Tuesday, December 12, 2006

காசுமழை...

தமிழ் வலைபதிவுகளில் எத்தனையோ பேர் எண்ணற்ற தலைப்புகளில் எழுதி வந்தாலும், வணிகம்,பொருளாதாரம்,வர்த்தக மேலாண்மை,பங்குசந்தை போன்ற தலைப்புகளில் எழுதிவருவோர் மிகக்குறைவு.அத்தகைய பதிவுகளைப் படிப்பதில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டாததனால் கூட இருக்கலாம்.

தமிழில் இத்தகைய பதிவுகளை எழுதுவோரை விரல் விட்டு எண்ணிவிடலாம்.தமிழ்சசி போன்றோர் சந்தையின் அடிப்படைகளை எழுதுவதில் ஆர்வம் காட்டினாலும், தினசரி நடப்புகளையும் அது குறித்த பார்வைகளையும் எழுத முனையவில்லை.குப்புசாமியும் இப்போது எழுதுவதில்லை.

பங்குவணிகம் தொடர்பான எனது பதிவினை தமிழ்மணத்தில் இனைக்கும் வழிதெரியாததால் ஒரு சிலர் மட்டுமே படிக்கும் தனி பதிவாக இருந்து வருகிறது. Wordpress ப்ளாக்குகளை தமிழ்மணத்தில் இனைப்பதெப்படி என தெரிந்தவர்கள் சொல்லலாம்.

இந்த பதிவெழுதுவதன் நோக்கமே இப்போது அத்தி பூத்தாற்போல புதிதாய் ஒரு நண்பர் பங்குவர்த்தகம் தொடர்பான பதிவுகளை எழுத துவங்கியிருப்பதாக நேற்று தெரிந்துகொண்டேன். அவரது பெயர் M.சரண்....அவரது பதிவின் பெயர் "காசுமழை"....தானொரு Technical Analyst என கூறிக்கொள்ளும் சரண் தொடர்ந்து நல்ல பல தகவல்களை பகிர்ந்து கொள்வார்...கொள்ள வேண்டுமென ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

வாழ்த்துக்களுடன் வரவேற்போம் சரணை....

Monday, December 11, 2006

தமிழறிவோமா....1

யாரும் சிரிக்கப்டாது...இன்னாடா இவன் கைல தமில் கத்துக்கனுமான்னு யாரும் அப்பீட்டாவாதீங்க....தெரிஞ்சா சொல்லுங்கோ....இல்லாங்காட்டி ...அப்பால நானே சொல்றேன் சரியா....

அகங்கை

அகசியம்

அகதகாரன்

அகப்பரம்

அகர்முகம்

அகலறை

அகளங்கம்

இன்னிக்கு இதுபோதும்....அர்த்தம் சொல்லுங்க மக்களே....பெஸ்ட் ஆஃப் லக்....

கொஞ்சம் லேட்...அவ்வளவுதான்

கடந்த ஒருவாரமாய் பீட்டாவுக்கு மாறியதாலான பயனை அனுபவித்து, மீண்டு இந்தபதிவு....இந்த ஒரு வாரகாலத்துக்குள் தமிழ்மணத்தில் நிறைய அஜால்குஜால் வேலைகளெல்லாம் நடந்திருக்கிறது...

குமரன் வருத்தமாய் வெளியேறிதும்...விடாதுகருப்பினை வெளியேற்றியதும்....ரவி வெளியேறப்போவதுமாய் நிகழ்வுகள்.....குழாயடிச் சண்டைகள் வெட்கப்படுமளவிற்கு நமது வீரதீரங்கள்....ரசிக்கமுடியவில்லை.

இத்தகைய நிகழ்வுகளுக்கெல்லாம் வித்திட்டு வளர்த்து அதில் குளிர்காய்ந்து பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பவர் யாரென்பது நேற்று பதிவு போடத்துவங்கிய அனானிவரை அனைவரும் அறிந்த மூத்தவரே!....தற்சமயம் அவர் நேரிடையாக களத்தில் நில்லாது தனது அடியார்கள்(!) மூலமாய் கலகம் விளைவித்துக் கொண்டிருக்கிறாரோ என்பது நியாயமான சந்தேகமே.....

விடாது கருப்பின் பதிவின் காட்டம் அதிகமென்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். அதற்கு சற்றும் காரம் குறையாத ஹரிஹரனின் பதிவு பற்றி தமிழ்மண நிர்வாகம் அமைதி காப்பது ஏன் என்பதை அவர்கள்தான் தெளிவாக்கவேண்டும்.

அடையாளங்களை தூக்கிப்பிடிக்கும் போதுதான் அவலங்கள் வெளியே வருகின்றன....வலைப்பதிவுகள் அனுபவங்களையும் அதன் பாடங்களையும் வெளிச்சத்தில் வைக்கும் களம்....இதை புரிந்து கொள்ளவேண்டும் பெரியவர்கள்....அல்லது பெருந்தன்மையாய் விலகி நிற்பதே மரியாதை....

Monday, December 04, 2006

ஃபீட்டாவுக்கு மாறிட்டம்ல...