Thursday, November 16, 2006

ராஸ்கல்ஸ்.....

கடந்த மூன்று நாட்களாய் மதுரையில் சுற்றிக்கொண்டிருந்தேன், வேலைகள் முடிந்த கையொடு ஆத்தா மீனாட்சியிடம் அட்டெண்டன்ஸ் கொடுத்துட்டு வருவோம் என 15-11-2006 காலை 10 மணிக்கு கோவிலுக்கு போனேன்.

என்னை மாதிரியான ட்டிப்பிக்கல் மதுரைக்காரய்ங்களுக்கு மீனாட்சியம்மன் தாய்மையின் அம்சம், அம்மா மாதிரி ஏன் அம்மாவுக்கும் மேலே...குறையோ,நிறையோ அங்கே போய் ஒரு பாட்டம் எல்லாத்தையும் கொட்டித் தீர்த்துவருவது எங்களின் வாடிக்கை, வாழ்வின் தவிர்க்கமுடியாதவைகளில் மீனாட்சியும் ஒருத்தி.என் வரையில் மீனாட்சி வெறும் கடவுள் இல்லை, அதைத் தாண்டிய சினேகமான உறவுடையவள்.

என்ன பில்டப் ஓவராப் போகுதேன்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா....மேட்டருக்கு வருகிறேன். பத்து மணிக்கு ஆவலாய் கருவறையை நெருங்கினால் நடை சாத்தியிருந்தது. ஒரே ஒரு அர்ச்சகர் கையில் தட்டுடன் குங்குமம் கொடுத்துக் கொண்டிருந்தார்.மிகுந்த ஏமாற்றத்துடன் அவரை அணுகி "என்னங்க கோவில்ல ஏதும் துக்கமா? என ஏமாற்றத்தினால் விளைந்த கவலையுடன் கேட்டேன். அவரோ அலட்சியமாக "இன்னிக்கு மீனாட்சி ருதுவான நாள் அதான் நடை சாத்திருக்கோம்" எனக் கூற அதிர்ந்து போனேன். பதினொன்னரைக்கு நடை திறப்போம் என அருள் பாலித்தார் அந்த அர்ச்சகர்.

இயலாமை பொங்க ஆத்திரமும் கோவமுமாய் பொற்றாமரைகுளத்தின் படிக்கட்டுகளில் வந்து உட்கார்ந்தேன்.....அப்போது தோன்றிய வார்த்தைதான் இப்பதிவின் தலைப்பு.இதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை...ஏண்டா ஆத்தாவ இப்படி அசிங்கப்படுத்தறீங்க, உங்க வீட்டு பொம்பளைங்களுக்கு வருசாவருசம் இப்ப்படித்தான் செய்வீங்களா? என கேள்விகள் பொங்க, எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடுத்த ஒன்னரை மணி நேரத்திற்கு குமுறலாய் அமர்ந்திருந்தேன்.

இது யார் தவறு, இத்தகைய செயல்கள் தேவைதானா, எத்தனையோ சம்பிரதாயங்களும்,சடங்கு முறைகளும் காலப்போக்கில் சமகால உணர்வுகளுக்கேற்ப மாற்றப் பட்டிருக்கிற நிலையில் இந்த மாதிரி மகளிரை இழிவு செய்யும் சடங்குகள் தேவைதானா?....தாய்மையின் அம்சத்தை கொச்சை படுத்தும் முயற்சிகளை தடைசெய்ய வேண்டுமல்லவா?....இதைப் படிக்கும் அன்பர்கள் எவரேனும் தமிழக அரசின் கவனத்திற்கு இந்த நிகழ்வுகளை எடுத்துக்காட்டி தடை விதிக்கச் செய்தால் வாழ்நாளெல்லாம் நன்றியுடையவனாயிருப்பேன்....

என் வாழ்வில் ரொம்பவும் வேதனைப்பட்ட தருணங்களில் இதுவும் ஒன்று....ம்ம்ம்ம்

4 Comments:

doondu said...

பங்காளி,

சூப்பர் கேள்வி. எனக்கு தனிமடல் இடவும்.

சேதுக்கரசி said...

கனிமொழியின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது...

வடநாட்டின் குளிருக்கு
கால்சராயும் பூட்சோடும் பூசாரி
மோட்டார் போட்டாகிவிட்டது
பெருமாள் கோயில் தேருக்கு
திருப்பதிக்குப் போகமுடியாவிட்டால்
தி.நகர் கிளையில் காணிக்கை செலுத்தலாம்
மூணுநாள் விரதம்
ஐயப்பனுக்குப் போதும்
அரே ராமாவில்
ஆங்கிலேய அர்ச்சகர்
இந்தோனேசியக் கோவிலில்
செருப்புப் போட்டுக் கொள்ளலாமாம்
கணேசனுக்கும்
கோழிக்கறி படையல்
சட்டம் எழுதியாயிற்று
எல்லா சாதியும்
கோயிலுக்கு வர
எந்நாடு போனாலும்
தென்னாடுடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள் மட்டும்
ஆவதே இல்லை

- கனிமொழி

அப்புறம்... மீனாட்சி மேல் அவ்வளவு பிரியமென்றால் அவசியம் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய "மீனாட்சி சுப்ரபாதம்" ஆல்பம்/குறுந்தகடு வாங்கிக் கேளுங்கள். மிகவும் அருமை. சுப்ரபாதம் சமஸ்கிருதத்தில் உள்ளது. சில பாடல்கள் அழகிய தமிழில் உள்ளன.

சேதுக்கரசி said...

கனிமொழியின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது...

வடநாட்டின் குளிருக்கு
கால்சராயும் பூட்சோடும் பூசாரி
மோட்டார் போட்டாகிவிட்டது
பெருமாள் கோயில் தேருக்கு
திருப்பதிக்குப் போகமுடியாவிட்டால்
தி.நகர் கிளையில் காணிக்கை செலுத்தலாம்
மூணுநாள் விரதம்
ஐயப்பனுக்குப் போதும்
அரே ராமாவில்
ஆங்கிலேய அர்ச்சகர்
இந்தோனேசியக் கோவிலில்
செருப்புப் போட்டுக் கொள்ளலாமாம்
கணேசனுக்கும்
கோழிக்கறி படையல்
சட்டம் எழுதியாயிற்று
எல்லா சாதியும்
கோயிலுக்கு வர
எந்நாடு போனாலும்
தென்னாடுடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள் மட்டும்
ஆவதே இல்லை

- கனிமொழி

அப்புறம்... மீனாட்சி மேல் அவ்வளவு பிரியமென்றால் அவசியம் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய "மீனாட்சி சுப்ரபாதம்" ஆல்பம்/குறுந்தகடு வாங்கிக் கேளுங்கள். மிகவும் அருமை. சுப்ரபாதம் சமஸ்கிருதத்தில் உள்ளது. சில பாடல்கள் அழகிய தமிழில் உள்ளன.

மங்கை said...

அடப்பாவிகளா...இது என்னது கேள்விபடாத ஒன்னா இருக்கே.. இது எல்லாம் யாரு முடிவு பண்ணி இப்படி சாமியவே விலக்கி வைக்கிறாங்க?