ஜனவரி 23,1897 ல் பிறந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடந்த மாதம்(அக்டோபர்27,2006) தனது 109 வயதில் மத்திய பிரதேச மாநிலம், அசோக்நகர் மாவட்டத்தில் குணா அருகில் உள்ள சாய்ஜி என்கிற கிராமத்தில் முதுமையின் காரணமாய் இயற்கை எய்தினார்.....
கிறு கிறுன்னு தலை சுத்துதா?....அல்லது பதிவெழுதும் பங்காளியின் மூளைத்திறத்தை பற்றிய சந்தேகம் வருகிறதா?....ஹி..ஹி...ம்ம்ம்...வேறு வழியே இல்லை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்....வரும் தகவல்கள் அப்படி....
பல்வேறு மர்மங்கள் சூழ்ந்த நேதாஜியின் வாழ்வில் இன்னொரு மர்மம்தான் இந்த நிகழ்வு...சரி இனி தகவல்களுக்குள் போவோம்....
கடந்த 30 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் வசித்துவரும் 'பாபா லால்ஜி மஹாராஜ்'கடந்த மாதம் 27ம் தேதி தன் மரணத்திற்கு முன்னால் அந்த ஊரின் முன்னாள் தலைவர் திரு.ஜி.எஸ்.ரகுவன்ஷி உட்பட சிலரிடம், தாண்தான் நேதாஜி என அறியப்படும் சுபாஷ் சந்திரபோஸ் எனவும், தனது இறுதிச் சடங்கு முடியும் வரை இத்தகவலை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது எனக் கூறியதாக சொன்னதே இத்தனை பரபரப்புக்கும் காரணம்.
கடந்த 30 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் ஆசிரம் ஒன்றை நடத்தி வந்தாலும் அதற்கு முந்தைய இருபது வருடங்களை இந்த ஊரின் பக்கதில் உள்ள 'ச்சக் ச்சிரோலி' என்கிற கிராமத்தில் வாழ்ந்திருக்கிறார். இவரது பூர்வீகம் யாருக்கும் தெரியவில்லை. மக்கள் இவரை யாரென கேட்ட போதெல்லாம்...உண்மையைச் சொன்னால் இந்த இடம் மக்கள் வெள்ளத்தால் நிறையும் என்று கூறியிருக்கிறாரே ஒழிய தன்னைப் பற்றி இறுதி வரை சொன்னதில்லையாம்.
இவரது தலையிலும்,உடலிலும் இருந்த ஆழமான தழும்புகளைப் பற்றிக் கூறும் போது அவை விமானத்தில் இருந்து விழுந்ததால் ஏற்பட்டதென்று கூறியிருக்கிறார். நேதாஜியின் மரணம் பற்றிய பேச்சுக்கள் வரும்போதெல்லாம் அதை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறார் இந்த பாபாஜி...சமயங்களில் யாருக்கும் சொல்லாமல் எங்கேயோ சென்று வந்ததாகவும் கூறுகிறார்கள்...அநேகமாக டில்லிக்குப் போயிருக்கலாம் எனச் சொல்கிறார்கள்.
இந்த தகவல்கள் கிளம்பியது போலீசார் பூர்வாங்க விசாரணையை துவக்கியிருப்பதாக மாவட்ட காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.கிடைக்கும் முதற்கட்ட ஆதாரங்களைக் கொண்டு தேவைப்பட்டால் அவரின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்படும் என கூறியிருக்கிறார்.அவரது ஆசிரமத்தை சோதனையிட்ட போது புத்தமதம் சம்பந்தமான பழைய புத்தகங்களும், பழைய ரயில் மற்றும் பேருந்து பயனசீட்டுகளும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய பழைய பத்திரிக்கை தகவல்களும் கிடைத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்....
இந்தியாவின் மாபெரும் தலைவர்களில் ஒருவரும்....அதிரடியான ஒரு மனிதர் இப்படி மறைந்து வாழ்ந்திருப்பாரா?.....அதற்கான அவசியமென்ன?....அரசாங்கம் இதுபற்றி இன்றுவரை அறியாமலிருந்திருக்குமா?....இப்படி நிறைய சந்தேகங்கள்...கேள்விகள்....குழப்பங்கள்.....ம்ம்ம்ம்ம்ம்
Tuesday, October 31, 2006
நேதாஜி மறைந்தார்....?
பதிஞ்சது பங்காளி... at 7:43 PM
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
இதே போல 1985 ஆம் ஆண்டு உபி மாநிலத்தில்,ஃபைசாபாத் நகரத்தில், பகவான்ஜி என்பவர் தன்னை சுபாஷ் சந்திர போஸ் என்று கூறிக்கொண்டிருந்தாராம். அவர் பார்பதற்கும் நேதாஜி போலவே இருந்தாராம்.. அவர் இறந்த போது அவர் வசித்து வந்த இடத்தில் முக்கியமான ஆவணங்கள் கிடைத்தாகவும் கூறப்படுகிறது.பின்னர் உபி அரசு இந்த ஆவணங்களை கைப்பற்றி தன் வசம் வைத்து உள்ளது.
நேதாஜியின் மறைவை பற்றி விசாரிக்கும் முக்கர்ஜி கமிஷன் அப்போது, DNA test செய்யவும் முடிவு செய்ததாம்.
இது நடந்தது 1985 இல்
நேதாஜியின் மறைவு குறித்த சர்ச்சை என்று தான் முடியுமோ....
வாங்க மங்கை...
நீங்க சொல்றது எனக்கு புது செய்தி...நேதாஜி வாழ்க்கை மர்மமாகவே இருப்பதன் காரணம் என்ன என்பதுதான் எனக்கு விளங்கவில்லை.....
பங்காளி, கலக்குங்க !!!
கலக்க மாட்டேங்குறார்...
பிஸி,,பிஸி னு சொல்லீட்டே ...
ஹி ஹி..அதுக்கு மேல நான் ஒன்னும் சொல்லலை...ம்ம்ம்
Post a Comment