ஆளாளுக்கு வீக்கெண்ட் ஜொள்ளு, அஞ்சலையாத்தான்னு போட்டு தாக்கும் போது நான் மட்டும் ச்சும்மாயிருந்தா நாளைய வரலாறு என்னை மன்னிக்காது....ஹி..ஹி...எனவே
இந்த இத்தாலிய பேரழகியின் அரிய...ர்ர்ரிய...ரிய படங்களை சபையில் பார்வையில் வைக்கிறேன்...ஹி..ஹி...படத்த பெருசா பாக்க க்ளிக்குங்கப்பா....
என்சாய்....
Friday, July 27, 2007
நானும் ஜோதியில கலந்துக்கறேன்....
பதிஞ்சது பங்காளி... at 10:04 PM 6 பேர் என்ன நினைக்கறாங்கன்னா....
Thursday, July 19, 2007
நான் 'உபுண்டு'க்கு மாறிக்கொண்டிருக்கேன்....!
நண்பர்களே...
திடீரென பில் கேட்ஸ் மேல கோவம் வந்ததால இனி விண்டோஸும் வேணாம் டோரும் வேணாம்னு லினக்ஸ் பக்கம் தாவிரலாம்னு முடிவுக்கு வந்து, ஒரு வேகத்துல உபுண்டுவ இன்ஸ்டால் பண்ணீட்டேன்...
ஹி..ஹி...இப்ப அடுத்து என்ன செய்யறதுன்னு தெரியல முழிச்சிட்டு இருக்கேன்....
உபுண்டுவுல என்னோட டாட்டா இண்டிகாம் ..அ ....எப்படி இனைக்கிறது, அதுக்குன்னு டயலர் ஏதாச்சும் இருக்கா தெரியல..
அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க ஹெல்ப் பண்ணுங்க மக்கா....
நம்ம வடுவூரார் கூட எழுதினால் அப்ப படிக்கல...இப்ப அவரோட பதிவ தேடி அலைஞ்சிட்டு இருக்கேன்...ஹி..ஹி..
பதிஞ்சது பங்காளி... at 9:44 PM 15 பேர் என்ன நினைக்கறாங்கன்னா....
Wednesday, July 04, 2007
எட்டாததும்,எட்டப்போகிறதும்-சில குறிப்புகள்
எங்க திரும்பினாலும் ஆளாளுக்கு எட்டு எட்டுனு எட்டும் போது, நம்மள யாரும் எட்டச் சொல்ல மாட்டேங்கறாங்களேன்னு தோனும்.அப்பத்தான் நம்ம நிலவு நண்பண் நம்மள ஞாபகத்துல வச்சி எட்ட சொல்லிருக்கார். அந்த அன்பை காப்பத்திக்கவே இந்த எட்டு....
எட்டுக்குள்ள எத அடக்குறதுன்னு தெரியல...நெறய எட்டு போடலாம்னு ஐடியா வச்சிருந்தேன், ஆனா தமிழ்மணம் பூரா எங்கிட்டு திரும்பினாலும் எட்டா இருக்கறதால சிம்ப்பிளா நம்ம எட்டு..
1.என் பேர தமிழ்ல எழுதினா மொத்தம் எட்டு எழுத்து வரும்.(ர்ர்ரொம்ப முக்கியம்!)
2.என்னோட ராசியான கும்பத்தோட அதிபதி சனிபகவான்....
நமக்கும் எட்டுக்கும் உள்ள அதிகபட்ச தொடர்பு இவ்வளவுதான்னு நினைக்கிறேன்.இனி நம்ம லைப்ல எட்ட முடியாத சில விஷயத்த பட்டியல் போட ட்ரை பண்றேன்.
3.நம்புனா நம்புங்க...என்னால அடிச்சி சொல்ல முடியும், நான் ஒரு அருமையான லெக் ஸ்பின்னர். எவ்ளோவ் பெரிய பேட்ஸ்மேனா இருந்தாலும் 3-5 பந்துக்குள்ள தப்பு பண்ணவச்சிருவேன். அத்தனை அருமையான ஸ்பின்னர். கல்லூரி நாட்கள்ல சரியான கவனக்குவிப்பு இல்லாததாலயும், நம்ம ப்ரையாரட்டி வேறயா இருந்ததாலயும் கிரிக்கெட்ட வெளையாட்டாவே விட்டுட்டேன். அப்போ அதை சீரியஸா எடுத்திருந்தேன்னா இன்னேரம் முரளிக்கு மேல வந்திருக்கலாம்.
4.ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட்டா ஆகனும்னு ஆசை, கோவில் குளம்னு தோண்டி மறைந்திருக்கிற கலாச்சார சின்னங்களை உலகுக்கு காட்டணும்னு ஆசை, வீட்ல நம்ப பேச்சு எடுபடுமா...ப்ளஸ் ஒன்னுலயே அப்பா நம்ம ஆசைக்கு குழி வெட்டிட்டார். இன்னமும் மனசுல ஓரத்துல இருக்கு, வாய்ப்பு கெடச்சா தாவிரலாம்.
5.மதுரைய விட்டு வெளிய போகக்கூடாதுன்னு நெனச்சிருந்தேன்....மதுரைய விட்டு வந்து பதினோரு வருசம் ஆச்சு.
இனி செய்யப் போற அல்லது செய்ய நினைச்சிருக்கிற சிலதயும் சொல்லீர்றேன்.
6.டிசைனர் கார் செய்யப்போறேன்....இன்னும் இரண்டு வருசத்துல ஆரம்பிச்சிருவேன். ஒரு லட்ச ரூபாய விட குறைவாவே கார் செய்யலாம்....செய்வேன்.... ஹைப்பிரிட் கார் செய்யனும்....செஞ்சிருவேன்.
7.பயோ டீசல் ப்ளாண்ட் ஒன்னு போடப்போறேன், ப்ளாண்ட்க்கான மிஷினரிய நானே டிசைன் பண்ணனும்னு ஆசை...படிச்ச படிப்பை இதுக்காவது யூஸ் பண்ணி பார்க்கணும். ஒரு நாளைக்கு 1000 லிட்டர் அளவுக்கு ஒரு யூனிட் போடலாம்னு இருக்கேன்.
8.இன்னும் எட்டு வருசத்துல அதாவது நம்ம 45 வயசுல இந்த பரபரப்பான வாழ்க்கை சூழல்ல இருந்து விலகி கொடைக்கானல்ல போய் அமைதியா செட்டில் ஆய்டனும்னு நினைச்சிருக்கேன். 45 வயசுல ரிட்டையர்மெண்ட்.
இவ்ளோவ்தான் நம்ம எட்டு....
பதிஞ்சது பங்காளி... at 11:23 AM 10 பேர் என்ன நினைக்கறாங்கன்னா....