சொந்தமாய் பதிவெழுதி பத்து நாட்கள் ஆகிவிட்டது. குப்பைகளை ப்ரமோட் பண்ணுகிறேன் பேர்வழியென சொந்த சரக்குகளை ஏறக்கட்டிவிட்டு வலைமேய்ந்து செய்திகளை பொறுக்கியெடுக்கவே சரியாய் போய்விட்டது. சோதனை முயற்சியாக துவங்கிய பதிவு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு....திடீரெனெ நேற்று மாலை புதிதாய் சில கவலைகள் முளைக்க துவங்கிவிட்டன.அதற்கும் காரணமுண்டு....
ஒரு கருத்து கணிப்பு போடுவோமேயென 'யாருடையது நடுநிலையான பதிவு' என ஒன்றை போட்டேன்...நான் எதிர்பார்த்தது "சற்றுமுன்", அப்புறம் "இட்லிவடை" கடைசியாக நமது குப்பை வருமென நினைத்தேன்....முதன் இரண்டு நாட்களுக்கு அப்படித்தான் இருந்தது....நம்ம நிலமை மோசமாயிருக்கேயென நானே குப்பைக்கு இரண்டு கள்ள ஓட்டு கூட போட்டேன்....திடீரென நிலமை மாறி குப்பைகள் மேலேயெழுந்து இப்பொழுது இதை எழுதிக்கொண்டிருக்கும் பொன்னான வேளையில் குப்பைகள்தான் நடுநிலையான பதிவாம்....யாரை நொந்து கொள்வது...ஹி..ஹி...வாக்களித்த கண்மணிகளுக்கு நன்றி...நன்றி....
இந்த ரேஞ்சில் போனால் சீக்கிரமே நான் ஒரு Media Baron ஆகிவிடுவேனோ என்கிற கவலை தொண்டையை அடைக்க அடுத்ததாக என்னையறிமாமல் கலைஞரின் ரசிகனாகிவிடுவேனோ என்கிற பயம் வேறு கவ்வியது....ஆஹா!..இது நல்லதுக்கில்லையே என உஷாராகி குப்பைக்கு கொஞ்சம் ப்ரேக் விடுவோமென நினைத்தேன்...
அதென்ன குப்பைக்கு மட்டும்...பங்காளி...பங்குவணிகம்...வர்த்தகம் எல்லாத்துக்கும் ஒருநாள் ப்ரேக் கொடுப்பது என முடிவு செய்து இன்றைக்கு தமிழ்மணத்திற்கும் ப்ரேக்....முடிவெல்லாம் சரிதான் செயல்படுத்துறது ரொம்ப கஷ்டம்னு நல்லாவே தெரிஞ்சது.....சரி அலுவலகத்துல உக்காந்திருந்தாத்தானே கை அரிக்கும்...வெளியே சுத்தலாம்னு கெளம்பினேன்.....
"இன்னில இருந்து சீட்பெல்ட் மாட்டனுமாம்" னு அம்மனி கிளம்பும்போது மண்டைக்குள் மணியடிக்க எரிச்சல் பற்றியது...ஊரிலுள்ள ஹெல்மெட் ஆசாமிகள் எல்லாரும் கூடி நின்று என்னைபார்த்து கைகொட்டி சிரிப்பது போலிருந்தது...அந்தளவுக்கு ஏகத்துக்கு நக்கலடித்திருந்தேன்....ச்சே என்ன இம்சைடா இது! நாம என்ன 120 கி.மீ ஸ்பீடுலயா வண்டி ஓட்டப்போறோம்...இருக்கிற ட்ராபிக்ல, சைக்கிள்ள போறவன் கூட பந்தாவா சைட் வாங்கீட்டு போறான்....இதுல என்ன ..யித்துக்கு சீட்பெல்ட் என லாஜிக்கிக் கொண்டே கிளம்பினேன்....
சீட்பெல்ட்டினால் சட்டை கசங்குகிறதே என்கிற கவலைவேறு....வழியில் நிறைய பேரை ஹெல்மெட் இல்லாமல் பார்த்தபோது வெறியானது.....நெல்சன் மாணிக்கம் ரோடில் ட்ராபிக்கில் நின்றபோது பொறுக்கமாட்டாமல் பக்கத்தில் நின்ற மரமண்டை(!) ஒருவரிடம் "என்னங்க ஹெல்மெட் போடலையா" என கவலையாக நடித்தேன்...அவரோ "ஒரு வாரம் வார்னிங்கொடுப்பாங்களாம் அப்புறம்தான் ஃபைன் எல்லாம்னு இதுவரை ரெண்டுமூணு இடத்துல வார்னிங்கோடதான் வாறேன்" என்றார் சாகவாசமாய்....சீட்பெல்டை கழற்றிவிட்டேன்....ம்ம்ம்ம்
எங்கே போகலாமென நினைத்தபோது நந்தம்பாக்கம் 'ட்ரேட் செண்ட்டரில்'...ஹிந்துவின் ட்ரேட்ஃபேர் நினனவுக்கு வந்து...மௌண்ட்ரோடில் வண்டியை விரட்டினேன்..கத்திபார சந்திப்பில் விவரமில்லாத புதியவர்கள் வழிமாறிப்போக நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது...அந்த அளவுக்கு குழப்பம்...குழப்பம்...மேலும் குழப்பம்.
ட்ரேட் செண்ட்டரில் நுழைவுகட்டணம் ரூ.50 என்றார்கள்...கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்ததால்...அம்பது ரூபாய் பொருட்டாக தெரியவில்லை...உள்ளே வழக்கமான குப்பைகளை பராக்குபார்க்கும் கலர்கலரான தேவதைகள்..ஹி...ஹி...இந்த மாதிரி ரிலாக்ஸ்டான சூழலுக்குள் புழங்கி நாளாகியிருந்ததால்...நிதானமாய்ய்ய்ய்ய்ய்ய்...சுற்றினேன்.கார் நிறுவனங்கள் புதிய கார்களை நிறுத்தி பக்கத்திலேயே ஏர்ஹோஸ்டஸ் ரேஞ்சில் தேவதைகளை தூவியிருந்தனர்....மாருதியின் புதிய கார் நல்லாயிருந்ததால்(புரியுதுல்ல..) அங்கே ர்ரொம்ப நேரம் நின்று அளவளவளவளாவிட்டு வநதேன்....தாய்லாந்து ஃபிகர்களிடம் சிரிக்க சிரிக்க பேசிவிட்டு வந்தபோது...நம்ம தாய்லாந்தில் பொறந்திருக்கலாமோவென எண்ணத்தை கிளறியது...
ஆஹா...பதிவு ரூட் மாறி போகுதுல்ல...அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க...எத்தனை நாளைக்குத்தான் ஓட்ஸ் கஞ்சி வடிச்சதையும், ஹோட்டல்ல தோசை சாப்டதையுமே படிப்பீங்க...
இப்ப தலைப்புக்கு வருவம்...நம்ம தமிழ்நதிய நேத்து விகடன் வெளிச்சம் போட்டு காட்டிருக்கு...காலைலயே பார்த்தேன், அப்படியொரு சந்தோசம், ஏதோ நம்ம வீட்டு பொண்ணுக்கு கெடச்ச அங்கீகாரத்த அனுபவிக்கிற சந்தோசம்...இன்னிக்கு பார்த்து எளுதாம வெரதம் இருக்கோமேன்னு கூட தோணிச்சி...நம்ம எளுதலைன்னா என்ன நம்ம பங்காளிப்பயலுக கொண்டாடிருவாய்ங்கன்னு தேத்திக்கிட்டேன்....
பெரிய அளவுக்கு வரவேண்டியவர் இங்க ச்சின்ன வட்டத்துக்குள்ள இருக்கார்ன்னு அப்பப்ப நினைச்சிப்பேன்...இப்ப கதவுகள் திறந்து வெளிச்சம் விழுந்தாச்சி, இனி பெரிசா வருவார்...வரணும்...வரவைக்கனும்னு எங்க ஆத்தா மீனாட்ச்சிட்ட ஒரு பெட்டிசன் போட்ருக்கேன்....நம்ம ஆளு ஒருத்தர் மேல வந்தா அது நமக்கெல்லாம் பெருமைதானே....
அப்புறம் இந்த சந்தர்ப்பத்துல தமிழ்நதிக்கு இன்னோரு வேண்டுகோள்...அப்பப்ப...இழப்புகளை மீறின சந்தோசங்களையும் பதிவு செய்ய முயற்சியுங்கள்...."எதையோ எளுதனும்னு ஆரம்பிச்சி...எங்கெங்கயோ சுத்தீட்டு கடைசில சொல்ல வந்ததை மேம்போக்கா சொல்லி முடிக்கும் இந்த முயற்சி...இலக்கின்றி எழுதுதல் என்கிற வகையை சார்ந்ததாகுமென தமிழ்கூறும் வலையுலகிற்கு தெரிவித்துக்கொள்கிறேன்....."
Friday, June 01, 2007
நம்ம தமிழ்நதி....
பதிஞ்சது பங்காளி... at 7:35 PM
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
ஐயா! ஆளாளுக்கு இப்படிப் போட்டுக்கிட்டு இருந்தா என்னைப் பத்தி என்ன நினைச்சுக்குவாங்க சொல்லுங்க :) விகடன்ல வந்ததுக்கு புக்கர் பரிசு கணக்கா அலட்டிக்கிறாளேன்னு சொல்லமாட்டாங்களா... அன்புக்கு நன்றி.
//ப்ப கதவுகள் திறந்து வெளிச்சம் விழுந்தாச்சி, இனி பெரிசா வருவார்...வரணும்...வரவைக்கனும்னு //
உண்மை உண்மை... நதியக்காவுக்கு வாழ்த்துக்கள்.. யக்கோவ் போட்டோ அழகா புடிச்சிருக்காங்க குட்டி ரேவதி.. முன்ன பார்த்ததுக்கு ரெண்டு வயசு கொறைஞ்சிட்டீங்களா? ;)
பங்காளி,
ஆமா, அந்த எச்சரிக்கையைக் கூட விலக்கிட்டாங்களாமே! - அதான் பதிவோட முக்கிய சாரத்தப் பத்தித் தான் சொல்லுறேன்...
தமிழ்நதி...
உங்களைப் போல கவிதைகளை எழுதவேண்டுமென எனக்கும் கொள்ளை ஆசை...அவ்வப்போது முயற்சித்தும் பார்த்திருக்கிறேன்...ஆனால் நான் ஓடிக்கொண்டிருக்கும் வேகத்திற்கு கவிதைகள் எல்லாம் காத தூரம்....
உங்களை போன்றவர்களின் கவிதைகள் எனக்கு எத்துனை ஆறுதல் என்பதை வார்த்தைகளினால் சொல்லவியலாது....அது ஒரு அனுபவம்
உங்களின் பல கவிதைகளை நெட்டுரு போட்டிருக்கிறேன்...வண்டியோட்டும் தனிமையில் அனிச்சையாய் வரிகளை சொல்லிப்பார்த்து சிலாகிப்பது எனக்கு மட்டுமேயான அனுபவம்....
எங்களுக்கு தேவையெல்லாம் நெறய எழுதனும் நீங்க...அவ்ளோதான்....
அப்பால....
ரசிகர்மன்றம்னா அப்படித்தான் கொண்டாடும்...நீங்க கண்டுக்காதீங்க...ஹி..ஹி...
பொன்ஸ்...
ஒரு ரிக்வெஸ்ட்...நாம இந்த பூர்ணாவ கழட்டி விட்டுடலாமா...பொன்ஸ்தான் நல்லாருக்கு...
யோசியுங்க யானையக்கா....
நீங்க சொன்னப்புறம்தான் அது நம்ம தமிழ்நதியோட ஃபோட்டோன்னு ஸ்ட்ரைக் ஆச்சு..நான் அது குட்டி ரேவதியாக்கும்னு நெனச்சிட்டு இருந்தேன்...
கவிதையா படிச்சவன் போட்டோவ சரியா கவனிக்கல....ஹி..ஹி...நான் சரியான மக்குன்னு மறுபடியும ப்ரூவ் பண்ணின சம்பவம்...ஹி..ஹி....
Post a Comment