தமிழ் வலைபதிவுகளில் எத்தனையோ பேர் எண்ணற்ற தலைப்புகளில் எழுதி வந்தாலும், வணிகம்,பொருளாதாரம்,வர்த்தக மேலாண்மை,பங்குசந்தை போன்ற தலைப்புகளில் எழுதிவருவோர் மிகக்குறைவு.அத்தகைய பதிவுகளைப் படிப்பதில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டாததனால் கூட இருக்கலாம்.
தமிழில் இத்தகைய பதிவுகளை எழுதுவோரை விரல் விட்டு எண்ணிவிடலாம்.தமிழ்சசி போன்றோர் சந்தையின் அடிப்படைகளை எழுதுவதில் ஆர்வம் காட்டினாலும், தினசரி நடப்புகளையும் அது குறித்த பார்வைகளையும் எழுத முனையவில்லை.குப்புசாமியும் இப்போது எழுதுவதில்லை.
பங்குவணிகம் தொடர்பான எனது பதிவினை தமிழ்மணத்தில் இனைக்கும் வழிதெரியாததால் ஒரு சிலர் மட்டுமே படிக்கும் தனி பதிவாக இருந்து வருகிறது. Wordpress ப்ளாக்குகளை தமிழ்மணத்தில் இனைப்பதெப்படி என தெரிந்தவர்கள் சொல்லலாம்.
இந்த பதிவெழுதுவதன் நோக்கமே இப்போது அத்தி பூத்தாற்போல புதிதாய் ஒரு நண்பர் பங்குவர்த்தகம் தொடர்பான பதிவுகளை எழுத துவங்கியிருப்பதாக நேற்று தெரிந்துகொண்டேன். அவரது பெயர் M.சரண்....அவரது பதிவின் பெயர் "காசுமழை"....தானொரு Technical Analyst என கூறிக்கொள்ளும் சரண் தொடர்ந்து நல்ல பல தகவல்களை பகிர்ந்து கொள்வார்...கொள்ள வேண்டுமென ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
வாழ்த்துக்களுடன் வரவேற்போம் சரணை....
Tuesday, December 12, 2006
காசுமழை...
பதிஞ்சது பங்காளி... at 4:52 PM
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
பங்காளி,
பங்குவணிகம் தொடர்பான உங்கள் பதிவை இன்றுதான் பார்த்தேன். நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள் ...
என்னுடைய பதிவு Wordpressசில்தான் இயங்குகிறது. தமிழ்மணத்திரட்டியில் பிரச்சனையில்லாமல் இயங்குகிறது. தனிமடலில் ( vignesh [at] vicky [dot] in) விவரங்களை தெரிவியுங்கள். நிச்சயம் உதவுகிறேன்.
கில்லியிலும் உங்கள் பங்குவணிகம் குறித்த பதிவை குறிப்பிட்டிருக்கிறேன்
Pangali,
Thanks for introducing Saran's blog.
Reg. Wordpress.com, it's possible to add wordpress MU blog to thamizmanam. Pls check thamizmanam's help section.
You wont be able to add thamizmanam's tool-bar. wordpress.com doesnt let you modify the theme files. But, there are some work-arounds. those info. are available @ help section.
//நமக்கு எல்லாருமே பங்காளிகதான்.. //
சர்தான் பங்காளி :-)
பங்கு வணிகம் தொடர்பா ஏதோ எழுதறீங்கனு தெரியுது ஆனா எனக்கு ஒன்னுமே பிரியல...நல்ல முயற்சி தொடருங்கள்...நாலு பேரு நல்லா இருக்கனும்னா என்ன வேனா பண்ணலாம் :-)
ஓ!, நீங்கதானா பங்காளி?
ரேடியோ ஜாக்கீஸ் பதிவப் பாத்து நான் வேறு யாரோன்னு நெனச்சிட்டேன்.
வருக வருக...
நல்ல செயல். இடைவிடாமல் தொடர்ந்து செய்யுமாறு வேண்டுகிறேன்.
பங்கு சந்தை பக்கம் தம்மடிக்கக் கூட ஒதுங்கினதில்லை. அதனால கொஞ்சம் தூரம்தான் பங்காளி.
நீங்களும், சரணும் நல்லா எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தி, இந்தியாவ உயர்த்துங்க பங்காளி.
I saw the site http://www.traderji.com and found to be useful.
Post a Comment