வழக்கு.பரபரப்பாக நடத்தப்பட்ட இந்த ஊடக நாடகத்திற்கு பெரிய நிறுவனங்கள் விளம்பரதாரர்களாய் பணத்தைக் கொட்ட, மக்களிடமிருந்து குறுஞ்செய்தி மூலமாக ஆதரவு திரட்டுகிறேன் பேர்வழியென ஏறத்தாழ 30 லட்சத்திற்கும் அதிகமான குறுஞ்செய்திகள் மூலமாக கிடைத்தபணம்....TRP ரேட்டிங்கில் கிடைத்த முன்னேற்றம்.-இது வியாபாரம்
மறுவிசாரனை துவங்கிவிட்டது,நாடே கவனிக்கிறது என்கிற பதட்டத்தில் விரைவாகவும் நேர்மையாகவும் நடவடிக்கைகள் துவங்கிவிட்டது.தன்னுடைய வியாபார விளையாட்டில் கிடைத்த வெற்றியினை தக்கவைத்துக் கொள்ள இவர்களே குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளியாக காட்டி அதிகபட்சத் தண்டனைதான் தரவேண்டுமென்கிற வகையில் நீதித்துறையையே நிர்பந்திக்கிற சக்தியாக காட்டிக்கொள்ள முயற்சிகளும் நிகழ்ச்சிகளும்..-இது அதிகப்பிரசங்கித்தனம்
இவர்கள்தான் வழக்கினை நடத்துவது போலவும், இவர்கள்தான் நீதிபதிகள் போலவும் தங்களை காட்டிக்கொள்வதில் சந்தோஷித்துக்கொண்டிருந்த இந்த சமூக காவலர்களுக்கு ராம் ஜெத்மலானியின் வரவு எரிச்சலையும், கோவத்தையும் கிளறியிருப்பதில் ஆச்சர்யமில்லை.இதையும் காசாக்க மற்ற ஊடகங்களும் களத்தில் குதிதிருக்கின்றன..இவர்களின் இப்போதைய இலக்கு ராம் ஜெத்மலானி.வழக்கில் அவர் வாதிடக்கூடாது என மிரட்டாத குறையாக அவரை நிர்பந்திக்க முயற்சிகள் நடக்கிறது.இதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை உத்திகளும் நிகழ்சிகளாக தினம்தோறும் அரங்கேறுகிறது.போட்டி போட்டுக்கொண்டு பணத்தை அள்ளிக்கொண்டே இந்த சமூக சேவையும் நடக்கிறது.-இது அயோக்கியத்தனம்.
இந்த நிர்பந்தங்களுக்கு கொஞ்சமும் மசியாத இந்த கிழவர் இப்படி கர்ஜிக்கிறார்..."Who the hell is the Press to deicide who is indefensible?... I am a great lover of the Press and a great lover of the freedom of speech and expression. But please recognise your limits."...இந்த இனைப்பை பாருங்கள் அதன் பிறகு புரியும்.-இவர் சிங்கமென..
Wednesday, November 08, 2006
ஜெத்மலானி.-இவர் சிங்கம்!
பதிஞ்சது பங்காளி... at 7:49 PM
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
ராம்ஜெத்மலானி 17 வயதிலேயே பார் கவுன்சில் உறுப்பினர் ஆகி சாதனை படைத்தவர். சுமார் 65 ஆண்டுகளுக்கும் மேல் குற்றவியல் துறையில் அனுபவம் உள்ளவர். அவர் ஒரு வழக்கறிஞர். வழக்கறிஞர் தொழிலுக்கு குற்றவாளி என்ற பாகுபாடு கிடையாது. ராம்ஜெத்மலானி இப்படிப்பட்ட வழக்குகளை ஏற்கக்கூடாது என்று கூற எவருக்கும் உரிமை கிடையாது. இது அவரின் தனிப்பட்ட விருப்பம்.
அது மட்டுமா..போலீஸ்தான் ஜெசிகாவை சுட்டதுனும் சொல்லி இருக்கிறார் இவர்..
இப்ப எல்லாம் ரொம்ப analayse பன்ன ஆரம்பிச்சுடீங்க,ரொம்ப நல்லா இருக்கு.. ஏதாவது Phd வாங்குற எண்ணம் இருக்கா..
இது யோசிச்சு எழுத எவ்ளோ நேரம் ஆகியிருக்கும்.. அதுக்கு பலனா ஹ்ம்ம்ம் எல்லாரும் படிச்சா நல்லா இருக்கும்..
நீங்களும் அதுக்கு கொஞ்சம் மனசு வச்சா இன்னும் நல்லா இருக்கும்...
Post a Comment