Wednesday, July 04, 2007

எட்டாததும்,எட்டப்போகிறதும்-சில குறிப்புகள்

எங்க திரும்பினாலும் ஆளாளுக்கு எட்டு எட்டுனு எட்டும் போது, நம்மள யாரும் எட்டச் சொல்ல மாட்டேங்கறாங்களேன்னு தோனும்.அப்பத்தான் நம்ம நிலவு நண்பண் நம்மள ஞாபகத்துல வச்சி எட்ட சொல்லிருக்கார். அந்த அன்பை காப்பத்திக்கவே இந்த எட்டு....

எட்டுக்குள்ள எத அடக்குறதுன்னு தெரியல...நெறய எட்டு போடலாம்னு ஐடியா வச்சிருந்தேன், ஆனா தமிழ்மணம் பூரா எங்கிட்டு திரும்பினாலும் எட்டா இருக்கறதால சிம்ப்பிளா நம்ம எட்டு..

1.என் பேர தமிழ்ல எழுதினா மொத்தம் எட்டு எழுத்து வரும்.(ர்ர்ரொம்ப முக்கியம்!)

2.என்னோட ராசியான கும்பத்தோட அதிபதி சனிபகவான்....

நமக்கும் எட்டுக்கும் உள்ள அதிகபட்ச தொடர்பு இவ்வளவுதான்னு நினைக்கிறேன்.இனி நம்ம லைப்ல எட்ட முடியாத சில விஷயத்த பட்டியல் போட ட்ரை பண்றேன்.

3.நம்புனா நம்புங்க...என்னால அடிச்சி சொல்ல முடியும், நான் ஒரு அருமையான லெக் ஸ்பின்னர். எவ்ளோவ் பெரிய பேட்ஸ்மேனா இருந்தாலும் 3-5 பந்துக்குள்ள தப்பு பண்ணவச்சிருவேன். அத்தனை அருமையான ஸ்பின்னர். கல்லூரி நாட்கள்ல சரியான கவனக்குவிப்பு இல்லாததாலயும், நம்ம ப்ரையாரட்டி வேறயா இருந்ததாலயும் கிரிக்கெட்ட வெளையாட்டாவே விட்டுட்டேன். அப்போ அதை சீரியஸா எடுத்திருந்தேன்னா இன்னேரம் முரளிக்கு மேல வந்திருக்கலாம்.

4.ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட்டா ஆகனும்னு ஆசை, கோவில் குளம்னு தோண்டி மறைந்திருக்கிற கலாச்சார சின்னங்களை உலகுக்கு காட்டணும்னு ஆசை, வீட்ல நம்ப பேச்சு எடுபடுமா...ப்ளஸ் ஒன்னுலயே அப்பா நம்ம ஆசைக்கு குழி வெட்டிட்டார். இன்னமும் மனசுல ஓரத்துல இருக்கு, வாய்ப்பு கெடச்சா தாவிரலாம்.

5.மதுரைய விட்டு வெளிய போகக்கூடாதுன்னு நெனச்சிருந்தேன்....மதுரைய விட்டு வந்து பதினோரு வருசம் ஆச்சு.

இனி செய்யப் போற அல்லது செய்ய நினைச்சிருக்கிற சிலதயும் சொல்லீர்றேன்.

6.டிசைனர் கார் செய்யப்போறேன்....இன்னும் இரண்டு வருசத்துல ஆரம்பிச்சிருவேன். ஒரு லட்ச ரூபாய விட குறைவாவே கார் செய்யலாம்....செய்வேன்.... ஹைப்பிரிட் கார் செய்யனும்....செஞ்சிருவேன்.

7.பயோ டீசல் ப்ளாண்ட் ஒன்னு போடப்போறேன், ப்ளாண்ட்க்கான மிஷினரிய நானே டிசைன் பண்ணனும்னு ஆசை...படிச்ச படிப்பை இதுக்காவது யூஸ் பண்ணி பார்க்கணும். ஒரு நாளைக்கு 1000 லிட்டர் அளவுக்கு ஒரு யூனிட் போடலாம்னு இருக்கேன்.

8.இன்னும் எட்டு வருசத்துல அதாவது நம்ம 45 வயசுல இந்த பரபரப்பான வாழ்க்கை சூழல்ல இருந்து விலகி கொடைக்கானல்ல போய் அமைதியா செட்டில் ஆய்டனும்னு நினைச்சிருக்கேன். 45 வயசுல ரிட்டையர்மெண்ட்.

இவ்ளோவ்தான் நம்ம எட்டு....

10 Comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒரு கார் எனக்கு ஆர்டர் பண்ணிக்கறேன்.குறைவான விலையில் ஒரு 50% லெஸ் பண்ணிக்குடுங்க..

மத்த ஆசையெல்லாமும் நிறைவேறட்டும்...

இந்த 45 வயசுங்கறது செட்டில் ஆகறதுங்கறது எல்லாம் சும்மா எல்லாரும் வாய் ஓயாம சொல்லிட்டு அலையறது தான்..அப்படி எல்லாம் உட்காரமுடியுமா?

வடுவூர் குமார் said...

இயந்திரவியல் படிக்கனும் அம்புட்டு ஆசைங்க,ஆனா நம்ம மூஞ்சியை பார்த்து இங்கு வராதே என்று துரத்திவிட்ட்தால் எங்கோ உட்காரனும் என்ற விதிப்படி கட்டுமானத்துரையில் உட்காந்தேன்.கார் தயாரிக்கும் போது ஆள் தேவைப்பட்டா சொல்லி அனுப்புங்க.:-))
3 வேளை சாப்பாடு மட்டும் போதும்.

பாலராஜன்கீதா said...

தங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

பங்காளி... said...

வாங்க முத்துலட்சுமி...

நீங்க பெரியவங்க அப்டில்லாம் சொல்லப்டாது...ஏதோ சின்ன பையன் ஆசைப்பட்ரானே....தொலையுது...

45 வயசுல ரிட்டையர் ஆய்டுன்னு ஆசி வழங்கணும்...ஹி..ஹி..

காப்பாத்துங்க தாயீ..முடியல...ஹி..ஹி..

(நீங்க காருக்கெல்லாவெ வெலய பேசப்டாது...உங்களுக்கு பிடிச்ச வண்டிய ஓட்டீட்டு போயிரலாம்.)

பங்காளி... said...

குமார்....

உங்களுக்குள்ள இப்படி ஒரு ஏக்கமா!, ஆச்சர்யமா இருக்கு தலைவா....

ஒரு உண்மைய சொல்லட்டா...நான் உங்களைப்பார்த்து பொறாமை பட்டிருக்கேன், மனுசனுக்கு எம்புட்டு எக்ஸ்பீரியன்ஸ்...இப்ப லினக்ஸுன்னு வேற கலக்கறாரேன்னு.

சிமிட்டி கற்கள்(Cement Blocks) செய்யற தொழிற்சாலை ஒன்னு நம்பகிட்ட இருக்கு,...உங்கள மாதிரி எக்ஸ்போஷர் இருந்தால் அந்த யூனிட்ட இன்னும் எப்படியெல்லாமோ டெவலப் பண்ணீருக்கலாம்னு அடிக்கடி நினைப்பேன்.

கார் செய்ய ஆரம்பிக்கும்போது கட்டாயம் உங்களை தொடர்பு கொள்வேன் குமார்...ஏன்னா அதீத ஆர்வமும்,ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பும் தர்ற ஆத்மார்த்தமான திருப்திக்கு ஈடு இனையே கிடையாது.இதை அனுபவத்துல பார்த்திருக்கேன்.

பங்காளி... said...

பாலராஜன் கீதா...

மொத வாட்டி நம்ம ஏரியாவுக்குள்ள வந்திருக்கிக...ர்ரொம்ப சந்தோஷம்.

வாழ்த்துக்கு நன்றி...

மங்கை said...

வெள்ளோட்டம் விடற கார் நமக்கு தான்...

அது சரி.. டிசைனர் கார்..பயோ டீசல் எல்லாம் ஆரம்பிச்சுட்டு அப்புறம் எப்படி 45 வயசுல ரிடயர்மென்ட்..

உங்க லட்சியங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்...

நிறைவேறும்...

முரளிகண்ணன் said...

பங்காளி எந்த ப்ளான்ட் ஆரம்பிச்சாலும் எங்களையும் சேர்த்துக்குங்கோ

டண்டணக்கா said...

/*
8.இன்னும் எட்டு வருசத்துல அதாவது நம்ம 45 வயசுல இந்த பரபரப்பான வாழ்க்கை சூழல்ல இருந்து விலகி கொடைக்கானல்ல போய் அமைதியா செட்டில் ஆய்டனும்னு நினைச்சிருக்கேன். 45 வயசுல ரிட்டையர்மெண்ட்.
*/
அண்ணே, இன்னும் 5 வருசத்துல கொடைக்கானல்ல சந்திக்கல்லாம், ரிட்டயர் ஆகி ரிலாக்சா :)

காட்டாறு said...

முதல் இரண்டு + 5 வதும் ஒப்பேத்தல். ஒத்துக்க முடியாது. இது இரண்டுமே நீங்க போட்ட 8 இல்ல. ;-)

நாலாவதா நீங்க சொன்னதுல ஒன்னு மட்டுந்தேன் ஒதைக்குது. ஆர்க்கியாலஜிஸ்ட் தோண்டினா சிலை மட்டும் தானா? ஒரு டைனோசர் ரேஞ்சுக்கு வந்தா நாலாவது ஆசைல என்னையும் சேர்த்துக்கோங்க...

//இந்த பரபரப்பான வாழ்க்கை சூழல்ல இருந்து விலகி கொடைக்கானல்ல போய் அமைதியா செட்டில் ஆய்டனும்னு நினைச்சிருக்கேன்.//
ரிட்டயர்மெண்ட் கதை நல்லாத்தேன் இருக்கு. கொடைக்கானல் தான் ஒதைக்குது. ஆரு சொன்னாங்க அண்ணாச்சி கொடைக்கானல் போய் அமைதியா செட்டில் ஆக மிடியுமின்னு.... ரோசித்துத்தேன் சொன்னீகளா?