Monday, November 20, 2006

நான் ஏன் கலந்துகொள்ளவில்லை

ஒரு வழியாக சென்னை வலைபதிவர்களின் கூட்டம் இனிதே நடந்தேறியிருக்கிறது.சைக்கிள் கேப்பில் சிக்ஸர் அடித்து இட்லிவடை ஹீ(ஜீ)ரோவாகிவிட்டார்.இப்படி இவர்களெல்லாம் சந்தோசமாய் கும்மியடித்துக் கொண்டிருந்த வேளையில் நான் எனது ஆடிட்டர் அலுவலகத்தில் தலையை சொறிந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன்.நவம்பர்31 க்குள் FBT(Fringe Benifit Tax) கட்டியாக வேண்டுமாம்.

குறைந்தது இரண்டு லட்சமாவது கட்டவேண்டியிருக்குமெனெ கலவரப்படுத்தி என்னை மதியத்திலிருந்து அவர் அலுவலகத்தில் தவமிருக்கச் செய்துவிட்டார்.ஐந்து மணிவாக்கில் அவர் அலுவலகத்தில் இருந்து கிளம்பிய போது எல்டாம்ஸ் ரோட்டுக்கும் கே.கே நகருக்குமான தூரம் என்னை அண்ணாநகருக்கு விரட்டியது.

அரை மனதோடு கோயம்பேடு ஜங்ஷன் நெருங்கியபோது கலவர சூழ்நிலை,விசயகாந்த் கட்சி அலுவலகத்திலிருந்து கும்பலாய் தொண்டர்கள் வெளியேறிக்கொண்டிருந்தனர். ஒரு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது, போலீஸார் குறுக்கும்நெடுக்குமாய் ஓட ஏதொ பிரச்சினையென விரைவாக அந்த இடத்தை கடக்க முனைந்தபோதுதான் கவனித்தேன் நாற்சந்தியில் நின்று கொண்டிருந்த அம்பேத்கார் மிஸ்ஸிங் ஆனதை....

பால வேலைகளுக்காக அவர் சிலையை அப்புறப்படுத்தப் போக அதனால் உணர்ச்சிவசப்பட்ட அன்பர்களின் வேலைதான் பஸ் கண்ணாடி உடைப்பு...நல்ல வேளையாக வாகனங்கள் தேங்குவதற்குள் தப்பித்து அண்ணா நகருக்குள் நுழைந்தேன்... குடும்பமே கிருஷ்னா ஸ்வீட்ஸில் மையம் கொண்டிருப்பது தெரியவர....அப்புறமென்ன நேற்று கிருஷ்னா ஸ்வீட்ஸ் ஓனரை சந்தோஷப்படுத்திய புண்ணியம் கிடைத்தது.... ஹி..ஹி...

வீட்டிற்கு வந்தால் இட்லிவடை படங்களை பரிமாறியிருந்தார்.சரி கூட்டம் நல்லா நடந்தா சரிதான்ன்னு மனசார வாழ்த்தீட்டு வலை மேய ஆரம்பித்தேன்.இன்னிக்கு நம்ம பொன்ஸ், லக்கிலுக், விக்கி, பெரியவர் டோண்டு பதிவுகளைப் பார்த்தபிறகு நான் அறிந்து கொண்டவைகள்.

பொன்ஸ் அழகாய் சிரிக்கிறார்,இனிமையான குரல்வளம்(?) உடையவர்...(மெய்யாலுமா தாயீ?...அதுக்காக அடுத்த மீட்டிங்கில் தமிழ்தாய்வாழ்த்து பாடுவேன்னெல்லாம் அடம் பிடிக்கக்கூடாது...ஹி...ஹி)

பெரியவர் ஜோசப்புக்கு நேற்றைய கூட்டம் பற்றி கொஞ்சம் மனவருத்தம்.

போண்டா இல்லாத வலைப்பதிவர் கூட்டத்தில் டோண்டு = திருவிழா கூட்டத்தில் தொலைந்த பிள்ளை(ச்ச்சும்மா டமாஸ் பெரியவர் கோவிக்கவேணாம்.)

வலைப்பதிவின் அடுத்த் கட்ட நகர்வில் என்ன பேசினார்களென தெரியவில்லை, நாம் ஒரு சுய உதவிக்குழு மாதிரி உருவாகலாம்...இந்த வகையில் செந்தழல்ரவியை எத்தனை பாராட்டினனலும் தகும்...கௌசல்யாவுக்கு உதவியதைப் போல நிறைய உருப்படியாய் செய்ய பேசியிருக்கலாம்....பேசவேண்டும்...பேசுவோம்.

ஒருவர் தன் சாதியைப் பற்றி தம்பட்டமடிக்காத வரையில் வலைப்பதிவில் சாதீயம் தொடர்பான சர்ச்சைகளுக்கு வாய்ப்பு குறைவே.


மாதமொருமுறை சந்திக்கலாம்....என் போன்ற சோம்பேறிகள் கூட்டத்திற்கு ஒழுங்காய் வருவதாய் இருந்தால் இது சாத்தியமே.....

மொத்தத்தில் சந்தோஷம்....FBT ரூ.14000 க்கு கொண்டுவந்துவிட்ட ஆடிட்டரின் சாமர்த்தியத்தை சொன்னேன்....ஹி..ஹி...

11 Comments:

மெளலி (மதுரையம்பதி) said...

இது ரொம்ப நல்லா இருக்கு, குறிப்பாக கலந்து கொண்டவர்களின் சுய கருத்துகளைவிட....ஹாஹாஹா

லதா said...

// நவம்பர்31 க்குள் FBT(Fringe Benifit Tax) கட்டியாக வேண்டுமாம். //
உங்க ஊரில் மட்டும் நவம்பர் மாதத்திற்கு 31 நாள்களா ? :-)))

பங்காளி... said...

ஹய்யோ லதா...உங்களுக்கு கொள்ளி கண்ணு...ஹி..ஹி...கண்ணுக்கு சுத்திப் போடுங்க....

பொது வாழ்க்கைல இதெல்லாம் ஜகஜமப்பா....ஹி...ஹி...

பங்காளி... said...

வாங்க மௌல்ஸ்...ஹி..ஹி..ஏதோ நம்மாள முடிஞ்சது...

மங்கை said...

auditor கூப்பிடலைன்னா நீங்க போயிருப்பீங்க??..

அதான் நீங்களே சொல்லிட்டீங்களே சுறுசுறுப்பு மன்னன்னு
:-))

dondu(#11168674346665545885) said...

"போண்டா இல்லாத வலைப்பதிவர் கூட்டத்தில் டோண்டு = திருவிழா கூட்டத்தில் தொலைந்த பிள்ளை"

:)))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

பொன்ஸ்~~Poorna said...

கேட்டாலும் பாட மாட்டோம்ல..

"அதெல்லாம் இந்த மாதிரி இலவசக் கச்சேரிகளுக்கு இல்லைப்பா.. "
(செய்தி: பிரெஞ்சு ஜெர்மனைச் சேர்ந்த சில பல நூல்களை மொழிபெயர்த்துத் தர முடியுமா என்று வலைபதிவர் சந்திப்பில் கேட்ட போது திருவிழாவில் தொலைந்தவர் சொன்ன பதில் :)) )

We The People said...

பங்காளி, வலைப்பதிவர்கள் சந்திப்புக்கு வராததால் சுமார் ரூ 1,86,000 லாபம் போல உங்களுக்கு ;)

பொன்ஸ் சைக்கிள் கேப்ல லாரியை ஓட்டிவிட்டு போயிட்டயேமே!! ஆனாலும் உனக்கு ரெம்ப குசும்பு...

இராம்/Raam said...

பங்க்ஸ்,

உங்களோட சில வரிகளை ரசிக்கமுடிஞ்சது..... :)

We The People said...

//உங்க ஊரில் மட்டும் நவம்பர் மாதத்திற்கு 31 நாள்களா ? :-))) //

லதா அசத்தறீங்க. ரொம்ப உஷாரான ஆளாயிருப்பீங்க போலயே!

மக்களே ஜாக்கிரதை!!

இராம்/Raam said...

கமெண்ட் மாடுரெட் ஆப்சன் எனேபல் பண்ணலைய்யா பங்க்ஸ்????