Monday, December 11, 2006

தமிழறிவோமா....1

யாரும் சிரிக்கப்டாது...இன்னாடா இவன் கைல தமில் கத்துக்கனுமான்னு யாரும் அப்பீட்டாவாதீங்க....தெரிஞ்சா சொல்லுங்கோ....இல்லாங்காட்டி ...அப்பால நானே சொல்றேன் சரியா....

அகங்கை

அகசியம்

அகதகாரன்

அகப்பரம்

அகர்முகம்

அகலறை

அகளங்கம்

இன்னிக்கு இதுபோதும்....அர்த்தம் சொல்லுங்க மக்களே....பெஸ்ட் ஆஃப் லக்....

6 Comments:

Unknown said...

யாரால வாய்க்கும். நா வல்ல இந்த ஆட்டத்துக்கு

மங்கை said...

ஏதோ கொஞ்சம் பொழுத போக்கீட்டு இருக்கோம்...அதையும் கெடுக்கனும்னு பாக்கறீகளே...

அகங்கை- உள்ளங்கை
அகதகாரன்- டாக்டர்

:-)))...

G.Ragavan said...

மாப்பு மன்னிப்பு மாதங்கோயில்பட்டி இனிப்பு!!!!!

அட தெரியலைங்குறத அப்படிச் சொல்றேங்க.

VSK said...

அகங்கை-- உள்ளங்கை

அகசியம்-- புதிர்

அகதகாரன்-- வைத்தியன்

அகப்பரம்-- மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியிருக்கும் ஜவ்வு தோல்[pia matter]

அகர்முகம்-- இளங்காலை

அகலறை-- போர் முகாம், மலைச்சரிவு

அகளங்கம்-- தூய்மையான, களங்கமில்லாத

பங்காளி... said...

மங்கை சொன்ன ரெண்டும் கரீட்டு....

SK பெரிய ஆளுதான்...கலக்கறாறு....அவர் சொன்னதுல அகப்பரத்துக்கு தின்னைன்னும் ஒரு அர்த்தம் சொல்லலாம்.....

சுல்தான்...ராகவன் நீங்கல்லாம் நம்மாளுங்க....ஹி..ஹி...என் கைல அந்த டிக்சனரி மட்டும் இல்லாங்காட்டி நானும் உங்க கேஸ்தான்....ஹி...ஹி....

VSK said...

அப்படியெல்லாம் ரொம்ப பெருசா நினைச்சு என்னை ஒதுக்இடாதீங்க பங்காளி!

கிட்டத்தட்ட நானும் மத்தவங்க கேஸ்தான்!

ஒருசிலவற்றிற்கு அகராதியைநானும் பார்த்தேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

தெரிந்தவற்றை மறக்காமலிருக்கவும், புதியனவற்றைத் தெரிந்து கொள்ளவும் இப்பதிவு உதவுகிறது.
சாயிரம்!