Monday, October 30, 2006

FM தேவதைகள்


FM தேவதைகள்

தெற்கில் ஒரு காலத்தில் இலங்கை வானொலி பெரும்பாலானோரின் கவசகுண்டலமாய் இருந்தது.......இன்றைக்கும் நினைத்த மாத்திரத்தில் காதில் ஒலிக்கும் ராஜேஸ்வரி சண்முகம்(இவர் தற்போது திருச்சியில் வசிப்பதாக கேள்வி), K.S.ராஜா, B.H.அப்துல் ஹமீது,மயில்வாகனன் சர்வானந்தாவின் அமரத்துவம் வாய்ந்த குரல்கள்.

இலங்கைப் பிரச்சினைகளினால் தென் தமிழகத்தாருக்கு நேர்ந்த மிகப்பெரிய இழப்பு இலங்கை வானொலி.தொடர்ந்த தொலைக்காட்சியின் வரவால் ஆல் இந்தியா ரேடியோவின் கிளிப்பிள்ளைகள்/ஜெராக்ஸ் காப்பிகளிடமிருந்து தப்பிக்க முடிந்தது. இந்திய வானொலியில் திரு.தென்கச்சி.கோ.சாமிநாதனைத் தவிர சொல்வதற்கு யாருமில்லை என்றே நினைக்கிறேன்.

சென்னையில் தனியார் வானொலிகள் தலையெடுக்கும் வரையில் விவித பாரதியும், FM ரெயின் போவும் ஆலையில்லாத ஊரின் இலுப்பைப் பூ சர்கரையாகவே இருந்தது.இன்றைக்கு சென்னையில் மட்டும் ஏழு வனொலிகள்.....எதைக் கேட்பது எதை விடுப்பது என்று திணறத்தினற வானொலி நிலையங்கள்......விரைவில் குமுதம் ஒரு வானொலிச்சேவையை துவக்க இருப்பதாக தெரிகிறது.

முதலில் காலடி வைத்த சூரியன்FM, ரேடியோ மிர்ச்சி சக்கைபோடு போட்டாலும் சூரியனின் கை ஓங்கியிருந்தது. கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர வகுப்பினரை குறிவைத்து இவர்களால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள்....எளிதில் பிரபலமடைந்தது....வெட்டியாய் காசைச் செலவழிக்கிறோமென்றே கவலையில்லாமல் சென்னைவாசிகள் தொலைபேசியும்,குறுந்தகவல்கள் என புளகாங்கிதமடைந்தனர்.....அன்னியோன்யமாய் பேசுகிறேன் பேர்வழியென பெண் அறிவிப்பாளர்கள் குழைந்து குழைந்து நேயர்களை கிறங்கடித்தனர்.....ஹி..ஹி...நான் கூட இப்ப ரகசிய சிநேகிதியின் குரலால் ஹி..ஹி...

சூரியன்FMல்...ராஜி...சிக்கி....கண்மணி....டோஷிலா,அனுராதா உண்ணி, ப்ரியா போன்ற தேன்குரல் தேவதைகள் இருந்தாலும் ராஜியும் சிக்கியும் ரொம்பவே நெருக்கம்.கண்மணி சமீபத்திய திரைப்பாடலில் சோனியா அகர்வாலுக்காக சிரித்தே அசத்தியிருந்தார்.காதல் காதல் என்கிற அரைவேக்காட்டு நிகழ்ச்சியை நடத்தும் சிக்கியை இன்னும் யாரும் ப்ராக்கட் போடமல் இருபார்களா? என்கிற அரிய சந்தேகம் அவ்வப்போது வருவதுண்டு.

ரேடியோ மிர்ச்சி பக்கம் வந்தால் சுசித்திரா மற்றும் தேவா...தேவா கொஞ்சம் முதிர்ச்சியான தேன் குரல்...ஆரம்பத்தில் நான் சுச்சியின் குரலில் கிறங்கிப் போயிருந்ததென்னவோ
உண்மையென்றாலும்...இப்போதெல்லாம் அவர் பேசினால் தவளை கத்துவது போலத்தான் கேட்கிறது...ஹி..ஹி....இதைப் படித்தால் சுச்சி வருத்தப்படுவார்..ஹி...ஹி...அம்மனி லொடலொடன்னு பேசறத கொஞ்சம் குறைக்கலாம் .....

இந்த வேளையில் வந்ததுதான் ரேடியோசிட்டி....இங்க ஒரு புள்ள இருக்கு....பேரு சொல்லும் போதே அவனவன் கிறுகிறுத்துப் போயிருவான்....வேறொன்னுமில்லை....ச்ச்ச்ச்சோசோசோ ஸ்ஸ்ஸ்வீவீ...ட் ஷாம்லி.....ம்ம்ம்ம்மூமும்ம்ம்ம்மாஆ..ஆஆஆஆ......அநியாயத்துக்கு முத்தமழை....என்னிக்காவது நேர்ல பார்த்தா வாங்கின ஒன்னையாவது திருப்பிக் கொடுக்கனும்னு நினைச்சிருக்கேன்...ஹி...ஹி....இதில் மற்றவர்கள் அவ்வளவாய் சுகமில்லை.....

அண்ணாச்சி வாடை தூக்கலாய் இருக்கும் தினதந்தி குழுமத்தின் ஹலோFM...இதில் நிகழ்ச்சியின் தரம் இன்னமும் Fine Tune செய்யப்படவில்லை.....அதனால் இங்குள்ள தேவதைகள் இந்த பதிவிலிருந்து தப்பிக்கும் அதிர்ஷ்டசாலிகள்.....கூலிக்கு மாரடிப்பவர்களை(ஆல் இந்தியா ரேடியோ) மன்னித்துவிடலாம்......

கடைசியாய்...நம்ம பேவரைட் ரிலையன்ஸ் குழுமத்தின் BigFM....தேர்ந்த திட்டமிட்ட நிகழ்ச்சிகளும் அதை தொகுக்கும் அறிவிப்பாளர்களும்...காலையில் வரும் உமாரியாஸின்(Mrs.கட்டதுரை), செயற்கை பூச்சில்லாத சிநேகமான குரல்....தொலைக்காட்சி சீரியல்களை எரிச்சலூட்டும் நோக்கத்துடனே பேசவைக்கப்படும் இம்சை அரசி......மென்மையாய்...கம்பீரமாய்...நிதானமாய்....ஊடுருவும் குரலுடன்....நம்ம பேவரைட்டான, ரகசிய சிநேகிதியென பேரை சொல்லாமல் அடம்பிடிக்கும் கிருத்திகா!(கண்டு பிடிச்சிட்டோம்ல!)

நிகழ்ச்சியின் தரம் பற்றி யாரும் கேக்கக்கூடாது...ஹி..ஹி...

யாருப்பா அது?...ஆண் அறிவிப்பாளர்கள்...னு குரல் கொடுக்கறது...தடிப்பசங்களப் பத்தி நம்ம பதிவுல என்ன பேச்சு?....ஒன்லி தேவதைகள்...ஹி..ஹி..ம்ம்ம்ம்

16 Comments:

கானா பிரபா said...

பங்காளி

ராஜேஸ்வரி சன்முகம் இன்னமும் இலங்கை வானொலியில் பணி செய்துகொண்டு கொழும்பில் இருக்கிறார், கடந்த 2 மாதம் முன் சிட்னிக்கு வந்திருந்தார், எமது வானொலியில் 10 வது ஆண்டு நிறைவு சிறப்பு விருந்தினராக.
இவரின் மகள் தான் திருச்சியில் மணமுடித்து இருக்கிறார்.
வானொலி கேட்கும் அனுபவம் குறித்த எனது பதிவு இதோ:

http://kanapraba.blogspot.com/2006/09/blog-post.html

திருவடியான் said...

பங்காளி.... சரியான ஆளுய்யா நீரு... பேரு வச்சிருக்கீரு பாரும் பங்காளின்னு... பங்கு வாங்காம விடமாட்டீரு போல... பின்னு{ட்டப் பங்கைத்தான சொல்றன்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை ஒன்றும் மற்றும் இரண்டும் தான் எங்கட பிராயத்துப்பயலுவலுக்கு ரேடியோன்னா என்ன,,, தமிழ்னா என்னன்னு சொல்லிக்கொடுத்துச்சு... இன்டைக்கு அன்னியநாட்டுகள்ல... எங்கட பிள்ளையவுளுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்க நாங்க படும்பாடு இருக்குதே...

பங்காளி... said...

வாங்க கானா பிரபா,
முதல் தடவையா நம்ம பதிவுக்குள்ள வந்திருக்கீங்க.....

ராஜேஸ்வரி சண்முகம் எங்கிருந்தாலும் நல்லா இருக்கனும்...இருக்கட்டும்.

பங்காளி... said...

வாங்க ஆறுமுகம்....

அந்த லெட்டர எழுதுனது ஆறுமுகம்னு அவங்க படிச்சதா நினைவு...ஹி..ஹி...:-)))

பங்காளி... said...

வாங்க பங்காளி திருவடியான்:-))

மங்கை said...

ada kashta kalamea...

irundhaalum rommmbbaaaa over...

ippidiyaa jolluvaanga..
(pangaaliyum jollu thaan vidaraar..)..

ethartkum nearam illainnu solravarku..ithana research panna enga irundhu time kidaikuthunnu theriyalai

பங்காளி... said...

மங்கை....

ஹி....ஹி...ஹி....ம்ம்ம்ம்

ஸ்ரீ சரவணகுமார் said...

இதோ ஆண் அறிவிப்பாளர்கள்
1. சூரியனின் பிளேடு no1 சங்கர் மற்றும் அருண்
2. மிர்ச்சியின் செந்தில் மற்றும் இரவில் வரும் சிவா(பல பெண்கள் இவர் குரலுக்காக இரவில் முழித்திருப்பதாக கேள்வி)
மற்ற FM களில் எந்த ஆண்களின் குரலும் பிரபலமடையவில்லை

வெங்கட்ராமன் said...

.........அன்னியோன்யமாய் பேசுகிறேன் பேர்வழியென பெண் அறிவிப்பாளர்கள் குழைந்து குழைந்து நேயர்களை கிறங்கடித்தனர்.

உன்மையான அன்புடன் தான் அன்னியோன்யமாக பேச வேண்டும், இவர்கள் பேசுவது காசுக்காக. . . .

வெங்கட்ராமன் said...

ராஜேஸ்வரி சண்முகம் போன்றவர்கள் எவ்வளவு கண்ணியமாக நிகழ்சியை தொகுத்தார்கள் என்பது கேட்டவர்களுக்கு நன்றாக தெரியும்.

இப்போது இருக்கும் அனைவரது பேச்சு அத்தனையும் செயற்கை.

வெங்கட்ராமன் said...

மீண்டும் நானே,
நண்பர்களே மன்னிக்கவும்.

இந்த தேவதைளின் ஒரு உரையாடல்.
லக்கி லுக்காரின் பதிவில் இருந்து.

http://madippakkam.blogspot.com/2006/10/blog-post_05.html

சின்னக்குட்டி said...

ஏங்க. பங்காளி.. ஏன் இந்த ஓர வஞ்சனை. சூரியன் fm இல்..யாழ் சுதாகர்... என்னமா சிறப்பாக நிகழ்ச்சிகள் வழங்கி கொண்டிருக்கிறார்.. உங்களுக்கு காதுக்கு கேட்க்கிறது இல்லையா.....

மலைநாடான் said...

// ஏங்க. பங்காளி.. ஏன் இந்த ஓர வஞ்சனை. சூரியன் fm இல்..யாழ் சுதாகர்... என்னமா சிறப்பாக நிகழ்ச்சிகள் வழங்கி கொண்டிருக்கிறார்.. உங்களுக்கு காதுக்கு கேட்க்கிறது இல்லையா..... //

அதுதானே ... சின்னக்குட்டி!. நான் கேட்க நினைச்சன். நீங்க கேட்டுட்டீங்க.. பங்காளி, பதிவு நல்லா இருக்கு.. கொஞ்சம் பசங்க குரலையும் ரசிச்சுப்பாருங்க...பாவமுங்க..:))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பங்காளி!
என்ன தான் சொல்லுங்க!!! இன்றும் நான் இணையத்தில் சுவைக்கும் வானொலி" இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமே!!". ஏனையவை எல்லாம் வெறும் வழவழாக்கள் தான்; மன்னிக்கவும்.
யோகன் பாரிஸ்

வடுவூர் குமார் said...

இப்ப நாங்க கேட்கிறது எல்லாமே "ஒலி 96.8" தான். இணையத்திலும் கிடைக்கும்.
இங்கேயும் சில சூப்பர் பார்டிங்க இருக்கு.

மாதவன் said...

நல்ல பதிவு.