நண்பர்களே...
திடீரென பில் கேட்ஸ் மேல கோவம் வந்ததால இனி விண்டோஸும் வேணாம் டோரும் வேணாம்னு லினக்ஸ் பக்கம் தாவிரலாம்னு முடிவுக்கு வந்து, ஒரு வேகத்துல உபுண்டுவ இன்ஸ்டால் பண்ணீட்டேன்...
ஹி..ஹி...இப்ப அடுத்து என்ன செய்யறதுன்னு தெரியல முழிச்சிட்டு இருக்கேன்....
உபுண்டுவுல என்னோட டாட்டா இண்டிகாம் ..அ ....எப்படி இனைக்கிறது, அதுக்குன்னு டயலர் ஏதாச்சும் இருக்கா தெரியல..
அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க ஹெல்ப் பண்ணுங்க மக்கா....
நம்ம வடுவூரார் கூட எழுதினால் அப்ப படிக்கல...இப்ப அவரோட பதிவ தேடி அலைஞ்சிட்டு இருக்கேன்...ஹி..ஹி..
Thursday, July 19, 2007
நான் 'உபுண்டு'க்கு மாறிக்கொண்டிருக்கேன்....!
பதிஞ்சது பங்காளி... at 9:44 PM
Subscribe to:
Post Comments (Atom)
15 Comments:
நண்பரே, டாடா இண்டிகாம் இணைப்பை டெபியனில் (உபுந்துவின் முன்னோடி) எளிதாகப் பயன்படுத்தலாம். உங்களது வலைய அமைப்பை மட்டும் மாற்றினால் போதும் (ip, dns etc). டாடாவிற்குப் போன் செய்து காசைச் செலவழிக்க வேண்டாம். அவர்கள் கையாலாகாதவர்கள் :) பிரச்சினை இருப்பின் இருக்கவே இருக்கிறது சென்னை லினக்சு பயனாளர் குழுமம்.
நான் சொல்லிறுவேன்..ஆனா என் ரேஞ்சுக்கு எல்லாம் சொனா உங்க 'லெவலுக்கு' புரியாது...:-))
ஐயோ பாவம்! :)
இனி கஷ்டம்தேன்..
உபுண்டூ, fஎடோரா எல்லாம் நல்லாதான் இருக்கு, ஆனா இன்னும் 'பக்கா' ஆகல.
நானும் முயற்சி பண்ணிப் பாத்து, இப்ப விஸ்டாவுக்கு மாறிட்டேன். ஏதோ, கேட்ஸுக்கு என்னால் ஆன சிறு மொய்! :)
பாரதி...
சென்னை லினக்ஸு பயனாளர் குழுவோட முகவரி குடுத்தீங்கன்னா புண்ணியமாப் போகும்...
மங்கை...
இப்டில்லாம் பயமுறுத்தக்கூடாது...நான் பயந்துருவேன்...
சர்வேசன்,,,
கஷ்டம்ங்றீங்களா...ரெண்டு நாளா போராடுறேன் சாமீ...ஒன்னும் நடக்கல...
மாற்றம் என்ற சொல் ஒன்று தானே மாறாம இருக்கிறது... மாறிட்டீங்க... முயற்சி செய்யுங்க... கைவிட்டுறாதீங்க....
என்னங்க...என்னங்க சொன்னீங்க.. காதில விழல... சத்தமா சொல்லுங்க...கேள்விக்கு பதில காணோம்.. வந்துட்டாங்க... அப்படின்னா... சரி சரி.. சலிச்சிக்காதீங்க......என்னா கேள்வி கேட்டீங்க.. காது சரியா கேக்கல. ;-)
பின்வரும் தொடுப்புக்கள் பயன்தரும்.
முதலில் எனது வலைப்பதிவு: அங்கே பல குறிப்புக்கள் உண்டு. சந்தேகங்கள் இருந்தால் கேளுங்க.
GNU/Linux குறிப்பேடு
உபுண்டு தமிழ் மடலடற்குழுக்கள்.
தமிழகக் குழுமம்
உலகளாவிய தமிழ்க் குழுமம்
உபுண்டு தமிழ் வலைத்தளம்
அத்தோடு கூகிளாண்டவர்.
Pangu Anna,
You need Gnome PPP...not sure it installed default or you have to pull it through install manager. i'm not in home, otherwise i could given you exact steps to go through. For now, try this link...
http://www.ubuntugeek.com/setting-up-dial-up-connection-in-ubuntu.html
Regards.
டாட்டா இண்டிகாம்ல எது? Plug2Surfஆ? என்ன மோடம் வெச்சு இருக்கீங்க? USBயா ethernet இணைப்பா? நான் உபுண்டு 6.04 + Airtel Broadband பயன்படுத்தறேன்.
Airtelல Always Onனு ஒரு மேட்டர் இருக்கு. அதாவது dialer இல்லாமலே இணையத்தில் இணைஞ்சுக்கலாம். வெறும் மோடத்தை on பண்ணினாலே போதும்.
முதல் முதல்ல இணைப்பு தரும்போது இந்த IP, Primary DNS , alternate DNS மாதிரி ஏதாவது மேட்டர் எல்லாம் எழுதி குடுத்துருப்பாங்களே? அதை எடுத்துக்கொண்டு System->Administration->Networkingக்ல போட்டீங்கன்னா தீர்ந்துது. பெருசா ஒன்னும் பண்ண வேண்டாம்.
-க்ருபா
பங்காளி
உபுண்டுக்கு போய்டீங்களா? மிக்க மகிழ்ச்சி.இதில் ஓபன் ஆபிஸில் தமிழ் உள்ளீடு எனக்கு வரவில்லை... நீங்கள் முயற்சிக்கலாம்.
இப்போதைக்கு நான் அதிக நேரம் செலவிடுவது ஃபெடோராவில் 7 யில் தான். இதில் தமிழ் உள்ளீடு பிரச்சனை இல்லை.
இப்பதானே லினக்ஸில் கால் வைத்துள்ளீர்கள்,தெரிந்துகொள்வீர்கள் மிச்சத்தையும்.
நீங்கள் எந்த மாதிரியான மோடம் என்பதை பொருத்து உங்கள் இணைப்பு நேரும்.மேல் விபரங்கள் கொடுங்கள்.
இது தான் என்னுடைய லினக்ஸ் பதிவுகள் இருக்கும் இடம்.
http://kumarlinux.blogspot.com
இப்பதானே லினக்ஸில் கால் வைத்துள்ளீர்கள்,தெரிந்துகொள்வீர்கள் மிச்சத்தையும்.
குமார், ரொம்பதான் மெரட்டாதீங்க பங்காளியை, பாவம். ;-)
-க்ருபா
பங்காளி, சென்னை உதவிக்குழு சந்திக்கும் இடங்கள் பற்றி விவரமாக அறிய: http://chennailug.org/meetloc
சரி சரி. ரொம்ப மறுமொழியறேன், spamனு அழிச்சுடப்போறீங்க.
-க்ருபா
ஆஹா...
லினக்ஸ் மாற இத்தனை சப்போர்ட்டா....நண்பர்களே என்ன ஆனாலும் சரி...லினக்ஸ் மாறிடறதுன்னு முடிவு பண்ணீட்டேன்....
ரொம்ப நன்றி மக்களே....
பங்காளி, லினக்சை பயன்படுத்திப்பார்த்தால் விண்டோசின் மகிமை தெரியுங்கற ஒரு நல்ல எண்ணமாவும் இருக்கலாம் இல்லையா? ;-)
-க்ருபா
Post a Comment